TNPSC Current Affairs – English & Tamil – April 8, 2021
TNPSC Current Affairs – English & Tamil – April 8, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(8th April, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 8, 2021
ECONOMY
1. Money kept in various cash wallets can be withdrawn from ATM and PoS terminals soon
- Money kept in various cash wallets can be withdrawn from ATM and Point of Sale terminals, said Reserve Bank of India after the Monetary Policy Committee’s Meeting. The wallet includes Delhi Metro Card, Amazon Pay, Phonepe, Ola Money, Mobikwick wallet etc.
- Money can be loaded in these wallets, it can be transferred to another wallet or bank account, or it can be used to make payment during online transactions. Soon money from these instruments can be withdrawn using an ATM.
- Now balance in these wallets has been increased from 1 lakhs to 2 lakhs. Besides this, RBI also allowed these wallets, credit, and prepaid cards to use RTGS and NEFT for money transfer.
1. பல்வேறு வாலட்டுகளில் வைக்கப்பட்டுள்ள பணத்தை விரைவில் ஏடிஎம் மற்றும் விற்பனைப்புள்ளிகளில் (PoS) இருந்து எடுத்துக்கொள்ள முடியும்
- விரைவில் பல்வேறு வாலட்டுகளில் வைக்கப்பட்டுள்ள பணத்தை ஏடிஎம் மற்றும் விற்பனைப்புள்ளிகளில் (PoS) இருந்து எடுத்துக்கொள்ள முடியும் என்று பணவியல் கொள்கைக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வாலட்டுகளில் டெல்லி மெட்ரோ கார்டு, அமேசான் பே, ஃபோன் பே, ஓலா மனி, மொபிக்விக் வாலட் போன்றவை அடங்கும்.
- இந்த வாலட்டுகளில் பணத்தை போட்டு, அதை மற்றொரு வாலட் அல்லது வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது பணம் செலுத்த பயன்படுத்தலாம்.விரைவில் இந்த கருவிகளில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்.
- இப்போது இந்த வாலட்டின் இருப்பு 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இது தவிர, ரிசர்வ் வங்கி இந்த வாலட்டுகள், கிரெடிட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை RTGS மற்றும் NEFT பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்த அனுமதித்துள்ளது.
INTERNATIONAL
2. India-Seychelles High-Level Virtual Event was held
- Indian Prime Minister Narendra Modi and President of the Republic of Seychelles H.E. Wavel Ramkalawan took part in a high-level virtual event and inaugurated a range of Indian projects in Seychelles.
The projects inaugurated are:
- Joint e-inauguration of the new Magistrates’ Court Building in Seychelles
- Handing over of a Fast Patrol Vessel to Seychelles Coast Guard
- Handing over of a 1 MW Solar Power Plant
- Inauguration of 10 High Impact Community Development Projects (HICDPs)
2. இந்தியா–சீஷெல்ஸ் உயர் நிலை மெய்நிகர் நிகழ்வு நடைபெற்றது
- இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீஷெல்ஸ் குடியரசுத் தலைவர் எச்.இ.வேவல் ராம்கலவனுடன் உயர் மட்ட மெய்நிகர் நிகழ்வில் பங்கேற்பார் சீஷெல்ஸில் பல்வேறு வகையான இந்தியத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
தொடங்கப்பட்ட திட்டங்கள்:
- சீஷெல்ஸில் உள்ள புதிய மாஜிஸ்திரேட் நீதிமன்ற கட்டிடம் காணொலி காட்சி மூலம் துவக்கம்
- சீஷெல்ஸ் கடலோர காவல்படையினருக்கு விரைவான ரோந்து கப்பலை ஒப்படைத்தல்
- 1 மெகாவாட் சூரிய மின் நிலையத்தை ஒப்படைத்தல்
- 10 உயர் தாக்க சமூக மேம்பாட்டு திட்டங்களை (HICDPs) திறந்து வைத்தல்
SCHEMES
3. Union Cabinet approved Production Linked Incentive (PLI) Scheme for White Goods
- The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi approved the Production Linked Incentive (PLI) Scheme for White Goods (Air Conditioners and LED Lights) with a budgetary outlay of Rs. 6,238 crores as an important step towards the vision of ‘Atmanirbhar Bharat’.
- Objective: To make manufacturing in India globally competitive by removing sectoral disabilities, creating economies of scale, and ensuring efficiencies.
- The scheme will provide an incentive of 4% to 6% on incremental sales of goods manufactured in India for a period of five years to companies engaged in manufacturing of Air Conditioners and LED Lights.
