TNPSC Current Affairs – English & Tamil – May 1, 2 & 3, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(1, 2 & 3rd May, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 1, 2 & 3, 2021


ELECTIONS


1. Secular Progressive Alliance, led by DMK won the poll in Tamil Nadu Election 2021

  • Secular Progressive Alliance, led by Dravida Munnetra Kazhagam (DMK) won 159 seats, and National Democratic Alliance, led by All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) won 75 seats in the 234 seat Tamil Nadu Legislative assembly.
  • A party needs at least 118 seats to win the election. DMK won a clear majority and all set to form the Government. Chief Minister candidate of DMK, M K Stalin will be sworn in as the Chief Minister on 7 May.

DMK

  • Dravida Munnetra Kazhagam (DMK) was found by N. Annadurai in 17 September 1949. DMK formed a Government for the first time in 1967. It will be forming the Government for the sixth time in Tamil Nadu in 2021.

CM Edappadi K Palanisamy resigns

  • The National Democratic Alliance, led by All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), lost the 2021 Tamil Nadu elections. So, the incumbent CM Edappadi K Palanisamy resigned.

 

1. 2021 தமிழக தேர்தலில் தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது

  • 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டபேரவையில், திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களையும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களையும் வென்றன.
  • தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற ஒரு கட்சிக்கு குறைந்தபட்சம் 118 இடங்கள் தேவை. தி.மு.க. தனிப்பெரும்பான்மையை வென்று, ஆட்சி அமைக்க தயாராக உள்ளது. தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் 7 மே அன்று முதலமைச்சராக பதவியேற்கிறார்.

திமுக

  • திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) 17 செப்டம்பர் 1949இல் சி.என்.அண்ணாதுரையால் நிறுவப்பட்டது. 1967இல் முதல் முறையாக தி.மு.க., சி.என்.அண்ணாதுரை தலைமையில் ஆட்சி அமைத்தது. தி.மு.க. 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

 முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ராஜினாமா செய்தார்

  • அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2021 தமிழ்நாடு தேர்தலில் தோல்வியடைந்தது. எனவே, தற்போதைய முதல்வர் பதவியை எடப்பாடி கே.பழனிச்சாமி ராஜினாமா செய்தார்.

2. NDA retains power in Assam for the second consecutive term

  • In Assam, National Democratic Alliance (NDA) led by Bharatiya Janata Party (BJP) has retained power for the second consecutive term. It became the only non-Congress government to win consecutive terms in Assam.
  • The NDA has secured 75 seats in the 126-member Assam Assembly, in which BJP won 60 seats, its allies Asom Gana Parishad won 9 seats, and United People’s Party Liberal (UPPL) won 6 seats.
  • Congress has won 29 seats and its ally All India United Democratic Front, got 10 seats.

Election

  • Part XV of the Constitution of India deals with Elections.
  • 61st Constitutional Amendment Act, 1988 reduced the voting age from 21 to 18.
  • Article 324 of the Constitution of India provides for the Election Commission of India to deal with the elections of Parliament and State Legislatures.

 

2. அசாமில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது

  • அசாமில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அசாமில் தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரே காங்கிரஸ் அல்லாத அரசு இதுவாகும்.
  • 126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களைப் பெற்றுள்ளது, அதில் பாஜக 60 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகளான அசோம் ஜன பரிஷத் 9 இடங்களையும், ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி (UPPL) 6 இடங்களையும் வென்றுள்ளன.
  • காங்கிரஸ் 29 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 இடங்களையும் பெற்றுள்ளன.

தேர்தல்

  • இந்திய அரசியலமைப்பின் பகுதி XV தேர்தல்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • 61வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1988 வாக்களிக்கும் வயதை 21இல் இருந்து 18ஆகக் குறைத்தது.
  • இந்திய அரசியலமைப்பின் 324ஆம் விதி, பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்தல்களை கையாள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தை நிறுவியுள்ளது.

