TNPSC Current Affairs – English & Tamil – April 15, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(15th April, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 15, 2021


1. US President Joe Biden formally announced the withdrawal of American troops from Afghanistan before 11 September 2021

  • US President Joe Biden has formally announced his decision to withdraw American troops from Afghanistan before 11 September 2021, the 20th anniversary of the terrorist attacks on the World Trade Centre (11 September 2001).
  • The withdrawal will begin on 1 May 2021 in line with an agreement that President Donald Trump’s administration made with the Taliban, and the complete withdrawal will be made by 11 September 2021.

 

1. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 11 செப்டம்பர் 2021 அன்றுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதாக முறையாக அறிவித்தார்

  • உலக வர்த்தக மையத்தின் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் (11 செப்டம்பர் 2001) 20வது ஆண்டு நினைவு நாளான 11 செப்டம்பர் 2021 அன்றுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான தனது முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முறையாக அறிவித்துள்ளார்.
  • அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தாலிபான்களுடன் செய்த ஒப்பந்தத்தின்படி, 1 மே இல் திரும்பப் பெறுதல் தொடங்கும் என்றும், 11 செப்டம்பருக்குள் முழுமையான திரும்பப் பெறுதல் முடியும்.

2. Pakistan Skipper Babar Azam replaced Indian Captain Virat Kohli as World No-1 batsman in ICC Men’s ODI Rankings

  • In the International Cricket Council’s (ICC) rankings for ODI batsmen, Pakistan Captain Babar Azam has climbed to the No.1 spot replacing Virat Kohli, who was occupying the top position for nearly three and a half years. Babar’s rating points was 865, surpassing Kohli’s 857 points. Rohit Sharma occupied 3rd position with 825 points. Babar Azam is the fourth player from Pakistan to top the ODI batting rankings after Zaheer Abbas(1983-84), Javed Miandad(1988-89), and Mohammad Yousuf(2003).
  • Indian pacer Jasprit Bumrah has held on to his fourth position behind top-ranked Trent Boult of New Zealand, Afghanistan’s Mujeeb Ur Rahman and Kiwi pacer Matt Henry. 
  • R Ashwin is the only Indian to find a place in the top 10 all-rounders list at the No. 9 spot.

 

2. ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனான இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்

  • ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தரவரிசையில், மூன்றரை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த தனது இந்திய எதிரணியான விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலிடத்தை எட்டியுள்ளார். ஆசாமின் மதிப்பீட்டு புள்ளிகள் கோலியின் 857 புள்ளிகளைக் கடந்து, 865 ஆக உள்ளது. ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த 4-ஆவது பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பாபர் ஆசாம். ஜாகீர் அப்பாஸ் (1983-84), ஜாவித் மியான்தத் (1988-89), முகமது யூசுப் (2003) ஆகியோர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த மற்ற பாகிஸ்தானியர்கள் ஆவர்.
  • பந்து வீச்சாளர்களில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட், ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் கிவி வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி ஆகியோருக்கு பின்னால் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • .அஸ்வின் முதல் 10 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் ஆவார். அவர் 9-வது இடத்தில் உள்ளார்.

3. The Department of Biotechnology (DBT) has approved additional funding towards clinical studies of India’s first of its kind mRNA-based COVID-19 vaccine – HGCO19

  • The Department of Biotechnology (DBT), Ministry of Science & Technology has approved additional funding towards clinical studies of India’s first of its kind mRNA-based COVID-19 vaccine – HGCO19. This funding has been provided under the Mission COVID Suraksha
  • It was developed by Pune-based biotechnology company Gennova Biopharmaceuticals Ltd. in collaboration with HDT Biotech Corporation of USA has developed the COVID-19 mRNA vaccine – HGCO19.
  • mRNA vaccines are considered safe as mRNA is non-infectious, non-integrating in nature, and degraded by standard cellular mechanisms.

 

3. இந்தியாவின் முதல் எம்.ஆர்.என்.(m-RNA) அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பூசி HGCO19இன் மருத்துவ ஆய்வுகளுக்கான கூடுதல் நிதியுதவிக்கு பயோடெக்னாலஜி துறை ஒப்புதல் அளித்துள்ளது

  • இந்தியாவின் முதல் எம்.ஆர்.என்.(m-RNA) அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பூசி HGCO19இன் மருத்துவ ஆய்வுகளுக்கான கூடுதல் நிதியுதவிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி மிஷன் கோவிட் சரக்ஷாஇந்திய கோவிட்-19 தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
  • இது புனேவைச் சேர்ந்த உயிரி-தொழில்நுட்ப நிறுவனமான ஜெனோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் எச்.டி.டி பயோடெக் கார்ப்பரேஷனுடன் இணைந்து உருவாக்கியதாகும்.
  • எம்.ஆர்.என்.(mRNA) நோய்த்தொற்று இல்லாதது, இயற்கையாக ஒன்றிணையாதது மற்றும் நிலையான செல்லுலார் வழிமுறைகளால் சிதைக்கப்படுவதால் எம்.ஆர்.என்.ஏ(mRNA) தடுப்பூசிகள் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.

