TNPSC Current Affairs – English & Tamil – May 11, 2021
TNPSC Current Affairs – English & Tamil – May 11, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(11th May, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 11, 2021
TAMIL NADU
1. 16th legislative assembly begins in Tamil Nadu
- The 16th Tamil Nadu Legislative Assembly has been summoned to meet for its first session. Governor can summon or prorogue the State legislative assembly.
- The 234 newly elected Members of the legislative Assembly were sworn in by the Pro tem Speaker K.Pichandi.
- The inaugural session was held at Kalaivanar Arangam, at the Omandurar Government Estate instead of the traditional Fort St.George to maintain social distancing and other Covid-19 protocols.
1. 16ஆம் ஆண்டு சட்டமன்றம் தமிழ்நாட்டில் கூடுகிறது
- 16வது தமிழ்நாடு சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தொடருக்கு கூட்டஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில சட்டமன்றத்தை கூட்டுவது அல்லது ஒத்திவைப்பது ஆளுநரின் அதிகாரமாகும்.
- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கே. பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
- சமூக இடைவெளி மற்றும் பிற கோவிட்-19 நெறிமுறைகளைப் கடைபிடிப்பதற்காக பாரம்பரிய புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
NATIONAL
2. Puducherry becomes the fourth Union Territory to provide tapwater connection to all
- Puducherry had become ‘Har Ghar Jal’ Union Territory by ensuring tap connection to every rural home. Puducherry becomes the fourth State/ Union Territory after Goa, Telangana, and Andaman & Nicobar Islands to provide assured tap water supply to every rural home under Jal Jeevan Mission.
Jal Jeevan Mission (JJM)
- Jal Jeevan Mission (JJM) is a Union Government’s flagship programme, which is implemented in partnership with States/UTs to provide tap water connection to every rural household by 2024.
2. புதுச்சேரி அனைத்து வீட்டிற்கும் குழாய் நீர் விநியோகத்தை வழங்கும் நான்காவது யூனியன் பிரதேசமானது
- ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்ததன் மூலம் புதுச்சேரி ‘ஹர் கர் ஜல்‘ யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் நீர் விநியோகத்தை வழங்கும் கோவா, தெலுங்கானா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குப் பிறகு புதுச்சேரி நான்காவது மாநிலமாக / யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் (JJM)
- ஜல் ஜீவன் மிஷன் (JJM) என்பது மத்திய அரசின் முக்கிய திட்டமாகும். இது 2024ஆம் ஆண்டுக்குள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் குழாய் நீர் இணைப்பு வழங்குவதற்காக செயல்படுத்தப்படுகிறது.
3. Maharashtra government to offer free treatment to Mucormycosis patients
- Maharashtra Health Minister Rajesh Tope, announced that patients of Mucormycosis would be treated free of cost under Mahatma Phule Jan Arogya Yojana of the state. The medicines required for the treatment of this disease are expensive, therefore the state has decided to provide free treatment for this disease.
Mucormycosis
- Mucormycosis is a rare fungal infection that is now affecting those suffering from Corona virus. It causes blindness or serious illness and even death in some cases. If the disease is not treated early, it can have adverse effects on the respiratory system, brain and eyes.
3. மியூகோர்மைகோசிஸ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மகாராஷ்டிரா அரசு முடிவுசெய்துள்ளது
- மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், மாநிலத்தின் மகாத்மா புலே ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் மியூகோர்மைகோசிஸ் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நோய்க்குத் தேவையான மருந்துகள் விலை உயர்ந்தவை, எனவே இந்த நோய்க்கு இலவச சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மியூகோர்மைகோசிஸ்
- மியூகோர்மைகோசிஸ் என்பது ஒரு அரிய பூஞ்சை தொற்று ஆகும், இது இப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கிறது. இது குருட்டுத்தன்மை அல்லது கடுமையான நோயை ஏற்படுத்துகிறது மற்றும் சில சந்தர்ப்பங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால், அது சுவாச மண்டலம், மூளை மற்றும் கண்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
INTERNATIONAL
4. SpaceX had planned to launch DOGE-1 Satellite to the Moon Funded with Dogecoin in 2022
- SpaceX will launch DOGE-1 Satellite to the Moon Funded with Dogecoin in 2022.
- Dogecoin is a cryptocurrency and SpaceX accepts it for funding DOGE-1 project.
4. ஸ்பேஸ்எக்ஸ் 2022இல் டோஜ்காயின் நிதியுதவியுடன் சந்திரனுக்கு டோஜ்-1 செயற்கைக்கோளை ஏவ உள்ளது
- ஸ்பேஸ்எக்ஸ் 2022இல் டோஜ்காயின் நிதியுதவியுடன் சந்திரனுக்கு டோஜ்-1 செயற்கைக்கோளை ஏவ உள்ளது.
- டோஜ்காயின் ஒரு மெய்நிகர் நாணயமாகும் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் டோஜ்-1 திட்டத்திற்கு நிதியாக அதை ஏற்றுக்கொள்கிறது.