3. AITC retains power in West Bengal

  • In West Bengal, All India Trinamool Congress (AITC) has retained power for the third consecutive term in a row. Chief Minister Mamata Banerjee lost the Nandigram AITC has won 213 seats and BJP has won 77.
  • BJP’s Suvendu Adhikari defeated Mamata Banerjee by a margin of 1,956 votes in the key Nandigram constituency.

 

3. மேற்கு வங்கத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாம் முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது

  • மேற்கு வங்கத்தில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (AITC) தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களையும், பாஜக 77 இடங்களை வென்றுள்ளது.
  • முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியை இழந்தார். நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து ஆதிகரி 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார்.

4. Pinaryai Vijayan in Keralawon a historic second term in office

  • The Left Democratic Front led by Communist Party of India (Marxist) under the leadership of the incumbent Chief Minister of Kerala Pinaryai Vijayan in Kerala, won 99 seats of the total 140 seats. Congress-led United Democratic Front won 41 seats.
  • In Kerala, the Left alliance and the Congress alliance had alternately ruled in the last 40 years. That history has now been changed by the Left Alliance. The Left Democratic Front is to form the government for the second time.

 

4. கேரளத்தில் தொடா்ந்து இரண்டாவது முறையாக பினராயி விஜயன் ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்துள்ளார்

  • தற்போதைய முதல்வரான பினராயி விஜயன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட், தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி 99 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
  • கேரளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி ஆட்சியமைத்து வந்தன. அந்த வரலாற்றை இடதுசாரிகள் கூட்டணி தற்போது மாற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட், தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

5. The National Democratic Alliance won in the Puducherry Assembly elections,

  • The National Democratic Alliance is a coalition of All-India NR Congress (AINRC) and Bharatiya Janata Party (BJP).
  • The National Democratic Alliance won 16 seats in the 30 member Assembly of Puducherry, in which BJP won 6 seats.
  • The Union Territory of Puducherry is under President’s Rule after the collapse of the previous Government led by then CM V Narayansamy.

 

5. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றது

  • தேசிய ஜனநாயகக் கூட்டணி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் (AINRC) மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியாகும்.
  • புதுச்சேரியின் 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது, இதில் பாஜக 6 இடங்களை வென்றது.
  • முந்தைய முதல்வர் வி.நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து புதுச்சேரி யூனியன் பிரதேசம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளது.

 6. Congress candidate Vijay Vasanth won the Kanyakumari Lok Sabha constituency by-election

  • As the Kanyakumari Lok Sabha member Vasantha Kumar died of Corona in 2020, By-election for the Kanyakumari Lok Sabha constituency was held on 6 April along with the present Legislative Assembly general election.
  • In this by-election, Congress candidate Vijay Vasanth won by 1,34,374 votes over BJP candidate Pon Radhakrishnan.

By-election:

By-election is held to fill the vacant seat after the General election. By-election should be held within 6 months of the vacancy.

Reasons for by-election:

  1. Sudden death of MP/MLA.
  2. Resignation of MP/MLA.
  3. Criminal conviction of MP/MLA.
  4. Disqualification of member for holding office of profit under Centre or State Government.
  5. Campaigning for two seats by MP/MLA.

 

6. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்

  • கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமாா் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்ததைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு, தற்போதைய சட்டப்பேரவை பொதுத்தோ்தலுடன் சோ்த்து கடந்த 6 ஏப்ரல் அன்று இடைத்தோ்தல் நடைபெற்றது.
  • இந்த இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் விஜய் வசந்த், தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணனை விட 1,34,374 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

 இடைத்தேர்தல்:

பொதுத் தேர்தலுக்குப் பிறகு காலியாக உள்ள இடத்தை நிரப்ப இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடம் காலியான 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறவேண்டும்.

இடைத் தேர்தலுக்கான காரணங்கள்:

  1. எம்.பி/எம்.எல்.ஏ.வின் திடீர் மரணம்.
  2. எம்.பி/எம்.எல்.ஏ.வின் ராஜினாமா செய்தல்.
  3. எம்.பி/எம்.எல்.ஏ. கிரிமினல் வழக்கின் கீழ் குற்றம்சாட்டப்படுதல்.
  4. மத்திய அல்லது மாநில அரசின் கீழ் இலாபப் பதவி வகித்ததற்காக உறுப்பினரை தகுதிநீக்கம் செய்தல்.
  5. எம்.பி/எம்.எல்.ஏ.வின் இரண்டு இடங்களுக்கான பிரச்சாரம் செய்தல்.

