TNPSC Current Affairs – English & Tamil – January 28, 2021

TNPSC Aspirants,

The current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(28th January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 28, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. 1. Rajiv Ranjan
  • He is a 1985 batch IAS officer of Tamil Nadu cadre.
  • The Appointments Committee of the Union cabinet approved the repatriation of Ranjan, who is currently secretary to the department of fisheries, the Union ministry of Fisheries, Animal Husbandry, and Dairying, to Tamil Nadu on the request of the state.
  • He is to be appointed as the Chief Secretary of Tamil Nadu, as the incumbent Secretary K.Shanmugam’s retirement is on January 29.
  • In 2018, Ranjan went on Central deputation and became special secretary of the GST council
  1. 1. ராஜீவ் ரஞ்சன்
  • இவர் 1985-ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவின் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.
  • மாநில அரசின் கோரிக்கையின் பேரில் மத்திய மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளராக உள்ள ரஞ்சனை, தமிழ்நாட்டிற்கு அனுப்ப மத்திய அமைச்சரவை நியமன ஆணையம் (Appointments Committee) ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போதைய தமிழக முதன்மை செயலாளர் க.சண்முகம் ஜனவரி 29ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில் ரஞ்சன் தமிழக செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.
  • 2018 இல், ரஞ்சன் மத்திய பிரதிநிதித்துவம் மூலம் ஜிஎஸ்டி கவுன்சிலின் சிறப்புச் செயலாளராக ஆனார்.

  1. P.Sadasivam
  • He is a former Chief Justice of India.
  • He succeeded Arif Mohammad Khan as the 40th
  • He was appointed as the Governor of Kerala after his retirement from 2014-2019.
  • He currently resides in Erode.
  • President of India, Ram Nath Govind has sent a momento to him on occasion of Republic day.
  1. ப.சதாசிவம்
  • இவர் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி (CJI) ஆவார்.
  • அரிஃப் முகமது கானைத் தொடர்ந்து 40வது தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றார்.
  • ஓய்வு பெற்றபின் கேரள ஆளுநராக 2014-2019இல் நியமிக்கப்பட்டார்.
  • அவர் தற்போது ஈரோட்டில் வசித்து வருகிறார்.
  • குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவருக்கு ஒரு நினைவி பரிசையும் கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.

  1. H4 Visa
  • Dependents of foreigners working in US are given this Visa – Wife/Husband, children, etc.,
  • They are also allowed to work there.
  • This Visa had been canceled by Trump recently.
  • Now Biden has canceled that order of Trump.
  • More than 1 lakh Indians are working in the US with H4 visa.

H1B Visa

  • Foreigners working in US are given this visa.
  1. எச் 4 நுழைவு இசைவு (விசா) (H4 Visa)
  • அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களைச் சார்ந்தோர்க்கு இந்த நுழைவு இசைவு வழங்கப்படும் – மனைவி / கணவர், குழந்தைகள்,.
  • அங்கு அவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
  • இந்த நுழைவு இசைவு சமீபத்தில் டிரம்ப்பால் ரத்து செய்யப்பட்டது.
  • இப்போது பைடன் டிரம்பின் அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார் .
  • எச்4 நுழைவு இசைவு மூலம் 1 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை செய்து வருகின்றனர்.

எச்1பி நுழைவு இசைவு (விசா) (H1B Visa)

  • அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இந்த நுழைவு இசைவு வழங்கப்படுகிறது.

  1. Minimum Support Price (MSP)
  • MSP has been announced for Copra.
  • MSP has been recommended by Committee on Agricultural Cost and Prices (CACP) and announced by the Ministry of Agriculture.
  • MSP for copra is applicable for major coconut producing States.

Milling copra

  • In 2020 – 1 quintal (100kg) = RS.9,960 (I kg = Rs.99.6)
  • In 2021 -1 quintal (100kg) = RS.10,335 (I kg = Rs.103.35)
  • 335 per quintal has been increased.

Ball copra

  • In 2020 – 1 quintal (100kg) = RS.10,300 (I kg = Rs.103)
  • In 2021 -1 quintal (100kg) = RS.10,600 (I kg = Rs.106)
  • 300 per quintal has been increased.
  1. குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி – MSP)
  • கொப்பரை தேங்காய்க்கு, எம்.எஸ்.பி., அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • விவசாய செலவு மற்றும் விலைகள் பற்றிய குழுவினால் (CACP) எம்.எஸ்.பி பரிந்துரைக்கப்பட்டு, விவசாய அமைச்சகத்தினால் அறிவிக்கப்படுகிறது.
  • பிரதானமாக தேங்காய் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு எம்.எஸ்.பி அறிவிக்கப்படும்.

