TNPSC Current Affairs – English & Tamil – August 8 & 9, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (August 8 & 9, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – August 8 & 9, 2021


DAY IN HISTORY


1. 8 August is celebrated as Quit India Movement Day

  • 8 August has made a significant mark in Indian history and is celebrated every year. This year, the day marks the 79th anniversary of Quit India Movement Day
  • The Quit India Movement Resolution was passed at the Wardha Conference of All India Congress Committee in July 1942.
  • The movement started with Gandhiji exhorting the countrymen with his powerful slogan, ‘do or die’ which infused new energy into our independence movement and eventually forced the British to leave India in 1947.

 

1. 8 ஆகஸ்ட் வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் கொண்டாடப்படுகிறது

  • 8 ஆகஸ்ட் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தினம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளையனே வெளியேறு இயக்க தினமாக 8 ஆகஸ்ட் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தின் 79 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • ஜூலை 1942, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வார்தா மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த இயக்கம், சுதந்திர இயக்கத்தில் ஒரு புதிய ஆற்றலைத் திணித்த, 1947இல் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த செய் அல்லது செத்து மடி என்ற காந்திஜி yin சக்திவாய்ந்த கோஷத்துடன் தொடங்கியது.

2. 9 August is observed as Nagasaki Day

  • The highly destructive atomic bomb attacks on Nagasaki during World War II completes 76 years.
  • In an attempt to carry out the ‘twin attacks’, the first atomic bomb known as ‘Little Boy’ was dropped on the western city of Hiroshima on 6 August 1945.
  • Another bomb ‘Fat Man’ was hurled at Nagasaki three days later on August 9, killing an estimated 40,000 people.

 

2. 9 ஆகஸ்ட் நாகசாகி தினமாக அனுசரிக்கப்படுகிறது

  • இரண்டாம் உலகப் போரின் போது நாகசாகி மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல்கள் 76 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளன.
  • ‘இரட்டைத் தாக்குதல்களை’ நடத்தும் முயற்சியாக, ‘லிட்டில் பாய்’ ‘(Little Boy) என்று அழைக்கப்பட்ட முதல் அணுகுண்டு மேற்கு நகரமான ஹிரோஷிமா மீது 6 ஆகஸ்ட் 1945 அன்று வீசப்பட்டது.
  • மூன்று நாட்களுக்குப் பின்னர் 9 ஆகஸ்ட் அன்று ஃபட் பாய்’ (Fat boy) என்ற மற்றொரு குண்டு நாகசாகி மீது வீசப்பட்டது. 40,000 பேரைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

3. 9 August is celebrated as International Day of the world’s Indigenous Peoples

  • The International Day of the World’s Indigenous Peoples is observed on 9 August each year to raise awareness and protect the rights of the world’s indigenous population.
  • It was first pronounced by the United Nations General Assembly in December 1994, marking the day of the first meeting of the UN Working Group on Indigenous Populations of the Sub-Commission on the Promotion and Protection of Human Rights in 1982.
  • The theme for the year 2021 is ‘Leaving no one behind: Indigenous peoples and the call for a new social contract’.

 

3. 9 ஆகஸ்ட் சர்வதேச உலக பூர்வக்குடி மக்களின் தினமாக கொண்டாடப்படுகிறது

  • சர்வதேச உலக பூர்வக்குடி மக்களின் தினம் ஒவ்வொரு ஆண்டும் 9 ஆகஸ்ட் அன்று கொண்டாடப்படுகிறது, இது, விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகின் பூர்வக்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கொண்டாடப்படுகிறது.
  • 1982ஆம் ஆண்டு மனித உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான துணை ஆணையத்தின் பழங்குடி மக்கள் தொகை பற்றிய ஐ.நா. செயற்குழுவின் முதல் கூட்டத்தின் நாளைக் குறிக்கும் வகையில், 1994 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இது முதலில் அறிவிக்கப்பட்டது.
  • 2021ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் ‘எவரையும் விடாமல்: சுதேச மக்களும் ஒரு புதிய சமூக ஒப்பந்தத்திற்கான அழைப்பு’.

TAMILNADU


4. ‘Zen dens’ established for police personnel to meditate

  • The Tamil Nadu Special Police (TSP) has established dedicated silent spaces called ‘Zen zones’ and ‘Zen dens’ for personnel in all 16 battalions spread across several parts of Tamil Nadu.
  • Here, police personnel will be allowed to spend time meditating to get over stressful circumstances.
  • Additional Director General of Police, Jayanth Murali, was instrumental in starting this initiative.