 APPOINTMENTS


7. T. Rabi Shankar has been appointed as the Deputy Governor of the Reserve Bank of India (RBI)

  • Rabi Shankar has been appointed as the Deputy Governor of the Reserve Bank of India (RBI).
  • Since the Deputy Governor P. Kanungo retired on 2 April 2021, T. Rabi Shankar has been appointed as the new Deputy Governor. He was formerly the Director of the Reserve Bank of India.
  • Reserve Bank currently has one Governor and 4 Deputy Governors. The Appointments Committee of the Union Cabinet approved the appointment of Rabi Shankar. He will remain in the post for up to 3 years or until he retires.
  • RBI Governor: Shaktikanta Das

 

7. இந்திய ரிசா்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநராக டி.ரபிசங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்

  • இந்திய ரிசா்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநராக நிா்வாக இயக்குநா் டி.ரபிசங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • துணை ஆளுநராக இருந்த பி.பி.கனுங்கோ கடந்த 2 ஏப்ரல் 2021 அன்று ஓய்வு பெற்றதையடுத்து, புதிய ஆளுநராக டி.ரபிசங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவர் முன்னர் ரிசா்வ் வங்கியின் நிா்வாக இயக்குநராக இருந்தாா்.
  • ரிசா்வ் வங்கியில் தற்போது ஒரு ஆளுநரும் 4 துணை ஆளுநா்களும் உள்ளனா். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, ரபி சங்கரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியது. 3 ஆண்டுகள் வரை அல்லது பணி ஓய்வு பெறும் வரை அப்பதவியில் அவா் நீடிப்பாா்.
  • ரிசா்வ் வங்கி ஆளுனர்: சக்திகாந்தா தாஸ் 

8. Vijay Narayan resigns from the post of Advocate General of Tamil Nadu

  • Vijay Narayan resigned from the post of Advocate General of Tamil Nadu. Vijay Narayan was appointed in 2017 as the Advocate General of Tamil Nadu.
  • In general, Advocate General is appointed by the State Government to appear in cases involving the State Government. So, he will be replaced by the next Government.
  • Article 165 of the Indian Constitution deals with the Advocate General of the State.

 

8. தமிழக தலைமை வழக்கறிஞர் பதவியை விஜய் நாராயண் ராஜினாமா செய்தார்

  • விஜய் நாராயண் தமிழக தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். விஜய் நாராயண் 2017ஆம் ஆண்டில் தமிழக தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார்.
  • பொதுவாக, மாநில அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராக மாநில அரசால் தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார். எனவே, அவர் பெரும்பாலும் அடுத்த அரசாங்கத்தால் மாற்றப்படுவார்.
  • இந்தியஅரசியலமைப்பின்165வது விதி மாநில தலைமை வழக்கறிஞரைப் பற்றி குறிப்பிடுகிறது.

INTERNATIONAL


9. Indian Navy deploys seven ships to bring oxygen and medical equipment from various countries

  • Seven Indian Naval ships, including INS Kolkata – INS Kochi, INS Talwar, INS Tabar, INS Trikand, INS Jalashwa and INS Airavat, have been deployed for shipment of liquid medical oxygen-filled cryogenic containers and associated medical equipment from various countries as a part of operation ‘Samudra Setu 2’.
  • The first phase of Operation Samudra Setu was launched in 2020 by the Indian Navy. It included the successful repatriation of around 4000 Indian citizens stranded in neighbouring countries, amidst the COVID 19 outbreak.

