TNPSC Current Affairs – English & Tamil – April 28, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(28th April, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 28, 2021


SCIENCE AND TECHNOLOGY


1. DRDO develops critical crystal blade technology for aero engines

  • The Defence Research and Development Organisation (DRDO) has developed single crystal blades that are used in helicopter engines and it has supplied 60 of them to the Hindustan Aeronautics Limited (HAL) for the company’s indigenous helicopter development program.
  • Single crystal blades having complex shape and geometry are manufactured out of nickel-based superalloys that are capable of withstanding high temperatures.

 

1. ஏரோ என்ஜின்களுக்கான முக்கியமான படிக பிளேடு தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி. உருவாக்கியுள்ளது

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.) ஹெலிகாப்டர் என்ஜின்களில் பயன்படுத்தப்படும் ஒற்றை படிக பிளேடுகளை உருவாக்கியுள்ளது. மேலும் அவற்றில் 60ஐ நிறுவனத்தின் உள்நாட்டு ஹெலிகாப்டர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டுக்கு (எச்ஏஎல்) வழங்கியுள்ளது.
  • சிக்கலான வடிவம் மற்றும் வடிவியல் கொண்ட ஒற்றை படிக கத்திகள் அதிக வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்ட நிக்கல் அடிப்படையிலான சூப்பர் அல்லாய்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

NATIONAL


2. India’s Organic food products exports rises by more than 50% in 2020-21

  • According to Union Commerce and Industry Ministry, India’s Organic food products exports rose by more than 50% in the year 2020-21 in terms of value.
  • In terms of quantity, the exports grew by 39 per cent to 8,88,000 metric tonne compared to 2019-20.
  • Oil cake meal led the exports followed by oil seeds, cereals and millets, tea, medicinal plant products and dry fruits.
  • India’s organic products have been exported to 58 countries including USA, European Union, Canada.

 

2. இந்தியாவின் இயற்கை உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 2020-21 ஆம் ஆண்டில் 50%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது

  • 2020-21ஆம் ஆண்டில் இந்தியாவின் இயற்கை உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • 2019-20 உடன் ஒப்பிடும்போது இயற்கை உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 39 சதவீதம் அதிகரித்து 8,88,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
  • புண்ணாக்கு, ஏற்றுமதியில் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து, எண்ணெய் விதை, தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள், தேநீர், மருத்துவ தாவர பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் ஆகியனவும் உள்ளன.
  • இந்தியாவின் இயற்கை பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட 58 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

3. Earthquake of magnitude 6.4 strikes Sonitpur of Assam

  • National Centre of Seismology informed that an earthquake of magnitude 6.4 striked Sonitpur of Assam.
  • Assam falls under Zone V of earthquake intensity (IX and above)
  • Earthquake can be measured using two scales. They are:
  1. Ritcher Scale – Measures the energy of the earthquake (0 – No upper limit)
  2. Mercalli Scale – Measures the damage caused by the earthquake (1 – 12)

India is divided into four seismic zones according to the intensity of the earthquake, They are:

  1. Zone II – VI and less intensity
  2. Zone III – VII
  3. Zone IV – VIII
  4. Zone V – IX and above

National Centre of Seismology

  • National Centre of Seismology is located at Noida and works under the Union Ministry of Earth Sciences.

 

3. அசாமின் சோனித்பூரில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

  • அசாமின் கோனித்பூரை4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
  • அசாம் பூகம்ப தீவிரம் மண்டலம் 5 கீழ் வருகிறது (9 மற்றும் அதற்கு மேற்பட்ட)
  • நிலநடுக்கத்தை இரண்டு அலகுகளைப் பயன்படுத்தி அளவிடலாம்,அவை
  1. ரிக்டர் அளவு – நிலநடுக்கத்தின் ஆற்றலை அளவிடுகிறது (0 – உச்ச வரம்பு இல்லை)
  2. மெர்காலி அளவு – நிலநடுக்கத்தால் ஏற்படும் சேதத்தை அளவிடுகிறது (1 – 12)

