TNPSC Current Affairs – English & Tamil – June 18, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(18th June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 18 2021


TAMIL NADU


  1. Tamil Nadu Chief Minister M. K. Stalin announces kuruvai cultivation package
  • Tamil Nadu Chief Minister M. K. Stalin announced scheme to benefit farmers in the Cauvery delta region region to facilitate kuruvai cultivation by providing input and equipment subsidies.
  • The scheme is to be implemented at the cost of 61.09 crore, out of which Rs. 50 crore for providing farm equipment to farmers on subsidies, another Rs. 11.09 crore would be spent for effective use of water.
  • The scheme would be implemented completely in Thanjavur, Nagapattinam, Mayiladuthurai, Tiruvarur districts and partly in Cuddalore, Ariyalur and Tiruchi
  • Kuruvai sowing season is from June to July.
  1. தமிழ்நாடு முதல்வர் மு. . ஸ்டாலின் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்
  • குறுவை சாகுபடிக்கு உதவும் வகையில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்கும் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்தார்.
  • மொத்தம் ரூ. 61.09 கோடி மதிப்பீடு கொண்ட இத்திட்டத்தில் முக்கிய இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க, அரசு ரூ. 50 கோடி நிதியினையும், நீரைத் திறம்படச் சேமித்து பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்த, ரூ. 11.09 கோடி நிதியினையும் வழங்க உள்ளது.
  • இந்த குறுவை சாகுபடி உதவி தொகுப்பு திட்டமானது, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் மற்றும் கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.
  • ஜூன் முதல் ஜூலை வரை குறுவை விதைப்பு காலம் ஆகும்

ECOLOGY AND ENVIRONMENT


  1. Farmers export GI-certified Jalgaon banana to Dubai
  • GI-certified Jalgaon banana were exported to Dubai. Jalgaon banana is the native of Jalgaon district of Maharashtra. It is known as ‘Banana city of India’. It received GI Tag in 2016.
  • India is the world’s leading producer of bananas, accounting for 25% of global output. APEDA (Agricultural and Processed Food Products Export Development Authority) promotes exports of agricultural and processed food products.

APEDA

  • Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) was established by the Government of India under the Agricultural and Processed Food Products Export Development Authority Act, 1985. It works under the Ministry of Commerce and Industries. It promotes export of agricultural and processed food products from India. APEDA replaced the Processed Food Export Promotion Council (PFEPC).

GI Tag

  • Geographical Indication (GI) Tag registration is done under the Geographical Indications of Goods (Registration and Protection) Act, 1999. The first product to be accorded with GI tag in India was Darjeeling tea in 2004.
  1. புவிசார் குறியீடு பெற்ற ஜல்கான் வாழைப்பழத்தை விவசாயிகள் துபாய்க்கு ஏற்றுமதி செய்தனர்
  • புவிசார் குறியீடு பெற்ற ஜல்கான் வாழைப்பழம் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜல்கோனா வாழை மகாராஷ்டிராவின் ஜல்கோனா மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு உள்ளது. இது இந்தியாவின் வாழை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது 2016இல் புவிசார் குறியீடு பெற்றது.
  • இந்தியா உலகின் முன்னணி வாழை உற்பத்தியாளராக உள்ளது. உலக வாழை உற்பத்தியில் 25% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை APEDA (வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்) ஊக்குவிக்கிறது.

APEDA

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் சட்டம், 1985இன் கீழ் மத்திய அரசால் நிறுவப்பட்டது. இது வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது இந்தியாவில் இருந்து விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலுக்கு (PFEPC) பதிலாக APEDA கொண்டுவரப்பட்டது.

புவிசார் குறியீடு

  • 1999ஆம் ஆண்டு சரக்குகளின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் புவிசார் குறியீடு (GI Tag) பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் 2004இல் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட முதல் தயாரிப்பு டார்ஜிலிங் தேநீர் ஆகும்.

