TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 7, 2018

பெப்சி நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 7, 2018

  • அமெரிக்காவின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பதவியில் இருந்து இந்தியாவைச் சேர்ந்தவரும், சென்னையில் பிறந்தவருமான இந்திரா நூயி 12 ஆண்டுகளுக்குப் பின் விலக உள்ளார்.
  • இந்திரா நூயிக்குப் பின், புதிய தலைவராக 22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ராமோன் லகார்டா, இயக்குநர்கள் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • பெப்சி நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகள், கார்ப்பரேட் நிர்வாகம், பொதுக்கொள்கை, அரசு விவகாரங்கள் ஆகியவற்றை லகார்ட்டா கவனித்து வந்தார்.

ஆந்திர மாநிலத்தில் உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை திறப்பு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 6, 2018

  • உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • பாரத் எனர்ஜி ஸ்டோ ரேஜ் டெக்னாலஜி (பெஸ்ட்) நிறுவனத்துக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்துவைத்தார்.
  • புதுப் பிக்க முடியாத ஆற்றல் மூலங் களைப் பயன்படுத்தி பேட்டரிகள் தயாரிப்பதற்கு பதிலாக புதுப்பிக் கத்தக்க வளங்களைப் பயன் படுத்தி ஆற்றலை சேமிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப் பதவியேற்பு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 7, 2018

 

  • உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வினித் சரண், உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப் ஆகிய மூவரையும் கொலீஜியம் பரிந்துரைகளின்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
  • அதன்படி மூவருக்கும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஸ்டார்ட் அப் இந்தியாவின் கல்விக் கூட்டணி திட்டம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 7, 2018

  • நாட்டில் தொழில்முனைவு உணர்வை மேம்படுத்தும் மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஸ்டார்ட் அப் கல்வித்துறை கூட்டணி திட்டத்தை ஸ்டார்ட் அப் திட்டம் தொடங்கியுள்ளது.
  • இது ஒரே துறையில் செயல்படும் புதிய நிறுவனங்கள் மற்றும் கல்வி நிபுணர்களிடையிலான பிரத்யேகமான வழிகாட்டுதல் வாய்ப்பாகும்.
  • அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அதன் தொழில் பயன்பாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பது ஸ்டார்ட் அப் கல்வி கூட்டணியின் நோக்கமாகும்.

நீடித்த வளர்ச்சிக்கான நிதி ஆயோக்கின் சர்வதேச மாநாட்டை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 7, 2018

  • கொள்கை வழிகாட்டுதல் மூலம் நீடித்த வளர்ச்சி குறித்த நிதி ஆயோக்கின் சர்வதேச மநாட்டை(Sustainable Growth through Material Recycling: Policy Prescriptions”) மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
  • இந்த மாநாட்டில் நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு. ராஜீவ் குமார் மற்றும் நிதி ஆயோக்கின் முதன்மை செயல் அதிகாரி திரு. அமிதாப் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • இந்தியாவில் பொருட்கள் மறுசுழற்சிக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான கொள்கைகளை அடையாளம் காண்பதற்காக பல்வேறு நிபுணர்களை இந்த மாநாடு ஒன்றாக கொண்டு வந்துள்ளது.

முபாதலா கிளாசிக் டென்னிஸ் புஸார்னெஸ்கு சாம்பியன்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 7, 2018

  • அமெரிக்காவில் நடைபெற்ற முபாதலா கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரோமானிய வீராங்கனை மிஹேலா புஸார்னெஸ்கு சாம்பியன் பட்டம் வென்றார்.
  • புஸார்னெஸ்கு வென்ற முதல் டபுள்யு.டி.ஏ பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்விகள்

Q.1) பெப்சி நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார்.இந்திரா நூயிக்குப் பின் புதிய தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?

a) ஷிவா ஸ்ரீனிவாஸ்

b) ரவீந்தர் டாஹிஆ

c) ராமோன் லகார்டா

d) ரஞ்சித் ஸ்ரீனிவாஸ்

e) ரவீந்தர் ஸ்ரீனிவாஸ்தா

Click Here to View Answer
c) ராமோன் லகார்டா

Q.2) உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?

a) ஹரியானா

b) ஆந்திரபிரதேசம்

c) ராஜஸ்தான்

d) கர்நாடகா

e) கேரளா

Click Here to View Answer
b) ஆந்திரபிரதேசம்

Q.3) உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோருக்கு யார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்?

a) ஹேமந்த் குப்தா

b) R .சுபாஷ் ரெட்டி

c) தீபக் மிஸ்ரா

d) பாபாசாஹேப் போசலே

e) கிட்டா மிட்டல்

Click Here to View Answer
c) தீபக் மிஸ்ரா

Q.4) கொள்கை வழிகாட்டுதல் மூலம் நீடித்த வளர்ச்சி குறித்த நிதி ஆயோக்கின் சர்வதேச மநாட்டைமத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி  எங்கு தொடங்கி வைத்தார்?

a) ராஞ்சி

b) புதுதில்லி

c) போபால்

d) மும்பை

e) கொல்கத்தா

Click Here to View Answer
b) புதுதில்லி

Q.5) முபாதலா கிளாசிக் டென்னிஸ் தொடர் எங்கு நடைபெற்றது ?

a) இத்தாலி

b) பிரான்ஸ்

c) ஜெர்மனி

d) அமெரிக்கா

e) ஆஸ்திரேலியா

Click Here to View Answer
d) அமெரிக்கா

Other Important Links

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 6, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 4, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 3, 2018