TNPSC Current Affairs – English & Tamil – June 5, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(5th June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 5, 2021


TAMIL NADU


  1. Tamil Nadu Minister Shekhar Babu launches a scheme to preserve ancient documents and files relating to temples digitally
  • Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Minister Sekar Babu launched a scheme to digitally preserve the ancient documents and files of the temples of the Hindu Religious and Charitable Endowments Department.
  • Under this scheme, the old files in the Office of the Commissioner of Hindu Religious and Charitable Endowments can be maintained in a way that is not ruined over time. This scheme will be expanded and implemented in a phased manner to preserve the long-term files in subordinate offices of HRCE Department.

 

  1. கோவில்கள் தொடர்பான பழமையான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டத்தை தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
  • கோவில்கள் தொடர்பான இந்து சமய அறநிலையத்துறையின் பழமையான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டத்தை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழமையான கோப்புகள் காலபோக்கில் சிதிலமடையாத வண்ணம் பேணிகாக்க முடியும். இம்முறையில் இத்துறையின் சார்நிலை அலுவலகங்களில் உள்ள நீண்டகால கோப்புகளையும் பேணி பாதுகாத்திட படிப்படியாக இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

ECOLOGY AND ENVIRONMENT


  1. COVID-19 affects 13 Asiatic lions in Vandalur Zoological Park and lioness Neela dies of COVID-19
  • 13 Asiatic lions in Vandalur Zoological Park were affected by COVID-19, among which lioness Neela died of COVID-19.

Asiatic lion

  • The Asiatic lion population in the wild is found only in Gir National Park, Gujarat.
  • It is slightly smaller than the African lion.
  • IUCN Red List: Endangered
  • CITES List: Appendix I
  • Wildlife Protection Act, 1972: Schedule I

 

  1. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 ஆசிய சிங்கங்கள் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளன மேலும் நீலா என்ற பெண் சிங்கம் கோவிட்-19ஆல் மரணமடைந்துள்ளது
  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 13 ஆசிய சிங்கங்கள் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டன. அவற்றில் நீலா என்னும் பெண் சிங்கம் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு இறந்தது.

ஆசிய சிங்கம்

  • குஜராத்தின் கிர் தேசிய பூங்காவில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் காணப்படுகிறது.
  • இது ஆப்பிரிக்க சிங்கத்தை விட சற்று சிறியது.
  • IUCN சிவப்பு பட்டியல்: அழிந்துவரும் வகை
  • CITES பட்டியல்: இணைப்பு 1
  • வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்,1972: அட்டவணை 1

NATIONAL


  1. DBT-NII receives trademark for India’s first indigenous tumour antigen SPAG9
  • DBT-NII (Department of Bio-Technology, National Institute of Immunology) received a trademark for India’s first indigenous tumour antigen SPAG9. SPAG9 was discovered by Anil Suri in 1998, who heads the Cancer Research Program at NII (National Institute of Immunology). The SPAG9 antigen has received the trademark ASPAGNIITM.
  • ASPAGNIITM is used in dendritic cell (DC) based immunotherapy in cervical, ovarian cancer and will also be used in breast cancer.

 

  1. DBT-NII இந்தியாவின் முதல் உள்நாட்டு கேன்சர் நோய் எதிர்ப்பு ஊக்கியான SPAG9க்கான வணிகக் குறியீட்டைப் பெற்றுள்ளது
  • DBT-NII (உயிரி-தொழில்நுட்பத்துறையின் கீழ் உள்ள இந்திய நோயெதிர்ப்பியல் நிறுவனம்), இந்தியாவின் முதல் உள்நாட்டு கேன்சர் நோய் எதிர்ப்பு ஊக்கியான SPAG9க்கான வணிகக் குறியீட்டைப் பெற்றது. SPAG9, NII (இந்திய நோயெதிர்ப்பியல் நிறுவனம்)இல் புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்திற்கு தலைமை வகிக்கும் டாக்டர் அனில் சூரியால் 1998இல் கண்டுபிடிக்கப்பட்டது. SPAG9 நோய் எதிர்ப்பு ஊக்கி ASPAGNIITM வணிகக் குறியீட்டைப் பெற்றது.
  • ASPAGNIITM வணிகக் குறியீடு கருப்பை வாய், கருப்பை புற்றுநோய் ஆகியவற்றிற்கு டென்ட்ரிடிக் செல் (DC) அடிப்படையிலான நோயெதிர்ப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படும். மேலும் இது மார்பக புற்றுநோயிற்கான நோயெதிர்ப்பு சிகிச்சையிலும் பயன்படுத்தப்படும்.

