TNPSC Current Affairs – English & Tamil – April 6 & 7, 2021
TNPSC Current Affairs – English & Tamil – April 6 & 7, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(6 & 7th April, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 6 & 7, 2021
NATIONAL
1. 25-day long ceremonial ‘Dandi March’ as part of ‘Aazadi ka Amrit Mahotsav’ concluded on a colourful note on 6 April
- The Vice President, Venkaiah Naidu graced the colourful closing ceremony of the 25-day long commemorative Dandi Padyatra as part of Azadi Ka Amrit Mahotsav near National Salt Satyagraha Memorial, Dandi, Gujarat.
- The function was organised by the Ministry of Culture and the State government of Gujarat.
- “Azadi Ka Amrit Mahotsav” was a 75-week festival to commemorate 75 years of India’s Independence, was flagged off by the Prime Minister, Narendra Modi from Sabarmati Ashram, on 12 March 2021.
1. ‘ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்‘இன் ஒரு பகுதியாக 25 நாட்கள் நீடித்த மாதிரி ‘தண்டி யாத்திரை‘ வண்ணமயமாக 6 ஏப்ரலில் முடிவு பெற்றது
- குஜராத்தின் தண்டியிலுள்ள தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவுச் சின்னம் அருகே ஆசாதி கா அம்ருத் மஹோத்சவின் ஒரு பகுதியாக 25 நாட்கள் நீடித்த நினைவுத் தண்டி யாத்திரையின் வண்ணமயமான நிறைவு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
- இந்த விழாவை குஜராத் கலாச்சார அமைச்சகமும் மாநில அரசும் ஏற்பாடு செய்திருந்தன.
- இந்தியாவின் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் 75-வார விழாவான “ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்” 12 மார்ச் 2021 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது.
2. Union Health Ministry launched Integrated Health Information Platform to track 33 diseases
- An advanced system for disease surveillance, which will track 33 diseases and ensure near-real-time data digitally mode was launched by Union Health Minister Harsh Vardhan.
- The Integrated Health Information Platform (IHIP) is the next generation highly refined version of the current Integrated Disease Surveillance Programme (IDSP).
- It was launched virtually. It tracked 18 ailments earlier.
2. 33 நோய்களைக் கண்டறிய ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியது
- 33 நோய்களைக் கண்காணித்து, நிகழ்நேர தரவுகளை டிஜிட்டல் முறையில் உறுதி செய்யும் நோய் கண்காணிப்புக்கான ஒரு மேம்பட்ட அமைப்பை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.
- ஒருங்கிணைந்த சுகாதார தகவல் மேடை (IHIP) இது தற்போதைய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (IDSP) அடுத்த தலைமுறை பதிப்பாகும்.
- இது மெய்நிகர் முறையில் தொடங்கிவைக்கப்பட்டது. இது முன்னர் 18 வியாதிகளைக் கண்காணித்தது.
3. Tribal Cooperative Marketing Development Federation of India launched ‘Sankalp se Siddhi’
- Tribal Cooperative Marketing Development Federation of India (TRIFED), under the Ministry of Tribal Affairs launched “Sankalp se Siddhi” which is a Village and Digital Connect Drive.
- It is this 100-day drive that will entail 150 teams, 10 in each region, from Tribal Cooperative Marketing Development Federation of India (TRIFED) and state implementation agencies or mentoring agencies or partners) visiting 10 villages each.
- TRIFED was established as a National level Cooperative body in August 1987 under the Multi-State Cooperative Societies Act in 1984.
3. இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு ‘சங்கல்ப் சே சித்தி’யை தொடங்கியது
- பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) ‘சங்கல்ப் சே சித்தி’யை தொடங்கியது.
- இது100 நாள் இயக்கமாகும், இதில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் TRIFED மற்றும் மாநில அமலாக்க முகமைகளிடமிருந்து 10 குழுக்களாக 150 குழுக்கள், தலா பத்து கிராமங்களுக்கு வருகை தரும்.
- 1984ஆம் ஆண்டு பல்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் 1987 ஆகஸ்டில் தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பாக TRIFED நிறுவப்பட்டது.
TAMIL NADU
4. Polling in Tamil Nadu assembly election
- Over 72% voting recorded in single-phase assembly elections in Tamil Nadu, 74% in Kerala and around 82% in Puducherry.
