TNPSC Current Affairs – English & Tamil – March 23, 2021
TNPSC Current Affairs – English & Tamil – March 23, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(23rd March, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 23, 2021
1. Gandhi Peace Price for 2019 and 2020 was announced posthumously for the first time
- Gandhi Peace Price for 2019 was conferred posthumously to late Sultan Qaboos bin Said Al Said of Oman and for 2020 to Bangabandhu Sheikh Mujibur Rahman. This is the first time the award had been conferred posthumously. The jury was chaired by Prime Minister Narendra Modi.
Sheikh Mujibur Rahman
- Sheikh Mujibur Rahman was selected in recognition of his outstanding contributions towards social, economic, and political transformation through non-violent and other Gandhian methods.
Sultan Qaboos bin Said Al Said of Oman
- He was selected in recognition of his vision to strengthen relations with India, and his efforts to promote peace and non-violence in the Gulf region.
Gandhi Peace Prize
- Gandhi Peace Prize is an annual award instituted by the Government of India since 1995, the 125th Birth Anniversary commemoration year of Mahatma Gandhi. The award is open to all people regardless of nationality, race, language, caste, creed, or sex. The award carries an amount of Rs. 1 crore, a citation, a plaque, and an exquisite traditional handicraft/ handloom item.
1. 2019 மற்றும் 2020க்கான காந்தி அமைதிப் பரிசு முதல் முறையாக விருது பெறுபவர்களின் மறைவிற்குப் பிறகு அறிவிக்கப்பட்டது
- ஓமனைச் சேர்ந்த மறைந்த சுல்தான் கபூஸ் பின் சையித் அல் சையித்துக்கு 2019ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசும் வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு 2020ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்த விருது, விருது பெறுபவர்களின் மறைவிற்குப் பிறகு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் நீதிபதிகள் குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.
ஷேக் முஜிபுர் ரஹ்மான்
- ஷேக் முஜிபுர் ரஹ்மான், அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகளின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான அவரது சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுல்தான் கபூஸ் பின் சையித் அல் சையித்து
- சுல்தான் கபூஸ் பின் சையித் அல் சையித்து, இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதி மற்றும் அகிம்சையை ஊக்குவிப்பதற்கான அவரது முயற்சிகள் ஆகியவற்றை அங்கீகரிப்பதன் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காந்தி அமைதிப் பரிசு
- மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த தினத்தை குறிக்கும் விதமாக 1995-ம் ஆண்டு காந்தி அமைதிப் பரிசு இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டது. நாடு, இனம், மொழி, சாதி, மதம் மற்றும் பாலினத்துக்கு அப்பாற்பட்டு தகுதியுடைய அனைவருக்கும் இவ்விருது வழங்கப்படும். இவ்விருது தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 1 கோடி பரிசுத் தொகை பாராட்டுப் பத்திரம், பட்டயம் மற்றும் பாரம்பரிய கைத்தறி அல்லது கைவினை பொருள் வழங்கப்படும்.
2. Prime Minister paid tribute to Bhagat Singh, Sukhdev and Rajguru on Shaheed Diwas
- Prime Minister Narendra Modi paid tribute to the Martyrs Bhagat Singh, Sukhdev and Rajguru on Shaheed Diwas. 23 March is observed as Shaheed Diwas is famously known as Martyrs’ day to pay tribute to the Indian Revolutionaries who were hanged by the British government in 1931.
Background
- Bhagat Singh, Sukhdev and Rajguru plotted to kill James A Scott. Scott was the Superintendent of Police in the British Raj. It was Scott who had ordered the police to lathi charge the protesters and personally assaulted Rai, causing severe injuries. They wanted to kill Scott to send a message to the British Raj.
- However, John P Saunders, an Assistant Superintendent of Police, was killed in a case of mistaken identity. They were charged for the murder of Saunders. They were found guilty of the murder of Deputy Superintendent J.P. Saunders and were hanged.
2. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு ஷாஹீத் திவாஸில் பிரதமர் அஞ்சலி
- தியாகிகளான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு ஷாஹீத் திவாஸில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். 1931-ல் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்ட இந்தியப் புரட்சியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 23 மார்ச் தியாகிகள் தினம் என பிரபலமாக அறியப்படும் ஷாகீத் திவாஸாக கொண்டாடப்படுகிறது.
பின்னணி
- பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஜேம்ஸ் எ ஸ்காட்டைக் கொல்லத் திட்டமிட்டனர். ஸ்காட் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தார். போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த போலீசாருக்கு உத்தரவிட்ட ஸ்காட்தான் ராயை தனிப்பட்ட முறையில் தாக்கி கடுமையாக காயமடையச் செய்தார். அவர்கள் ஸ்காட்டைக் கொல்ல விரும்பினர்.
- எனினும், துணை கண்காணிப்பாளரான ஜான் பி.சாண்டர்ஸ் தவறான அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டார். அவர்கள் மீது சாண்டர்ஸ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. துணை கண்காணிப்பாளர் ஜே.பி.சாண்டர்ஸின் மரணத்திற்கு அவர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
3. Uttar Pradesh, Madhya Pradesh, and Centre signed Ken-Betwa River Linking Pact
- Uttar Pradesh, Madhya Pradesh, and Centre signed Ken-Betwa River Linking Pact. The agreement was signed by Union Jal Shakti Minister Gajendra Singh Shekhwat, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath and Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan. This was the first major project under the National River Linking Project (NRLP).
The Ken Betwa Link Project (KBLP)
- The Ken Betwa Link Project (KBLP) involves the transfer of water from the Ken to the Betwa river through the construction of Daudhan Dam and a canal linking the two rivers, the Lower Orr project, Kotha Barrage and the Bina Multipurpose Project.
Ken and Betwa
- Both are located in Madhya Pradesh and are tributaries of Yamuna
- River Orr is a tributary of Betwa on the border of Madhya Pradesh
3. கென்-பெத்வா நதிநீர் இணைப்பு ஒப்பந்தத்தில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மத்திய அரசு கையெழுத்திட்டது
- கென்-பெத்வா நதிநீர் இணைப்பு ஒப்பந்தத்தில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மத்திய அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இது தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின் (NRLP) கீழ் முதல் பெரிய திட்டமாகும்.
கென் பெத்வா இணைப்பு திட்டம் (KBLP)
- கென் பெத்வா இணைப்புத் திட்டம் (KBLP) என்பது கென் நதியிலிருந்து பெத்வா நதிக்கு தாவுதன் அணை மற்றும் இரண்டு நதிகளை இணைக்கும் கால்வாய், கீழ் ஓர் திட்டம், கோதா குறுக்கு அணை மற்றும் பீனா பல்நோக்கு திட்டம் ஆகிய ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் நீரை மாற்றுவதை உள்ளடக்கியுள்ளது.
கென் மற்றும் பெத்வா
- இவை இரண்டும் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள யமுனாவின் கிளை ஆறுகள்.Tamil translation.
- ஓர் நதி (River Orr) மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பெத்வாவின் கிளை நதி ஆகும்.
4. India and Pakistan held a meeting of the Permanent Indus Commission in New Delhi
- India and Pakistan held the meeting of the Permanent Indus Commission that deals with water rights on the Indus river in New Delhi. The Indian side led by the Indian Commissioner for Indus Waters Pradeep Kumar Saxena and the Pakistan side by Syed Muhammad Meher Ali Shah.
Indus Water Treaty
- Indus Water Treaty was signed by then Prime Minister Jawaharlal Nehru and Pakistan’s President Ayub Khan. According to the treaty, waters of Sutlej, Beas and Ravi had been allocated to India, while the Indus, Jhelum, and Chenab to Pakistan. Since Indus flows from India, it can use 20 per cent of its water for irrigation, power generation and transport. So, a Permanent Indus Commission was set up to implement and manage the Treaty.
