TNPSC Current Affairs – English & Tamil – February 1, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – February 1, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(1st February 2020) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – February 1, 2021
- Megacity plan for Little Andaman
- “Sustainable Development of Little Andaman – Vision document” has been prepared by NITI Aayog.
- A new greenfield coastal city and a Free trade zone to compete with Singapore and Hong Kong will be developed under the project.
- Greenfield project refers to a new project to be started in a new place where there is no development already.
Little Andaman
- It is a part of Andaman Islands and is separate from Great Andaman by Duncan passage.
- அந்தமானுக்கு மெகா சிட்டி திட்டம்
- “லிட்டில் அந்தமானுக்கான நிலையான வளர்ச்சி – தொலைநோக்கு ஆவணம்” நிதி ஆயோக் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
- ஒரு புதிய கிரீன்ஃபீல்ட் கடற்கரை நகரம் மற்றும் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்குடன் போட்டியிட ஒரு சுதந்திர வர்த்தக மண்டலம் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.
- கிரீன்ஃபீல்ட் திட்டம் என்பது முன்னர் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாத ஒரு புதிய இடத்தில் ஒரு புதிய திட்டம் தொடங்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
லிட்டில் அந்தமான்
- இது அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாகும், இதை கிரேட் அந்தமானிலிருந்து டன்கன் பாதை பிரிக்கிறது.
- Census to be postponed to 2022
- Census has been planed to be conducted in two phases
- House listing and Housing Census
- Population Enumeration
- The first Census was conducted in India in 1872 during the rule of Governor-General Lord Mayo.
- The first complete synchronous Census was conducted in the year 1881.
- It is conducted every 10 years.
- 2021 Census is the 16th such exercise since inception and 8th since independence and it is the first time Census has been postponed since independence.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு 2022-க்கு தள்ளிவைப்பு
- மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
- வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு
- மக்கள் தொகை கணக்கெடுப்பு
- இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரல் மயோ பிரபுவின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது.
- 1881ஆம் ஆண்டு முதல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
- 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மொத்தத்தில் 16வது முறை மற்றும் சுதந்திரம் அடைந்ததிலிருந்து 8வது முறையாகும்.மேலும் சுதந்திரம் அடைந்ததிலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
- GST collection
- GST collection reached a record hit high in January with inflows Rs.1.2 lakh crore, which is 8% higher than last year.
- ஜிஎஸ்டி(GST) வரி வசூல்
- ஜனவரியில் ஜிஎஸ்டி வரி வசூல் வரலாறு காணாத அளவிற்கு கடந்த ஆண்டை விட 8% அதிகமாக, ரூ.1.2 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
- Miyawaki Forest
- Chennai’s first Miyawaki Forest at Kotturpuram celebrates its first year.
- Miyawaki Forest is a Japanese method of afforestation.
- The native trees of the region are identified and divided into four layers such as
- Shrub
- Sub-tree
- Tree and
- Canopy
- Regardless of soil and climatic conditions, it grows well.
- It creates a dense forest in just 20 to 30 years, which through conventional methods takes 200 to 300 years.
- In this system, Multi-layered saplings are planted close to each other.
- This blocks sunlight from reaching the ground and prevents weeds.
- The close cropping ensures that the plants receive sunlight only from the top thus enabling them to grow upwards rather than sideways.
- Forests grow ten times faster and thirty times denser.
- The saplings become self-sustainable soon after the first three years.
- மியாவாகி காடு
- சென்னையின் முதல் மியாவாகி வனப்பகுதி, கோட்டூர்புரத்தில் தனது முதல் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
- மியாவாகி காடு என்பது ஜப்பானிய காடுவளர்ப்பு முறை ஆகும்.
- இவ்விடத்தின் பூர்வீக மரங்கள் இனங்காணப்பட்டு நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- குத்துச்செடி
- துணை மரம்
- மரம் மற்றும்
- மேற்கட்டி (canopy)
- மண் மற்றும் தட்பவெப்பநிலை எதுவாக இருந்தாலும், இது நன்றாக வளரும்.