4. Fund raised through public offering doubled in FY 2021-22

  • Ministry of Finance announced that fund raised through Initial Public Offering and Follow-on Public Offering doubled in FY 2021-22.
  • Fund raising for Public Issues and Rights Issues registered an increase of 115% and 15% respectively in FY 2020-21.
  • Number of issues in the Corporate Bond Market increased by 10% in FY 2020-21.
  • Number of unique investors across Mutual Fund schemes also increased by 10% in FY 2020-21.

 

4. பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதி 2021-22ஆம் நிதியாண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது

  • பொது பங்கு வெளியீடு மற்றும் தொடர் பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதி 2021-22ஆம் நிதியாண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • பொது பங்கு வெளியீடு மற்றும் உரிமை பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதி 2020-21 நிதியாண்டில் முறையே 115% மற்றும் 15% அதிகரித்துள்ளது.
  • 2020-21ஆம் நிதியாண்டில் நிறுவன பங்குச் சந்தையில் வெளியீடுகளின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது.
  • பரஸ்பர நிதி திட்டங்களில் தனித்துவமான முதலீட்டாளர்களின் எண்ணிக்கைய 2020-21 நிதியாண்டில் 10% அதிகரித்துள்ளது.

5. Former Election Commissioner Dr. GVG Krishnamurthy passed away

  • Former Election Commissioner GVG Krishnamurthy passed away at the age of 86 in Delhi.
  • An Indian Legal Service officer, Krishnamurty became the election commissioner in 1993.

 

5. முன்னாள் தலைமைத் தோ்தல் அதிகாரி ஜி.வி.ஜி. கிருஷ்ணமூா்த்தி காலாமானாா்

  • முன்னாள் தலைமைத் தோ்தல் அதிகாரி ஜி.வி.ஜி. கிருஷ்ணமூா்த்தி தில்லியில் தனது 86 வயதில் காலாமானாா்.
  • இந்திய சட்ட அதிகாரியான அவா், 1993ஆம் ஆண்டில் தோ்தல் ஆணையராகப் பணியாற்றினாா்.

6. Prime Minister Modi inaugurated 6th Edition of the prestigious Raisina Dialogue

  • Prime Minister Narendra Modi inaugurated the sixth edition of the Raisina Dialogue Mr. Kagame, President of Rwanda and Ms. Frederiksen, Prime Minister of Denmark addressed the inaugural session as Chief Guests.
  • The Event is jointly organised by the Ministry of External Affairs and the Observer Research Foundation.
  • The theme for the 2021 Edition: “#ViralWorld: Outbreaks, Outliers and Out of Control”

 

6. மதிப்புமிக்க ரைசினா உரையாடலின் 6வது பதிப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • மதிப்புமிக்க ரைசினா உரையாடலின் 6வது பதிப்பை பிரதமர் மோடி மெய்நிகராக தொடங்கி வைத்தார்.
  • தொடக்க அமர்வில் விருந்தினர்களாக ருவாண்டாவின் அதிபர் திரு.ககாமே மற்றும் டென்மார்க்கின் பிரதமர் செல்வி.ஃபிரடெரிக்சனும் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியை வெளியுறவு அமைச்சகம் மற்றும் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்துகின்றன.
  • 2021ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: “# வைரல்வேர்ல்ட்: பெருவெடிப்புகள், வெளியீட்டாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டுக்கு வெளியே“.

7. Piyush Goyal inaugurates e-SANTA, an electronic marketplace for aqua farmers

  • Union Minister for Commerce and Industry Piyush Goyal inaugurated e-SANTA. e-SANTA is an electronic marketplace providing a platform to connect aqua farmers and buyers.
  • e-SANTA will act as an alternative marketing tool between farmers and buyers by eliminating middlemen. The term e-SANTA stands for Electronic Solution for Augmenting NaCSA farmers’ Trade in Aquaculture.
  • National Centre for Sustainable Aquaculture (NaCSA) is an extension arm of the Marine Products Export Development Authority.

 

7. நீர் விவசாயிகளுக்கான மின்னணு சந்தையான சான்டாவை பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்

  • வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் இ-சான்டாவை இன்று தொடங்கிவைத்தார். இ-சான்டா என்பது ஒரு மின்னணு சந்தையாகும், இது நீர் விவசாயிகள் மற்றும் நுகர்வோரை இணைக்க ஒரு தளத்தை வழங்குகிறது.
  • இடைத்தரகர்களை அகற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையில் மாற்று சந்தைப்படுத்தல் கருவியாக இ-சான்டா செயல்படும் என்று அமைச்சர் கூறினார். இ-சான்டா என்ற சொல், மீன் வளர்ப்பில் NaCSA விவசாயிகளின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான மின்னணு தீர்வைக் குறிக்கிறது.
  • நிலையான மீன்வளர்ப்புக்கான தேசிய மையம் (NaCSA) என்பது கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் விரிவாக்கக் குழுவாகும்.