  1. NTPC joins United Nations’ CEO Water mandate
  • India’s largest power utility under the Union Ministry of Power, NTPC (National Thermal Power Corporation) has become a signatory to the prestigious United Nations’ Global Compact’s CEO Water Mandate. The mandate aims to step up work on water conservation with reduce, reuse and recycle.
  • The CEO Water Mandate is a United Nations’ Global Compact initiative to demonstrate the commitment and efforts of companies to better their water and sanitation agendas as part of long-term Sustainable Development Goals.

 

  1. தேசிய அனல் மின் நிலையம் ஐக்கிய நாடுகளின் சிஇஓ நீர் ஆணையில் இணைந்துள்ளது
  • மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய மின் பயன்பாடான தேசிய அனல் மின் நிலையம் (NTPC), மதிப்புமிக்க ஐ.நா குளோபல் காம்பாக்ட்டின் சிஇஓ நீர் ஆணையில் கையெழுத்திட்டுள்ளது. நீர் சேமிப்புக்கான பணிகளை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி மூலம் முடுக்கிவிடுவதை இந்த ஆணை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிஇஓ நீர் ஆணை என்பது நீண்டகால நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாக நிறுவனங்கள் தங்கள் நீர் மற்றும் சுகாதார முயற்சிகளை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை நிரூபிக்கும் ஐ.நா.வின் உலகளாவிய முன்முயற்சியாகும்.

  1. Prime Minister Narendra Modi releases elaborative roadmap for the development of the Ethanol sector
  • Prime Minister Narendra Modi has released an elaborative roadmap for the development of the Ethanol sector on World Environment Day. He also launched an E100 pilot project in Pune that is related to the distribution of Ethanol.
  • The National Policy of Biofuel 2018, has the objective of ethanol-blending of 20% and biodiesel-blending of 5% in biofuel by 2030.

 

  1. எத்தனால் துறையின் வளர்ச்சிக்கான விரிவான திட்டவரைபடத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்
  • உலக சுற்றுச்சூழல் தினத்தன்று எத்தனால் துறையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டவரைபடத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். எத்தனால் விநியோகம் தொடர்பான E100 முன்னோடித் திட்டத்தையும் புனேவில் அவர் தொடங்கி வைத்தார்.
  • உயிரி எரிபொருள் தேசிய கொள்கை, 2018, 2030க்குள் உயிரி எரிபொருளில் 20% எத்தனால் கலப்பு மற்றும் 5% பயோடீசல் கலப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது.

APPOINTMENTS


  1. V. Vanitha takes charge as the first women Commissioner of Police of Tiruppur
  • Vanitha took charge as the first women Commissioner of Police of Tiruppur city.. She was a 2001 batch IPS officer and earlier served as the Inspector General of Police, Railways in Chennai.

 

  1. திருப்பூரின் முதலாவது பெண் காவல் ஆணையராக வி. வனிதா பொறுப்பேற்றுள்ளார்
  • திருப்பூரின் முதல் பெண் மாநகர காவல் ஆணையராக வி. வனிதா பொறுப்பேற்றார். அவர் 2001ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாவார்.
  • முன்னதாக சென்னையில் ரயில்வே காவல்துறைத் தலைவராக அவர் பணியாற்றினார்.

PERSONS IN NEWS


  1. Indian Government declares one-day state mourning in India over the demise of ex-Mauritius President Anerood Jugnauth
  • The Government of India has announced one-day state mourning in India over the demise of Indian-origin ex-Mauritius President Anerood Jugnauth on 3 May. During state mourning, the Indian National Flag will be flown at half-mast throughout India on all buildings where the National Flag is flown regularly and there will be no official entertainment on the day.
  • Anerood Jugnauth served as the 4th President of Mauritius from October 2003 to March 2012. He was the Prime Minister of Mauritius from June 1982 to December 1995, from September 2000 to October 2003 and from December 2014 to January 2017. He was honoured by India with the Padma Vibhushan and the Pravasi Bharatiya Samman. He was the principal architect of India’s special friendship with Mauritius.

 

  1. இந்திய அரசு முன்னாள் மொரீஷியஸ் அதிபர் அனிரூத் ஜுக்னாத் மறைவிற்காக இந்தியாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்க உள்ளது
  • இந்திய அரசு, இந்திய வம்சாவளி முன்னாள் மொரீஷியஸ் அதிபர் அனிரூத் ஜுக்னாத், 3 மே அன்று மறைந்ததையொட்டி இந்தியாவில் அரசு துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. அரசு துக்கத்தின் போது இந்தியா முழுவதும் வழக்கமாக இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்படும் இடங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். அன்றைய தினம் அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு எதுவும் இருக்காது.
  • அனிரூத் ஜுக்னாத் அக்டோபர் 2003 முதல் மார்ச் 2012 வரை மொரீஷியஸின் 4வது அதிபராக பணியாற்றினார். ஜூன் 1982 முதல் டிசம்பர் 1995 வரை, செப்டம்பர் 2000 முதல் அக்டோபர் 2003 வரை மற்றும் டிசம்பர் 2014 முதல் ஜனவரி 2017 வரை மொரீஷியஸ் பிரதமராக இருந்தார். அவருக்கு இந்திய அரசால் பத்ம விபூஷண் மற்றும் பிரவேசிய பாரதிய சம்மான் விருது ஆகியன வழங்கப்பட்டன. அவர் மொரீஷியஸ் உடனான இந்தியாவின் சிறப்பு நட்பின் முக்கிய சிற்பியாக இருந்தார்.