காய்ந்த பருப்பு கொப்பரை தேங்காய்

  • 2020இல் – 1 குவிண்டால் (100 கிலோ) = ரூ.9,960 (1 கிலோ = ரூ.99.6)
  • 2021இல் – 1 குவிண்டால் (100 கிலோ) = ரூ.10,335 (1 கிலோ = ரூ.103.35)
  • குவிண்டாலுக்கு ரூ.335 உயர்த்தப்பட்டுள்ளது.

பந்து கொப்பரை தேங்காய்

  • 2020இல் – 1 குவிண்டால் (100 கிலோ) = ரூ.10,300 (1 கிலோ= ரூ.103)
  • 2021இல் – 1 குவிண்டால் (100 கிலோ) = ரூ.10,600 (1 கிலோ = ரூ.106)
  • குவிண்டாலுக்கு ரூ.300 உயர்த்தப்பட்டுள்ளது.

  1. Davos Meeting
  • It is the annual meeting World Economic Forum.
  • Modi participates through video conferencing
  1. டாவோஸ் கூட்டம்
  • இது உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) வருடாந்திர கூட்டம் ஆகும்.
  • காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

  1. Boat Library in Kolkata
  • It is being established on the Huglie river.
  • It aims to increase the reading habit among children.
  • 3 hours travel of Centenary park – Belur math – Centenary park.
  • WiFi facility available.
  • 500 books will be placed in the library.
  • Literary events will also be held.
  1. கொல்கத்தா படகு நூலகம்
  • இது ஹுக்லி ஆற்றில் நிறுவப்பட்டுள்ளது.
  • குழந்தைகள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
  • 3 மணி நேரம் பயணம். நூற்றாண்டு பூங்கா – பேலூர் மடம் – நூற்றாண்டு பூங்கா.
  • வைஃபை (WiFi) வசதி உள்ளது.
  • 500 புத்தகங்கள் இந்நூலகத்தில் வைக்கப்படும்.
  • இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

  1. Antony Blinken
  • He has been appointed as the 71st External affairs Minister of US.
  • He was a Joint Minister of External affairs during Obama’s period.
  1. அந்தோணி பிளிங்கன்
  • அமெரிக்காவின் 71வது வெளியுறவு அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஒபாமாவின் காலத்தில் அவர் வெளியுறவு இணை அமைச்சராக இருந்தார்.

  1. Best Player of the Month award
  • ICC (International Cricket Council) introduces the Best Player of the Month award to recognize the best performances of cricketers.
  • It will be announced 2nd Monday of every month.
  • Fans can vote online.
  1. மாதத்தின் சிறந்த வீரர் விருது
  • கிரிக்கெட் வீரர்களின் சிறந்த செயல்பாடுகளை அங்கீகரிக்க ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) மாதத்தின் சிறந்த வீரர் விருதை அறிமுகப்படுத்துகிறது.
  • இது ஒவ்வொரு மாதமும் 2வது திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.
  • ரசிகர்கள் இணைய வழியில் வாக்களிக்கலாம்.

9.ICC’s One-day cricket ranking

Batsman

  • Virat Kohli -India
  • Rohit Sharma – India
  • Babur Asam -Pakistan
  • Ross Taylor -New Zealand –
  • Aron Finge – Australia

Bowlers

  1. Trend Bolt – New Zealand
  2. Mujibh ur Rahman – Afghanistan
  3. Jasprith Bumrah – India

9.ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை

மட்டையாளர் (பேட்ஸ்மேன்)

  • விராட் கோலி -இந்தியா
  • ரோஹித் சர்மா – இந்தியா
  • பாபர் அஸம் -பாகிஸ்தான்
  • ராஸ் டெய்லர் -நியூசிலாந்து
  • ஆரோன் ஃபிங் -ஆஸ்திரேலியா

பந்துவீச்சாளர்

  1. டிரெண்ட் போல்ட் – நியூசிலாந்து-
  2. முஜீப் உர் ரஹ்மான் -ஆப்கானிஸ்தான்
  3. ஜஸ்பிரித் பும்ரா -இந்தியா

10. Jayalalitha memorial

Tamil Nadu CM Edappadi K. Palaniswamy unveiled the phoenix – themed mausoleum to Former CM  J. Jayalalitha in kamarajar salai at Marina on Jan 27, 2021.

10. ஜெயலலிதா நினைவிடம்

தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி ஜனவரி 27, 2021 அன்று மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பீனிக்ஸ் பறவையின் வடிவத்தால்  அமைக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்தார்.


