TNPSC Current Affairs – English & Tamil – March 5, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(5th March, 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.



Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 5, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


 

  1. Importing Red rice from Assam to the USA for the first time.

  • The first consignment of ‘red rice’ was flagged off today to the USA. The rice variety is referred as ‘Bao-dhaan’, which is an integral part of the Assamese food
  • Iron rich ‘red rice’ is grown in Brahmaputra valley of Assam, without the use of any chemical fertilizer.
  • The flagging off ceremony of the export consignments was carried out by APEDA, Which promotes rice exports through collaborations with various stakeholders in the value chains.
  • The government had set up the Rice Export Promotion Forum (REPF), under the aegis of the APEDA.
  1. சிவப்பு அரிசி, அசாமிலிருந்து அமெரிக்காவிற்கு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • ‘சிவப்பு அரிசி’ முதல் முறையாக அசாமிலிருந்து, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ‘பாவோ-தான்’ என குறிப்பிடப்படும் இந்த அரிசி வகை, அஸ்ஸாமிய உணவு முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.
  • இரும்பு சத்து நிறைந்த ‘சிவப்பு அரிசி’ அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் ரசாயன உரத்தை பயன்படுத்தாமல், அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
  • இந்த முதல் ஏற்றுமதியை ஏ.பி.இ.டி.ஏ(APEDA) கொடியசைத்து துவக்கி வைத்தது. இந்த அமைப்பு பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து அரிசி ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது.
  • இந்திய அரசாங்கம், ஏ.பி.இ.டி.ஏ-ன் கீழ் நெல் ஏற்றுமதி மேம்பாட்டு மன்றம் ஒன்றையும் (REPF) அமைத்துள்ளது.

  1. PM Narendra Modi to receive the CERAWeek Global Energy and Environment Leadership Award.

  • India Prime Minister Narendra Modi will receive the CERAWeek Global Energy and Environment Leadership Award and deliver keynote address at the Cambridge Energy Research Associates Week (CERAWeek) 2021 on 5th March through video conferencing.
  • CERAWeek Global Energy and Environment Leadership Award was instituted in 2016, which recognizes the commitment of leadership to the future of global energy & the environment.
  • CERAWeek was founded in 1983 by Dr. Daniel Yergin. This year, it was conducted virtually from 1st March to 5th March, 2021.
  1. பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு செராவீக்(CERAWEEK) உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.
  • இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செராவீக் உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதை பெற்றார். மேலும் கேம்பிரிட்ஜ் எரிசக்தி ஆராய்ச்சி அசோசியேட்ஸ் வாரத்தில் (CERAWEEK) காணொலி காட்சியின் மூலம் சிறப்புரையாற்றினார்.
  • செராவீக் உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது 2016 இல் நிறுவப்பட்டது, இது உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலின் எதிர்காலம் குறித்த தலைமைத்துவத்தின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கிறது.
  • செராவீக் 1983ல் டாக்டர் டேனியல் யெர்கின் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த ஆண்டு, 1 மார்ச் முதல் 5 மார்ச் 2021 வரை நடத்தப்பட்டது.

  1. Union Minister of Information and Broadcasting Prakash Javadekar on Self-regulation of OTT platforms

  • Union Minister of Information and Broadcasting Prakash Javadekar held an interaction with representatives of various over-the-top (OTT) platforms including from Alt Balaji, Hotstar, Amazon Prime, Netflix, Jio, Zee5, Viacom18, Shemaroo, MxPlayer, etc.,
  • It was decided that Government would come out with progressive institutional mechanism for OTT players and develop a level playing field with the idea of self-regulation and are expected to develop an effective grievance redressal mechanism.
  • The Minister has clarified that OTT platforms will not have to register with the government, and no government nominee will be present in the self-regulatory body.
  1. OTT தளங்களின் சுய கட்டுப்பாடு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் உரையாடினார்.
  • ஆல்ட் பாலாஜி, ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ், ஜியோ, ஜீ 5, வியாகாம் 18, ஷெமரூ, எம்எக்ஸ் பிளேயர், உள்ளிட்ட பல்வேறு ஓவர்-தி-டாப் (OTT) தளங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் உரையாடினார்.
  • இதில், OTT தள உரிமையாளர்கள் முற்போக்கான நிறுவன அமைப்பை உருவாக்கவும், சுய ஒழுங்குமுறையில் ஒரு சமமான தளத்தை உருவாக்கவும்மற்றும் ஒரு பயனுள்ள குறை தீர்க்கும் நெறிமுறையை கட்டமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • OTT தளங்கள் அரசாங்கத்துடன் கட்டாயம் பதிவு செய்யவேண்டியதில்லை என்றும், எந்த அரசாங்க வேட்பாளரும் சுய ஒழுங்குமுறை அமைப்புக்குள் இருக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