நிலநடுக்கத்தின் தீவிரத்திற்கு ஏற்ப இந்தியா நான்கு நில அதிர்வு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை:

  1. மண்டலம் 2 – 6 மற்றும் அதற்குக் குறைந்த தீவிரம்
  2. மண்டலம் 3 – 7
  3. மண்டலம் 4 – 8
  4. மண்டலம் 5 – 9 மற்றும் அதற்கு மேல்

தேசிய நில அதிர்வு மையம்

  • நொய்டாவில் அமைந்துள்ள தேசிய நில அதிர்வு மையம், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

4. Asian Development Bank provided $1.5-billion fiscal support to India for pandemic response

  • Asian Development Bank (ADB) had provided fiscal support of $1.5 billion to India in support of the pandemic. This fiscal support formed part of the $16.1 billion that ADB had specifically set aside for pandemic response for India in 2020.
  • In 2020, the ADB had committed a record $31.6 billion to help Asia and the Pacific swiftly tackle the coronavirus disease outbreak.
  • The $31.6-billion ADB committed from its own resources in 2020 was 32 per cent higher than 2019’s $24 billion.

Asian Development Bank

  • Asian Development Bank is a regional development bankestablished on 19 December 1966.
  • It aims to promote social and economic development in Asia.
  • Headquarters: Manila, Philippines.
  • President of Asian Development Bank: Masatsugu Asakawa

 

4. நோய்த்தொற்றிலிருந்து மீள ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியது

  • ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) தொற்றுநோய்க்கு நிவாரணமாக இந்தியாவுக்கு 5 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்கியது. இந்த நிதிஆதரவு 2020இல் குறிப்பாக இந்தியாவிற்கு தொற்றுநோய்க்காக ADB ஒதுக்கி வைத்திருந்த 16.1 பில்லியன் டாலரின் ஒரு பகுதியாகும்.
  • 2020இல், ஆசியா மற்றும் பசிபிக் கரோனா வைரஸ் நோய்த்தொற்றை விரைவாக சமாளிக்க உதவுவதற்காக ADB 6 பில்லியன் டாலர்களை ஒதுக்கியிருந்தது.
  • 2020இல் அதன் சொந்த நிதியிலிருந்து உறுதியளிக்கப்பட்ட $31.6-பில்லியன் ADB 2019இல் ஒதுக்கியிருந்த $24 பில்லியனை விட 32 சதவீதம் அதிகமாகும்.

ஆசிய வளர்ச்சி வங்கி

  • ஆசிய வளர்ச்சி வங்கி 19 டிசம்பர் 1966இல் உருவாக்கப்பட்ட பிராந்திய வளர்ச்சி வங்கியாகும்.
  • ஆசியாவில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தலைமையகம்: மணிலா, பிலிப்பைன்ஸ்.
  • ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர்: மஸட்சுகு அசகாவா

AWARDS AND RECOGNITIONS


5. Krithi Karanth becomes first Indian woman ‘Wild Innovator’

  • Krithi K Karanth is the Chief Conservation Scientist at Centre for Wildlife Studies (CWS), Bengaluru. She has been chosen as the first Indian and Asian woman for the ‘Wild Innovator Award’ 2021.
  • This award is given by the ‘Wild Elements Foundation’, which aims to identify solutions to global sustainability and conservation. ‘Power of Three’, the interconnectedness of animal kind, humankind, and plant kind for the future planetary wellness, is the approach of the foundation.

 

5. கிரிதி கரந்த்வன புத்தாக்க விஞ்ஞானிவிருது பெற்ற முதல் இந்திய பெண் ஆனார்

  • டாக்டர். கிருதி கே கரந்த் பெங்களூரு வனவிலங்கு ஆய்வுகள் மையத்தின் தலைமை பாதுகாப்பு விஞ்ஞானி ஆவார். 2021ஆம் ஆண்டுவன புத்தாக்க விஞ்ஞானி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய மற்றும் ஆசிய பெண்ணானார்.
  • இந்த விருது வைல்ட் எலமண்ட்ஸ் ஃபவுண்டேஷன் என்னும் அமைப்பால் வழங்கப்படுகிறது. இது உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான நீடித்த தீர்வுகளை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” மூன்றின் சக்தி’, விலங்குலகம், மனித உலகம் மற்றும் தாவர உலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து எதிர்காலத்தை பாதுகாப்பதே இந்த அமைப்பின் அணுகுமுறையாகும்.