- இது வெறும் 20 முதல் 30 ஆண்டுகளில் ஒரு அடர்ந்த காட்டை உருவாக்குகிறது, வழக்கமான முறைகள் மூலம் இதற்கு 200 முதல் 300 ஆண்டுகள் எடுக்கும்.
- இந்த முறையில், பல அடுக்கு மரக்கன்றுகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக நடப்படுகின்றன.
- இதனால் சூரிய ஒளி தரையில் படாமல் தடுக்கப்பட்டு, களைகள் வராமல் தடுக்கப்படுகிறது.
- நெருக்கமான பயிர்ச்செடிகள் மேல் பகுதியில் இருந்து மட்டுமே சூரிய ஒளியைப் பெறுகின்றன, இதனால் அவை பக்கவாட்டில் அல்லாமல் மேல்நோக்கி வளர உதவுகிறது.
- காடுகள் பத்து மடங்கு வேகமாகவும், 30 மடங்கு அடர்த்தியாகவும் வளரும்.
- முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மரக்கன்றுகள் சுய-நிலைத் தன்மையாக மாறும்.
5.Citizens Commission on Elections (CCE)
- It is a civil society body of eminent persons with domain knowledge to analyse the critical aspects related to elections.
- It has recommended that the current election system should be subjected to independent review and independent audit.
- Chairman : Madan Lokur, Former Supreme Court Judge.
- தேர்தல்கள் பற்றிய குடிமக்கள் ஆணைக்குழு (CCE – Citizens Commission on Elections)
- இது தேர்தல் தொடர்பான முக்கியமான விஷயங்களை ஆராய்வதற்கு களஅறிவு கொண்ட பிரமுகர்களின் குடிமை சமூக அமைப்பாகும்.
- தற்போதைய தேர்தல் முறை சுயாதீன மீளாய்வு மற்றும் சுயாதீன தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அது பரிந்துரை செய்துள்ளது.
- தலைவர் : மதன் லோகுர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி.
- Garbage-to-power plant
- PM lauded a garbage-to-power plant at Bowenapally during his first Mann Ki Baat of the year.
- It was commissioned inside Dr.Ambedkar Agriculture Market at Bowenapally.
- Vegetable and fruit waste of the market is used to generate power and it is used to light the market and run the canteen.
- This patented High rate bio-methanation technology based on AGR (Anaerobic Gas lift Reactor) has been designed by CSIR-IICT (Council of Scientific and Industrial Research – Indian Institute of Chemical Technology).
- It was funded by Department of biotechnology and State government.
N.S.Rajappan
- Modi lauded the solo efforts of N.S.Rajappan in cleaning the Vembanad lake.
- He was paralysed below his knees yet he continues his efforts.
- He belongs to Kottayam, Kerala.
Vembanad lake
- It is the largest lake in Kerala and the Longest lake in India.
- Nehru Trophy Boat Race is a Snake Boat Race held every year in the month of August in this lake.
- In 2002, it was included in the list of wetlands of Ramsar Convention.
- Kumarakom Bird Sanctuary is located on the east coast of the lake.
- குப்பையிலிருந்து மின்சக்தி
- பிரதமர் பவனபள்ளியிலுள்ள ஒரு குப்பையிலிருந்து மின்சக்தி பெறும் நிலையத்தை ஆண்டின் முதல் “மனதின் குரலில்” (மன் கி பாத்) பாராட்டியுள்ளார்.
- அது பவனபள்ளியிலுள்ள டாக்டர். அம்பேத்கர் வேளாண் சந்தையினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது.
- சந்தையில் மீதமாகும் காய்கறி மற்றும் பழகழிவுகள் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அது சந்தையில் விளக்கேற்ற மற்றும் கேண்டீன் இயக்க பயன்படுத்தப்படுகிறது.
