TNPSC Current Affairs – English & Tamil – August 4, 2021
TNPSC Current Affairs – English & Tamil – August 4, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs (August 4, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – August 4, 2021
TAMIL NADU
1. IATC and INTF open the Namibia Trade Commission Office at Ashok Nagar in Tamil Nadu
- The India Africa Trade Council (IATC), along with the India Namibia Trade Forum (INTF), opened the Namibia Trade Commission Office at Ashok Nagar, Chennai.
- The current bilateral trade between India and Namibia is just over $100 million.
1. ஐ.ஏ.டி.சி. மற்றும் ஐ.என்.டி.எஃப் இணைந்து தமிழ் நாட்டின் அசோக் நகரில் நமீபியா வர்த்தக ஆணைய அலுவலகத்தைத் திறந்துள்ளன
- இந்திய ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சில் (ஐஏடிசி), இந்தியா நமீபியா வர்த்தக மன்றத்துடன் (ஐஎன்டிஎஃப்) இணைந்து சென்னையின் அசோக் நகரில் நமீபியா வர்த்தக ஆணைய அலுவலகத்தை திறந்தது.
- இந்தியா மற்றும் நமீபியா இடையேயான தற்போதைய இருதரப்பு வர்த்தகம் 100 மில்லியன் டாலருக்கு மேல் உள்ளது.
POLITY
2. Supreme Court reiterates that states share an equal responsibility to ensure that people are not booked under ‘Section 66A’ of the IT Act
- Supreme Court had reiterated the fact that states share an equal responsibility to ensure that people are not booked under Section 66A of the IT Act for expressing their opinions freely on social media.
- Section 66A of the IT Act provides three years’ imprisonment if a social media message causes “annoyance” or was found “grossly offensive”.
- It was declared unconstitutional by the Supreme Court in 2015 since it is vague and worded arbitrarily. But people are still booked and tried under Section 66A of the IT Act.
2. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவின் கீழ் மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மாநிலங்கள் சமமான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது
- சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தியதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவின் கீழ் மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மாநிலங்கள் சமமான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது.
- தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66ஏ, ஒரு சமூக ஊடக செய்தி “எரிச்சலை” ஏற்படுத்தியிருந்தால் அல்லது “முற்றிலும் புண்படுத்துவதாக” கண்டறியப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்குகிறது.
- இது தெளிவற்றதாகவும், தன்னிச்சையாகவும் சொல்லப்படுவதால், இது 2015ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்கள் இன்னும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66ஏ-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.
3. Supreme Court says that Governors can pardon prisoners with death sentences even before they serve minimum of 14 years
- The Supreme Court said that the Governor of a state can pardon prisoners, including those with a death sentence, even before they have served a minimum of 14 years of the prison sentence.
- Governor’s pardoning power overrides CRPC Section 433A, which mandates that a prisoner’s sentence can be remitted only after 14 years of jail. It does not affect the constitutional power conferred on the President/Governor to grant pardon under Articles 72 or 161 of the Constitution. In such cases, the advice of the government is binding on the Head of the State.
3. குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் தண்டனைக்கு முன்பே ஆளுநர்கள் மரண தண்டனை கைதிகளை மன்னிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது
- ஒரு மாநில ஆளுநர், மரண தண்டனை பெற்றவர்கள் உட்பட, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்கு முன்னரே அவர்களை மன்னிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
- ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரத்திற்கு குற்றவழக்கு பிரிவு 433ஏ-வை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது. குற்றவழக்கு பிரிவு 433ஏ, ஒரு கைதியின் தண்டனையை 14 ஆண்டுகள் சிறை முடிந்த பின்னரே குறைக்க முடியும் என்று கூறுகிறது. அரசியலமைப்பின் 72 அல்லது 161ஆம் விதிகளின் கீழ் மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி/ஆளுநருக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு அதிகாரத்தை அது பாதிக்காது. இத்தகைய சந்தர்ப்பங்களில், அரசின் ஆலோசனையை ஆளுநர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
SCIENCE AND TECHNOLOGY
4. SBI launches an enhanced security feature named ‘SIM Binding’
- SBI launched an enhanced security feature named ‘SIM Binding’ in YONO and YONO Lite apps. It aims to safeguard the interest of its customers from various digital frauds.
- With the SIM Binding feature, YONO and YONO Lite apps will work only on those devices which have the SIM card of mobile numbers registered with the bank.
4. எஸ்பிஐ மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சமான ‘சிம் பைண்டிங்’ (SIM Binding)ஐ அறிமுகப்படுத்தியுள்ளது
- யோனோ மற்றும் யோனோ லைட் செயலியிகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சமான ‘சிம் பைண்டிங்’ஐ பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியது. இது பல்வேறு டிஜிட்டல் மோசடிகளிலிருந்து அதன் வாடிக்கையாளர்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த சிம் பைண்டிங் அம்சத்துடன், யோனோ மற்றும் யோனோ லைட் செயலிகள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களின் சிம் கார்டைக் கொண்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும்.
