TNPSC Current Affairs – English & Tamil – July 10, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(July 10, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 10, 2021


SCIENCE AND TECHNOLOGY


1. Emvolio ensures safe last-mile delivery of vaccines to rural India

  • Blackfrog Technologies, a startup supported by DBT-BIRAC, has developed Emvolio. It is a portable battery-powered medical-grade refrigeration device that improves the efficiency of immunisation.
  • This device strictly maintains preset temperature for up to 12 hours, enabling the safe and efficient transportation of vaccines to the last mile.

Department of Biotechnology (DBT) 

  • The Department of Biotechnology (DBT) works under the Union Ministry of Science & Technology. It promotes and accelerates the development of biotechnology in India.

Biotechnology Industry Research Assistance Council (BIRAC)

  • Biotechnology Industry Research Assistance Council (BIRAC) is a not-for-profit Public Sector Enterprise set up by the Department of Biotechnology (DBT) as an Interface Agency to strengthen and empower the emerging Biotech enterprise to undertake strategic research and innovation, addressing nationally relevant product development needs.

 

1. எம்வோலியோ கிராமப்புற இந்தியாவுக்கு தடுப்பூசிகளை பாதுகாப்பாக வழங்குவதை உறுதி செய்கிறது

  • DBT-BIRAC ஆதரவு பெற்ற ஒரு தொடக்க நிறுவனமான பிளாக்ஃப்ராக் டெக்னாலஜிஸ், எம்வோலியோ (Emvolio)வை உருவாக்கியுள்ளது. இது தடுப்பூசி செயல்திறனை மேம்படுத்தும், ஒரு சிறிய பேட்டரி மூலம் இயங்கும் மருத்துவ தர குளிர்சாதனம் ஆகும்.
  • இந்த சாதனம் 12 மணி நேரம் வரை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலையைப் பராமரிக்கிறது. இது தடுப்பூசிகளின் கடைசி கட்ட பாதுகாப்பான மற்றும் திறமையான போக்குவரத்துக்கு உதவுகிறது.

உயிரி தொழில்நுட்பத் துறை (DBT)

  • உயிரி தொழில்நுட்பத் துறை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது இந்தியாவில் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவித்து துரிதப்படுத்துகிறது.

உயிரி தொழில்நுட்ப தொழிற்சாலை ஆய்வு உதவி கவுன்சில் (BIRAC)

  • உயிரி தொழில்நுட்ப தொழிற்சாலை ஆய்வு உதவி கவுன்சில் (BIRAC) என்பது உயிரி தொழில்நுட்ப துறையால் (DBT) ஒரு இடைமுக முகமையாக அமைக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற பொதுத்துறை நிறுவனமாகும். இது வளர்ந்து வரும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தை வலுப்படுத்தவும், மூலோபாய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும், தேசிய தொடர்புடைய தயாரிப்பு வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்யவும் உதவுகிறது.

2. Defence PSU Bharat Dynamics Limited to manufacture ‘Akash Missiles’

  • Bharat Dynamics Limited (BDL), a Hyderabad-based Miniratna Defence Public Sector Undertaking (PSU), has inked a contract with the Union Defence Ministry to manufacture indigenously developed ‘Akash Missiles’ to the Indian Air Force (IAF).

Akash

  • Akash is an indigenously developed all-weather, air defence weapon missile that can engage multiple threats simultaneously. The medium-range mobile surface-to-air missile system has been developed by Defence Research Development Organisation (DRDO). It is designed to be launched from mobile platforms or static platforms.
  • Akash Missile has been developed under the integrated guided-missile development programme (IGMDP). The programme also involved the development of the Nag, Agni, Trishul missiles and Prithvi ballistic missile.

 

2. பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ்ஆகாஷ் ஏவுகணைகளைதயாரிக்கவுள்ளது

  • ஹைதராபாத்தைச் சேர்ந்த மினிரத்னா பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் (BDL), மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இந்திய விமானப் படைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டஆகாஷ் ஏவுகணைகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஆகாஷ்

  • ஆகாஷ் ஒரு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அனைத்து வானிலை, வான் பாதுகாப்பு ஆயுத ஏவுகணையாகும். இது ஒரே நேரத்தில் பல அச்சுறுத்தல்களுக்கான பாதுகாப்பை வழங்கும். இந்த நடுத்தர தூரம் பயணிக்கும், நடமாடும் தரையிலிருந்து வானுக்கு ஏவும் ஏவுகணை அமைப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் (டி.ஆர்.டி.) உருவாக்கப்பட்டுள்ளது. இது நடமாடும் தளங்கள் அல்லது நிலையான தளங்களில் இருந்து ஏவும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஆகாஷ் ஏவுகணை ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. நாக், அக்னி, திரிசூல் ஏவுகணைகள் மற்றும் பிருத்வி பாலிஸ்டிக் ஏவுகணை ஆகியனவும் இந்த திட்டத்தில் உருவாக்கப்பட்டன.