The Permanent Indus Commission
- The Permanent Indus Commission was set up under the Indus Waters Treaty of 1960. The Indus water treaty warrants the two commissioners to meet at least once a year. Last year’s meeting scheduled to be held in March in New Delhi was cancelled because of the Coronavirus pandemic. The last meeting took place in Lahore in August 2018.
4. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர சிந்து ஆணையத்தின் கூட்டத்தை டெல்லியில் நடத்தியது
- இந்தியாவும் பாகிஸ்தானும் நிரந்தர சிந்து ஆணையத்தின் கூட்டத்தை டெல்லியில் நடத்தியது. இந்திய அணி சிந்து நதிநீர் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனாவின் தலைமையிலும், பாகிஸ்தான் சையித் முகமது மெஹர் அலி ஷாவும் முன்னிலையிலும் கலந்து கொண்டனர்.
சிந்து நதிநீர் ஒப்பந்தம்
- சிந்து நதிநீர் ஒப்பந்தம் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தப்படி, சட்லஜ், பியஸ், ராவி ஆகிய நதிகளின் நீர் இந்தியாவிற்கும், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகளின் நீர் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டன. இந்தியாவில் இருந்து சிந்து நதி பாய்வதால், இந்தியா அதன் 20 சதவீத நீரை பாசனம், மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்காக பயன்படுத்தலாம். எனவே, ஒப்பந்தத்தைச் செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் நிரந்தரக் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
நிரந்தர சிந்து ஆணையம்
- 1960ஆம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் நிரந்தர சிந்து நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. சிந்து நதிநீர் ஒப்பந்தம், இரு ஆணையர்களும் ஆண்டுக்கு ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று கூறுகிறது. கரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கடைசி கூட்டம் லாகூரில் ஆகஸ்ட் 2018 ல் நடந்தது.
5. India’s Divyansh Singh Panwar and Elavenil Valarivan duo won a gold medal in 10m Air Rifle Mixed Team event at ISSF World Cup
- India’s Divyansh Singh Panwar and Elavenil Valarivan won the gold medal in the 10m Air Rifle Mixed Team event at the International Shooting Sport Federation (ISSF) World Cup being held in Delhi. The Indian duo beat the world number one Hungarian team of Istvan Peni and Eszter Denes 16-10.
- Divyansh Singh Panwar had also won the bronze in the 10m Air Rifle individual event.
- 21 years old Elavenil Valarivan belonging to Cuddalore district of Tamil Nadu had already won gold in the World cup held in Rio de Janeiro and China in 10m air rifle
5. ISSF உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவ்யனாஷ் சிங் பன்வார், இளவேனில் வாலறிவன் இணை தங்கம் வென்றது
- தில்லியில் நடைபெற்ற ISSF உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவ்யனாஷ் சிங் பன்வார், இளவேனில் வாலறிவன் இணை தங்கம் வென்றது. இந்த ஜோடி 16-10 என்ற கணக்கில் உலகின் முதலிடத்திலிருந்த இணையான ஹங்கேரியின் இஸ்வான் பெனி-எஸ்தர் டெனிஸ்ஸை தோற்கடித்தது.
- திவ்யனாஷ் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவிலும் வெண்கலம் வென்று இருந்தார்.
- தமிழக வீராங்கனையான 21 வயது இளவேனில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் 2019-ம் ஆண்டில் ரியோ டி ஜெனீரோ மற்றும் சீனாவில் நடந்த உலக கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. Prime Minister Modi paid his tribute to Ram Mohan Lohia on his 110th birth anniversary
- Prime Minister Modi paid his tribute to Ram Mohan Lohia on 23 March on his 110th birth anniversary.
- Ram Mohan Lohia was a prominent social thinker and politician. He was born in Akbarpur of Uttar Pradesh. He was actively involved in the Congress Socialist Party. He worked with Congress Radio which was broadcasted secretly from various places in Bombay until 1942. He lost to Nehru in the 1962 general election but entered Lok Sabha in 1963 by winning a by-poll.
- He was the editor of the magazine “Mankind”.