  1. World’s most expensive mango variety Miyazaki mango grown in Madhya Pradesh
  • World’s most expensive mango variety Miyazaki mango grown in Madhya Pradesh, bore fruits. Miyazaki mango or Eggs of the Sun mango variety was priced at Rs. 3 lakh last year.
  • The Miyazaki mango is grown in Japan and has 15% or higher sugar content and anti-oxidants. It is called the Miyazaki mango and is grown in the Miyazaki city of Japan. This mango is popular in India and Southeast Asia. Miyazaki mango is flaming red and actually shaped like a giant dinosaur egg.Mango is called the ‘King of Fruits’.
  1. உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழ வகையான மியாசாகி மாம்பழம் மத்தியபிரதேசத்தில் வளர்க்கப்படுகிறது
  • உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழ வகையான மியாசாகி மாம்பழம் மத்தியபிரதேசத்தில் வளர்க்கப்பட்டுள்ளது. மியாசாகி மாம்பழம் அல்லது சூரிய முட்டை எனப்படும் மாம்பழ வகையின் விலை கடந்த ஆண்டு ரூ. 3 லட்சமாக இருந்தது.
  • மியாசாகி மாம்பழம் ஜப்பானில் வளர்க்கப்படுகிறது மற்றும் 15%க்கும் அதிக சர்க்கரை மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான் (ஆன்டியாக்ஸிடன்ட்) உள்ளது. இது மியாசாகி மாம்பழம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் ஜப்பானின் மியாசாகி நகரத்தில் வளர்க்கப்படுகிறது. இந்த மாம்பழம் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிரபலமாக உள்ளது. மியாசாகி மாம்பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய டைனோசர் முட்டை போல் உள்ளது. மாம்பழம் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.

SCIENCE AND TECHNOLOGY


  1. World’s first wooden satellite, WISA Woodsat, to be launched from New Zealand
  • World’s first wooden satellite, WISA Woodsat, was developed by the European Space Agency (ESA). It is to be launched from New Zealand.
  • The mission aims to test the applicability of wooden materials in spacecraft It will be launched to space by the end of 2021 from New Zealand.
  • The satellite was designed and built-in Finland and will orbit in a roughly polar Sun-synchronous orbit. WISA Woodsat is a 10x10x10 cm nanosatellite made from
  1. உலகின் முதல் மர செயற்கைக்கோள், விசா வுட்சாட் நியூசிலாந்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது
  • உலகின் முதல் மர செயற்கைக்கோள், விசா வுட்சாட் ஐரோப்பிய விண்வெளி அமைப்பால் (ESA) உருவாக்கப்பட்டது. இது நியூசிலாந்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
  • விண்கல கட்டமைப்புகளில் மரப்பொருட்களை சோதிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் நியூசிலாந்தில் இருந்து விண்வெளிக்கு செலுத்தப்படும்.
  • இந்த செயற்கைக்கோள் பின்லாந்தில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது மற்றும் துருவ சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் சுற்றும். விசா வுட்சாட் என்பது ப்ளைவுட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட 10x10x10 செ.மீ நானோ செயற்கைக்கோள் ஆகும்.

