TNPSC Current Affairs – English & Tamil – March 13, 14 & 15, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(13th,14th & 15th March, 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.



Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 13, 14 & 15, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. India’s biggest floating solar power plant at Ramagundam in Peddapalli district of Telangana

  • India’s biggest floating solar power plant is being developed by the National Thermal Power Corporation Limited (NTPC) at Ramagundam in Peddapalli district of Telangana.
  • It spans 450 acres of water surface area, which is all set to commission around 217 MW floating solar capacity in the next few months.
  • The other renewable energy plants that are being developed are 92 MW floating unit at Kayamkulam gas plant and 25 MW unit at Simhadri power plant.
  1. இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம், தெலுங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டத்தின் ராமகுண்டத்தில் நிறுவப்பட உள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையத்தை, தெலுங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ராமகுண்டத்தில் தேசிய வெப்ப மின் கழக லிமிடெட்டால் (என்.டி.பி.சி) உருவாக்கப்பட்டு வருகிறது.
  • இது 450 ஏக்கர் நீர் பரப்பளவைக் கொண்டது. 217 மெகாவாட் மிதக்கும் சூரிய திறன் கொண்ட இந்த நிலையம் அடுத்த சில மாதங்களில் இயக்கப்பட உள்ளது.
  • மேலும், 92 மெகாவாட் மிதக்கும் அலகு கொண்ட காயம்குளம் எரிவாயு ஆலை மற்றும் 25 மெகாவாட் அலகு கொண்ட சிம்ஹாத்ரி மின் நிலையம் ஆகியவை தற்போது உருவாக்கப்பட்டு வரும் மற்ற ஆலைகள் ஆகும்.

  1. Tamil writer Imayam received Sahitya Akademi award for his Novel ‘sellatha panam’

  • The Sahitya Akademi awards for the year 2020 were announced on 12 March 2021.
  • Tamil writer Imayam won the Sahitya Akademi Award 2020 for his novel Sellatha Panam, published in 2018.
  • For kannada language, Congress leader M Veerappa Moily received the award for his epic poem Sri Bahubali Ahimsadigvijayam.
  1. தமிழ் எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு, ‘செல்லாத பணம்’ என்னும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது
  • 2020 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள், 12 மார்ச் 2021 அன்று அறிவிக்கப்பட்டது.
  • தமிழ் எழுத்தாளர் இமயம், 2018 இல் வெளியான தனது ‘செல்லாத பணம்’ என்னும் நாவலுக்காக 2020 சாகித்ய அகாடமி விருதை வென்றார்.
  • கன்னட மொழியில், காங்கிரஸ் தலைவர் எம்.வீரப்பா மொய்லி அவர்களுக்கு ‘ஸ்ரீ பாஹுபலி அஹிம்சாதிக்விஜயம்’ என்னும் கவிதை தொகுப்பிற்காக விருது வழங்கப்பட்டது .

  1. Multimodal transport hub built at Kathipara junction, Chennai

  • Kathipara Junction will soon have a multimodal urban square with several facilities, from bus bays to parking lot and eateries under the flyover, will be thrown open to public by the end of May.
  • According to Chennai Metro Rail Ltd.(CMRL), The objective is to attract more people to use the Alandur Metro station.
  1. சென்னையின் கத்திப்பாரா சந்திப்பில் பல்நோக்கு போக்குவரத்து மையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது
  • கத்திப்பாரா சந்திப்பில் பல வசதிகளுடன் கூடிய பல்நோக்கு நகர சதுக்கம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பாலத்தின் கீழ் பேருந்து முதல் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் உணவகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு மே மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
  • சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டின் (சி.எம்.ஆர்.எல்), அதிக மக்களை ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தைப் பயன்படுத்தும் வகையில் ஈர்ப்பதே இந்த மையத்தின் முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளது.

  1. The Centre has reconstituted an advisory committee for studying the mythical Sarasvati river

  • The Centre has reconstituted an advisory committee to chalk out a plan for studying the mythical Sarasvati river for the next two years and the committee would review the work done by the previous panel and then formulate a plan.
  • The Archaeological Survey of India (ASI) on had first set up the committee on December 28, 2017 for a period of two years.
  • The committee would be chaired by the Culture Minister and includes officials from the Culture, Tourism, Water Resources, Environment and Forest, Housing and Urban Affairs Ministries and representatives of the Indian Space Research Organisation.
  1. புராண கால சரஸ்வதி நதியைப் ஆராய்வதற்கான ஆலோசனைக் குழுவை மத்திய அரசு மறுசீரமைத்துள்ளது
  • புராண சரஸ்வதி நதியைப் பற்றி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆராய்ந்து ஒரு திட்டத்தை உருவாக்கும் ஆலோசனைக் குழுவை மத்திய அரசு மறுசீரமைத்துள்ளது. மேலும் இந்தக் குழு, முந்தைய குழுவின் பணிகளை மறுஆய்வு செய்து ஒரு புதிய திட்டத்தை வகுக்க உள்ளது.
  • இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) முதன்முதலில் 2017 டிசம்பர் 28 அன்று இரண்டு வருட காலத்திற்கு ஒரு ஆலோசனைக் குழுவை கட்டமைத்தது.
  • இக்குழு கலாச்சார அமைச்சரால் தலைமை தாங்கப்படும். மேலும் கலாச்சாரம், சுற்றுலா, நீர்வளம், சுற்றுச்சூழல் மற்றும் வனம், வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பிரதிநிதிகளும் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