5. NASA is set to launch its second Boeing Orbital Flight Test-2 Mission
- NASA is set to launch its second Boeing Orbital Flight Test-2 (OFT-2) second mission. OFT-2 is the second uncrewed flight for Boeing’s CST-100 Starliner spacecraft as part of NASA’s Commercial Crew Programme.
- The Starliner will be launched on a United Launch Alliance Atlas V rocket from Space Launch Complex-41 at Cape Canaveral Space Force Station in Florida.
5. இரண்டாவது போயிங் ஆர்பிட்டால் விமான சோதனை-2 திட்டத்தை நாசா விண்ணில் செலுத்த உள்ளது
- போயிங் ஆர்பிட்டால் விமான சோதனை-2 (OFT-2) இரண்டாவது திட்டத்தை நாசா விண்ணில் செலுத்த உள்ளது. நாசாவின் வர்த்தக குழு திட்டத்தின் ஒரு பகுதியான போயிங்கின் சிஎஸ்டி-100 ஸ்டார்லைனர் விண்கலத்திற்கான இரண்டாவது குழு இல்லாத விமானம் OFT-2 ஆகும்.
- புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிபடை நிலையத்தில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41இல் இருந்து யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்கெட்டில் ஸ்டார்லைனர் விண்ணில் செலுத்தப்படும்.
6. Principal Scientific Adviser virtually inaugurates a decentralised biomedical waste incinerator at Buxar
- Decentralised biomedical waste Incinerator was inaugurated in Bihar’s Buxar by the Principal Scientific Adviser to Government of India, Prof. K. Vijay Raghavan.
- The technology developed by Ganesh Engineering Works was selected through the Biomedical Waste Treatment Innovation Challenge launched in June 2020 by the Waste to Wealth Mission. The mission is one of the nine scientific missions of the Prime Minister’s Science, Technology, and Innovation Advisory Council (PM-STIAC) and is headed by the Office of the Principal Scientific Adviser to the Government of India.
- It is a portable, forced draft incinerator capable of handling 50 kg of biomedical waste made of cotton, plastic or similar materials per hour (5 kg per batch), with the provision of waste heat recovery. The unit requires a two square metre area and requires only 0.6 kWh electricity for initial ignition of the waste with an option of auto electricity turn off.
6. முதன்மை அறிவியல் ஆலோசகர் பக்ஸாரில் பரவலாக்கப்பட்ட உயிரி மருத்துவ கழிவு எரியூட்டியை மெய்நிகராக தொடங்கி வைத்துள்ளார்
- மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் மற்றும் பேராசிரியர், கே. விஜய் ராகவன் அவர்களால் பீகார் மாநிலம் பக்ஸாரில் பரவலாக்கப்பட்ட உயிரி மருத்துவக் கழிவு எரியூட்டி திறந்து வைக்கப்பட்டது.
- கணேஷ் பொறியியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், ஜூன் 2020இல் கழிவு முதல் செல்வம் இயக்கம் மூலம் தொடங்கப்பட்ட உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு கண்டுபிடிப்பு சவால் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த இயக்கம் பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆலோசனைக் குழுவின் (PM-STIAC) ஒன்பது அறிவியல் திட்டங்களில் ஒன்றாகும். மேலும் இது மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் தலைமையின் கீழ் செயல்படும்.
- இது ஒரு சிறிய, கட்டாய வரைவு எரியூட்டியாகும். கழிவு வெப்ப மீட்பு வழங்குவதன் மூலம் இதனால் பருத்தி, பிளாஸ்டிக் அல்லது இதே போன்ற பொருட்களால் செய்யப்பட்ட 50 கிலோ உயிரி மருத்துவ கழிவுகளை ஒரு மணி நேரத்திற்கு (ஒரு தொகுதிக்கு 5 கிலோ) கையாள முடியும். இந்த அலகுக்கு இரண்டு சதுர மீட்டர் பரப்பளவு தேவைப்படுகிறது மற்றும் ஆரம்பத்தில் பற்றவைக்க 0.6 கிலோவாட் மணி மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. இதில் தானியங்கி மின்சாரம் அணைக்கும் வசதியும் உள்ளது.
NATIONAL
7. Team CLAW is set to lead Operation Blue Freedom to Siachen Glacier
- Team CLAW, which is a team of retired special forces personnel, is set to lead ‘Operation Blue Freedom’ to Siachen Glacier on 15 August 2021. They will lead a group of 20 differently-abled people to attempt a world record by trekking the Siachen Glacier, which is the world’s highest battlefield.