5. Cipla Ltd, Lupin Ltd and Sun Pharma are given license to produce Covid drug Baricitinib
- Cipla Ltd, Lupin Ltd, and Sun Pharma signed a licensing agreement with Eli Lilly to produce Covid drug Baricitinib. They have signed a royalty-free, non-exclusive voluntary license with Eli Lily.
- Baricitinib was issued a restricted emergency use approval by the Central Drugs Standard Control Organization (CDSCO). It can be used in combination with Remdesiver for the treatment of suspected or laboratory confirmed Covid-19. Baricitinib is a rheumatoid arthritis drug.
5. கோவிட் மருந்து பாரிசிடினிப் தயாரிக்க சிப்லா லிமிடெட், லூபின் லிமிடெட் மற்றும் சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் உரிமம் வழங்கப்படுகின்றன.
- சிப்லா நிறுவனம், லூபின் நிறுவனம் மற்றும் சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் கோவிட் மருந்து பாரிசிடினிப் தயாரிப்பதற்காக எலி லில்லியுடன் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவர்கள் எலி லில்லியுடன் ராயல்டி இல்லாத, பிரத்யேகமற்ற தன்னார்வ உரிமத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
- பாரிசிடினிப் மத்திய மருந்துகள் தரநிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பால் (CDSCO) கட்டுப்படுத்தப்பட்ட அவசர பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியது. இதை சந்தேகத்திற்குரிய அல்லது ஆய்வக உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 சிகிச்சைக்கு ரெம்டெசிவர் உடன் இணைந்து பயன்படுத்தப்படலாம். பாரிசிடினிப் ஒரு முடக்கு வாதம் மருந்தாகும்.
MILITARY EXERCISES
6. Indian and Indonesian navies conduct PASSEX off the Arabian Sea
- The Indian and Indonesian Navies conducted Passage Exercise (PASSEX) in the southern Arabian sea.
- The Indian Navy was represented by INS Sharda, an Offshore Patrol Vessel (OPV) with a Chetak helicopter, and the Indonesian Navy was represented by KRI Sultan Hasanudin, a 90 m Corvette.
- The exercise was aimed at improving interoperability and understanding between both the nations, they are regularly conducted by the Indian Navy with units of friendly foreign countries.
6. இந்திய மற்றும் இந்தோனேசிய கடற்படைகள் அரபிக் கடலில் பாஸ்எக்ஸை (PASSEX) நடத்துகின்றன
- இந்திய மற்றும் இந்தோனேசிய கடற்படைகள் தெற்கு அரபிக் கடலில் பாஸ்எக்ஸ் பயிற்சியை நடத்தின.
- இந்திய கடற்படையை ஐஎன்எஸ் ஷ்ரதா என்ற கடல் ரோந்துகப்பல் (ஓபிவி) சேடக் ஹெலிகாப்டருடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இந்தோனேசிய கடற்படையை 90 மீ கொர்வெட் என்ற கிரி சுல்தான் ஹசனுடின் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
- நட்பு ரீதியான கடற்படைகள் இரண்டிற்கும் இடையேயான செயல்பாட்டையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தவும் இந்த பயிற்சியின் நோக்கமாக இருந்தது, இது நட்பு நாடுகளின் பிரிவுகளுடன் இந்திய கடற்படையால் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
APPOINTMENTS
7. Reserve Bank of India appoints Jose J Kattoor as the new Executive Director of RBI
- The Reserve Bank of India (RBI) has appointed Jose Kattoor as the executive director (ED).
- He will look after human resource management, corporate strategy, budget and rajbhasha departments at the central bank.
- He holds a post-graduate qualification from the Institute of Rural Management of Anand, Bachelor of Law from Gujarat University, and Advanced Management Program (AMP) from Wharton School of Business, Pennsylvania.
7. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஜோஸ் ஜே கட்டூர் நியமனம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) செயல் இயக்குநராக (இடி) ஜோஸ் கட்டூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய வங்கியில் மனிதவள மேலாண்மை, கார்ப்பரேட் மூலோபாயம், பட்ஜெட் மற்றும் ராஜ்பாஷா துறைகளை கட்டூர் கவனித்துக் கொள்வார்.
- அவர் ஆனந்த் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்திலிருந்து முதுகலைப் பட்டம், குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டம், மற்றும் (ஏஎம்பி) வார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், பென்சில்வேனியாவிலிருந்து மேம்பட்ட மேலாண்மை திட்டத்தில் தேர்ச்சி பெற்றார்.
REPORTS AND INDICES
8. Renewable energy market outlook
- Renewable energy market outlook was released by International Energy Agency (IEA).
Highlights of Renewable energy market outlook report:
- Global renewable energy grew at the fastest pace in two decades in 2020.
- New renewable energy capacity in 2020 rose by 45% to 280 gigawatts (GW) last year, the largest year-on-year increase since 1999.