- இந்த காப்புரிமை பெறப்பட்ட உயர் விகித உயிரி-மீத்தேன் AGR (காற்றில்லா எரிவாயு தூக்கு உலை) தொழில்நுட்பம், CSIR-IICT (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் – இந்திய இரசாயன தொழில்நுட்ப நிறுவனம்) மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதற்கான நிதியுதவியை உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் மாநில அரசு அளித்தன.
என்.எஸ்.ராஜப்பன்
- என்.எஸ்.ராஜப்பன் வேம்பநாடு ஏரியை சுத்தம் செய்ய மேற்கொண்ட முயற்சிகளை மோடி பாராட்டியுள்ளார்.
- முழங்கால்களுக்கு கீழே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், தனது முயற்சிகளைத் தொடர்கிறார்.
- இவர் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர்.
வேம்பநாடு ஏரி
- இது கேரளத்திலேயே மிகப்பெரிய ஏரியாகவும், இந்தியாவின் மிக நீளமான ஏரியாகவும் உள்ளது.
- நேரு கோப்பை படகுப் பந்தயம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஏரியில் நடைபெறும் ஒரு பாம்பு படகுப் பந்தயம் ஆகும்.
- 2002ஆம் ஆண்டு, இது ராம்சர் உடன்படிக்கையின் கீழ் ஈரநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- குமரகம் பறவைகள் சரணாலயம் இந்த ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது.
- Chabahar port
- India has sent two cranes as a part of consignment of six Mobile Harbour Cranes (MHC) worth $25 million to Chabahar.
- Shahid Beheshti port has received the cranes.
- Last month transport officials of India, Iran and Uzbekistan held their first “Trilateral working group meeting” on the joint use of Chabahar port.
Chabahar port
- Chabahar port is located on the Gulf of Oman in Iran.
- It is near to the Gwadar port in Pakistan which has been developed by China.
- This is the only oceanic port of Iran.
- It consists of two separate ports named Shahid Beheshti and Shahid Kalantari.
- சாபஹார் துறைமுகம்
- 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆறு நடமாடும் துறைமுக கிரேன்கள் (MHC) அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா இரண்டு கிரேன்களை சாபஹாருக்கு அனுப்பியுள்ளது.
- ஷாஹித் பெஹஷ்தி துறைமுகம் இந்த கிரேன்களை பெற்றுள்ளது.
- கடந்த மாதம் இந்தியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போக்குவரத்து அதிகாரிகள், சாபஹார் துறைமுகத்தை கூட்டாக பயன்படுத்துவது தொடர்பாக தங்களது முதல் “முத்தரப்பு பணிக்குழு கூட்டத்தை” நடத்தினர்.
சாபஹார் துறைமுகம்
- சாபஹார் துறைமுகம் ஓமன் வளைகுடாவில் ஈரானில் அமைந்துள்ளது.
- இது பாகிஸ்தானிலுள்ள, சீனாவால் உருவாக்கப்பட்ட குவாதார் துறைமுகத்திற்கு அருகில் உள்ளது,.
- இது ஈரானின் ஒரே கடல் துறைமுகமாகும்.
- இது ஷாஹித் பெஹெஸ்தி மற்றும் ஷாஹித் கலந்தரி என்ற இரண்டு தனித்தனி துறைமுகங்களைக் கொண்டுள்ளது.
- New Visa regime
- Anyone with a British National (Overseas) passport and their dependents can now apply online for visa to allow them to live and work in U.K.
- After 5 years they can apply for citizenship.
- It was in response to China threatening to impose National Security law to off the democratic protests in Hong Kong.
- புதிய விசா முறை
- பிரிட்டிஷ் குடிமக்கள் (வெளிநாடு) கடவுச்சீட்டு உள்ளோர் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்போர் இப்போது பிரிட்டனில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவதற்கான விசாவிற்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
- 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
- ஜனநாயக எதிர்ப்புக்களை நிறுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை திணிக்கப்போவதாக ஹாங்காங்கை சீனா அச்சுறுத்தியதை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- Messi
Messi has been reported to be the most expensive athlete worth 555 euro by El-Mundo newspaper.