3. NASA analyses the first sample of the asteroid Ryugu

  • NASA analyses the first sample of the asteroid Ryugu brought to Earth by JAXA’s Hyabusa 2 spacecraft. Hyabusa 2 was launched by JAXA (Japan Aerospace Exploration Agency) in 2014.
  • Asteroids are found in the asteroid belt between Mars and Jupiter.

 

3. ரியுகு என்ற சிறுகோளின் முதல் மாதிரியை நாசா பகுப்பாய்வு செய்கிறது

  • ஜாக்சாவின் (JAXA) ஹயாபுசா 2 விண்கலம் பூமிக்கு கொண்டு வந்த ரியுகு சிறுகோளின் முதல் மாதிரியை நாசா பகுப்பாய்வு செய்கிறது. 2014இல் ஹயாபுசா 2 விண்கலம் ஜாக்ஸாவால் (JAXA-Japan Aerospace Exploration Agency) விண்ணில் செலுத்தப்பட்டது.
  • செவ்வாய் மற்றும் வியாழன் இடையே சிறுகோள் பெல்ட்டில் சிறுகோள்கள் காணப்படுகின்றன.

4. Scientists record gravitational waves produced by the collision of a neutron star and a black hole for the first time

  • Scientists recorded the gravitational waves produced by the collision of a neutron star and a black hole for the first time.
  • Neutron stars are the final form of the stars with mass above the Sun.

Gravitational waves:

  • The concept of gravitational waves was first proposed by Albert Einstein but were first discovered in 2015 by LIGO (The Laser Interferometer Gravitational-Wave Observatory). It is usually formed when two celestial bodies merge together but can be detected only when those celestial bodies are large enough.
  • It travels at the speed of light.

 

4. நியூட்ரான் நட்சத்திரம் மற்றும் கருந்துளை ஆகியவற்றின் மோதலால் உருவான புவியீர்ப்பு அலைகளை விஞ்ஞானிகள் முதல் முறையாக பதிவு செய்தனர்

  • விஞ்ஞானிகள் முதல் முறையாக நியூட்ரான் நட்சத்திரம் மற்றும் கருந்துளை மோதல் மூலம் உற்பத்தியான புவியீர்ப்பு அலைகளை பதிவு செய்தனர்.
  • நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரியனை விட அதிக நிறை கொண்ட நட்சத்திரங்களின் இறுதி வடிவமாகும்.

புவியீர்ப்பு அலைகள்:

  • புவியீர்ப்பு அலைகள் பற்றிய கோட்பாடு முதன்முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் முன்மொழியப்பட்டது. ஆனால் அவை முதலில் LIGO (The Laser Interferometer Gravitational-Wave Observatory) மூலம் 2015இல் கண்டுபிடிக்கப்பட்டன. பொதுவாக இரண்டு விண்ணுலக பொருட்கள் ஒன்று சேரும் போது இவை உருவாகின்றன. ஆனால் அதனை அப்பொருள்கள் போதுமான அளவு பெரியதாக இருக்கும்போது மட்டுமே பதிவு செய்யம் முடியும்.
  • புவியீர்ப்பு அலைகள் ஒளிவேகத்தில் பயணிக்கிறது.

NATIONAL


5. Piyush Goyal co-chairs the 21st session of the India-Italy Joint Commission for Economic Cooperation

  • Union Commerce and Industry Minister Piyush Goyal and Luigi Di Maio, Minister of Foreign Affairs and International Cooperation of Italy, co-chaired the 21st session of the India-Italy Joint Commission for Economic Cooperation(JCEC).

 

5. பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியாஇத்தாலி கூட்டு ஆணையத்தின் 21வது கூட்டத்தொடருக்கு பியூஷ் கோயல் இணைத் தலைமை தாங்கினார்

  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் லூய்கி டி மாயோ ஆகியோர் பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியாஇத்தாலி கூட்டு ஆணையத்தின் 21வது கூட்டத்தொடருக்கு இணைத் தலைமை வகித்தனர்.

INTERNATIONAL


6. The Pearl Diving Pool of Dubai becomes the world’s deepest swimming pool

  • The Pearl Diving Pool, the world’s deepest swimming pool, was constructed for Dubai crown prince Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum in
  • It has a gross floor area of approximately 5000 sq. m and a depth of 196 feet (60 metres). The Pearl Diving Pool is a part of the ‘Deep Dive Dubai’ tourist attraction.
  • It is certified as “the deepest swimming pool for diving” by the Guinness World Records. It is constructed to resemble an abandoned underwater sunken city.

