TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 4, 2018

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் :

  • திரிபுராவில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் பெயரை மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மேலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

12 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா:

இத்தாலி நாட்டில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாயகமாக இருக்கும் ஊர்டிஜெய் எனும் சிறு ஊரில் நடந்த நான்காவது க்ரெடின் ஓபன் 2018 தொடரில், இறுதிச் சுற்றில் விளையாடுவதற்கு முன்னரே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா.


இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • சட்டம் மற்றும் நீதித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவை நிறுவுதல் குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான ஒப்புதல் மத்திய அமைச்சரவை அளித்துள்ளது.
  • சட்ட நிபுணர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் துறை சார்ந்த அனுபவங்களை பரிமாறுதல் மற்றும் அவர்களின் பயிற்சி மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை பயனுள்ள பயனுள்ள சட்ட உதவி முறையை கொண்டுவருதல் ஆகியவை மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவை நிறுவுவதற்கான திட்டம் குறித்த பிரச்சினைகளை மற்றும் தேவைகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றும்.

“CVIGIL” என்னும் செல்போன் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது(Election Commission of India).

  • தேர்தல்களின் போது நடைபெறும் நடத்தை விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய ஏதுவாக, “cVIGIL”  எனப்படும் செல்போன் செயலியை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. . பி. ராவத், தேர்தல் ஆணையர்கள் திரு. சுனில் அரோரா, திரு. அசோக் லவாசா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
  • தேர்தல்கள் அறிவிக்கப்படும்போது மட்டும் இது இயங்கும்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்து பிரேசில் அணி உலக சாதனை படைத்துள்ளது:

  • உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியானது தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் சமரா மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் 2-0 கோல் என்ற கணக்கில் வென்றது.
  • இதற்கு முன்பு ஜெர்மனி அணி 226 கோல்கள் அடித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. தற்போது ஜெர்மனியின் அந்த சாதனையை பிரேசில் அணி முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Other Important Links

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 3, 2018

TNPSC CURRENT AFFAIRS – TAMIL – JULY 2, 2018