- மெஸ்ஸி
மெஸ்ஸி 555 யூரோ மதிப்புள்ள உலகில் மிகவும் விலையுயர்ந்த தடகள வீரர் என்று எல்-முண்டோ செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
- Badminton World Tour
It was held at Bangkong.
Women singles – Tai Tzuy-ying (Taiwan)
She defeated the Olumpic Champion Carolina Marin (Spain)
Men singles – Anders Antosen (Denmark)
He defeated Viktor Axelsen (Denmark)
Men’s doubles – Lee Yang and Wang Chi-Lin (Taiwan)
They defeated Mohammad Ahsan and Hendra Setiawan (Indonesia)
Women doubles – Lee So-hee and Shin Seung-chan (Korea)
They defeated Kim So-yeong and Kong Hee-yong (Korea)
Mixed Doubles – Sapsiree Taerattanachai and Dechapol Puavaranukroh (Thailand)
They defeated Seo-Seung-jae and Chae Yoo-jung (Korea)
- உலக சுற்றுலா பூப்பந்து
இது பாங்காக்கில் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் – டாய் ட்ஸுயி-யிங் (தைவான்)
அவர் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை தோற்கடித்தார் (ஸ்பெயின்)
ஆண்கள் ஒற்றையர் – ஆண்டர்ஸ் அன்டோசன் (டென்மார்க்)
அவர் விக்டர் ஆக்செல்சன் (டென்மார்க்) ஐ தோற்கடித்தார்
ஆண்கள் இரட்டையர் – லீ யாங் மற்றும் வாங் சி-லின் (தைவான்)
அவர்கள் முகமது அசன் மற்றும் ஹெந்திர சேதியாவான் (இந்தோனேசியா) ஆகியோரை தோற்கடித்தனர்
பெண்கள் இரட்டையர் – லீ சோ-ஹீ மற்றும் ஷின் சியுங்-சான் (கொரியா)
அவர்கள் கிம் சோ-யோங் மற்றும் காங் ஹீ-யோங் (கொரியா) ஐ தோற்கடித்தனர்
கலப்பு இரட்டையர் – சாப்சிரி டேரட்டன்சை மற்றும் டெகாபொல் புவவரனுகுரோ(தாய்லாந்து)
அவர்கள் சியோ-சியுங்-ஜே மற்றும் சே யூ-ஜங் (கொரியா) ஐ தோற்கடித்தனர்
- Tamil Nadu Government Advisor
- Retired Chief Secretary K. Shanmugam has been appointed as the Advisor to the Government of Tamil Nadu.
- K. Shanmugam will be appointed as an Advisor to the Government of Tamil Nadu from February 1.
- He will continue to hold the post from 1st February to one year.
- He has a monthly salary of Rs 2.25 lakh.
Second Consultant
- Sheela Balakrishnan, chief secretary during the AIADMK rule, was appointed as an advisor to the government immediately after his retirement.
- Similarly, now Chief Secretary K. Shanmugam has also been appointed as a Government Advisor.
- தமிழக அரசு ஆலோசகர்
- ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற க.சண்முகம் பிப்.1 – ஆம் தேதி முதல் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார்.
- இவர், பிப்.1 முதல் ஓராண்டு வரை இப்பதவியில் நீடிப்பார்.
- அவருக்கு மாத ஊதியமாக ரூ.2.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆலோசகர்
- அதிமுக ஆட்சிக்கு காலத்தில் தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றதும் உடனடியாக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
- அதுபோன்றே இப்போது தலைமைச் செயலாளர் க.சண்முகமும் அரசு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- New Chief Secretary
- Rajiv Ranjan takes charge as 47th Chief Secretary of Tamil Nadu Government on February 1.
- Rajiv Ranjan, who has been appointed as the new Chief Secretary, hails from Jharkhand.
- He served as an IAS division officer in Tamil Nadu in 1985 for 35 years.
- New Chief Secretary Rajiv Ranjan will complete his 60 years in September. Accordingly, he will retire from the post of Chief Secretary in eight months.