- Tamil Nadu registered 78 percentage of polling in the 16th Assembly election held on 6 April.
- Kanyakumari District, where Lok Sabha by-poll was also held, recorded 68. 80 percentage.
- Out of the 37 districts in the State, Karur recorded a maximum of 83. 94 per cent votes.
- Chennai recorded a minimum of 58.98 per cent votes.
- Voter turns out this time was lower than 2016 assembly polls which recorded 74.24 per cent just making a two percent difference.
- The highest percentage in Tamilnadu polls was in 2011 where the voting percentage was 78.29 per cent.
- Chief Electoral Officer of Tamil Nadu: Satyabrata Sahoo.
4. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு
- ஒற்றை கட்ட சட்டமன்றத் தேர்தல்களில் தமிழ்நாட்டில் 78% வாக்குகளும், கேரளாவில் 74% மற்றும் புதுச்சேரியில் 82% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
- 6 ஏப்ரலில் நடைபெற்ற 16வது சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு78 சதவீத வாக்குகளைப் பதிவு செய்துள்ளது.
- மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில்80 சதவீதம் பதிவாகியுள்ளது.
- மாநிலத்தின் 37 மாவட்டங்களில், கரூரில் அதிகபட்சமாக94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- சென்னையில் குறைந்தபட்சம்98 சதவீத வாக்குகளைப் பதிவு செய்தது.
- வாக்களிப்பு சதவீதம் 2016 சட்டசபை தேர்தல் சதவீதமான24 சதவீதத்தை விட இரண்டு சதவீதம் குறைவான இருந்தது.
- தமிழ்நாடு தேர்தலில் அதிகபட்சமாக 2011இல் வாக்களிப்பு சதவீதம்29 சதவீதமாக இருந்தது.
- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி: சத்தியபிரதா சாஹூ
ECONOMY
5. Reserve Bank of India doubled the deposit limit of Payments banks to Rs. 2 lakh
- The Reserve Bank of India (RBI) announced an increase in the maximum end-of-day balance for payment banks to 2 lakh with the aim to promote digital payment banks in the country.
- The earlier limit was set at Rs. 1 lakh per individual customer for the end of the balance for payment banks since 2014.
5. இந்திய ரிசர்வ் வங்கி செலுத்துதல் வங்கியின் வைப்பு வரம்பை ரூ. 2 லட்சமாக இரட்டிப்பாக்கியது
- நாட்டில்டிஜிட்டல்செலுத்துதல்வங்கிகளைஊக்குவிக்கும்நோக்கத்துடன்செலுத்துதல்வங்கிகளுக்கானஅதிகபட்சநாள்இருப்பைரூ.2 லட்சமாக உயர்த்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தது.
- செலுத்துதல்வங்கிகளுக்கானமுந்தைய உச்சவரம்பு2014ஆம் ஆண்டு முதல் அதிகபட்ச நாள் இருப்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
6. RBI enhances temporary liquidity limit for States and Union Territories by around 46%
- The Reserve Bank of India has enhanced the temporary liquidity limit for States and Union Territories by about 46% to help them tide over their cash flow mismatches.
- The new limit has been fixed at Rs. 47,010 crores, compared with the previous Rs. 32,225 crore.
- RBI has also decided to continue the enhanced interim WMA limit of Rs. 51,560 crore offered to tide over mismatches arising due to the pandemic-led economic stress for another six months to 30 September 2021.
6. ரிசர்வ் வங்கி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான தற்காலிக நீர்ம வரம்பை சுமார் 46% அதிகரித்துள்ளது
- இந்திய ரிசர்வ் வங்கி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான பண வரவு செலவு வேறுபாடுகளுக்கு உதவ தற்காலிக நீர்ம வரம்பை 46% உயர்த்தியுள்ளது.
- புதிய வரம்பு முந்தைய ரூ. 32,225 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ. 47,010 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மேலும்,ரிசர்வ் வங்கி 30 செப்டம்பர் 2021 வரையான ஆறு மாதங்களுக்கு தொற்றுநோயால் வழிநடத்தப்பட்ட பொருளாதார அழுத்தத்தின் காரணமாக எழும் வேறுபாடுகளைத் தடுக்க வழங்கப்பட்ட இடைக்கால WMA வரம்பான ரூ. 51,560 கோடியைத் தொடரவும் முடிவு செய்துள்ளது.