 

9. இந்திய கடற்படை பல்வேறு நாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு வர ஏழு கப்பல்களை அனுப்பியுள்ளது

  • சமுத்திர சேது 2′ திட்டத்தின் ஒரு பகுதியாக, INS கொல்கத்தா, INS கொச்சி, INS தல்வார், INS தபார், INS திரிகண்ட், INS ஜலஷ்வா மற்றும் INS ஐராவத் உள்ளிட்ட ஏழு இந்திய கடற்படைக் கப்பல்கள் பல்வேறு நாடுகளிலிருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் கொள்கலன்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ உபகரணங்கள் கொண்டுவர அனுப்பப்பட்டுள்ளன.
  • சமுத்திர சேது திட்டத்தின் முதல் கட்டம் இந்திய கடற்படையால் 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் கோவிட்-19 நோய் பரவலுக்கு மத்தியில், அண்டை நாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 4000 இந்திய குடிமக்களை வெற்றிகரமாக இந்தியாவுக்கு அழைத்துவருதல் ஆகும்.

10. WHO approves ‘Moderna’ COVID-19 vaccine for emergency use

  • The World Health Organisation has given the approval for the emergency use of the mRNA vaccine Moderna’s COVID-19 vaccine.
  • Other vaccine producing company that received WHO’s emergency use are: AstraZeneca, Pfizer-BioNTech, Serum Institute of India and Johnson & Johnson.

 

10. அவசரகால பயன்பாட்டிற்காகமாடர்னாகோவிட் -19 தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது

  • எம்.ஆர்.என். தடுப்பூசியான மாடர்னாவின் கோவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் இணைந்த மற்ற தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள்: அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர்பயோஎன்டெக், சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா மற்றும் ஜான்சன் அன்ட் ஜான்சன். 

IMPORTANT DAYS


11. May Day or Labour Day – 1 May

  • May 1 is the International Labour Day dedicated to workers and labourers across the world. This day celebrates labourers and encourages them to be aware of their rights.
  • Labour Day originated in the labour union movement in the United States in the 19th May day was declared by the first International Congress of Socialist Parties in Europe on 14 July 1889 in which they demanded that the workers should not be made to work for more than 8 hours a day. May Day was first celebrated on May 1, 1890.
  • In India, the first Labour’s Day was celebrated in 1923 in Chennai. This day was first observed by the Labour Kisan Party of Hindustan. This day is also known as Kamgar Divas, Kamgar Din and Antrarashtriya Shramik Divas in India.

 

11. மே தினம் அல்லது தொழிலாளர் தினம் – 1 மே

  • 1 மே என்பது தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம் ஆகும். இந்த நாள் தொழிலாளர்களைக் கொண்டாடுகிறது மற்றும் அவர்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புடன் இருக்க ஊக்குவிக்கிறது.
  • தொழிலாளர் தினம் 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிலாளர் சங்க இயக்கத்தில் தோன்றியது. மே தினம் 14 ஜூலை 1889 அன்று ஐரோப்பாவில் சோஷியலிசக் கட்சிகளின் முதல் சர்வதேச காங்கிரசால் அறிவிக்கப்பட்டது, அதில் அவர்கள் தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வைக்கக்கூடாது என்று கோரினர். மே தினம் முதன்முதலில் 1 மே 1890 அன்று கொண்டாடப்பட்டது.
  • இந்தியாவில், முதல் தொழிலாளர் தினம் 1923இல் சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த நாளை ஹிந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சி முதன்முதலில் அனுசரித்தனர். இந்த நாள் இந்தியாவில் காம்கர் திவாஸ், காம்கர் தினம் மற்றும் அந்த்ரராஷ்ட்ரிய ஷ்ரமிக் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

12. World Laughter Day – 2 May

  • World Laughter Day is celebrated every year on the first Sunday of May to raise awareness about laughter and its many healing benefits. This year, the day falls on 2 May.
  • The World Laughter Day was first celebrated on 10 May 1998 in Mumbai, India.
  • The day was arranged by Madan Kataria, the founder of the worldwide Laughter Yoga movement.