NATIONAL


  1. Jammu and Kashmir, Punjab officials inspect Shahpur Kandi Dam Project in Kathua district
  • Jammu and Kashmir, Punjab officials, inspect Shahpur Kandi Dam Project in Kathua district. Shahpur Kandi Dam is being built across the Ravi river in Kathua district of Jammu and Kashmir.
  • Two dams – Ranjith Sagar Dam in the upstream and Shahpur Kandi Dam at the downstream of Ravi river were built for the complete use of water of Ravi river according to the Indus river water treaty, 1960. Ranjith Sagar Dam is located in Punjab and Jammu and Kashmir border and Shahpur Kandi Dam is located in Jammu and Kashmir.
  1. கத்துவா மாவட்டத்தில் ஷாபூர் கண்டி அணை திட்டத்தை ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்
  • கத்துவா மாவட்டத்தில் உள்ள ஷாபூர் கண்டி அணை திட்டத்தை ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ராவி ஆற்றின் குறுக்கே ஷாபூர் கண்டி அணை கட்டப்பட்டு வருகிறது.
  • Tamil translation. சிந்து நதிநீர் ஒப்பந்தம், 1960இன் படி, ராவி ஆற்றின் மேல்பகுதியில் ரஞ்சித் சாகர் அணை மற்றும் கீழ்ப்பகுதியில் ஷாபூர் கண்டி அணை ஆகிய இரண்டு அணைகள் ராவி ஆற்றின் நீரை முழுமையாகப் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டன. பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் ரஞ்சித் சாகர் அணையும், ஜம்மு காஷ்மீரில் ஷாபூர் கண்டி அணையும் அமைந்துள்ளன.

PERSONS IN NEWS


 

  1. Sathya Natella becomes the Chairman of Microsoft
  • Satya Nadella, Indian-origin CEO of Microsoft became the Chairman of Microsoft. He will act as CEO and the Chairman of the company. Satya Nadella is to take over as the chairman after Bill Gates and John Thompson.
  • John W Thompson was elected as the lead independent director, which he held from 2012 to 2014. Natella becomes the first person after the co-founder of the company, Bill Gates held both CEO and Chaitman position in 2000.
  1. மைக்ரோசாப்ட் நிறுவன தலைவராகியுள்ளார் சத்யா நாதெள்ளா
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டார். அவர் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிறுவனத்தின் தலைவராகவும் செயல்படுவார். பில் கேட்ஸ் மற்றும் ஜான் தாம்சனுக்குப் பிறகு சத்ய நாதெள்ளா தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
  • ஜான் டபிள்யூ தாம்சன் முன்னணி சுயாதீன இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியில் அவர் 2012 முதல் 2014 வரை இருந்தார். 2000ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்க்குப் பிறகு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் ஆகிய இரு பொறுப்பையும் வகிக்கும் முதல் நபராகிறார் நாதெள்ளா.

SPORTS


  1. Romania banned from Tokyo Olympics over doping cases
  • Romania became the fourth country to be barred from the Tokyo weightlifting competition by the International Weightlifting Federation for one year after Egypt, Malaysia and Thailand due to doping cases. 15 countries with past doping cases can send only a limited number of athletes to Tokyo Olympics.

Olympics:

  • Tokyo Summer Olympics was originally planned to be held at 2020, but was postpoed to 2021 due to COVID-19. Japan was the first Asian country to host Olympics in 1940, which was later shifted to Finland and finally cancelled.
  • Olympics is held every four years since 1948. The first modern Olympics was held in Athens (Greece) in 1896. Till now, Olympics has been cancelled thrice – 1916, 1940 and 1944 due to World wars.
  1. ஊக்கமருந்து வழக்கு தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ருமேனியா தடைசெய்யப்பட்டுள்ளது
  • ஊக்கமருந்து வழக்குகள் காரணமாக எகிப்து, மலேசியா மற்றும் தாய்லாந்திற்குப் பிறகு ஒரு வருடத்திற்கு சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தால் டோக்கியோ பளுதூக்குதல் போட்டியில் இருந்து தடை செய்யப்பட்ட நான்காவது நாடாக ருமேனியா ஆனது. முன்னர் ஊக்கமருந்து பயனாளிகள் கொண்ட 15 நாடுகள் டோக்கியோவுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்களை மட்டுமே அனுப்ப முடியும்.