6. ராம் மோகன் லோகியாவிற்கு அவரது 110வது பிறந்த நாளில் பிரதமர் மோடி அஞ்சலி
- பிரதமர் மோடி, மார்ச் 23அன்று ராம் மோகன் லோகியாவுக்கு அவரது 110வது பிறந்த நாளையொட்டி அஞ்சலி செலுத்தினார்.
- ராம் மோகன் லோகியா சமூக சிந்தனையாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் உத்தரப் பிரதேச மாநிலம் அக்பர்பூரில் பிறந்தார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டார். 1942 வரை பம்பாயின் பல்வேறு இடங்களிலிருந்து ரகசியமாக ஒலிபரப்பப்பட்ட காங்கிரஸ் வானொலியில் அவர் பணியாற்றினார். 1962 பொதுத் தேர்தலில் நேருவிடம் தோற்றாலும் 1963ல் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களவைக்குள் நுழைந்தார்.
- இவர் “மேன்கைன்ட்” என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார்.
7. NASA set to fly a mini-helicopter on Mars
- The Perseverance rover on Mars is set to deploy a mini-helicopter named Ingenuity that will fly and explore the Red Planet.
- After dropping the debris shield (Ingenuity), Perseverance will spend the next couple of days following the Ingenuity’s flight zone on Mars. The rover will deploy the helicopter and provide environmental monitoring and imaging support. It also hosts Ingenuity’s base station, enabling communication with mission controllers on Earth.
- Perseverance with Ingenuity attached to its belly, landed in Jezero Crater on February 18.
- Ingenuity is a technology demonstration with a limited test flight duration of up to 31 days (30 Mars days, or sols). NASA’s Ingenuity Mars Helicopter is the first aircraft humanity has sent to another planet to attempt powered, controlled flight.
7. செவ்வாய் கிரகத்தில் மினி ஹெலிகாப்டரை பறக்கவிட நாசா ஏற்பாடு
- செவ்வாய் கிரகத்தில் உள்ள பெர்செவரன்ஸ் ரோவர் சிவப்பு கிரகத்தை ஆராய, பறந்து செல்லும் இங்கனுட்டி என்ற ஒரு மினி ஹெலிகாப்டரை நிலைநிறுத்த உள்ளது.
- குப்பை தடுப்பு கவசத்தை (இங்கனுட்டி) இறக்கிவிட்ட பிறகு, செவ்வாய் கிரகத்தில் இங்கனுட்டியின் பறக்கும் மண்டலத்தை அடுத்த இரண்டு நாட்கள் பெர்செவரன்ஸ் கண்கானிக்கும். ரோவர் தள நிலையத்தையும் வழங்குகி, ஹெலிகாப்டரை நிலைநிறுத்தி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் இமேஜிங் ஆதரவு வழங்கும். இது புவியில் மிஷன் கண்ட்ரோலர்களுடன் தொடர்பு கொள்ள உதவும்.
- பெர்செவரன்ஸின் வயிற்றுப் பகுதியில் இணைக்கப்பட்ட இங்கனுட்டி பிப்ரவரி 18 ஜெஸீரோ கிரேட்டரில் தரையிறங்கியது.
- இங்கனுட்டி 31 நாட்கள் (30 செவ்வாய் நாட்கள் அல்லது sols) வரை வரையறுக்கப்பட்ட சோதனை விமான காலத்துடன் அனுப்பப்பட்ட ஒரு தொழில்நுட்ப சோதனை ஆகும். நாசாவின் செவ்வாய் கிரக ஹெலிகாப்டரான இங்கனுட்டி மனித இனம் மற்றொரு கிரகத்திற்கு சக்தி வாய்ந்த, கட்டுப்படுத்தப்பட்ட பயணத்துடன் அனுப்பிய முதல் விமானம் ஆகும்.
8. The Indian Space Research Organisation (ISRO) has successfully demonstrated free-space Quantum Communication over 300 metres, for the first time in the country.
- The Indian Space Research Organisation (ISRO) has successfully demonstrated free-space Quantum Communication over 300 metres, for the first time in the country.