  1. 2023 Declared as International Year of Millets by UN General Assembly

  • The resolution titled ‘International Year of Millets 2023’ was initiated by India with Bangladesh, Kenya, Nepal, Nigeria, Russia and Senegal was proposed in UN General Assembly.
  • As the resolution was supported by 70 nations, it was put for voting in the UN General Assembly.
  • The 193-member General Assembly unanimously adopted the resolution, declaring 2023 as the International Year of Millets.
  1. 2023, ஐ.நா பொதுச் சபையால் சர்வதேச சிறுதாணியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டது.
  • ஐ.நா பொதுச் சபையில் வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா மற்றும் செனகல் ஆகிய நாடுகளுடன் ‘சர்வதேச சிறுதாணியங்கள் 2023’ என்ற தீர்மானம் இந்தியாவால் முன்மொழியப்பட்டது.
  • இந்த தீர்மானத்தை 70 நாடுகள் ஆதரித்ததால், ஐ.நா பொதுச் சபையில் வாக்களிக்க வைக்கப்பட்டது.
  • 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபை தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டதால், 2023-ஐ சர்வதேச சிறுதாணியங்கள் ஆண்டாக ஐ.நா அறிவித்தது.

  1. Union Ministry of Housing and Urban affairs released Ease of living index 2020.

  • The rankings under Ease of Living Index 2020 were announced by Union Ministry of Housing and Urban Affairs for cities based on population.
  • The assessment exercise was conducted in 2020 and overall 111 cities of the country participated in this exercise.
  • Bengaluru emerged as the top performer followed by Pune, Ahmedabad, Chennai, Surat, Navi Mumbai, Coimbatore, Vadodara, Indore, and Greater Mumbai in the category of million plus population.
  • Shimla was ranked the highest followed by Bhubaneswar and Muzaffarpur in Bihar had the lowest score in the category of cities with less than a million people.
  • From Tamilnadu, vellore and Trichy got the 6th and 10th places respectively in the category of cities with less than a million people
  1. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், வாழ சுலபமான நகரங்கள் பட்டியல் 2020ஐ வெளியிட்டுள்ளது.
  • வாழ சுலபமான நகரங்கள் பட்டியல் 2020இன் கீழ், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம், மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு நகரங்களுக்கான தரவரிசைகளை அறிவித்துள்ளது.
  • கடந்த 2020ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்த மதிப்பீட்டில், நாட்டின் 111 நகரங்கள் பங்கேற்றன.
  • இந்த பட்டியலில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை பிரிவில், பெங்களூரு முதலிடத்தைப் பிடித்தது. அடுத்தடுத்த இடங்ககளில் பூனா, ஆமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோயம்புத்தூர், வதோதரா, இந்தோர், மற்றும் கிரேட்டர் மும்பை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
  • 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை பிரிவில், சிம்லா முதல் இடத்தையும், புவனேஸ்வர் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது, மற்றும் பீகாரில் முசாபர்பூர் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
  • தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை பிரிவில், சேலம், வேலூர் மற்றும் திருச்சி நகரங்கள் முறையே 5வது, 6வது மற்றும் 10வது இடங்களைப் பெற்றுள்ளன.