3. வெள்ளை பொருட்களுக்கான உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- ‘ஆத்மனிர்பர் பாரத்’ஐ நோக்கிய மற்றொரு முக்கியமான படியாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, வெள்ளை பொருட்களுக்கான (ஏர் கண்டிஷனர்கள் மற்றும் LED விளக்குகள்) உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்திற்கு ரூ. 6,238 கோடி பட்ஜெட்டுடன் ஒப்புதல் அளித்தது.
- நோக்கம்: துறைசார் குறைபாடுகளை நீக்குவதன் மூலமும், அளவிடும் பொருளாதாரங்களை உருவாக்குவதன் மூலமும், செயல்திறனை உறுதி செய்வதன் மூலமும் இந்தியாவில் உற்பத்தியை உலகளவில் போட்டியிடச் செய்வது.
- வெள்ளை பொருட்களுக்கான பி.எல்.ஐ திட்டம் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் LED விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையில் 4% முதல் 6% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
4. Cabinet approved Production Linked Incentive scheme ‘National Programme on High Efficiency Solar PV Modules’
- The Cabinet, chaired by Prime Minister Narendra Modi, has approved the Ministry of New and Renewable Energy’s proposal for the implementation of the Production Linked Incentive (PLI) Scheme ‘National Programme on High-Efficiency Solar PV (Photo Voltic) Modules’ for achieving manufacturing capacity of Giga Watt (GW) scale in high-efficiency solar PV modules with an outlay of Rs. 4,500 crore.
- The scheme will reduce import dependence in a strategic sector like electricity and support the Atmanirbhar Bharat initiative.
- Solar PV manufacturers will be selected through a transparent, competitive bidding process. PLI will be disbursed for 5 years post commissioning of solar PV manufacturing plants on sales of high-efficiency solar PV modules. The PLI amount will increase with increased module efficiency and increased local value addition.
4. உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமான ‘உயர் திறன் கொண்ட சூரிய PV தொகுதிகளுக்கான தேசிய திட்டத்திற்கு’ அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
- பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, அதிக திறன் கொண்ட சோலார் PV தொகுதிகளில் கிகா வாட் (GW) அளவிலான உற்பத்தி திறனை அடைவதற்காக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் திட்டமான உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டமான ரூ. 4,500 கோடி பட்ஜெட் கொண்ட ‘உயர் திறன் கொண்ட சூரிய PV (போட்டோ வோல்டிக்) தொகுதிகளுக்கான தேசிய திட்டத்திற்கு’ ஒப்புதல் அளித்தது.
- இத்திட்டம் மின்சாரம் போன்ற ஒரு மூலோபாய துறையில் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைத்து, ஆத்மனிர்பர் பாரத் முயற்சியை ஆதரிக்கும்.
- சூரிய PV தொகுதி உற்பத்தியாளர்கள் ஒரு வெளிப்படையான போட்டி ஏல செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.அதிக திறன் கொண்ட சூரிய PV தொகுதிகள் விற்பனையில், சூரிய PV உற்பத்தி ஆலைகளை ஆணையிட்ட 5 ஆண்டுகளுக்கு பி.எல்.ஐ வழங்கப்படும். பி.எல்.ஐயின் அளவு தொகுதி செயல்திறன் மற்றும் உள்ளூர் மதிப்பு கூட்டல் அதிகரிப்பிற்கேற்ப அதிகரிக்கும்.
5. Pradhan Mantri MUDRA Yojana has completed six years.
- Pradhan Mantri MUDRA Yojana was launched on 8 April 2015.
- It is a scheme under which loans of up to 10 Lakh rupees are provided to the non-corporate, non-farm, small, and micro-enterprises.
- Finance Ministry has said that under this scheme almost 24percent of loans have been given to New entrepreneurs, about 68 percent of loans have been given to women entrepreneurs and about 51percent of loans have been given to SC, ST and OBC borrowers.
- Ministry of Labour and Employment has said that this yojana has helped in generation of 1crore 12 lakh net additional employment from 2015 to 2018. Women have accounted for 62 percent of this estimated increase in employment.
5. பிரதான் மந்திரி முத்ரா திட்டம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது
- பிரதான் மந்திரி முத்ரா திட்டம் 8 ஏப்ரல் 2015இல் தொடங்கப்பட்டது.
- இது கார்ப்பரேட் அல்லாத, பண்ணை அல்லாத, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன்கள் வழங்கும் திட்டமாகும்.