- புதிய தலைமைச் செயலர்
- தமிழக அரசின் 47- ஆவது தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் பிப்.1 பொறுப்பேற்கிறார்.
- புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் ரஞ்சன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.
- 1985-ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியாக 35 ஆண்டுகாலம் பணியாற்றியவர் ஆவார்.
- புதிய தலைமைச் செயலாளரான ராஜீவ் ரஞ்சன் வரும் செப்டம்பரில் 60 வயதைப் பூர்த்தி செய்கிறார். அதன்படி, அவர் எட்டு மாதங்கள் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்.
- Tamiravaruni Aquatic Bird Samai
- 11th Thamiravaruni Aquatic Bird Survey was started in collaboration with Agastyamalai Natural Resource Conservation Centre, Nellai Naturopathy Society, Thoothukudi, Muthunagar Natural Society and Tirunelveli District Science Centre.
- Assistant Conservator of Forests Hemalatha inaugurated the survey.
- It is noteworthy that 24,411 birds were counted in 74 species of birds in 51 ponds in the bird survey conducted last year.
- தாமிரவருணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு
- அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம், நெல்லை இயற்கை சங்கம், தூத்துக்குடி, முத்துநகர் இயற்கை சங்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் இணைந்து மேற்கொள்ளும் 11-ஆவது தாமிரவருணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.
- இக்கணக்கெடுப்பை உதவி வனப் பாதுகாவலர் ஹேமலதா தொடங்கிவைத்தார்.
- கடந்த ஆண்டு நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் 51 குளங்களில் 74 வகையான பறவையினங்களில் 24,411 பறவைகள் கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- Tyagaraja Aradhana Festival at Thiruvaiyar
- 174th Annual Aradhana Festival of Sadhguru Sri Thyagaraja Swami at Thiruvaiyar in Thanjavur district begins on 1st Feb.
- The ceremony will be presided over by GK Vasan, Chairman, Brahma Mahotsava Sabha.
- திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழா
- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174-ஆம் ஆண்டு ஆராதனை விழா பிப்.1 தொடங்குகிறது.
- ஸ்ரீதியாக பிரம்ம மஹோத்ஸவ சபைத் தலைவர் ஜி கே வாசன் தலைமையில் இவ்விழா நடைபெறவுள்ளது.
- Syed Mushtaq Ali Cup T20
- Tamil Nadu beat Baroda by 7 wickets in the final match of Syed Mushtaq Ali cup T20.
- This is the second time Tamil Nadu became the champion in the tournament.
- Earlier, Tamil Nadu had won a similar trophy during the 2006-07 period.
- The competition was held in Ahmedabad, Gujarat.
- சையது முஷ்டாக் அலி கோப்பை டி20
- சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
- இப்போட்டியில் தமிழகம் சாம்பியன் ஆனது இது 2- ஆவது முறை.
- முன்னதாக 2006 – 07 கால கட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பை வென்றிருந்தது.
- இப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்றது.
- Hospitalising for delivery is mandatory
- In the state of Maharashtra, Bhiwandi Nizampur Corporation has made it compulsory for pregnant women to be admitted to the hospital for delivery.
- Between 12,000 and 13,000 births occur a year in Bhiwandi. Of these, 3,000 to 4,000 deliveries are seen at home.
- In slums and rural areas, there are cases of deaths of pregnant women and infants due to delivery of homes.
- The corporation commissioner has therefore made it mandatory for pregnant women to be admitted to the hospital for childbirth.
- பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதிப்பது கட்டாயம்
- மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நிஜாம்பூர் மாநகராட்சியில் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- பிவாண்டியில் ஓராண்டில் 12,000 முதல் 13,000 பிரசவங்கள் நிகழ்கின்றன. இதில் 3,000 முதல் 4,000 பிரசவங்கள் வீடுகளில் பார்க்கப்படுகின்றன.
