TNPSC Current Affairs – English & Tamil – April 29, 2021
TNPSC Current Affairs – English & Tamil – April 29, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(29th April, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 29, 2021
ECONOMY
1. Zomato files IPO draft papers to raise Rs 8,250 crore
- Food delivery service provider Zomato filed IPO draft papers to raise Rs 8,250 crore through Initial Public Offering (IPO). The company plans to raise Rs 8,250 crore from primary markets.
- Zomato’s IPO will be among the first technology unicorns to be listed in India.
Initial Public Offering
- Initial Public Offering involves the issuance of fresh shares to the public in order to raise public funds.
1. ஜொமாட்டோ ரூ. 8,250 கோடியை திரட்ட, ஐபிஓ வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது
- உணவு விநியோக சேவை வழங்குநரான ஜொமாட்டோ ஆரம்ப பொது வழங்கலுக்காக (ஐபிஓ) வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த நிறுவனம் முதன்மை சந்தைகளில் இருந்து ரூ. 8,250 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
- இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள முதல் தொழில்நுட்ப யூனிகார்ன்களில் ஜொமாட்டோவின் ஐபிஓவும் ஒன்றாகும்.
ஆரம்ப பொது வழங்கல்
- பொதுநிதிதிரட்டுவதற்காகபொதுமக்களுக்கு புதிய பங்குகளை வழங்குது ஆரம்ப பொது வழங்கல் ஆகும்.
SCIENCE AND TECHNOLOGY
2. DRDO conducts maiden trial of Python-5 Air to Air Missile
- Python-5 Air to Air Missile was successfully test-fired at Goa. It met all the planned objectives. It was added to Tejas, India’s indigenous Light Combat Aircraft.
Python-5
- Python-5 is the advanced version of Derby. Python-5 was the fifth-generation missile of Python, which was manufactured by It is manufactured in the name of Shafir in Israel and being exported as Derby and Python.
- It is a beyond visual range missile with the capability to lock on before launch.
Tejas
- It is Light Combat Aircraft with beyond visual range missiles.
- Chairman of DRDO: G. Satheesh Reddy
2. விமானத்தில் வானிலிருந்தபடி வான் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் பைத்தான்-5 ஏவுகணையின் முதல் சோதனையை டி.ஆர்.டி.ஓ நடத்தியது
- வானிலிருந்தபடி வான் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் பைத்தான்-5 ஏவுகணை கோவாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது திட்டமிட்ட அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்தது. இது இந்தியாவின் உள்நாட்டு இலகு ரக போர் விமானமான தேஜஸுடன் சேர்க்கப்பட்டது.
பைத்தான்-5
- பைத்தான்-5 டெர்பியின் மேம்பட்ட பதிப்பு ஆகும். பைத்தான்-5 என்பது இஸ்ரேலால் தயாரிக்கப்பட்ட பைத்தானின் ஐந்தாவது தலைமுறை ஏவுகணையாகும். இது இஸ்ரேலில் ஷாஃபிர் என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது மேலும் டெர்பி மற்றும் பைத்தான் என்ற பெயர்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- இது ஏவுவதற்கு முன்பே இலக்கை நிர்ணயிக்கக்கூடிய திறன் கொண்ட காட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட ஏவுகணையாகும்.
தேஜஸ்
- இது காட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட ஏவுகணையாகும் இலகு ரக போர் விமானம் ஆகும்.
- டி.ஆர்.டி.ஓ தலைவர்: டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி
3. Apollo 11 mission Astronaut Michael Collins died at the age of 90
- Astronaut Michael Collins, who was one of the crew members in the first moon mission, Apollo 11, died on 29 April 2021 at the age of 90 in Florida. He monitored the mission while Neil Armstrong and Buzz Aldrin stepped on the moon.
- Michael Collins stayed in the spacecraft and circled roughly 60 miles above the lunar surface. He suffered from cancer and died at the age of 90.
Apollo 11
- Apollo 11 was the first moon landing mission of the world. The landing took place on 16 July 1969.
- Neil Armstrong, Buzz Aldrin and Michael Collins were the crew members. Apollo 11 mission was launched by Saturn V rocket from Kennedy Space Centre, Florida.
3. அப்பல்லோ 11 திட்டத்தின் விண்வெளி வீரரான மைக்கேல் காலின்ஸ் தனது 90வது வயதில் காலமானார்
- முதல் நிலவில் தரையிரங்கும் திட்டமான அப்பல்லோ 11 பயணத்தில் குழு உறுப்பினராக இருந்த விண்வெளி வீரர் மைக்கேல் காலின்ஸ், புளோரிடாவில் 29 ஏப்ரல் 2021இல் தனது 90வது வயதில் காலமானார். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்தபோது காலின்ஸ் அப்பணியைக் கண்காணித்தார்.