8. Union Law Minister Ravi Shankar Prasad launched Online Grievance Management Portal of National Commission for Scheduled Castes

  • Union Law Minister Ravi Shankar Prasad launched the Online Grievance Management Portal of the National Commission for Scheduled Castes.
  • Presently the complaints of victims, who are members of Scheduled Caste, are processed manually in the commission. The new mechanism has been introduced to handle the complaints in online mode from the victim.
  • The National Commission for Scheduled Castes is an Indian constitutional body established under Article 338 with a view to provide safeguard against the exploitation of Scheduled Castes. It was separated from the National Commission for Tribes in 89th amendment of 2003.

 

8. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பட்டியலினருக்கான தேசிய ஆணையத்தின் மின்னணு குறைதீர்க்கும் மேலாண்மை வளைத்தளத்தைத் தொடங்கினார்

  • மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று பட்டியலினருக்கான தேசிய ஆணையத்தின் மின்னணு குறைதீர்க்கும் மேலாண்மை வளைத்தளத்தைத் தொடங்கினார்.
  • தற்போது பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள், பட்டியலினர் ஆணையத்தில் கைமுறையாக செயல்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டவரிடமிருந்து மின்னணு முறையில் புகார்களைக் கையாள புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பட்டியலினத்தோருக்கான தேசிய ஆணையம் என்பது விதி 338இன் கீழ் அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு அமைப்பாகும், இது பட்டியலினருக்கு எதிரான சுரண்டலுக்கு பாதுகாப்புகளை வழங்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ளது. இது 2003ஆம் ஆண்டின் 89வது சட்ட திருத்தத்தின்படி தேசிய பழங்குடியினர் ஆணையத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

9. Union Health Minister Harsh Vardhan launched Aahaar Kranti mission to spread awareness about nutrition

  • Central Government has launched Aahaar Kranti, a mission dedicated to spread awareness about nutrition. It is designed to address the peculiar problem of hunger and diseases in abundance, being faced by India and the world.
  • Aahaar Kranti has been launched with the motto of Uttam Aahaar- Uttam Vichaar or Good Diet-Good Cognition.
  • India produces as much as two times the amount of calories it consumes. However, many in the country are still malnourished. The root cause of this strange phenomenon is a lack of nutritional awareness.

 

9. மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஆஹார் கிராந்தி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

  • ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஆஹார் கிராந்தி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது இந்தியாவும் உலகமும் எதிர்கொள்ளும் பசி மற்றும் நோய்களின் பிரச்சினையை தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதை மனதில் வைத்து, ஆஹார் கிராந்தி திட்டம் உத்தம் அஹார்உத்தம் விச்சார் அல்லது நல்ல உணவுநல்ல அறிவாற்றல் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தியா உட்கொள்ளும் கலோரிகளின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்கிறது. இருப்பினும், நாட்டில் பலர் இன்னும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளனர். இந்த நிகழ்வின் மூல காரணம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.

10. Principal Scientific Adviser K Vijay Raghavan launched MANAS App to promote well-being across age groups

  • Principal Scientific Adviser to the Central Government, K Vijay Raghavan has launched the MANAS App to promote wellbeing across age groups.
  • MANAS which stands for Mental Health and Normalcy Augmentation System, was endorsed as a national program by the Prime Minister’s Science, Technology, and Innovation Advisory Council.
  • It is an app developed to augment the mental well-being of Indian citizens. The application integrates the health and wellness efforts of various government ministries, scientifically validated indigenous tools with gamified interfaces developed by various national bodies and research institutions.

 

10. முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜய் ராகவன் வயதுவந்தோர் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக மனாஸ் (MANAS) செயலியை அறிமுகப்படுத்தினார்

  • மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜய் ராகவன், வயதுவந்தோர் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக மனாஸ் (MANAS) செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • மனநலம் மற்றும் இயல்புநிலையை மேம்படுத்தும் முறையை குறிக்கும் மனாஸ் (MANAS) பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆலோசனைக் குழுவால் ஒரு தேசிய திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இது இந்திய குடிமக்களின் மன நலனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயலியாகும். இந்த பயன்பாடு பல்வேறு அரசாங்க அமைச்சகங்களின் சுகாதார மற்றும் ஆரோக்கிய முயற்சிகளை, விஞ்ஞான ரீதியாக சரிபார்க்கப்பட்ட சுதேச கருவிகள் பல்வேறு தேசிய அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இடைமுகங்களுடன் ஒருங்கிணைக்கிறது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 15, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
15th April, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – April 2021