  1. India has emerged as the fifth most attractive growth destination in PWC’s Survey

  • According to PricewaterhouseCoopers(PWC) 24th Annual Global CEO Survey, India emerged as the 5th most attractive growth destination in the world.
  • The United States emerged as the number one market followed by China, Germany and United Kingdom.
  1. பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸின் ஆய்வில், அனைவரையும் கவரும் விதத்திலான நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது
  • பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (பிடபிள்யூசி) 24 வது வருடாந்திர சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி கணக்கெடுப்பின்படி, அனைவரையும் கவரும் விதத்திலான நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது
  • அமெரிக்கா முதலிடத்திலும், சீனா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.

  1. Government of India working on Atmanirbhar Niveshak Mitra portal to digitally facilitate investors

  • To promote domestic investments, the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Ministry of Commerce and Industry is in the process of finalising a dedicated digital portal called “Atmanirbhar Niveshak Mitra”.
  • The portal is in testing phase and the final version will be ready for launch by 15th May 2021.
  1. இந்திய அரசு, முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் வசதியை அளிக்க் அத்மநிர்பார் நிவேஷாக் மித்ரா வலைதளத்தை கட்டமைத்துள்ளது
  • உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு த் துறை (DPIIT) வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் “அட்மன்பர் நிவேஷாக் மித்ரா” என்னும் பிரத்யேக டிஜிட்டல் வலைதளத்தை இறுதி பதிப்பை கட்டமைத்துள்ளது.
  • தற்போது, சோதனை கட்டத்தில் உள்ள வலைதளத்தின் இறுதி பதிப்பு, 15 மே 2021-க்குள் வெளியிடப்படும்.

  1. Government of India has launched a new ration app called ‘Mera Ration’ to facilitate the ‘One Nation-One Ration Card’ system

  • The government of India has launched a new ration app called ‘Mera Ration’ to facilitate the ‘One Nation-One Ration Card’ system in the country.
  • This mobile app will help ration cardholders to identify the nearest fair price shop, and check details of their entitlement.
  • As of now, 32 States and Union Territories are covered under this scheme and the remaining four States and UTs are expected to be integrated into the scheme in the next few months.
  1. 7. ‘ஒரு நாடு-ஒரு ரேஷன் அட்டை’ முறையை எளிதாக்க, இந்திய அரசு ‘மேரா ரேஷன்’ என்ற புதிய ரேஷன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
  • நாட்டில் ‘ஒரு நாடு-ஒரு ரேஷன் அட்டை’ முறையை எளிதாக செயல்படுத்த, இந்திய அரசு ‘மேரா ரேஷன்’ என்னும் புதிய ரேஷன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த மொபைல் செயலி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அருகிலுள்ள நியாய விலைக் கடையை அடையாளம் காணவும், மற்ற விவரங்களை சரிபார்க்கவும் உதவும்.
  • தற்போதைய நிலவரப்படி, 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளன, மீதமுள்ள நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடுத்த சில மாதங்களில் இதில் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. Ministry of Civil Aviation (MoCA) has proposed about 392 routes under UDAN 4.1 bidding process

  • On the commencement of the ‘Azadi Ka Amrit Mahotsav (India@75)’ launched by Government of India, the Ministry of Civil Aviation (MoCA) has proposed about 392 routes under UDAN 4.1 bidding process.
  • The Regional Connectivity Scheme (RCS)- Ude Desh Ka Aam Nagrik (UDAN) is a flagship scheme of the Ministry of Civil Aviation (MoCA) envisaged to make air travel affordable and widespread in the country.
  • The UDAN 4.1 round is focused on connecting smaller airports, along with special helicopter and seaplane routes
  1. உடான் 4.1 ஏலத்தின் கீழ், சுமார் 392 வழித்தடங்களை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது
  • இந்திய அரசு தொடங்கிய ‘ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸத்தில் (இந்தியா @ 75)’, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (மோகா) சுமார் 392 வழித்தடங்களை உடான் 4.1 ஏலத்தின் கீழ் முன்மொழிந்துள்ளது.
  • பிராந்திய இணைப்புத் திட்டம் (ஆர்.சி.எஸ்) – உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் (உதான்) என்பது விமானப் பயணத்தை எளிதாக்க மற்றும் நாட்டில் பரவலாகக் கொண்டுவர திட்டமிடப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு முக்கிய திட்டமாகும்.
  • சிறப்பு ஹெலிகாப்டர் மற்றும் சீப்ளேன் வழித்தடங்களுடன் சிறிய விமான நிலையங்களை இணைப்பதில் உடான் 4.1 திட்டம் கவனம் செலுத்துகிறது