 

6. துபாய் பேர்ல் டைவிங் குளம் உலகின் ஆழமான நீச்சல் குளமாகியுள்ளது

  • துபாயில் உலகின் மிக ஆழமான நீச்சல் குளமான பேர்ல் டைவிங் குளம் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்காக கட்டப்பட்டது.
  • இது தோராயமாக 5000 சதுர மீட்டர் மொத்த தரைபரப்பையும் மற்றும் 196 அடி (60 மீட்டர்) ஆழத்தையும் கொண்டுள்ளது. பேர்ல் டைவிங் குளம் ‘டீப் டைவ் துபாய்’ சுற்றுலா ஈர்ப்பின் ஒரு பகுதியாகும்.
  • இது கின்னஸ் உலக சாதனை அமைப்பால் “டைவிங் செய்வதற்கான ஆழமான நீச்சல் குளம்” என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இது கைவிடப்பட்ட நீருக்கடியில் மூழ்கிய நகரத்தை ஒத்ததாக கட்டப்பட்டுள்ளது.

SPORTS


7. Pawan Singh becomes the first-ever Indian juror for the Tokyo Olympic Games 2020 shooting

  • Pawan Singh, the Joint Secretary-General of the National Rifle Association of India (NRAI), has been selected as the first-ever Indian juror for the Tokyo Olympic Games 2020 shooting. He is the founder-director of the Gun for Glory Shooting Academy in Balewadi.
  • A total of 26 jury members will officiate at the Tokyo Olympics, of which six will be from Japan and the rest from other countries.

 

7. பவன் சிங் டோக்கியோ ஒலிம்பிக் 2020இன் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான முதல் இந்திய நடுவரானார்

  • இந்திய தேசிய ரைபிள் சங்கத்தின் (NRA) இணை செயலாளர் பவன் சிங், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான முதல் இந்திய நடுவரா (juror) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பலேவாடியில் உள்ள கன் ஃபார் குளோரி ஷூட்டிங் அகாடமியின் நிறுவனர்-இயக்குனர் ஆவார்.
  • மொத்தம் 26 ஜூரி உறுப்பினர்கள் ஒலிம்பிக்கில் பணியாற்றுவார்கள். அவர்களில் ஆறு பேர் ஜப்பானிலிருந்தும் மற்றவர்கள் மற்ற நாடுகளிலிருந்தும் இருப்பார்கள்.

IMPORTANT DAYS


8. National Fish Farmers’ Day – 10 July

  • The National Fish Farmers’ Day is celebrated on 10 July annually to recognise the hard work of fish farmers.
  • The day is celebrated in the memory of scientists K. H. Alikunhi and Dr. H. L. Chaudhary for their successful demonstration of Hypophysation (technology of induced breeding) in Indian Major Carps on 10 July 1957 at Angul in Odisha.
  • The day was also celebrated as the National Fisheries Development Board (NFDB) Foundation Day.

 

8. தேசிய கடல் வேளாண் தினம் – 10 ஜூலை

  • மீன் வளர்ப்பவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கடல் வேளாண் தினம் ஆண்டுதோறும் 10 ஜூலை அன்று கொண்டாடப்படுகிறது.
  • 10 ஜூலை 1957 அன்று ஒடிசாவின் அங்குல் என்னும் இடத்தில் இந்திய மேஜர் கார்ப்ஸில் (கெண்டை மீன்) ஹைப்போபிசேஷன் (தூண்டப்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்பம்) வெற்றிகரமாக செய்ததற்காக விஞ்ஞானிகள் டாக்டர். கே. எச். அலிகுனி மற்றும் டாக்டர். எச். எல். சவுத்ரி நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் தேசிய மீன் வள வாரியம் (NFDB) தொடங்கப்பட்ட தினமாகவும் கொண்டாடப்பட்டது.

9. Global Energy Independence Day – 10 July

  • Global Energy Independence Day is observed annually on 10 July for increasing awareness regarding alternative energy sources.
  • The world population is expected to surpass 9.5 billion in 2050, according to the United Nations.

 

9. சர்வதேச எரிசக்தி சுதந்திர தினம் – 10 ஜூலை

  • மாற்று எரிசக்தி ஆதாரங்கள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக சர்வதேச எரிசக்தி சுதந்திர தினம் ஆண்டுதோறும் 10 ஜூலை அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் படி, உலக மக்கள் தொகை 2050இல்5 பில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DAY IN HISTORY


10. Vellore Day – 10 July

  • Vellore Day was observed on 10 July. This year marks the 215th anniversary of the Vellore Sepoy Mutiny.
  • Vellore revolt ended with the Indian sepoys seizing the Vellore Fort on 10 July 1806. The revolt broke out following a change in dress code introduced in November 1805 by the British.

 

10. வேலூர் தினம் – 10 ஜூலை

  • 10 ஜூலை அன்று வேலூர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வேலூர் சிப்பாய் கலகத்தின் 215வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • 10 ஜூலை 1806 அன்று இந்திய சிப்பாய்கள் வேலூர் கோட்டையைக் கைப்பற்றியதோடு வேலூர் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. 1805 நவம்பரில், பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடைக் குறியீட்டில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து இந்த கலகம் வெடித்தது.