TNPSC Current Affairs – English & Tamil – August 5, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (August 5, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – August 5, 2021


TAMIL NADU


1. Tamil Nadu Chief Minister M. K. Stalin launches the ‘Makkalai Thedi Maruthuvam’ scheme in Hosur

  • Tamil Nadu Chief Minister M. K. Stalin launched the ‘Makkalai Thedi Maruthuvam’ scheme in Hosur, Tamil Nadu.
  • It is a government programme to deliver essential healthcare at the doorstep of the people through primary healthcare centres.

 

1. தமிழ்நாடு முதல்வர் மு. . ஸ்டாலின்மக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தை ஓசூரில் தொடங்கி வைத்துள்ளார்

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை தமிழ்நாட்டின் ஓசூரில் தொடங்கி வைத்தார்.
  • இது ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மக்களின் வீட்டிற்கே அத்தியாவசியமான சுகாதார பராமரிப்புகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டமாகும்.

2. The University Grants Commission (UGC) has granted ’12B’ status to the Tamil Nadu University of Teacher Education

  • The Tamil Nadu University of Teacher Education, in Karapakkam was granted the status of ’12B’ by the University Grants Commission (UGC).
  • The Tamil Nadu University of Teacher Education was established in July 2008 by the Government of Tamil Nadu. As per the norms of the University Grants Commission, only educational institutions with 12B status will be granted central assistance and permission to implement new educational schemes.

 

2. தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ‘12பிஅந்தஸ்து வழங்கியுள்ளது

  • காரப்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) ‘12பி’ அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
  • தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் 2008ஆம் ஆண்டு தமிழக அரசின் சாா்பில் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைப்படி, 12பி அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி மற்றும் கல்வி சாா்ந்த புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான அனுமதி ஆகியவை வழங்கப்படும்.

SCIENCE AND TECHNOLOGY


3. India’s first indigenous aircraft carrier ‘Vikrant’ begins its maiden sea trials

  • India’s first indigenous aircraft carrier ‘Vikrant’ began its maiden sea trials. Indigenous Aircraft Carrier (IAC) ‘Vikrant’ was built at Cochin Shipyard Limited (CSL). With this, India has joined the list of certain countries capable of designing and building the largest aircraft carrier with integrated modern technology.
  • The first indigenously developed aircraft carrier has been named after Vikrant Bork to commemorate 50 years of the vital role played by the ship in India’s victory in the 1971 Pakistan war.
  • India at present has only one aircraft carrier, ‘INS Vikramaditya’.

 

3. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க் கப்பல்விக்ராந்த்இன் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது

  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்த்’இன் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்த விக்ராந்த் போா்க் கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டதாகும். இதன் மூலம், ஒருங்கிணைந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய விமானம் தாங்கி போா்க் கப்பலை முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்து, கட்டுமானத்தையும் மேற்கொள்ளும் திறன்கொண்ட குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
  • பாகிஸ்தானுக்கு எதிரான 1971ஆம் ஆண்டு போரில் இந்தியாவின் வெற்றிக்கு விக்ராந்த் போா்க் கப்பல் மிக முக்கியப் பங்காற்றியதற்கான 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இந்த கப்பலுக்கு அதனுடைய பெயரே வைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவிடம் இப்போது ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ என்ற ஒரே ஒரு விமானம் தாங்கி போா்க் கப்பல் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NATIONAL


4. A Road at 19,300 feet in Umling La becomes the world’s highest motorable road

  • The road at 19,300 feet in Umling La became the world’s highest motorable road. The Border Roads Organisation, under the Union Ministry of Defence, has constructed this road. It broke the record of Bolivia. This road was constructed under Project Himank.

 

4. உம்லிங் லாவில் 19,300 அடி உயரத்தில் உள்ள சாலை உலகின் மிக உயர்ந்த மோட்டார் சாலையாக உருவெடுத்துள்ளது

  • உம்லிங் லாவில் 19,300 அடி உயரத்தில் உள்ள சாலை உலகின் மிக உயர்ந்த மோட்டார் சாலையாக உருவெடுத்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள எல்லைச் சாலைகள் அமைப்பு இந்த சாலையை அமைத்துள்ளது. இது பொலிவியாவின் சாதனையை முறியடித்தது. ஹிமான்க் திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டது.

INTERNATIONAL


5. India and the World Bank sign a $250 million project to make existing dams safe and resilient

  • India and the World Bank have signed a $250 million project to make existing dams safe and resilient. The project will be implemented through the Central Water Commission.

