TNPSC Current Affairs – English & Tamil – March 17, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(17th March, 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.



Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 17, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. Adopt a Heritage: Apni Dharohar, Apni Pehchaan project was awarded for Dara Shikoh Library Building
  • The 28thMoU under the “Adopt a Heritage: Apni Dharohar, Apni Pehchaan”  project has been awarded for Dara Shikoh Library Building, Delhi.
  • Adopt a Heritage: Apni Dharohar, Apni Pehchaan project was launched on 27 September 2017, which aims to develop tourism amenities at heritage natural tourist sites across India.
  1. பாரம்பரியம் தத்தெடுத்தல்: அப்னி தரோஹர் அப்னி பெஹ்சான் திட்டத்தின் கீழ் தாரா ஷிகோ நூலக கட்டிடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
  • 28வது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, பாரம்பரியம் தத்தெடுத்தல்: அப்னி தரோஹர், அப்னி பெஹ்சான் திட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள தாரா ஷிகோ நூலக கட்டிடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • பாரம்பரியம் தத்தெடுத்தல்: அப்னி தரோஹர், அப்னி பெஹ்சான் திட்டம் 27 செப்டம்பர் 2017 தொடங்கப்பது. இந்த திட்டம் இந்தியா முழுவதும் பாரம்பரிய இயற்கை சுற்றுலா தளங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது.

  1. Union Minister of Chemicals and Fertiliser inaugurated the 11th edition of India Chem-2021
  • Sadananda Gowda, Union Minister of Chemicals and Fertilisers inaugurated the 11th edition of India Chem-2021 on 17 March 2021.
  • India Chem is one of the largest composite events of the chemical and petrochemical sector in the Asia-Pacific Region. Department of Chemicals and Petrochemicals, in association with FICCI, organised the event in New Delhi.
  • The theme of India Chem-2021 is “India: Global Manufacturing Hub for Chemicals and Petrochemicals”.
  1. மத்திய இராசயண மற்றும் உரத்துறை அமைச்சர் 11வது இந்தியா கெம் 2021 நிகழ்வை துவக்கி வைத்தார்.
  • இராசயண மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, 11வது இந்தியா கெம் 2021 நிகழ்வை 17 மார்ச் 2021 அன்று துவக்கி வைத்தார்.
  • ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் இராசயண மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையின் மிகப்பெரிய கூட்டு நிகழ்வுகளில் இந்தியா கெம் ஒன்றாகும். இராசயண  மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து, இந்தியா கெம் 2021 நிகழ்வை புது டெல்லியில் நடத்தியது.
  • இந்தியா கெம்-2021 நிகழ்வின் கருப்பொருள்: “இந்தியா: கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல்களுக்கான சர்வதேச உற்பத்தி மையம்”.

  1. Rajya Sabha passed the Medical Termination of Pregnancy Bill 2020
  • Rajya Sabha passed the Medical Termination of Pregnancy Bill(Amendment) 2020, which increases the upper gestation limit from 20 to 24 weeks for women.
  • If pregnancy is to be terminated after 24 weeks in cases of substantial foetal abnormalities, the decision will be taken by state-level medical boards.
  1. மாநிலங்களவையில் கருக்கலைப்பு சட்டத் திருத்த மசோதா 2020 நிறைவேற்றப்பட்டது
  • கருக்கலைப்பு சட்டத் திருத்த மசோதா 2020 ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா பெண்களின் கர்ப்ப வரம்பை 20 முதல் 24 வாரங்களாக அதிகரித்துள்ளது.
  • 24 வாரங்களுக்குப் பிறகான குறைபாடுள்ள கருவை கலைக்க வேண்டிய சூழலில், மாநில அளவிலான மருத்துவ வாரியங்களால் முடிவு எடுக்கப்படும்.

  1. Union Cabinet approved a Bill to set up Development Finance Institution
  • The Union Cabinet has cleared a Bill to set up a government-owned development finance institution (DFI) to provide long-term funds to infrastructure projects with a capital infusion of Rs. 20,000 crore.
  • The Centre will set up the institution as government-owned and will bring down its stake gradually to 26%.
  1. நிதி மேம்பாட்டு நிறுவனம் அமைக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • 20,000 கோடி ரூபாய் மூலதனத்துடன் நீண்டகால உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு  நிதி வழங்க, அரசுக்கு சொந்தமான நிதி மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவுவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • முதலில் அரசுக்கு சொந்தமானதாக நிறுவப்படும் இந்த நிறுவனத்தின் பங்குகளை, பின்பு படிப்படியாக 26% ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  1. Council of Scientific and Industrial Research – National Institute of Oceanography has initiated a project for mapping the genetic diversity of organisms
  • Under one of its flagship projects TraceBioMe, the National Institute of Oceanography has initiated a project for mapping the genetic diversity of organisms to reveal the internal working of the body of the ocean at a cellular level.
  • A team of scientists and researchers from the NIO are onboard in its research vessel Sindhu Sadhana that will spend 90 days traversing the course of over 10,000 nautical miles in the Indian Ocean on the research project.
  1. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய கடலியல் நிறுவனம் இணைந்து உயிரினங்களின் மரபணு பன்முகத்தன்மை ஆராயும் திட்டத்தை தொடங்கியுள்ளது
  • தேசிய கடலியல் நிறுவனத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றான ‘ட்ரேஸ்பையோமீ’யின் கீழ், உயிரினங்களின் மரபணு பன்முகத்தன்மையை ஒரு செல்லுலார் மட்டத்தில், கடலின் உள் செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்திய பெருங்கடலில் 10,000 மைல்களுக்கு மேல் பயணம் செய்யும் ஆராய்ச்சிக் கப்பலான சிந்து சாதனாவில் தேசிய கடலியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு 90 நாட்களுக்கு இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளது.