REPORTS AND INDICES


6. SIPRI Report ranks India as the third-largest military spender

  • The Stockholm International Peace Research Institute (SIPRI) has ranked countries based on their military spending. It has found that the military spending of the top countries increased compared to 2019.
  • The global military expenditure increased to $1981 billion last year, which is an increase of 2.6 per cent in real terms from 2019, eventhough the global GDP shrank by 4.4 per cent (October 2020 projection by the International Monetary Fund), which was mainly due to the economic impacts of the Covid-19 pandemic.

The top three largest military spender countries of 2020 are:

S.No COUNTRY Spending as % of GDP VALUE % Increase in Spending Compared to 2019
1. USA 3.7 $778 billion

 

4.4
2. China         1.7 $252 billion 1.9
3. India 2.9 $72.9 billion 2.1

 

SIPRI

  • The Stockholm International Peace Research Institute (SIPRI) is an independent international institute based on Sweden. It was established in 1966. It is dedicated to research into conflict, armaments, arms control and disarmament. It was established by the Swedish Parliament and receives a substantial part of its funding as an annual grant from the Swedish Government.

 

6. SIPRI அறிக்கை இராணுவத்திற்காக அதிகம் செலவிடுவதில் மூன்றாவது நாடாக இந்தியாவை வரிசைப்படுத்தியுள்ளது

  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) இராணுவ செலவினங்களின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது. 2019உடன் ஒப்பிடுகையில் உயர்மட்ட நாடுகளின் இராணுவச் செலவுகள் அதிகரித்திருப்பதை அது கண்டறிந்துள்ளது.
  • கோவிட்-19 தொற்றுநோயின் பொருளாதார தாக்கங்களால் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி4 சதவிகிதம் குறைந்திருந்தும்(அக்டோபர் 2020 சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு), உலகளாவிய இராணுவச் செலவினம் கடந்த ஆண்டு 1981 பில்லியன் டாலராக அதிகரித்தது. இது 2019இல் இருந்து உண்மையான மதிப்பில் 2.6 சதவீத அதிகரிப்பாகும்.

2020ஆம் ஆண்டின் இராணுவத்திற்காக அதிகம் செலவிடும் முதல் மூன்று நாடுகள்:

வ.எண் நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் செலவின் % மதிப்பு 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் % செலவினஅதிகரிப்பு

 

1. அமெரிக்கா 3.7 $778 பில்லியன் 4.4

 

2. சீனா 1.7 $252 பில்லியன் 1.9

 

3. இந்தியா 2.9 $72.9 பில்லியன் 2.1

 

SIPRI

  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) ஸ்வீடன் அடிப்படையில் ஒரு சுயாதீன சர்வதேச நிறுவனம் ஆகும். இது 1966இல் நிறுவப்பட்டது. இது மோதல், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு பற்றிய ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஸ்வீடன் பாராளுமன்றத்தால் நிறுவப்பட்டது மற்றும் ஸ்வீடன் அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர மானியமாக அதன் நிதியின் கணிசமான பகுதியைப் பெறுகிறது.

IMPORTANT DAYS


7. World Day for Safety and Health at Work – 28 April

  • World Day for Safety and Health at Work is observed on 28 April every year.
  • It focuses on the importance of a secured, safe workplace and prevention of accidents and diseases at workplaces.
  • The World Day for Safety and Health at Work was first observed in the year 2003 by the International Labour Organisation (ILO).