- குடிசைப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளில் பிரசவம் பார்ப்பதால் கர்ப்பிணிகள், சிசுக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
- எனவே கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக மருத்துவமமையில் அனுமதிக்கப்படுவதை மாநகராட்சி ஆணையர் கட்டாயமாக்கியுள்ளார்.
- Budget Session
- The first part of the Budget session ends on February 13.
- Budget session for 2021 began on January 29th.
- பட்ஜெட் கூட்டத்தொடர்
- பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப். 13-இல் நிறைவடைகிறது.
- 2021 – க்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கியது.
18.”Prabhuddha Bharata” Monthly Magazine
- The 125th anniversary celebration of the monthly magazine “Prabhuddha Bharata” started by Swami Vivekananda in 1896 was held on 31st January.
- “பிரபுத்த பாரத” மாத இதழ்
- கடந்த 1896-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தொடங்கிய “பிரபுத்த பாரத” மாத இதழின் 125-ஆம் ஆண்டு கொண்டாட்டம் ஜனவரி 31 அன்று நடைபெற்றது.
- Cranes for Chabahar Port
- Indian authorities formally handed over two cranes to Iran’s Chabahar port authorities on January 31, with a capacity to handle 140 tonnes of weight in the ports.
- The three countries are jointly building the Chabahar port in Sistan-Balochistan province in Iran to promote trade between India, Iran and Afghanistan.
- India has now provided cranes to this port.
- சாபஹார் துறைமுகத்துக்கு கிரேன்கள்
- துறைமுகங்களில் 140 டன் எடையைக் கையாளும் திறன் கொண்ட இரண்டு கிரேன்களை ஈரானின் சாபஹார் துறைமுக அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் ஜனவரி 31 அன்று முறைப்படி ஒப்படைத்தனர்.
- இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில், ஈரானில் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாபஹார் துறைமுகத்தை மூன்று நாடுகளும் இணைந்து கட்டமைத்து வருகிறது.
- இந்த துறைமுகத்துக்கு கிரேன்களை இந்தியா இப்போது வழங்கியுள்ளது.
20.’Dinamani’ to ‘C. P. Adithyanar” Award
- The first tamil father C.P. Adithyanar Newspaper Award is given to ‘Dinamani’.
- C. P. Adithyanar Weekly Magazine Award – Kalki Weekly Magazine
- C. P. Adithyanar Monday Award – Senthamizh Monday Magazine
- Devaneya Pavanar Award – Dr. K. Sivamani
- The Veeramamunivar Award is also given to Dr. Grigory James of Hong Kong.
- S. Rajaraman will receive the Chief Minister’s Computer Tamil Award for the year 2019.
- 2020 Literary Award – Dr. Alexis Devarasu Senmark of France,
- Grammar Award – Prof. Arunachalam Shanmugadasu from SriLanka,
- Language Award – Dr. Thinnappan from Singapore.
- ‘தினமணி’க்கு “சி.பா.ஆதித்தனார்” விருது
- முதன் முதலாக 2020-ஆம் ஆண்டுக்கான ‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நாளிதழ் விருது’ ‘தினமணி’க்கு வழங்கப்படுகிறது.
- மேலும் சி.பா.ஆதித்தனார் வார இதழ் விருது – கல்கி வார இதழுக்கும்
- சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது – செந்தமிழ் திங்களிதழுக்கும்
- தேவநேயப் பாவாணர் விருது – முனைவர் கு.சிவமணி
- வீரமாமுனிவர் விருது – ஹாங்காங்கைச் சேர்ந்த முனைவர் கிரிகோரி ஜேம்ஸுக்கும் வழங்கப்படுகிறது.
- 2019-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதை சே.ராஜாராமன் பெறவுள்ளார்.
- 2020 – ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க்,
- இலக்கண விருது இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் அருணாசலம் சண்முகதாசு,
- மொழியியல் விருது சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் சுப. திண்ணப்பன் ஆகியோருக்கும் வழங்கப்படவுள்ளன.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – February 1, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
1st February 2020 | Download Link |
Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – January 2021