  1. Union Ministry of Housing and Urban affairs released the Municipality Performance index 2020.

  • The rankings under Municipality Performance Index 2020 were announced by Union Ministry of Housing and Urban Affairs for cities based on population.
  • Indore topped the list, followed by Surat and Bhopal in the category of million plus population.
  • New Delhi Municipal Council (NDMC) emerged as the leader, followed by Tirupati and Gandhinagar in the category of less than million population.
  • Services, Finance, Policy, Technology and Governance were the five verticals used to measure the municipalities performances.
  1. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நகராட்சி செயல்திறன் குறியீட்டு 2020 ஐ வெளியிட்டது.
  • நகராட்சி செயல்திறன் குறியீட்டு 2020இன் கீழ், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கும், ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்குமான தரவரிசைகளை அறிவித்துள்ளது..
  • 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை பிரிவில், இந்தோர் முதலிடத்திலும், சூரத் மற்றும் போபால் நகரங்கள் உள்ளன.
  • 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை பிரிவில், புது டெல்லி மாநகர சபை (என்.டி.எம்.சி) முதலிடத்திலும், திருப்பதி மற்றும் காந்திநகர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • சேவைகள், நிதி, கொள்கை, தொழில்நுட்பம் மற்றும் ஆளுகை ஆகிய ஐந்து துறைகளின் செயல்திறன் அளவைக் கொண்டு நகராட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. 12 Indian Institutions secured positions in top 100 in the QS Subject Rankings for the year 2021.

  • Union Education Minister Ramesh Pokhriyal addressed at the unveiling of QS World University Rankings by Subject 2021 and the Minister expressed his happiness and congratulated 12 Indian Institutions on securing position in top 100 in the QS Subject Rankings for the year 2021.
  • IIT Bombay, IIT Delhi, IIT Madras, IIT Kharagpur, IISC Bangalore, IIT Guwahati,, IIM Bangalore, IIM Ahmedabad, JNU, Anna University, University of Delhi, and O.P Jindal University are the 12 Indian institutions made it in the top 100 positions of the world.
  • IIT Madras has been ranked 30th in the world for Petroleum Engineering, IIT Bombay has been ranked 41st and IIT Kharagpur has been ranked 44th in the world for Minerals and Mining Engineering, and University of Delhi has been ranked 50th in the world for Development Studies.
  1. 2020-ம் ஆண்டிற்கான கியூஎஸ்(QS) பாடம் தரவரிசையின் முதல் 100 இடங்களில் 12 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
  • மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், 2021 ஆம் ஆண்டுக்கான கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசைகளை வெளியிடும் விழாவில் உரையாற்றினார், அப்போது அவர், 2021 ஆம் ஆண்டிற்கான கியூஎஸ் பாடம் தரவரிசையின் முதல் 100 இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ள 12 இந்திய நிறுவனங்களை வாழ்த்தினார்.
  • ஐ.ஐ.டி பம்பாய், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.டி கரக்பூர், ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர், ஐ.ஐ.டி குவாத்தி, ஐ.ஐ.எம் பெங்களூர், ஐ.ஐ.எம் ஆமதாபாத், ஜே.என்.யூ, அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், மற்றும் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகியன முதல் 100 இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • ஐ.ஐ.டி மெட்ராஸ் பெட்ரோலிய பொறியியலில் உலகில் 30 வது இடத்தையும், ஐ.ஐ.டி பம்பாய் 41 வது இடத்தையும், ஐ.ஐ.டி கரக்பூர் தாதுக்கள் மற்றும் சுரங்க பொறியியலில் உலகில் 44 வது இடத்தையும், டெல்லி பல்கலைக்கழகம் மேம்பாடு ஆய்வுகளில் உலகில் 50 வது இடத்தையும் பெற்றுள்ளது.

  1. Webinar on Production Linked Incentives scheme was addressed by PM Narendra Modi

  • Prime Minister Narendra Modi addressed a webinar on Production Linked Incentives scheme organized by Department of Industry and International Trade and NITI Aayog through video conference.
  • He said production linked incentive (PLI) scheme, which is aimed at boosting domestic manufacturing and exports, is expected to increase the country’s production by $520 billion in the next five years.
  • An average of 5% of production is given as incentive, which means that PLI schemes will lead to production worth USD 520 billion in India in the next five years.
  1. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைகள் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்
  • தொழில் துறை மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை மற்றும் நிதி ஆயோக் ஏற்பாடு செய்த உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புகள் திட்டம் குறித்து காணொலிக் காட்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
  • உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு (பிஎல்ஐ) திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் உற்பத்தியை 520 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உற்பத்தியின் சராசரியில் 5% ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது, அதாவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில், 520 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உற்பத்திக்கு இந்த பிஎல்ஐ திட்டங்கள் வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

  1. ArcelorMittal-Nippon Steel India and Odisha Government signed an MoU for setting up a 12 MT integrated steel plant in Odisha. 