  1. ISRO launched the sounding rocket (RH-560) to study attitudinal variations in the neutral winds and plasma dynamics

  • Indian Space Research Organisation (ISRO) launched the sounding rocket (RH-560) to study attitudinal variations in the neutral winds and plasma dynamics at Satish Dhawan Space Centre, Sriharikota.
  • ISRO has developed a series of sounding rockets called Rohini series. RH-200, RH-300 and RH-560 are the notable ones in the series.
  1. உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா அயணிகள் ஆகியவற்றின் மாறுபாடுகளை ஆய்வு செய்ய இஸ்ரோ சவுண்டிங் ராக்கெட்டை (ஆர்.ஹெச்-560) ஏவியது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா அயணிகள் ஆகியவற்றின் மாறுபாடுகளை ஆய்வு செய்ய சவுண்டிங் ராக்கெட்டை (ஆர்ஹெச்-560) ஏவியது.
  • ரோஹினி சீர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த தொடர் சவுண்டிங் ராக்கெட்டுகளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. ஆர்.ஹெச் -200, ஆர்.ஹெச் -300 மற்றும் ஆர்.ஹெச் -560 ஆகியவை இந்த தொடரில் குறிப்பிடத்தக்க ராக்கெட்டுகளாகும்.

  1. Actress Deepika Padukone joined the World Economic Forum list of the Young Global Leaders

  • Deepika padukone joined the list of the Young Global Leaders (YGLs) compiled by the World Economic Forum.
  • The Forum of Young Global Leaders was founded in 2005 by Klaus Schwab, founder and executive chairman of the WEF.
  1. உலக பொருளாதார மன்ற சர்வதேச இளம் தலைவர்கள் பட்டியலில் நடிகை தீபிகா படுகோன் இணைந்துள்ளார்
  • உலக பொருளாதார மன்றத்தால் தொகுக்கப்படும் சர்வதேச இளம் தலைவர்கள் (ஒய்.ஜி.எல்) பட்டியலில் தீபிகா படுகோன் இணைந்துள்ளார்.
  • சர்வதேச இளம் தலைவர்கள் குழு, 2005ல் உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான கிளாஸ் ஸ்வாப் அவர்களால் நிறுவப்பட்டது ஆகும்.

  1. Girish Chandra Murmu has been re-appointed as the Chairman of the Panel of External Auditors of the United Nations

  • Comptroller and Auditor General of India (CAG), Girish Chandra Murmu has been re-appointed as the Chairman of the Panel of External Auditors of the United Nations for the year 2021.
  • Murmu was elected as Chairman of the Panel for 2020 previously. In 1959, the Panel of External Auditors was established by the UN General Assembly.
  1. கிரிஷ் சந்திர முர்மு ஐக்கிய நாடுகள் சபையின் வெளிநாட்டு தணிக்கையாளர்களின் குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி), கிரிஷ் சந்திர முர்மு 2021 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் வெளிநாட்டு தணிக்கையாளர்களின் குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கு முன்பு, திரு. முர்மு 2020 ஆம் ஆண்டு இந்த குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1959 ஆம் ஆண்டில், வெளிநாட்டு தணிக்கையாளர்களின் குழு ஐ.நா பொதுச் சபையால் நிறுவப்பட்டது ஆகும்.

  1. Director S.P. Jananathan(61), passed away on 14 March 2021

  • Tamil Film Director S.P. Jananathan(61), passed away on 14 March 2021.
  • He won a National Award for Best Feature Film in Tamil for the movie Iyarkai in 2004.
  1. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் (61), 14 மார்ச் 2021 அன்று காலமானார்
  • தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் (61), 14 மார்ச் 2021 அன்று காலமானார்.
  • 2004 ஆம் ஆண்டில், இயற்கை படத்திற்காக தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  1. Kathakali maestro Guru Chemancheri Kunhiraman Nair passed away on 15 March, 2021

  • Veteran Kathakali Guru Chemancheri Kunhiraman Nair(105), passed away on 15 March, 2021 at kerala.
  • He was honoured with the Padma Shree in 2017 and has also played a significant role in making classical dances like Bharatanatyam popular in north Kerala.
  1. கதகளி மேஸ்ட்ரோ குரு செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் 15 மார்ச் 2021 அன்று காலமானார்
  • பழம்பெரும் கதகளி குரு செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் (105), 15 மார்ச் 2021 அன்று கேரளாவில் காலமானார்.
  • 2017 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், வட கேரளாவில் பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடனங்களை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 13, 14 & 15, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
13, 14 & 15th March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021