REPORTS AND INDICES
7. India has the world’s 3rd highest number of billionaires, says Forbes report
- Forbes’ 35th annual list of the world’s billionaires is topped by Amazon CEO and Founder Jeff Bezos for the fourth year in a row. On the second spot is SpaceX founder Elon Musk.
- Mukesh Ambani reclaims his spot as Asia’s richest person, dethroning Chinese business tycoon Jack Ma who was the richest person in the region a year ago.
- India has the third-highest number of billionaires in the world after the S. and China.
- In 2020, the world added 3 billionaires every two days, India added one every week.
7. உலகின் 3வது அதிகமான பில்லியனர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது
- ஃபோர்ப்ஸின் 35வது ஆண்டு உலகின் பில்லியனர்களின் பட்டியலில் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார், இரண்டாவது இடத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் இலான் மஸ்க் உள்ளார்.
- முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார், சீன வணிக அதிபர் ஜாக் மாவின் இடத்தை இவர் பிடித்துள்ளார்.
- அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாகஉலகிலேயே அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- 2020ஆம் ஆண்டில், உலகத்தில் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் 3 பில்லியனர்கள் உருவாயினர், இந்தியா ஒவ்வொரு வாரமும் ஒருவரை உருவாக்கியது.
INTERNATIONAL
8. India hosted First Meeting of BRICS Finance Ministers and Central Bank Governors
- India hosted a Meeting of BRICS Finance Ministers and Central Bank Governors virtually, and the meeting was jointly chaired by Union Minister for Finance and Corporate Affairs, Nirmala Sitharaman and Governor, Reserve Bank of India, Shaktikanta Das.
- Participants included Finance Ministers and Central Bank Governors of the BRICS countries.
- This was the first meeting of the BRICS Finance Ministers and Central Bank Governors under the India Chairship in 2021.
8. BRICS நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டத்தை இந்தியா நடத்தியது
- BRICS நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மெய்நிகர் கூட்டத்தை இந்தியா நடத்தியது. மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்தா தாஸ் ஆகியோர் இணைந்து இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- BRICS நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- 2021ஆம் ஆண்டு இந்தியா தலைமையில் நடைபெற்ற BRICS நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டம் இதுவாகும்.
IMPORTANT DAYS
9. 7 April is observed as the World Health Day
- Every year 7 April is observed as the World Health Day by the World Health Organisation.
- The idea was proposed in 1948 by the First World Health Assembly. Since 1950, the day has been observed on 7 April.
- Theme of World Health Day 2021: ‘Building a fairer, healthier world’
- The organisation has proposed four major steps in achieving its goal. They are working together, collecting reliable data, tackling inequities, and acting beyond borders.
9. ஏப்ரல் 7 உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 உலக சுகாதார தினமாக உலக சுகாதார அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த யோசனை 1948ஆம் ஆண்டில் முதல் உலக சுகாதார சபையால் முன்மொழியப்பட்டது.1950 முதல் 7 ஏப்ரலில் இந்நாள் அனுசரிக்கப்பட்டது.
- உலக சுகாதார தினம் 2021இன் கருப்பொருள்: ‘சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்‘
- இந்த அமைப்பு தனது இலக்கை அடைவதற்கு நான்கு முக்கிய படிகளை முன்வைத்துள்ளது.அவை ஒன்றிணைந்து செயல்படுதல், நம்பகமான தரவுகளைச் சேகரித்தல், ஏற்றத்தாழ்வுகளைக் கையாளுதல், எல்லைகளுக்கு அப்பால் செயல்படுதல் ஆகியனவாகும்.
10. International Day of Sport for Development and Peace – 6 April
- In 2013, the United Nations proclaimed 6 April as the International Day of Sport for Development and Peace.
- The day celebrates sports as a means of promoting peace and sustainable development.
10. மேம்பாடு மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் – 6 ஏப்ரல்
- 2013ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை 6 ஏப்ரலை மேம்பாடு மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக அறிவித்தது.
- அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இந்த நாள் விளையாட்டைக் கொண்டாடுகிறது.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 6th & 7th, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
6 & 7th April, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below.