  • ArcelorMittal-Nippon Steel India and Odisha Government signed an MoU for setting up a 12 MT integrated steel plant in Kendrapada district of Odisha with an investment of ₹ 50000 crore on 4 March, 2021.
  • This mega steel plant in Kendrapada is expected to bring a new wave of economic development and employment generation in Odisha and will give boost to the missions of Purvodaya and Aatmanirbhar Bharat.
  • And also this plant will benefit from massive infrastructure developments in the region over the past six years such as expansion of Paradip port and setting up of Mahanadi riverine port etc.,
  1. ஆர்சிலர்மிட்டல்-நிப்பான் ஸ்டீல் இந்தியா மற்றும் ஒடிசா அரசு இணைந்து ஒடிசாவில் 12 மெ.டன் ஒருங்கிணைந்த உருக்கு எஃகு ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • ஆர்சிலர்மிட்டல்-நிப்பான் ஸ்டீல் இந்தியா மற்றும் ஒடிசா அரசு இணைந்து ஒடிசா மாநிலம் கேந்திரபடா மாவட்டத்தில் 12 மெ.டன் ஒருங்கிணைந்த எஃகு ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 4 மார்ச் 2021 அன்று 50000 கோடி ரூபாய் முதலீட்டில் கையெழுத்தானது.
  • கேந்திரபடாவில் அமைக்கப்பட உள்ள இந்த மெகா எஃகு ஆலை, ஒடிசாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஒரு புதிய அலையை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் புர்வோதயா மற்றும் அட்மநிர்பார் பாரத் ஆகிய திட்டங்களுக்கும் இது ஊக்கமளிக்கும்..
  • பாரதீப் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தல் மற்றும் மகாநதிதுறைமுகம் அமைத்தல் போன்ற பெரிய உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் இந்த ஆலையும் பயனடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. Amazon web services survey reported that India’s digital skilled workforce needs to grow nine-fold by 2025.

  • According to a report commissioned by Amazon Web Services (AWS), India’s current workforce has only 12% digitally skilled employees, and the number of employees with digital skills in the country will need to increase nine-fold by 2025.
  • The report titled ‘Unlocking APAC’s Digital Potential: Changing Digital Skill Needs and Policy Approaches’, said that nearly 150 million workers in six APAC countries apply digital skills on the job.
  • The research was conducted across six countries in the APAC region, including Australia, India, Indonesia, Japan, Singapore and South Korea.
  1. அமேசான் வலை சேவைகள் கணக்கெடுப்பு, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் திறன் கொண்ட ஊழியர்கள் ஒன்பது மடங்கு வளர வேண்டும் என தெரிவித்துள்ளது.
  • அமேசான் வலை சேவைகள் (AWS) அறிக்கையின்படி, இந்தியாவின் தற்போதைய தொழிலாளர் தொகுப்பில் 12% மட்டுமே டிஜிட்டல் திறன் கொண்ட ஊழியர்கள் உள்ளனர், மேலும் நாட்டில் டிஜிட்டல் திறன் கொண்ட ஊழியர்களின் எண்ணிக்கை 2025 க்குள் ஒன்பது மடங்கு அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ‘ஆசிய பசிபிக் பகுதியில் டிஜிட்டல் ஆற்றல் திறத்தல்: டிஜிட்டல் திறன் தேவைகள் மற்றும் கொள்கை அணுகுமுறைகளை மாற்றுதல்’ என்ற தலைப்பிலான அறிக்கையில், ஆறு ஆசிய பசிபிக் நாடுகளில் கிட்டத்தட்ட 150 மில்லியன் தொழிலாளர்கள் தங்கள் பணியில் டிஜிட்டல் திறன்களைப் பயன்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ளது.
  • இந்த ஆய்வு ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட ஆறு ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 5, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
5th March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021