- Several key technologies were developed indigenously to accomplish this event, which included the use of indigenously developed ‘NAVIC’ receiver for time synchronisation between the transmitter and receiver modules, and gimbal mechanism systems instead of bulky large-aperture telescopes for optical alignment.
- The demonstration has included live videoconferencing using quantum-key-encrypted signals. The experiment was performed at night, to ensure that there is no interference from the direct sunlight. The experiment is a breakthrough towards ISRO’s goal of demonstrating Satellite-Based Quantum Communication (SBQC).
The Quantum Key Distribution (QKD) technology
- This technology underpins Quantum Communication technology that ensures unconditional data security by the principles of quantum mechanics, which is not possible with conventional encryption systems.
- The conventional cryptosystems used for data-encryption rely on the complexity of mathematical algorithms, whereas the security offered by quantum communication is based on the laws of Physics.
8. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நாட்டில் முதல் முறையாக 300 மீட்டர் தூரத்தில் விண்வெளி குவாண்டம் கம்யூனிகேஷன் என்ற தொடர்பை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நாட்டில் முதல் முறையாக 300 மீட்டர் உயரத்தில் உள்ள குவாண்டம் கம்யூனிகேஷன் என்ற விண்வெளி ஆராய்ச்சியை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.
- இந்த நிகழ்வை நிறைவேற்றுவதற்காக பல முக்கிய தொழில்நுட்பங்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்டன, இதில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர் தொகுதிகளுக்கு இடையே நேர ஒத்திசைவிற்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘NAVIC’ ரிசீவர், மற்றும் ஒளியியல் சீரமைப்புக்கான பெரிய துளை தொலைநோக்கிகளுக்கு பதிலாக கிம்பள் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
- இந்த சோதனையில் குவாண்டம்-விசை-குறியாக்கப்பட்ட சிக்னல்களைப் பயன்படுத்தி நேரலை காணொலிக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. நேரடி சூரிய ஒளி குறுக்கீடு இல்லாமலிருப்பதை உறுதி செய்ய, சோதனை இரவு நேரத்தில் செய்யப்பட்டது. இந்த சோதனை செயற்கைக்கோள் சார்ந்த குவாண்டம் கம்யூனிகேஷனை (SBQC) நிரூபிப்பது என்ற இஸ்ரோவின் இலக்கை நோக்கிய ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகும்.
குவாண்டம் விசை விநியோகம் (QKD) தொழில்நுட்பம்
- இந்த தொழில்நுட்பம் குவாண்டம் கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்தை குவாண்டம் இயக்கவியல் கோட்பாடுகளின் மூலம் நிபந்தனையற்ற தரவு பாதுகாப்பை உறுதி செய்யும், இது வழக்கமான என்க்ரிப்ஷன் அமைப்புகளுடன் சாத்தியமில்லை.
- தரவு-குறியாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் வழக்கமான க்ரிப்டோ அமைப்புகள் கணித அல்காரிதம்களின் சிக்கலான தன்மையைச்சார்ந்துள்ளது, ஆனால் குவாண்டம் தொடர்பாடல் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டது.
9. 23 March is celebrated as the World Meteorological Day
- Every year, 23 March is celebrated World Meteorological Day to commemorate the establishment of the World Meteorological Organization (WMO). The day highlights the importance of the behaviour of the Earth’s atmosphere.
- The theme of the year 2021 is “The ocean, our climate, and weather”.
World Meteorological Organisation
- The World Meteorological Organisation, WMO was established in 1950 on March 23. Since its inception, the day has been observed as World Meteorological Day. WMO, an intergovernmental organization has a membership of 193 Member States and Territories.
- Headquarters: Geneva, Switzerland.
9. மார்ச் 23 உலக வானிலை தினமாக கொண்டாடப்படுகிறது
- ஒவ்வொரு ஆண்டும் உலக வானிலை அமைப்பு (WMO) நிறுவப்பட்டதை நினைவு கூறும் வகையில் மார்ச் 23 உலக வானிலை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பூமியின் வளிமண்டலத்தின் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.
- 2021ஆம் ஆண்டின் கருப்பொருள் “கடல், நமது காலநிலை மற்றும் வானிலை” ஆகும்.