- இந்த திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோருக்கு கிட்டத்தட்ட 24 சதவீத கடன்கள் வழங்கப்பட்டுள்ளன, சுமார் 68 சதவீத கடன்கள் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன, பட்டியலினத்தோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு சுமார் 51 சதவீத கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்த திட்டம் 2015 முதல் 2018 வரை 1 கோடி 12 லட்சம் நிகர கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவியது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பில் பெண்கள் 62 சதவீதமாக உள்ளனர்.
SCIENCE AND TECHNOLOGY
6. Scientists developed ‘robo-plants’ to interact with plants
- Scientists from Singapore developed ‘robo-plants’, an experiment they call a fusion of nature and technology. They attached electrodes to a Venus flytrap plant which is a carnivorous plant.
- The electrodes are film-like and soft and fit tightly to the plant’s surface. They are attached using a ‘thermogel’, which is liquid at low temperatures but turns into a gel at room temperature. These electrodes are capable of monitoring weak electrical pulses naturally emitted by plants.
6. விஞ்ஞானிகள் தாவரங்களுடன் தொடர்பு கொள்ள ‘ரோபோ–தாவரங்களை‘ உருவாக்கியுள்ளனர்
- சிங்கப்பூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘ரோபோ–தாவரங்களை‘ உருவாக்கியுள்ளனர், இது இயற்கையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஒரு பரிசோதனையாகும்.அவர்கள் பூச்சி உண்ணும் தாவரமான வில் பொறி தாவரத்தில் (Venus flytrap plant) மின்முனைகளை இணைத்தனர்.
- மின்முனைகள் மென்படலம் போன்றவை, மென்மையானவை மற்றும் தாவரத்தின் மேற்பரப்பில் இறுக்கமாக பிடித்துக்கொள்கின்றன.அவை ஒரு ‘தெர்மோஜெல்’ஐப் பயன்படுத்தி இணைக்கப்பட்டுள்ளன, இது குறைந்த வெப்பநிலையில் திரவமாகவும், ஆனால் அறை வெப்பநிலையில் ஜெல்லாக மாறும். இந்த மின்முனைகள் தாவரங்களால் இயற்கையாக வெளியேற்றப்படும் பலவீனமான மின் அலைத்துடிப்புகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டவை.
REPORTS AND INDICES
7. India’s debt to GDP ratio increased from 74% to 90% during COVID-19 pandemic – IMF
- The International Monetary Fund has reported that India’s debt to GDP ratio increased from 74% to 90% during the COVID-19 pandemic.
- In the case of India, the debt ratio at the end of 2019, prior to the pandemic, was 74% of Gross Domestic Product (GDP), and at the end of 2020, it is almost 90% of GDP.
7. கோவிட்-19 தொற்றுநோயின் போது, இந்தியாவின் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 74% முதல் 90% வரை அதிகரித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது
- கோவிட் -19 தொற்றுநோய்களின் போது இந்தியாவின் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 74% முதல் 90% வரை அதிகரித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
- இந்தியாவைப் பொறுத்தவரை, 2019ஆம் ஆண்டின் இறுதியில், தொற்றுநோய்க்கு முன்னர் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 74% ஆகும் மற்றும் 2020இன் இறுதியில், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 90% ஆகும்.
TODAY IN HISTORY
8. Mangal Pandey’s death anniversary – 8 April
- Union Information and Broadcasting Minister Prakash Javadekar has paid his tributes to Mangal Pandey on his death anniversary on 8 April.
- On 29 March 1857, Mangal Pandey, a sepoy in 34th Bengal Native Infantry then stationed at Barrackpore, assaulted his European officer. His fellow soldiers refused to arrest him when ordered to do so. Mangal Pandey, along with others were court-martialled and hanged. This was one of the causes for the Great Revolt of 1857.
8. மங்கல் பாண்டேவின் நினைவு ஆண்டுவிழா
- மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மங்கல் பாண்டேவின் நினைவு ஆண்டு விழாவிற்கு 8 ஏப்ரலில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
- 29 மார்ச் 1857இல், பாரக்பூரில் நிலைகொண்டிருந்த 34வது வங்காள பூர்வீக காலாட்படையில் சிப்பாயாக இருந்த மங்கல் பாண்டே, அவரது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கினார். அவரது சக வீரர்களிடம் அவரை கைது செய்ய உத்தரவிட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனர். மங்கல் பாண்டே மற்றவர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். 1857ஆம் ஆண்டின் பெருங்கிளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 8, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
8th April, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below.