 

7. சர்வதேச வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார தினம் – 28 ஏப்ரல்

  • ஒவ்வொரு ஆண்டும் 28 ஏப்ரல் அன்று சர்வதேச வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது பாதுகாப்பான பணியிடத்தின் முக்கியத்துவம் மற்றும் பணியிடங்களில் விபத்துக்கள் மற்றும் நோய்களைத் தடுப்பதில் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • 2003ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) சர்வதேச வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார தினத்தை முதன்முதலில் அனுசரித்தது.

8. World Immunisation Week (24 April – 30 April)

  • World Immunisation Week is organised by World Health Organisation from 24 April to 30 April.
  • It aims to improve everyone’s health everywhere throughout life through vaccines.
  • The theme for World Immunisation Week 2021: ‘Vaccines bring us Closer’

 

8. உலக நோய்த்தடுப்பு வாரம் (ஏப்ரல் 24 – ஏப்ரல் 30)

  • உலக நோய்த்தடுப்பு வாரம் 24 ஏப்ரல் முதல் 30 ஏப்ரல் வரை உலக சுகாதார நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
  • தடுப்பூசிகள் மூலம் வாழ்நாள் முழுவதும் எங்கும் அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2021 உலக தடுப்பூசி வாரத்திற்கான கருப்பொருள்: தடுப்பூசிகள் நம்மை நெருக்கமாக கொண்டு வருகின்றன

SPORTS


9. Ashleigh Barty defeated Aryna Sabalenka to claim Stuttgart title

  • World No.1 player Ashleigh Barty defeated Aryna Sabalenka and claimed the Porsche Tennis Grand Prix title in her tournament debut.
  • It is Ashleigh Barty’s 11th career WTA singles title.

Women’s Tennis Association (WTA)

  • Women’s Tennis Association (WTA) is the principal organising body of women professional tennis.
  • Headquarters: Petersburg, USA.

 

9. ஆஷ்லே பார்ட்டி, ஆர்னா சபலென்காவை தோற்கடித்து ஸ்டட்கார்ட் பட்டத்தை வென்றார்

  • உலக நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி ஆர்னா சபலென்காவை தோற்கடித்து தனது அறிமுக போட்டியில் போர்ஷ் டென்னிஸ் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார்.
  • இது ஆஷ்லே பார்ட்டியின் 11 வது WTA ஒற்றையர் பட்டமாகும்.

மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA)

  • மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA) பெண்கள் தொழில்முறை டென்னிஸை ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பாகும்.
  • தலைமையகம்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க், அமெரிக்கா.

DAY IN HISTORY


10. Thyagaraya’s Birthday – 27 April

  • Thyagaraya was born on 27 April 1852 at Korukupettai, Chennai. On 20 November 1916, Natesanar, Sir Piti Thyagaraya and T.M. Nair formed the South Indian Welfare Society (South Indian Liberal Federation).
  • The three newspapers started and published by this organisation were:

1. Dravidian – Tamil

2. Justice – English

3. Andhra Prakasika – Telugu

  • When he died in 1925, a newly created Thiyagaraya Nagar (T.Nagar) in Chennai was named after him. There is also a government function hall in T Nagar called Sir Pitti Thiyagaraya Stadium.

 

10. தியாகராயர் பிறந்தநாள் – 27 ஏப்ரல்

  • தியாகராயர் 27 ஏப்ரல் 1852இல் சென்னையிலுள்ள கொருக்குப்பேட்டையில் பிறந்தார். 20 நவம்பர் 1916இல் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் ஆகிய தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) உருவாக்கினர்.
  • இவ்வமைப்பு தொடங்கி வெளியிட்ட மூன்று செய்தித்தாள்களாவன:

1. திராவிடன் – தமிழ்

2. ஜஸ்டிஸ் – ஆங்கிலம்

3. ஆந்திரபிரகாசிகா – தெலுங்கு

  • 1925இல் இவர் இறந்தபோது இவரது நினைவாக சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட தியாகராய நகருக்கு (தி.நகர்) இவரது பெயர் சூட்டப்பட்டது. சர்.பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தி.நகரில் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்றும் உள்ளது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 28, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
28th April, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – April 2021