  1. India-Bangladesh Water Resources Secretary Level Meeting at New Delhi
  • The India-Bangladesh Water Resources Secretary-level meeting under the framework of the Joint Rivers Commission took place in New Delhi.
  • India and Bangladesh share 54 common rivers which directly impact the livelihood of people in the two countries and both the sides agreed to expand cooperation across an entire gamut of water resources issues.
  1. இந்தியா-வங்கதேசம் நீர்வளத்துறை செயலர்கள் சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது
  • இந்தியா- வங்கதேசம் கூட்டு நதிகள் ஆணையத்தின் கட்டமைப்பின் கீழ், இந்தியா- வங்கதேசம் நீர்வளத்துறை செயலர்கள் அளவிலான கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
  • இந்தியாவும் வங்கதேசமும் 54 நதிகளைப் பகிர்ந்து கொள்வதால், அவை இரு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கின்றன. மேலும் இரு தரப்பினரும் அனைத்து வகையான நீர்வள பிரச்சினைகளிலும் ஒத்துழைப்பு அளிக்க ஒப்புக்கொண்டனர்.

  1. Alkem Laboratories Ltd. Introduced affordable Epilepsy drug in India
  • Brivasure, an affordable drug for the treatment of epilepsy, has been introduced by Alkem Laboratories Ltd. In India.
  • Brivasure has been approved by the Drugs Controller General of India.
  1. அல்கெம் லெபாரடரிஸ் நிறுவனம் மலிவு விலையிலான வலிப்பு நோய்க்கான மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
  • ப்ரிவாசுர் என்ற வலிப்பு நோய் சிகிச்சைக்கான மலிவு விலை மருந்தை, அல்கெம் லெபாரடரிஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
  • ப்ரிவாசுர் மருந்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.

  1. Kuldiep Singh was appointed as the Director-General of Central Reserve Police Force
  • The Government of India had appointed senior IPS officer Kuldiep Singh as the new Director General (DG) of the Central Reserve Police Force (CRPF).
  • Kuldiep Singh, a 1986 batch IPS officer of the West Bengal, has been appointed as DG, CRPF, up to 30 September 2022.
  1. குல்திப் சிங், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) புதிய தலைமை இயக்குநராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி குல்திப் சிங் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேற்கு வங்கத்தின் 1986 பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியான குல்தீப் சிங் 30 செப்டம்பர் 2022 வரை சி.ஆர்.பி.எஃப்-ன் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  1. MA Ganapathy appointed as the Director-General of the National Security Guard
  • The Government of India had appointed the senior IPS officer MA Ganapathy as the Director-General of the National Security Guard(NSG).
  • Ganapathy, a 1986 batch Indian Police Service (IPS) officer of the Uttarakhand cadre has been appointed as DG, NSG up to 29 February 2024.
  1. எம்ஏ கணபதி, தேசிய பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி எம்.ஏ.கணபதியை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • உத்தரகண்டின் 1986 பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியான எம்.ஏ. கணபதி 29 பிப்ரவரி 2024 வரை என்.எஸ்.ஜி-ன்  தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  1. Ram Swaroop Sharma, Member of Lok Sabha passed away
  • Ram Swaroop Sharma, Member of Lok Sabha, Himachal Pradesh passed away at his residence in New Delhi.
  • Ram Swaroop Sharma was first elected to Lok Sabha in 2014 and reelected in the 2019 general elections. He also served on the Parliamentary standing committee on External Affairs.
  1. மக்களவை உறுப்பினர் ராம் ஸ்வரூப் சர்மா காலமானார்
  • இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான ராம் ஸ்வரூப் சர்மா டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
  • 2014-ல் மக்களவைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் ஸ்வரூப் சர்மா, மீண்டும் 2019 பொதுத் தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மேலும் இவர் நாடாளுமன்ற வெளியுறவுத்துறை நிலைக்குழுவிலும் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 17, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
17th March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021