- China accounted for 50% of renewable energy capacity growth last year and will account for 45% this year and 58% in 2022, the report said.
- Globally, around 270 GW of new capacity is forecast to be added this year and nearly 280 GW in 2022.
- Governments auctioned 75 GW of offshore and onshore wind, solar photovoltaic and bioenergy capacity last year, up 20% from 2019.
8. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தை கண்ணோட்டம்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தை கண்ணோட்டத்தை சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வெளியிட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தை கண்ணோட்ட அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
- 2020ஆம் ஆண்டில் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இரண்டு தசாப்தங்களில் வேகமாக வளர்ந்துள்ளது.
- 2020ஆம் ஆண்டில் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 45%இல் இருந்து 280 ஜிகாவாட் ஆக உயர்ந்தது, இது 1999க்குப் பிறகு ஆண்டிற்கு ஆண்டு மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
- கடந்த ஆண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் வளர்ச்சியில் சீனா 50% பங்கு கொண்டது, இந்த ஆண்டு 45% மற்றும் 2022இல் 58% என்று அறிக்கை கூறுகிறது. உலகளவில், இந்த ஆண்டு சுமார் 270 ஜிகாவாட் புதிய திறன் சேர்க்கப்படும் என்றும், 2022இல் கிட்டத்தட்ட 280 ஜிகாவாட் சேர்க்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு 75 ஜிகாவாட் கடல் மற்றும் கடற்கரை காற்று, சூரிய ஒளிமின்னழுத்த மற்றும் உயிர் சக்தி திறனை அரசுகள் ஏலம் எடுத்தன, இது 2019இல் இருந்து 20% அதிகரித்துள்ளது.
AWARDS AND RECOGNITIONS
9. Babar Azam and Alyssa Healy named the ICC players of the month for April 2021
- Pakistan skipper Babar Azam was named the ICC Men’s Player of the Month for April 2021. Australian women’s team wicketkeeper-batsman Alyssa Healy was bagged the ICC Women’s Player of the month for the month of April.
9. பாபர் அசாம் மற்றும் அலிசா ஹீலி ஏப்ரல் 2021க்கான மாதத்தின் ஐசிசி வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஏப்ரல் 2021ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் வீரர் என்று அறிவிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய மகளிர் அணி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அலிசா ஹீலி ஏப்ரல் மாதத்தின் ஐசிசி மகளிர் வீரராக அறிவிக்கப்பட்டார்.
IMPORTANT DAYS
10. National Technology Day – 11 May
- India observed the 30th National Technology Day on 11 May 2021 to highlight our country’s advancements in all fields of science and technology.
- National Technology Day every year to mark the anniversary of the Pokhran nuclear tests of 1998. The day also marks the day when India’s first-ever indigenous aircraft, Hansa-1, took flight.
- Theme 2021: ‘Science and Technology for a sustainable future’
Pokhran nuclear tests
- India successfully test-fired Operation Shakti missile on 11 May 1997, at the Pokhran Test Range in Rajasthan, the first among the five nuclear tests in Pokhran.
- The test was headed by an aerospace engineer and former President APJ Abdul Kalam. Following the success of the operation, then Prime Minister Atal Bihar Vajpayee declared India a nuclear state, making it the sixth country to join the ‘nuclear club’ of nations. Since 1999, May 11 is observed as ‘National Technology Day’.
10. தேசிய தொழில்நுட்ப தினம் – 11 மே
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நமது நாட்டின் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுவதற்காக 11 மே 2021 அன்று 30வது தேசிய தொழில்நுட்ப தினத்தை இந்தியா அனுசரித்தது.
- 1998ஆம் ஆண்டின் பொக்ரான் அணுஆயுத சோதனைகளின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தொழில்நுட்ப தினம். இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானமான ஹன்சா-1 விமானம் பறந்து நாளையும் இது குறிக்கிறது.
- கருப்பொருள் 2021: ‘ஒரு நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்‘
பொக்ரான் அணு ஆயுத சோதனைகள்
- 11 மே 1997 அன்று ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் சோதனைத் தொடரில் இந்தியா வெற்றிகரமாக சக்தி திட்ட ஏவுகணையை சோதனை செய்தது. பொக்ரானில் நடைபெற்ற ஐந்து அணுஆயுத சோதனைகளில் இது முதல் முறையாகும்.
- இந்த சோதனைக்கு விண்வெளி பொறியாளரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தலைமை தாங்கினார். இந்த நடவடிக்கையின் வெற்றியைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் அடல் பீகாரி வாஜ்பாய் இந்தியாவை ஒரு அணுசக்தி நாடாக அறிவித்தார், இது நாடுகளின் “அணுசக்தி அமைப்பில்” சேர்ந்த ஆறாவது நாடானது. 1999 முதல், மே 11 ‘தேசிய தொழில்நுட்ப தினமாக’ அனுசரிக்கப்படுகிறது.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 11, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
11th May, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below.