 

5. தற்போதுள்ள அணைகளை பாதுகாப்பானதாகவும் நீடித்து உழைப்பதாகவும் மாற்றும் 250 மில்லியன் டாலர் திட்டத்திற்கு இந்தியாவும் உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன

  • தற்போதுள்ள அணைகளை பாதுகாப்பானதாகவும் நீடித்து உழைப்பதாகவும் மாற்றும் 250 மில்லியன் டாலர் திட்டத்திற்கு இந்தியாவும் உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டம் மத்திய நீர் ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

6. Germany becomes the 5th country to sign the International Solar Alliance Framework Agreement

  • Germany became the 5th country to sign the International Solar Alliance Framework Agreement after the amendments to open its membership to all member States of the United Nations.

 

6. சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 5வது நாடனது ஜெர்மனி

  • ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச சூரிய சக்தி கூட்டணியில் உறுப்பினராவதற்கு வழிவகுத்த திருத்தங்களுக்குப் பின்னர் சர்வதேச சூரிய சக்தி கூட்டணி கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 5வது நாடானது ஜெர்மனி.

BOOKS AND AUTHORS


7. Captain Ramesh Babu pens a book ‘My Own Mazagon’

  • Captain Ramesh Babu is a former Project Director of the National Institute for Research and Development in Defence Shipbuilding, Kozhikode.
  • Mazagon is an archipelago in Mumbai inhabited by Kolis, Bhandaris and other natives.
  • He had also published Calicut Heritage Trailsat the Kerala Literature Festival in 2020, after serving in Kozhikode for five years.

 

7. கேப்டன் ரமேஷ் பாபு ‘மை ஓன் மசாகான்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்

  • கேப்டன் ரமேஷ் பாபு, கோழிக்கோட்டில் உள்ள பாதுகாப்பு கப்பல் கட்டும் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முன்னாள் திட்ட இயக்குநர் ஆவார்.
  • மசாகான் என்பது கோலி, பந்தாரி மற்றும் பிற பூர்வீக குடிமக்கள் வசிக்கும் மும்பையில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும்.
  • கோழிக்கோட்டில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 2020ஆம் ஆண்டு கேரள இலக்கிய விழாவில் கோழிக்கோடு பாரம்பரிய சுவடுகளை அவர் வெளியிட்டார்.

TOKYO OLYMPICS 2020


8. Ravi Kumar Dahiya enters the finals of the men’s freestyle 57 kg wrestling in the Tokyo Olympics 2020

  • Ravi Kumar Dahiya entered the finals of the men’s freestyle wrestling in the 57 kg category. He is the second Indian wrestler to enter the finals after Sushil Kumar.
  • He will compete with Zaur Uguev of Russia in the finals. He defeated Kazakhstan’s Nurislam Sanayev in the semifinals.

 

8. டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியா இறுதிப் போட்டிக்கு நுழைந்தார்

  • ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இவர் சுஷில் குமாருக்குப் பிறகு இறுதிப் போட்டியில் நுழைந்த இரண்டாவது இந்திய மல்யுத்த வீரர் ஆவார்.
  • இறுதிப் போட்டியில் அவர் ரஷ்யாவின் ஜௌர் உகுவேவுடன் போட்டியிடுவார். அரையிறுதியில் அவர் கஜகஸ்தானின் நூர்இஸ்லாம் சனாயேவை தோற்கடித்தார்.

9. India wins the bronze medal defeating Germany in men’s hockey

  • India won the bronze medal in men’s hockey defeating Germany 5-4 in the Tokyo Olympics 2020. India has won a bronze medal after 41 years in Olympics hockey.
  • Indian men’s hockey team has won eight gold medals in the Olympics. India emerged as champions at the Olympic Games in 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964 and 1980.

 

9. ஜெர்மனியை தோற்கடித்து ஆடவர் ஹாக்கியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது

  • டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஆடவர் ஹாக்கியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
  • இந்தியா ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964 மற்றும் 1980ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாம்பியனாக உருவெடுத்தது.

10. Indian women’s hockey team is set to play for bronze medal at the Tokyo Olympics 2020

  • India lost the semifinals with Argentina in the Tokyo Olympics 2020 women’s hockey. So, the team is set to play for the bronze medal with Great Britain.
  • Women’s hockey was introduced in the Olympics in 1980.

 

10. இந்திய மகளிர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் வெண்கல பதக்கத்திற்காக விளையாட உள்ளது

  • டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்றது. எனவே, இந்திய அணி இங்கிலாந்துடன் வெண்கலப் பதக்கத்திற்காக விளையாட உள்ளது.
  • மகளிர் ஹாக்கி 1980 ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.