- மைக்கேல் காலின்ஸ் விண்கலத்திலிருந்தபடியே சந்திர மேற்பரப்பில் இருந்து சுமார் 60 மைல்கள் மேலே வட்டமிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது 90வது வயதில் காலமானார்.
அப்பல்லோ 11
- அப்பல்லோ 11 உலகின் முதல் நிலவில் தரையிறங்கும் திட்டமாகும். 16 ஜூலை 1969 அன்று இந்த தரையிறக்கம் நடந்தது.
- நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருந்தனர். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சாட்டர்ன் 5 ராக்கெட் மூலம் அப்பல்லோ 11 ஏவப்பட்டது.
ECOLOGY AND ENVIRONMENT
4. Survey of Nilgiri Tahr has commenced at Eravikulam National Park of Munnar
- Survey of Nilgiri Tahr has commenced at Eravikulam National Park of The Nilgiri Tahr is surveyed by the Kerala forest department every year.
- Last year’s survey showed 723 Nilgiri Tahr and 111 newborn baby tahrs. There are 98 new baby tahrs this year.
Nilgiri Tahr
- Scientific name: Nilgiritragus hylocrius
- It is the State animal of Tamil Nadu.
- It is found in the Western ghats of Tamil Nadu and Kerala.
- It is the only mountain ungulate among the 12 species found in India.
- It is included in the endangered list of
- It is placed under the Schedule I of Wildlife Protection Act, 1972.
4. மூணாரில் உள்ள இறவிக்குளம் தேசியப் பூங்காவில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது
- மூணாரில் உள்ள இறவிக்குளம் தேசியப் பூங்காவில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இங்கு ஆண்டுதோறும் கேரள வனத்துறையினர் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவர்.
- கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 723 நீலகிரி வரையாடுகள், 111 புதிதாகப் பிறந்த குட்டி வரையாடுகள் ஆகியவை காணப்பட்டன. இந்த ஆண்டு புதியதாக 98 குட்டி வரையாடுகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரி வரையாடு
- அறிவியல் பெயர்: நீல்கிரிட்ராகஸ் ஹைலோகிரியஸ்
- இது தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.
- இது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.
- இந்தியாவில் காணப்படும் 12 இனங்களில் இது மட்டுமே மலை குளம்பிகாலியாகும்.
- இது IUCNஇன் அருகிவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
- இது 1972ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அட்டவணை 1இன் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
ART AND CULTURE
5. Pots with symbols have been found from urns dating back 2600 years in the excavation at Keeladi
- Department of Archaeology of Tamil Nadu undertakes the seventh phase of excavation work at Keladi in the the Sivaganga district. These excavations are in progress at Keladi, Agaram and Kondagai.
- Pots with symbols were found from old people’s urns dating back 2,600 years ago found in the Kondagai area.
5. கீழடியில் நடைபெறும் அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகளிலிருந்து குறியீடுகளுடன் கூடிய பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
- சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகள் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
- கொந்தகைப் பகுதியில் கிடைத்த 2600 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகளிலிருந்து குறியீடுகளுடன் கூடிய பானைகள் கண்டெடுக்கப்பட்டன.
NATIONAL
6. NTIPRIT conducts webinar on “NavIC — Opportunities for the Telecom Industry” along with ISRO and Telecom industry
- NTIPRIT (National Telecommunications Institute for Policy Research, Innovation and Training), conducted a webinar on the topic “NaviC – Opportunities for the Telecom Industry” along with ISRO and Telecom Industry.
NaviC:
- NavIC (Navigation with Indian Constellation) or IRNSS (Indian Regional Navigation Satellite System) is an autonomous regional satellite navigation system of India which was established by ISRO. It is an indigenous positioning system that is under Indian control. So, there is no risk of the service being withdrawn or denied in each situation. It covers India and a region extending up to 1,500 km beyond the Indian mainland.
- Application of NaviC: Civilian sectors including transport, map applications, and timekeeping.
NTIPRIT:
- NTIPRIT (National Telecommunications Institute for Policy Research Innovation and Training) is the apex training institute of Department of Telecommunications.
6. NTIPRIT இஸ்ரோ மற்றும் தொலைத் தொடர்புத் துறையுடன் இணைந்து “NavIC – தொலைத் தொடர்புத் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்” என்ற தலைப்பில் வளைக்கருத்தரங்கத்தை நடத்தியது
- NTIPRIT (கொள்கை ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம்), இஸ்ரோ மற்றும் தொலைத் தொடர்புத்துறையுடன் இணைந்து “NavIC – தொலைத் தொடர்புத் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்” என்ற தலைப்பில் வளைக்கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
NavIC
- NavIC (இந்திய விண்மீன் குழுவுடன் வழிகாட்டுதல்) அல்லது IRNSS (இந்திய பிராந்திய வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு) என்பது இஸ்ரோவால் நிறுவப்பட்ட இந்தியாவின் தன்னாட்சி பிராந்திய செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பாகும். NaviC என்பது இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உள்நாட்டு பொருத்துதல் அமைப்பு. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சேவை திரும்பப் பெறப்படுவதற்கோ அல்லது மறுக்கப்படுவதற்கோ எந்த ஆபத்தும் இல்லை. இது இந்தியாவையும், இந்திய நிலப்பகுதியைத் தாண்டி 1,500 கி.மீ வரை பரவியிருக்கும் பகுதியையும் உள்ளடக்கியது.