 

4. போலீஸ் அதிகாரிகள் தியானம் செய்யஜென் டென்ஸ்நிறுவப்பட்டுள்ளது

  • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள 16 படைப்பிரிவின் பணியாளர்களுக்காக ஜென் மண்டலங்கள்மற்றும்ஜென் டென்ஸ் என்று அழைக்கப்படும் பிரத்யேக தியானம் செய்யும் இடங்களை தமிழ்நாடு சிறப்பு காவல்துறை (TSP) நிறுவியுள்ளது.
  • இங்கே, மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் இருந்து விடுபட காவலர்கள் தியானம் செய்வதில் நேரத்தை செலவிட அனுமதிக்கப்படுவார்கள்.
  • கூடுதல் காவல்துறை இயக்குநர் கே. ஜெயந்த் முரளி இந்த முயற்சியைத் தொடங்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

5. Chief Minister Stalin launches tree planting drive in temples

  • Chief Minister M. K. Stalin launched a scheme to plant one lakh ‘Sthala Vriksham’, tree saplings, at temple nandavanams (gardens).
  • He planted a sapling of the Nagalinga tree at the head office of the Hindu Religious and Charitable Endowments Department in Nungambakkam.

 

5. முதல்வர் ஸ்டாலின் கோவில்களில் மரம் நடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்

  • கோயில் நந்தவனங்களில் (தோட்டங்களில்) ஒரு லட்சம் ஸ்தல விருக்ஷம் என்ற மரச்செடிகள் நடும் திட்டத்தை முதல்வர் மு.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • அவர், நுங்கம்பத்தில் உள்ள இந்து சமய அறநிலைய துறையின் தலைமை அலுவலகத்தில் நாகலிங்க மரத்தின் ஒரு மரக்கன்று ஒன்றினை நட்டார்.

6. RPF designs bio-toilets for women police officials

  • The Railway Protection Force (RPF) has designed moveable bio-toilets, which can be assembled and dismantled in a few minutes.
  • This was designed to provide privacy to women police officials and constables during training programmes outside office premises.

 

6. பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆர்பிஎஃப் (RPF) பயோ கழிப்பறையை (bio-toilets) வடிவமைக்கிறது

  • ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நகர்த்தக்கூடிய பயோ கழிப்பறைகளை வடிவமைத்துள்ளது, இதனை ஒரு சில நிமிடங்களில் ஒன்று சேர்க்கவும் அகலவும் இயலும்.
  • அலுவலக வளாகங்களுக்கு வெளியே பயிற்சி நிகழ்ச்சிகளின் போது பெண் காவலர் அதிகாரிகள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு தனியுரிமை வழங்குவதற்காக, இது வடிவமைக்கப்பட்டது.

NATIONAL


7. Shri Rameswar Teli launches 3rd ONGC handicraft project

  • Minister of State (MoS), Ministry of Petroleum and Natural Gas and Labor and Employment Shri Rameswar Teli launched ONGC-supported Assam Handloom project ‘Ujjwal Abahan’ on 6 August 2021 through a virtual platform.
  • The project will support and train over a hundred artisans of Bhatiapar of Sivasagar, Assam in Hathkharga handicraft.

 

7. 3வது ஓஎன்ஜிசி கைவினைத் திட்டத்தை திரு. ராமேஸ்வர் டெலி தொடங்கி வைத்தார்

  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு. ராமேஸ்வர் டெலி ஓ.என்.ஜி.சி ஆதரவுடன் அசாம் கைத்தறி திட்டமான உஜ்வால் அபாஹான் திட்டத்தினை மெய்நிகர் தளம் மூலம் 6 ஆகஸ்ட் 2021 அன்று தொடங்கி வைத்தார்.
  • இந்த திட்டம் ஹத்கார்கா கைவினைப் பொருள்களை செய்வதில் அசாமின் சிவசாகர், பாட்டியாப்பரின் நூற்றுக்கும் மேற்பட்ட கைவினைஞர்களுக்கு ஆதரவு மற்றும் பயிற்சி அளிக்கும்.

8. The first test run of the warship ‘Vikrant’ wins

  • ‘Vikrant’, the first indigenously built aircraft carrier, has completed its first test
  • The aircraft carrier Vikrant has been developed indigenously at a length of 262 metres, 62 metres wide, 59 metres high weighing 40,000 tonnes.
  • The construction of the ship started in 2009 at Kochi Shipyard in Kochi and ended recently.