  1. Digital water meters

By February, Chennai Metropolitan Water Supply and sewerage board  (CMWWSSB)  is about to complete its installation of Digital water meters with automated digital reading in all commercial buildings in the city. The project is funded under Smart city Mission.

  1. டிஜிட்டல் நீர் மீட்டர்கள்

பிப்ரவரி மாதத்திற்குள், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் (CMWWSSB) நகரத்தின் அனைத்து வணிக கட்டிடங்களிலும் தானியங்கி டிஜிட்டல் வாசிப்புடன் கூடிய டிஜிட்டல் நீர் மீட்டர்களை நிறுவும் திட்டத்தை நிறைவு செய்ய உள்ளது. இந்த திட்டத்திற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.


  1. Tatkal LPG

Tatkal LPG will be initially launched in Vellore on trial basis by the Indian oil Corporation for single bottle customers. For SBC, bookings will be taken in online with the additional payment of Rs. 25 per cylinder and the cylinder will be refilled in 2 hours after the online booking.

  1. தட்கல் எல்பிஜி

தட்கல் எல்பிஜி ஆரம்ப ஓட்டம், இந்தியன் ஆயில் கார்பரேஷனால் ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டுமே கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்காக வேலூரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  ஆன்லைனில் ஒரு சிலிண்டருக்கு ரூ. 25 கூடுதல் பணம் கட்டி முன்பதிவு செய்த 2 மணி நேரத்திற்குள், எரிவாயு சிலிண்டர் வீடுகளுக்கே வந்து விநியோகம் செய்யப்படும்.


  1. U.K virus variant

In the Recent study done by ICMR Researchers and Bharat Biotech identified that the covid-19 vaccine covaxin is  found to be effective against the new U.K virus variant.

  1. யு.கே வைரஸ் மாறுபாடு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பாரத் பயோடெக் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில், கோவிட் -19 தடுப்பூசி கோவாக்சின்  புதிய யு.கே வைரஸ் மாறுபாட்டை எதிர்த்து சிறப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.


  1. TikTok

After the video app TikTok was banned by Indian government, the parent company Bytedance from china has terminated its Indian service completely on Jan 27, 2021.

  1. டிக்டாக்

இந்திய அரசாங்கம் டிக்டாக் என்ற வீடியோ செயலியை தடைசெய்த பின்னர், சீனாவின் ஊடக நிறுவனமான ‘பைட்டேன்ஸ்’ தனது இந்திய சேவையை முழுமையாக நிறுத்திக் கொள்வதாக ஜனவரி 27, 2021 அன்று தெரிவித்துள்ளது.


  1. Censure of IAS officers

Andhra Pradesh State election commission has censured two IAS officers on the grounds of failing in discharging their duties in Gram panchayat elections. But the state government has objected the recommendation issued by SEC and would communicate the decision in a proper manner to the poll body as it will affect the service records of the officers.

  1. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தணிக்கை

கிராம பஞ்சாயத்து தேர்தலில் அவரவர் கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றத் தவறியதன் அடிப்படையில், ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தணிக்கை செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரித்த மாநில அரசு, இது அதிகாரிகளின் சேவை பதிவுகளை பாதிக்கும் என்பதால் இந்த முடிவை சரியான முறையில் அணுகக் கோரி ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.


  1. Haridaspur

Haridaspur, a remote village in Telangana celebrates the birth of every girl child by distributing sweets and lighting lamps. It is because of the sukanya samriddi yojana scheme implemented by the union government.

Sukanya samriddi yojana was launched by PM as part of the Beti Bachao, Beto padhao campaingn in 2015. It is a savings scheme account and can be opened at any Indian post office or authorized commercial banks with the interest rate of 7.6%.

  1. ஹரிதாஸ்பூர்

தெலுங்கானாவின் தொலைதூர கிராமமான ஹரிதாஸ்பூர், ஒவ்வொரு பெண் குழந்தையின் பிறப்பையும் இனிப்புகள் வழங்கியும்  விளக்குகள் ஏற்றியும்  கொண்டாடி வருகிறது. இதற்கு காரணமாக மத்திய அரசு அமல்படுத்திய சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் உள்ளது.

சுகன்யா சம்ரிதி யோஜனா, 2015 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் (பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமரால் தொடங்கப்பட்டது. இந்த சேமிப்பு திட்ட கணக்கை எந்த இந்திய தபால் நிலையத்திலும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளிலும் 7.6% வட்டி விகிதத்துடன் திறந்துக் கொள்ளலாம்.


Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 28, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
28th January 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – January 2021