- This was the land world record expedition part of ‘Operation Blue Freedom Triple World Records’.
- CLAW Global was set up in January 2019 by Major Vivek Jacob, a Para SF officer with the aim of teaching life skills to adventurers and people with disabilities (PWD).
7. க்ளா குழு சியாச்சின் பனிப்பாறைக்கு செல்லும் ‘ப்ளூ ஃப்ரீடம் நடவடிக்கை’க்கு தலைமை தாங்க உள்ளது
- ஓய்வு பெற்ற சிறப்புப் படை வீரர்களின் குழுவான க்ளா குழு, ‘ப்ளூ ஃப்ரீடம் நடவடிக்கை’ஐ சியாச்சின் பனிப்பாறைக்கு 15 ஆகஸ்ட் 2021 அன்று வழிநடத்த உள்ளது. உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிப்பாறைக்கு மலையேற்றம் செய்வதன் மூலம் உலக சாதனை படைக்க 20 மாற்றுத் திறனாளிகள் உள்ள குழுவை அவர்கள் வழிநடத்துவார்கள்.
- இது ‘ப்ளூ ஃப்ரீடம் மூன்று உலக சாதனைகள் நடவடிக்கை’இன் நில உலக சாதனை பயணத்தின் ஒரு பகுதியாகும்.
- சாகசக்காரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்க்கைத் திறன்களை கற்பிக்கும் நோக்கத்துடன் பாரா எஸ்எஃப் அதிகாரியான மேஜர் விவேக் ஜேக்கப் என்பவரால் ஜனவரி 2019இல் க்ளா குளோபல் நிறுவப்பட்டது.
SPORTS
8. Union Sports Minister Anurag Thakur launches theme song for the Tokyo Paralympics 2020 virtually
- Union Sports Minister Anurag Thakur launched the theme song “Kar de kamaal tu” for the Tokyo Paralympics 2020 virtually. This theme song has been penned by Sanjeev Singh. This is the biggest ever Indian contingent of 54 para-athletes to participate in the Paralympics.
8. டோக்கியோ பாராலிம்பிக் 2020 போட்டிகளுக்கான கருப்பொருள் பாடலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
- டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டிகளுக்கான “கர் தே கமால் து” என்ற கருப்பொருள் பாடலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார். இந்த கருப்பொருள் பாடலை சஞ்சீவ் சிங் எழுதியுள்ளார். பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 54 மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய இந்திய அணி இதுவாகும்.
TOKYO OLYMPICS 2020
9. Neeraj Chopra qualifies for javelin throw finals in his first attempt with a throw of 86.65 m in the Tokyo Olympics 2020
- 23-year-old Indian javelin thrower Neeraj Chopra got direct qualification into the finals of the Tokyo Olympics 2020 with a stunning throw of 86.65 m. This is his first Olympics.
9. டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் 86.65 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்
- 23 வயதான இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் 86.65 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். இது அவரது முதல் ஒலிம்பிக் ஆகும்.
10. Indian wrestlers Ravi Dahiya and Deepak Punia enter semifinals in the Tokyo Olympics 2020
- Ravi Dahiya defeated Georgi Vangelov of Bulgaria in the men’s freestyle 57 kg wrestling to qualify for the semifinals.
- Deepak Punia defeated Zushen Lin of China in the men’s freestyle 86 kg wrestling.
10. டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் இந்திய மல்யுத்த வீரர்கள் ரவி தஹியா மற்றும் தீபக் புனியா அரையிறுதிக்குள் நுழைந்தனர்
- ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ மல்யுத்தத்தில் பல்கேரியாவின் ஜார்ஜி வாஞ்சலோவை ரவி தஹியா தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 86 கிலோ மல்யுத்தத்தில் தீபக் புனியா சீனாவின் ஜுஷென் லின்னை தோற்கடித்தார்.
11. Lovlina Borgohain bags bronze medal in welterweight wrestling category in Tokyo Olympics 2020
- 23-year-old Lovlina Borgohain won bronze medal by making it to the semifinals in welterweight (140 pounds/63.5 kg) wrestling category. She lost to Turkey’s Surmeneli in semifinals.
11. டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் வெல்டர்வெயிட் மல்யுத்த பிரிவில் லோவ்லினா போர்கோஹைன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்
- 23 வயதான லோவ்லினா போர்கோஹைன் வெல்டர்வெயிட் மல்யுத்த (140 பவுண்டுகள்/63.5 கிலோ) போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் அரையிறுதியில் துருக்கியின் சுர்மெனேலியிடம் தோற்றார்.