உலக வானிலை அமைப்பு
- உலக வானிலை ஆய்வு அமைப்பான WMO 23 மார்ச் 1950இல் நிறுவப்பட்டது. இது தொடங்கப்பட்ட நாள் முதல் உலக வானிலை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. WMO, அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பாகும் 193 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் இதில் உறுப்பினராக உள்ளன.
- தலைமையகம்: ஜெனீவா, சுவிட்சர்லாந்து
10. 67th National Film Awards announced
The 67th National Film Awards were announced with the honours for films from the year 2019. The event was organised by the Directorate of Film Festivals, Ministry of Information and Broadcasting. The ceremony was supposed to be held last year but was delayed due to COVID-19.
S.NO | CATEGORY | ACTOR | FILM | LANGUAGE |
FEATURE FILMS | ||||
1. | BEST FEATURE FILM | Marakkar: Lion of the Arabian Sea | Malayalam | |
2. | BEST ACTOR | Dhanush | Asuran | Tamil |
Manoj Bajpayee | Bhonsle | Hindi | ||
3. | BEST ACTRESS | Kangana Ranaut | Panga | Hindi |
Manikarnika: The Queen of Jhansi | Hindi | |||
4. | BEST SUPPORTING ACTRESS | Pallavi Joshi | The Tashkent Files | Hindi |
5. | BEST SUPPORTING ACTOR | Vijay Sethupathi | Super Deluxe | Tamil |
6. | BEST DIRECTOR | Sanjay Puran Singh Chauhan | Bahattar Hoorain | Hindi |
7. | Best Debut Film of a Director | Mathukutty Xavier (Director) | Helen | Malayalam |
8. | Special Jury Award | Radhakrishnan Parthiban | Oththa Seruppu Size 7 | Tamil |
9. | Best Music Direction | D. Imman | Viswasam | Tamil |
10. | Best Tamil Film | Vetrimaran (Director) | Asuran | Tamil |
10. 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
67வது தேசிய திரைப்பட விருதுகள் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்காக அறிவிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கீழ் இயங்கும் திரைப்பட விழாக்களின் இயக்குனரகம், ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெறவிருந்தது ஆனால் COVID-19 காரணமாக தாமதமாக நடத்தப்படுகிறது.
வ.எண் | பிரிவு | நடிகர் | திரைப்படம் | மொழி |
திரைப்படங்கள் | ||||
1. | சிறந்த திரைப்படம் | மரக்காயர்: அரபிக்கடல் சிங்கம் | மலையாளம் | |
2. | சிறந்த நடிகர் | தனுஷ் | அசுரன் | தமிழ் |
மனோஜ் பாஜ்பாய் | போன்ஸ்லே | இந்தி | ||
3. | சிறந்த நடிகை | கங்கனா ரனாவத் | பாங்கா | இந்தி |
மணிகர்ணிகா: ஜான்சியின் ராணி | இந்தி | |||
4. | சிறந்த துணை நடிகை | பல்லவி ஜோஷி | தாஷ்கண்ட் கோப்புகள் | இந்தி |
5. | சிறந்த துணை நடிகர் | விஜய் சேதுபதி | சூப்பர் டீலக்ஸ் | தமிழ் |
6. | சிறந்த இயக்குநர் | சஞ்சய் புரன் சிங் சௌஹான் | பஹத்தார் ஹூரைன் | இந்தி |
7. | சிறந்த புதுமுக இயக்குநர் | மாத்துக்குட்டி சேவியர் (இயக்குனர்) | ஹெலன் | மலையாளம் |
8. | சிறப்பு நடுவர் விருது | ராதாகிருஷ்ணன் பார்த்திபன் | ஓத்த செருப்பு சைஸ் 7 | தமிழ் |
9. | சிறந்த இசை இயக்கம் | D. இமான் | விஸ்வாசம் | தமிழ் |
10. | சிறந்த தமிழ் படம் | வெற்றிமாறன் (இயக்குனர் | அசுரன் | தமிழ் |
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 23, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
23rd March, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below.