 

8. ‘விக்ராந்த்போா்க்கப்பலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க்கப்பலான ‘விக்ராந்த் தனது முதல் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது.
  • 262 மீட்டா் நீளம், 62 மீட்டா் அகலம், 59 மீட்டா் உயரம், சுமாா் 40,000 டன் எடையில் உள்நாட்டிலேயே விக்ராந்த் விமானந்தாங்கி போா்க்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கப்பலின் கட்டுமானப் பணி, கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கி, அண்மையில் முடிவடைந்தது.

9. 2 women officers appointed for the first time in ITBP

  • For the first time, two women officers have been appointed in the Indo-Tibet Border Police Force (ITBP).
  • Women have been appointed to the Indo-Tibet Border Force since 2016, but have not been appointed to combat missions.
  • For the first time, two women officers Prakriti and Diksha have been appointed in the posts of Assistant Commandant in the Indo Tibet Border Force.

 

9. ஐடிபிபி படையில் முதன்முறை 2 பெண் அதிகாரிகள் நியமனம்

  • இந்தோதிபெத் எல்லைப் படையில் (ஐடிபிபி) போர் பணியில் முதன்முறையாக 2 பெண் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தோ திபெத் எல்லைப் படையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பெண்கள் நியமிக்கப்பட்டு வந்த போதிலும், போர் பணிகளில் அவர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
  • இந்நிலையில், முதன்முறையாக இந்தோ திபெத் எல்லைப் படையில் உதவி கமாண்டட் பணியிடங்களில் பிரக்ரிதி, தீக்ஷா ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

10. Joint Naval Exercise of India, UAE

  • India and the United Arab Emirates conducted a joint naval exercise to strengthen security cooperation between the two countries.
  • The exercise took place at the coast of Abu Dhabi, the capital of the United Arab Emirates.

 

10. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு கடற்படைப் பயிற்சி

  • இந்தியாஐக்கிய அரபு அமீரகம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக இரு நாடுகளும் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன.
  • ஐக்கிய அரபு அமீரகம் தலைநகா் அபுதாபியையொட்டிய கடற்பகுதியில் இந்த போா் பயிற்சி நடைபெற்றது.

11. Johnson & Johnson’s single-dose Covid vaccine gets emergency use authorisation in India

  • India has approved to US drug maker Johnson & Johnson’s single-dose Covid-19 vaccine for emergency use in India.
  • Now, India has 5 EUA vaccines. So far, four vaccines have been given Emergency Use Authorisation (EUA) in India – AstraZeneca’s Covishield, Covaxin, Sputnik V and Moderna.

 

11. ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை டோஸ் கோவிட் தடுப்பூசி இந்தியாவில் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது

  • இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக அமெரிக்க மருந்து தயாரிப்பாளர் ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை டோஸ் கோவிட்-19 தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இப்போது இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக 5 தடுப்பூசிகள் உள்ளன. இதற்கு முன்பு அஸ்ட்ராஜெனிகாவின் கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் வி மற்றும் மாடர்னா ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

SCIENCE AND TECHNOLOGY


12. New technique to study ultrasmall particles in cells

  • Researchers from Indian Institutes of Technology, Madras and Indian Institute of Science Education and Research, Kolkata have developed a method to detect minute quantities of chemicals in solution.
  • With this technique, they can, in principle, illuminate the insides of cells and detect minuscule quantities of substances present there. The work was published in Nanoscale.

 

12. செல்களில் உள்ள மிகச்சிறிய துகள்களை ஆய்வு செய்ய புதிய நுட்பம்

  • இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை மற்றும் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கரைசலில் உள்ள நுண்ணிய அளவு இரசாயனங்களைக் கண்டறிய ஒரு முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த நுட்பத்தின் மூலம், அவர்கள் கொள்கையளவில், செல்களின் உட்புறங்களை ஒளிரச் செய்து, அங்கு இருக்கும் சிறிய அளவு பொருட்களைக் கண்டறிய முடியும். இந்த பதிப்பு நானோஸ்கேலில் வெளியிடப்பட்டது.

TOKYO OLYMPICS 2020


13. Neeraj Chopra wins gold medal in javelin for India in Olympics 2020

  • After 13 years, India’s Neeraj Chopra won a Gold medal in Javelin-a track-and-field event in Tokyo Olympics 2020.
  • It is the second individual Olympic gold medal in the country’s history after Abhinav Bindra shooting gold in Beijing in 2008.
  • It is also India’s first medal in a track-and-field event.