- NavICஇன் பயன்பாடுகள்: போக்குவரத்து, வரைபட பயன்பாடுகள் மற்றும் நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு குடிமை துறைகளில் NavIC அடிப்படையிலான பயன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
NTIPRIT
- NTIPRIT (கொள்கை ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம்) என்பது தொலைதொடர்புத் துறையின் முதன்மை பயிற்சி நிறுவனமாகும்.
APPOINTMENTS
7. Tamil Nadu Division IAS Officer T.V. Somanathan has been appointed as the Union Finance Secretary
- V. Somanathan, an IAS officer of The Tamil Nadu Division in 1987, has been appointed as the Union Finance Secretary after the approval of the Appointments Committee of the Union Cabinet.
- He had earlier served as the Expenditure Secretary of the Union Finance Ministry.
7. மத்திய நிதித்துறை செயலராக தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி டி.வி. சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
- கடந்த 1987ஆம் ஆண்டின் தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன் மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழுவின் ஒப்புதலை அடுத்து மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
- இதற்கு முன்னர் அவர் மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை செயலராக பணிபுரிந்து வந்தாா்.
8. Kiran Mazumdar Shaw has been appointed to the Board of Trustees of Memorial Sloan Kettering Cancer Center (MSK)
- The executive Chairperson Biocon Ltd, Kiran Mazumdar Shaw, has been appointed to the Board of Trustees of Memorial Sloan Kettering Cancer Center (MSK). MSK is a world leader in cancer treatment and research-based in New York, USA.
- She is among the 52 members on the board and will serve for a term of three years.
- Mazumdar-Shaw is the first Indian woman to be appointed to the Board of Trustees of Memorial Sloan Kettering Cancer Center (MSK)
8. மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தின் அறங்காவலர் குழுவிற்கு கிரண் மஜும்தார் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்
- பயோகான் நிறுவனத்தின் செயல் தலைவர் கிரண் மஜும்தார் ஷா மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தின் அறங்காவலர் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.கே அமெரிக்காவின் நியூயார்க்கை தளமாகக் கொண்ட புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் உலகத் தலைமை நிறுவனம் ஆவார்.
- அவர் குழுவில் உள்ள 52 உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார் மேலும் இவர் மூன்று ஆண்டுகள் பணியாற்றுவார்.
- மஜும்தார்-ஷா மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தின் அறங்காவலர் குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண் ஆவார்.
IMPORTANT DAYS
9. International Dance Day – 29 April
- International Dance Day is celebrated on 29 April every year to promote participation and education in dance.
- International Dance Day was created by the Dance Committee of the International Theatre Institute,
- The International Dance Day 2021 theme is: ‘Purpose of dance’
9. சர்வதேச நடன தினம் – 29 ஏப்ரல்
- நடனத்தில் பங்கேற்பையும் கல்வியையும் ஊக்குவிப்பதற்காக சர்வதேச நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் 29 ஏப்ரல் அன்று கொண்டாடப்படுகிறது.
- சர்வதேச நாடக நிறுவனம் ஐ.டி.ஐ.யின் நடனக் குழுவால் சர்வதேச நடன தினம் 1982இல் உருவாக்கப்பட்டது.
- 2021 சர்வதேச நடன தினத்தின் கருப்பொருள்: ‘நடனத்தின் பயன்‘
SPORTS
10. Suresh Raina joins the list of players who have hit 500 fours in IPL
- Suresh Raina joined the list of players who have hit 500 fours in IPL. Suresh Raina also joined the list of players who have hit more than 200 sixes in IPL.
- So far, only Shikhar Dhawan (615), David Warner (519) and Virat Kohli (512) have scored 500 fours.
10. ஐபிஎல் போட்டியில் 500 பவுண்டரிகள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் இணைந்தார் சுரேஷ் ரெய்னா
- ஐபிஎல் போட்டியில் 500 பவுண்டரிகள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் இணைந்தார் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் போட்டியில் 200-க்கும் அதிகமான சிக்ஸர்களை அடித்துள்ள வீரர்களின் பட்டியலிலும் சுரேஷ் ரெய்னா இணைந்தார்.
- இதுவரை ஷிகர் தவான் (615), டேவிட் வார்னர் (519), விராட் கோலி (512) ஆகிய வீரர்கள் மட்டுமே 500 பவுண்டரிகள் அடித்துள்ளார்கள்.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 29, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
29th April, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below.