SCHEMES


  1. Ladakh Lieutenant Governor launches YounTab scheme for students to encourage digital learning
  • Ladakh Lieutenant Governor RK Mathur has launched the YounTab scheme that provides Tablets for students in the Ladakh Union Territory. YounTab scheme was formulated to encourage digital learning, bridge the digital divide between connected and unconnected and mitigate the COVID-19 pandemic disruptions.
  • A total of 12,300 students of classes 6 to 12 from government schools will receive tablets as a part of the scheme. The students of the classes 9 to 12 class have received tablets as part of the first phase of the YounTab Scheme.

 

  1. லடாக் துணைநிலை ஆளுனர் டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்க மாணவர்களுக்கு யூன்டாப் (YounTab) திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்
  • லடாக் யூனியன் பிரதேசத்தில் மாணவர்களுக்கான டேப்லட்(Tablet) வழங்கும் யூன்டாப் (YounTab) திட்டத்தை லடாக் துணைநிலை ஆளுநர் ஆர். கே. மாத்தூர் தொடங்கி வைத்தார். டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்கவும், இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத டிஜிட்டல் பிளவை குறைக்கவும், கோவிட்-19 தொற்றுநோய் இடையூறுகளை குறைக்கவும் யூன்டாப் திட்டம் உருவாக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில், 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை உள்ள மொத்தம் 12,300 மாணவர்கள் பயன் பெறுவார்கள். யூன்டாப் திட்டத்தின் முதல் கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்கள் டேப்லட்களைப் (Tablet) பெற்றனர்.

IMPORTANT DAYS


  1. World Environment Day – 5 June
  • World Environment Day is observed on 5 June every year. This Day is organised by the United Nations to generate awareness about the significance of nature.
  • The United Nations General Assembly established the World Environment Day in 1972, which was the first day of the Stockholm Conference on the Human Environment. Pakistan hosts World Environment Day 2021.
  • 2021 Theme: ‘Ecosystem Restoration’
  • World Health Organization (WHO) has joined the UN Decade on Ecosystem Restoration (202–2030), a global mission to revive billions of hectares, from forests to farmlands, from the top of mountains to the depth of the sea, that was launched on World Environment Day 2021. WHO will work as a collaborating agency in this ecosystem restoration programme along with the United Nations Environment Programme (UNEP) and the Food and Agriculture Organization of the United Nations (FAO).

 

  1. உலக சுற்றுச்சூழல் தினம் 5 ஜூன்
  • உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் 5 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது. இயற்கையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பொது சபையால் இந்த தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபை 1972இல் மனித சுற்றுச்சூழல் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாட்டின் முதல் நாளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை நிறுவியது. பாகிஸ்தான் இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் 2021 தொகுத்து வழங்குகிறது.
  • 2021 கருப்பொருள்: சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு
  • உலக சுகாதார அமைப்பு (WHO) சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (2021-2030) மீதான ஐ.நா. தசாப்தத்தில் சேர்ந்துள்ளது. இது 2021 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தொடங்கப்பட்ட காடுகள் முதல் விவசாய நிலங்கள் வரை, மலைகளின் உச்சியிலிருந்து கடலின் ஆழம் வரை பில்லியன் கணக்கான ஹெக்டேர்களை புதுப்பிக்கும் உலகளாவிய பணியாகும். இத்திட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) இணைந்து உலக சுகாதார நிறுவனம் ஒரு ஒத்துழைப்பு முகவராக வேலை செய்யும்.

  1. International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing – 5 June
  • International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing is observed on 5 June.
  • The day is observed by the United Nations to draw attention towards the issue of illegal fishing.

 

  1. சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் முறைப்படுத்தப்படாத மீன்பிடிப்புக்கு எதிரான போராட்டத்திற்கான சர்வதேச தினம் 5 ஜூன்
  • சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் முறைப்படுத்தப்படாத மீன்பிடிப்புக்கு எதிரான போராட்டத்திற்கான சர்வதேச தினம் 5 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • சட்டவிரோத மீன்பிடிப்பு பிரச்சினை குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த நாளை ஐக்கிய நாடுகள் சபை அனுசரிக்கிறது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 5, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
5th  May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021