 

13. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக ஈட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

  • 13 ஆண்டுகளுக்குப் பிறகு டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் நீரஜ் சோப்ரா ஈட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • 2008ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்ற பிறகு நாட்டின் வரலாற்றில் இது இரண்டாவது தனிப்பட்ட ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஆகும்.
  • இது தடகள போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கமும் ஆகும்.

14. Bajrang Punia wins bronze in Tokyo Olympics 2020

  • Bajrang Punia won the bronze medal in men’s freestyle 65 kg wrestling against Daulet Niyazbekov of Kazakhstan.
  • After Sushil Kumar, Bajrang is the first Indian wrestler to win medals in both Olympics and the World championships.
  • Bajrang was the sixth Indian wrestler ever to claim an Olympic medal.

 

14. டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார்

  • கஜகஸ்தானின் டௌலெட் நியாஸ்பெகோவுக்கு எதிரான ஆண்கள் 65 கிலோ பிரிவில் மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • சுஷில் குமாருக்குப் பிறகு, ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் இரண்டிலும் பதக்கங்களை வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் ஆவார்.
  • ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஆறாவது இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் ஆவார்.

15. Tokyo Olympics 2020 completed

  • In Tokyo, the capital of Japan, the Tokyo Olympics 2020 began on 23 July 2021 and ended on 7 August 2021. More than 11,000 athletes from 206 countries competed in the Tokyo Olympics.
  • India is ranked 48th with 7 medals – one gold, 2 silver and 4 bronze.
  • The United States topped the Tokyo Olympics with 113 medals, including 39 gold, while China was second with 38 gold medals.
  • Japan is ranked 3rd with 58 medals.

 

15. டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவடைந்தன

  • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி 7 ஆகஸ்ட் அன்று நிறைவு பெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
  • ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடத்தில் உள்ளது.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கம் உட்பட 113 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது, சீனா 38 தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 58 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது.

APPOINTMENTS


16. Hockey player Vandana Kataria made Uttarakhand’s Women and Child Development ambassador

  • Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami appointed Team India’s hockey player Vandana Katariya as the state’s brand ambassador for the Department of Women Empowerment and Child Development.
  • She was a part of the Indian team that won a bronze medal at the 2014 Asian Games and represented India at the 2016 Rio Olympics.
  • In the 2020 Summer Olympics in Tokyo, Vandana became the first Indian woman to score an Olympic hat-trick in hockey.

 

16. ஹாக்கி வீரர் வந்தனா கட்டாரியா உத்தரகாண்ட் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக நியமிக்கப்பட்டார்

  • உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்திய அணியின் ஹாக்கி வீரர் வந்தனா கட்டாரியாவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மாநில விளம்பரதூதராக நியமித்தார்.
  • 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்த அவர், 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
  • டோக்கியோவில் நடந்த 2020 கோடைக்கால ஒலிம்பிக்கில், ஹாக்கியில் ஒலிம்பிக் ஹாட்ரிக் அடித்த முதல் இந்திய பெண் மணி என்ற பெருமையை வந்தனா பெற்றார்.

Obituary


17. Tindivanam Ramamurthy passed away

  • Former Tamil Nadu Congress Party president Tindivanam Ramamurthy (87) passed away due to illness.
  • Tindivanam Ramamurthy was a Member of Rajya Sabha from 1984 to 1990 and the Leader of Opposition in the Assembly from 1981 to 1984.
  • He was also the president of Sharad Pawar’s Nationalist Congress Party -Tamil Nadu.
  • Ramamurthy has also worked as the president of the Nationalist Congress Party – Tamil Nadu.

 

17. திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்

  • தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (87) உடல்நலக்குறைவால் காலமானார்.
  • அவர் 1984 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் 1981 முதல் 1984 வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
  • சரத் பவாரின் தமிழக தேசியவாத காங்கிரஸின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.
  • தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் ராமமூர்த்தி இருந்தார். 

Know an Institution


18. Oil and Natural Gas Corporation

  • Oil and Natural Gas Corporation is an Indian government-owned crude oil and natural gas corporation.
  • Its headquarters is in New Delhi.
  • It is founded on 14 August 1956.
  • Its Chief Executive Officer is Shashi Shankar.

 

18. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் இந்திய அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமாகும்.
  • இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
  • இது 14 ஆகஸ்ட் 1956 அன்று நிறுவப்பட்டது.
  • இதன் தலைமை செயல் அதிகாரி சசி சங்கர் ஆவார்