ஒலிம்பிக் போட்டிகள்:

  • டோக்கியோ கோடைக்கால ஒலிம்பிக் முதலில் 2020இல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 காரணமாக 2021க்கு மாற்றப்பட்டது. 1940இல் ஒலிம்பிக்கை நடத்திய முதல் ஆசிய நாடு ஜப்பான் ஆகும். இது பின்னர் பின்லாந்திற்கு மாற்றப்பட்டு இறுதியாக ரத்து செய்யப்பட்டது.
  • 1948 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள நடத்தப்படுகிறன. முதல் நவீன ஒலிம்பிக் 1896இல் ஏதென்ஸில் (கிரீஸ்) நடைபெற்றது. இதுவரை, உலகப் போர்கள் காரணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய மூன்று முறை ஒலிம்பிக் ரத்து செய்யப்பட்டுள்ளது.

IMPORTANT DAYS


  1. Autistic Pride Day – 18 June
  • Autistic Pride Day is observed every year on 18 June. This day is observed to raise awareness about the people who suffer from a disorder called Autism Spectrum Disorder (ASD). This day was first celebrated by a group named ‘Aspies for Freedom’ in 2005 in Brazil. This is a community created specifically for Autistic people and led by them. According to the World Health Organization, one in 160 children has this disorder.

Autism:

  • Autism is a neurological developmental disability that affects the development of the normal brain, hampers communication, social interaction, cognition, and behaviour.
  • Autism is also known as a spectrum disorder because its symptoms and characteristics appear in a variety of combinations that affect children in various ways.

  1. ஆட்டிஸ்டிக் பிரைட் தினம் – 18 ஜூன்
  • ஆட்டிஸ்டிக் பிரைட் தினம் ஒவ்வொரு ஆண்டும் 18 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆட்டிசம் நிறமாலை கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதலில் பிரேசிலில் 2005இல்ஆஸ்பீஸ் ஃபார் ஃப்ரீடம் என்ற குழுவால் கொண்டாடப்பட்டது. இது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டு மற்றும் அவர்களால் வழிநடத்தப்படும் ஒரு அமைப்பாகும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, 160 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த கோளாறு உள்ளது.

ஆட்டிசம்:

  • ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சி இயலாமையாகும். இது சாதாரண மூளையின் வளர்ச்சியை பாதிக்கிறது, தகவல் தொடர்பு, சமூக தொடர்பு, அறிவாற்றல் மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கிறது.
  • ஆட்டிசம் நிறமாலை கோளாறு என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் அறிகுறிகள் மற்றும் பண்புகள் பல்வேறு வழிகளில் குழந்தைகளை பாதிக்கும் பல்வேறு சேர்க்கைகளில் தோன்றுகின்றன.

DAY IN HISTORY


  1. Jhansi Rani Laxmibai’s death anniversary – 18 June
  • Laxmibai’s birth name was Her father, Moropant Tambe, was the commander of Peshwa Baji Rao II. Manikarnika was married to Gangadhar Rao Newalkar who was the Maharaja of Jhansi in 1842.
  • She died on 18 June 1857, during the 1857 revolt , which is known as the ‘First War of Indian Independence’. British officer Hugh Rose described Lakshmi Bai as the “best and bravest military leader of the rebels”.

 

  1. ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் நினைவு நாள் – 18 ஜூன்
  • லக்ஷ்மிபாயின் இயற்பெயர்  மணிகர்ணிகா ஆகும். அவரது தந்தை மொரோபந்த் தம்பே இரண்டாம் பேஷ்வா பாஜிராவின் தளபதியாக இருந்தார். மணிகர்ணிகா  1842இல் ஜான்சியின் மகாராஜாவாக  இருந்த கங்காதர் ராவ் நியூவால்கரை திருமணம் செய்து கொண்டார்.
  • அவர் 18 ஜூன் 1857இல், முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைக்கப்படும் 1857ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது இறந்தார்.  பிரிட்டிஷ் அதிகாரி ஹக் ரோஸ், கிளர்ச்சியாளர்களில் லக்ஷ்மிபாய் மிகச் சிறந்த தைரியம் மிக்க தலைவரென லக்ஷ்மிபாயைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 18, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
18th June, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021