TNPSC Current Affairs – English & Tamil – February 16, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(16th February 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – February 16, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. Corona vaccine

  • The Union Minister of Health has announced that the next phase of the vaccination campaign, which began in January, will start vaccinating elders with more than 50 years of age in two to three weeks.
  • It has also been reported that about 19 more new corona vaccines are in the texting process.
  1. கரோனா தடுப்பூசி
  • ஜனவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி முகாமின் அடுத்த கட்டமாக இன்னும் 2 முதல் 3 வாரங்களில் 50 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • மேலும் நாட்டில் சுமார் 19 கரோனா தடுப்பூசிகள் ஆய்வகப் பரிசோதனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. Central Drugs Standard control

  • The Central and State Drug standard Control organization has found that 16 drugs were of poor quality in its latest research.
  • They are mostly used for digestive problems and bacterial infections. It has also been found that some hand washing disinfectants are also of poor quality.
  1. மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்
  • மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் நடத்திய ஆய்வில் 16 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • அவை பெரும்பாலும் ஜீரண பாதிப்பு, பாக்டீரியா தொற்று தடுப்புக்கு பயன்படுத்தும் மருந்துகள் ஆகும். கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினிகள் சில தரமற்றதாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

  1. New Industrial Policy

  • The Chief Minister will announce the new industrial policy for small, micro and industrial enterprises on February 16.
  • He will also inaugurate 10 new industrial parks and industrial estate at 10 places including Manaparai, Oragadam, Manallur, Thadangam, Alangudi and Alathur and 13 finished projects.
  • 28 MoUs have also been signed for new industrial projects.

 

  1. புதிய தொழிற்கொள்கை
  • பிப்ரவரி 16 அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் புதிய தொழிற்கொள்கையை வெளியிடுவதுடன் சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கொள்கையையும் வெளியிட உள்ளார்.
  • மணப்பாறை, ஒரகடம், மாநல்லலூர், தடங்கம், ஆலங்குடி, ஆலத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டை மற்றும் 13 முடிவற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
  • மேலும் புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணர்வு ஒப்பந்தகளும் கையெழுத்தாக உள்ளன.

  1. World Trade Organization

  • Ngozi Okonjo-Iweala (66), has been appointed as the first woman Director – General of the World Trade Organization.
  • This is also the first time that an African native has been appointed as the Director – General of the 164-member World Trade Organization.
  • She also served as Nigeria’s finance minister and as managing director of the World Bank.
  1. உலக வர்த்தக அமைப்பு
  • நிகோசி ஒகோஞ்சோ இவேலா(66), உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 164 உறுப்பினர்களைக் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் தலைவராக ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்தவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • அவர் நைஜீரியாவின் நிதி அமைச்சராகவும், உலக வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

  1. Kancheepuram Thondai Mandala Aadinam

  • Natarajan (76) has been elected as the 233rd head(Madaathipathi) of Kanchipuram Thondai Mandala Aatheenam.
  • He is a retired PWD engineer.
  1. காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம்
  • காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் 233 வது மடாதிபதியாக நடராஜன்(76) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  1. Chinese Troops

  • The ongoing disengagement of Indian and Chinese troops on the north and south banks of the Pangong Tso lake is likely to be completed within a week.
  • As of now, Chinese troops have cleared the Finger 4 area on the north bank of the Pangong Tso lake.
  1. சீனப் படைகள்
  • பாங்காங் ட்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக்கரையில் இருந்து இந்திய மற்றும் சீனப் படைகள் தங்கள் எல்லைகளுக்குள் தொடர்ந்து பின்வாங்கி வருகின்றன. இது ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • தற்போதைய நிலவரப்படி, சீனப் படைகள் பாங்கோங் ட்சோ ஏரியின் வடக்குக் கரையில் உள்ள ஃபிங்கர் 4 பகுதியிலிருந்து பின்வாங்கியுள்ளது.

  1. Devandrakula Velalars

  • The Seven scheduled caste communities would be categorised under Devandrakula velalars will remain the SC list, said by the Social Justice and Empowerment Ministry.
  • And the Ministry announced that the communities will not be delisted from SC List.
  1. தேவந்திரகுல வேளாளர்கள்
  • தேவந்திரகுல வேளாளர்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட ஏழு தாழ்த்தப்பட்ட சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தொடந்து இடம்பெறும் என சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • மேலும் இந்த சமூகங்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கப்படாது என்று அமைச்சகம் அறிவித்தது.

  1. Geospatial data

  • To boost innovation, the Indian government has announced liberalisation of norms governing the acquisition and production of geospatial data in mapping policy.
  • The secretary of Department of Science and technology has announced that there will be complete deregulation for Indian entities in Geospatial data services.
  1. புவியியல் தரவு
  • புது கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, இந்தியாவின் மேப்பிங் கொள்கையில் புவியியல் தரவுகளைப் பெறுதல் மற்றும் உற்பத்தி செய்வதை நிர்வகிக்கும் விதிமுறைகளை தாராளமயமாக்குவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • புவியியல் தரவு சேவைகளில் இந்திய நிறுவனங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு நீக்கம் செய்யப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

  1. Leatherbacks

  • Leatherbacks, largest of the Seven species of Sea Turtles are found in all regions except Arctic and the Antarctic, which is listed in the Schedule I of the Indian’s Wildlife Protection Act, 1972.
  • Conservationists fears that the Mega development plans proposed in Little Andaman and Great Nicobar Island will heavily affect the three key nesting beaches, 2 in Little Andaman and 1 in Great Nicobar Islands.
  1. பேராமை / தோல்முதுகு ஆமை
  • ஏழு வகை கடல் ஆமைகளில் மிகப்பெரியதான பேராமை / தோல்முதுகு ஆமை ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் தவிர அனைத்து பகுதிகளிலும் காணப்படுகின்றன. இது இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 இன் அட்டவணை I இல் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • லிட்டில் அந்தமான் மற்றும் கிரேட் நிக்கோபார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள மெகா மேம்பாட்டுத் திட்டங்கள் பேராமைகளின் மூன்று முக்கிய கூடுகள் கொண்ட கடற்கரைகளை பெரிதும் பாதிக்கும் என்று பாதுகாவலர்கள் அஞ்சுகின்றனர். லிட்டில் அந்தமானில் 2 கூடுகளும், கிரேட் நிக்கோபார் தீவுகளில் 1 கூடும் உள்ளது.

  1. Fiscal deficit – States

  • The report submitted by the India Ratings and Research have estimated that the aggregate fiscal deficit of States will be 4.3% of GDP in 2021-22.
  • At present(2020-21), the aggregate fiscal deficit of States are at 4.6% of GDP.
  1. நிதி பற்றாக்குறை – மாநிலங்கள்
  • இந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி சமர்ப்பித்த அறிக்கையில் 2021-22 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களின் மொத்த நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3% ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
  • தற்போது(2020-21), மாநிலங்களின் மொத்த நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6% ஆக உள்ளது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – February 15, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
16th February 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – February 2021