 

12. உலக சிரிப்பு தினம் 2 மே

  • உலக சிரிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சிரிப்பு மற்றும் அதன் பல குணப்படுத்தும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்நாள் 2 மே அன்று வருகிறது.
  • உலக சிரிப்பு தினம் முதன்முதலில் 10 மே 1998 அன்று இந்தியாவின் மும்பையில் கொண்டாடப்பட்டது.
  • உலகளாவிய சிரிப்பு யோகா இயக்கத்தின் நிறுவனர் டாக்டர். மதன் கட்டாரியா இந்த நாளை ஏற்பாடு செய்தார்.

13. World Press Freedom Day – 3 May

  • Every year, 3 May is celebrated as the ‘World Press Freedom Day’. This day is celebrated to raise awareness on the rights of journalists and make the government realise the importance of freedom of expression. Press is considered as the ‘fourth pillar’ of the democracy.
  • United Nations General Assembly proclaimed 3 May as the ‘World Press Freedom Day’ in 1993.
  • The theme of the World Press Freedom Day 2021: ‘Information as a Public Good’

 

13. உலக பத்திரிகை சுதந்திர தினம் – 3 மே

  • ஒவ்வொரு ஆண்டும், மே 3 உலக பத்திரிகை சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அரசை உணரச் செய்யவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பத்திரிகை, ஜனநாயகத்தின்நான்காவது தூணாக கருதப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1993இல் 3 மே-ஐ ‘உலக பத்திரிகை சுதந்திர தினமாக’ அறிவித்தது.
  • உலக பத்திரிகை சுதந்திர தினம் 2021இன் கருப்பொருள்: ஒரு பொது உடைமையாக தகவல்

DAY IN HISTORY


14. Maharashtra Day and Gujarat Day- 1 May

  • Maharashtra Day and Gujarat Day is celebrated every year on 1 May.
  • In 1960, the state of Bombay was divided into two new states – Maharashtra and Gujarat. Marati-speaking people formed Maharashtra and Gujarati-speaking people formed Gujarat under the Bombay Reorganisation Act, 1960.
  • Thus, Gujarat emerged as the 15th State of India.

 

14. மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் தினம்– 1 மே

  • மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் தினம் ஒவ்வொரு ஆண்டும் 1 மே அன்று கொண்டாடப்படுகிறது.
  • 1960இல் பம்பாய் மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரண்டு புதிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு பம்பாய் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் மராத்திய மொழி பேசும் மக்கள் மகாராஷ்டிராவையும் மற்றும் குஜராத்தி மொழி பேசும் மக்கள் குஜராத்தையும் உருவாக்கினர்.
  • இவ்வாறாக, குஜராத் இந்தியாவின் 15வது மாநிலமாக உருவெடுத்தது.

15. All India Forward Bloc Party was started by Subash Chandra Bose on 3 May

  • Subash Chandra Bose resigned from the Presidentship of Congress in 1939 due to ideological difference with Gandhi and organised the All India Forward Bloc Party.
  • All India Forward Bloc Party was started as a faction within Bengal Congress. The aim of the party was to bring all radical elements of the Congress party under single party. The Bloc favoured linguistic and cultural autonomy for all sections of Indian society. It received a serious setback when Subhash Chandra Bose left India in 1940.

 

15. அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சுபாஷ் சந்திர போஸால் 3 மே அன்று தொடங்கப்பட்டது

  • சுபாஷ் சந்திர போஸ் காந்தியுடனான கருத்தியல் வேறுபாடு காரணமாக 1939இல் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை தொடங்கினார்.
  • அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி வங்காள காங்கிரசுக்குள் ஒரு பிரிவாக தொடங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து தீவிரவாத உறுப்பினர்களையும் ஒரு கட்சியின் கீழ் கொண்டு வருவதே இக்கட்சியின் நோக்கமாக இருந்தது. இந்திய சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் மொழி மற்றும் கலாச்சார சுயாட்சியை இந்த கட்சி ஆதரித்தது. சுபாஷ் சந்திர போஸ் 1940இல் இந்தியாவை விட்டு வெளியேறியபின், இக்கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்தது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 1, 2 & 3, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
1, 2 & 3rd May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021