TNPSC Current Affairs – English & Tamil – May 4, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(4th May, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 4, 2021


SCIENCE AND TECHNOLOGY


1. SpaceX’s Dragon Capsule returns four astronauts safely back to earth in nighttime splashdown

  • SpaceX’s Dragon capsule returned with four astronauts from the International Space Station. It splashed down safely in the Gulf of Mexico. The astronauts had spent 168 days in space.
  • The mission was part of NASA’s public-private partnership with SpaceX. This mission was SpaceX’s first operational round-trip mission. This was the first nighttime splashdown for NASA astronauts since Apollo 8, which was the first mission to orbit the moon in 1968.

SpaceX

  • SpaceX is a rocket company found in 2002 by Elon Musk.

 

1. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் பத்திரமாக பூமியில் இரவு தரையிறங்கியது

  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு திரும்பியது. அது மெக்சிகோ வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அந்த விண்வெளி வீரர்கள் விண்வெளியில் 168 நாட்களைக் கழித்தனர்.
  • ஸ்பேஸ்எக்ஸ் உடனான நாசாவின் பொதுதனியார் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இந்த திட்டம் இருந்தது. இந்த திட்டம் ஸ்பேஸ்எக்ஸ் இன் முதல் செயல்பாட்டு சுற்றுப்பயண திட்டமாகும். 1968ஆம் ஆண்டில் சந்திரனைச் சுற்றி வந்த முதல் விண்கலமான அப்பல்லோ 8க்குப் பிறகு நாசா விண்வெளி வீரர்களுக்கு இது முதல் இரவு நேர தரையிறக்கம் ஆகும்.

ஸ்பேஸ்எக்ஸ்

  • ஸ்பேஸ்எக்ஸ் என்பது 2002ஆம் ஆண்டில் இலான் மஸ்க் தொடங்கிய ஒரு ராக்கெட் நிறுவனம் ஆகும்.

TAMIL NADU


2. M K Stalin announces Journalists as the frontline workers

  • M K Stalin, soon to be the Chief Minister of Tamil Nadu, announced Journalists as the frontline workers to recognise their work amidst the COVID-19 pandemic on the World Press Freedom Day (3 May).
  • Many states, including Madhya Pradesh, Punjab, West Bengal, Bihar, Odisha, and Uttarakhand, have also announced Journalists as frontline workers.

 

2. பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக மு. .ஸ்டாலின் அறிவித்தார்

  • விரைவில் தமிழக முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று (3 மே) கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பணிபுரியும் பத்திரிகையாளர்களை அங்கீகரிக்க அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தார்.
  • மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளன.

NATIONAL


3. Union Finance Minister Nirmala Sitaraman inaugurates India’s first ever 3D printed house at IIT Madras

  • Union Finance Minister Nirmala Sitharaman virtually inaugurated India’s first 3-D Printed house which is situated within IIT Madras. It was constructed by Tvasta Manufacturing solutions’ indigenous 3-D printing technology.

3D printing technology

  • 3D printing technology is a ‘Ready-to-Implement Methodology’ with reduction in overall construction cost and time. It brings down the carbon footprint, increases the productivity of labour, and is eco-friendly.

 

3. சென்னை ஐஐடியில் இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட வீட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மெய்நிகராக திறந்து வைத்தார்

  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐஐடி மெட்ராஸுக்குள் அமைந்துள்ள இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட வீட்டை மெய்நிகராக திறந்து வைத்தார். இது ட்வஸ்டா உற்பத்தி தீர்வுகளின் உள்நாட்டு முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டது.

முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம்

  • முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் என்பது ஒட்டுமொத்த கட்டுமான செலவு மற்றும் நேரத்தை குறைக்கும் ஒரு ஆயத்த செயல்முறை ஆகும். இது கார்பன் தடத்தை கீழே கொண்டு வருகிறது, தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது, மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது.

4. President appoints Justice Prafulla Chandra Pant as the Acting Chairperson of National Human Rights Commission

  • The President of India, Ram Nath Kovind, has appointed Justice Prafulla Chandra Pant as the acting Chairperson of the National Human Rights Commission. Justice Prafulla Chandra Pant was earlier one of the members of the National Human Rights Commission.

National Human Rights Commission (NHRC):

  • NHRC is a statutory body established on 12 October 1993 under the Protection of Human Rights Act, 1993.

Composition:

  • Chairperson: Retired Chief Justice of India or a Judge of the Supreme Court.
  • Chairperson and the members are appointed by the President on the recommendations of a six-member committee.

The select committee consists of

1. Prime Minister (Head)

2. Speaker of the Lok Sabha

3. Deputy Chairman of the Rajya Sabha

4. Leaders of the Opposition in both the Houses of Parliament

5. Union Home Minister.

 

4. குடியரசுத் தலைவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீதிபதி பிரபுல்லா சந்திர பந்த்தை நியமித்துள்ளார்

  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீதிபதி பிரபுல்லா சந்திர பந்த்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். நீதிபதி பிரபுல்லா சந்திர பந்த் முன்னதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC):

  • தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993இன் கீழ் 12 அக்டோபர் 1993 அன்று நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.

அமைப்பு:

  • தலைவர்: ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி.
  • ஆறு பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் பேரில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.

தேர்வுக் குழுவில் அடங்கியோர்:

1. பிரதம மந்திரி (தலைவர்)

2. மக்களவை சபாநாயகர்

3. மாநிலங்களவை துணைத் தலைவர்

4. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள்

5. மத்திய உள்துறை அமைச்சர்.


INTERNATIONAL


5. Indian Prime Minister Narendra Modi participates in virtual Summit with British Prime Minister Boris Johnson

  • Indian Prime Minister Narendra Modi participated in a virtual Summit with British Prime Minister Boris Johnson.
  • ‘A comprehensive Roadmap 2030’ will be launched during the Summit. It will pave the way for further expanding and deepening the cooperation of India and UK over the next decade across five key areaspeople-to-people relationship, trade and prosperity, defence and security, climate action and healthcare.
  • India and UK have Strategic Partnership since 2004.

 

5. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மெய்நிகர் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மெய்நிகர் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
  • இந்த மாநாட்டில், விரிவான செயல் திட்டம் 2030′ தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் அடுத்த பத்து ஆண்டுகளில் முக்கியத்துவம் வாய்ந்த 5 துறைகளில்வா்த்தகம் மற்றும் முன்னேற்றம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் சுகாதரம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும்.
  • இந்தியாவும் இங்கிலாந்தும் 2004 முதல் மூலோபாய கூட்டாண்மையை கொண்டுள்ளன.

IMPORTANT DAYS


6. International Fire Fighters Day – 4 May

  • International Fire Fighters Day was instituted after the death of five firefighters in the bushfires in Australia in 1998.
  • International Fire fighters’ Day (IFFD) is observed annually on 4 May to honour the work of firefighters, who dedicate their lives to the protection of people and property.
  • The red and blue ribbon is one of the most significant symbols of International Firefighters’ Day.

 

6. சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் – 4 மே

  • 1998இல் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் ஐந்து தீயணைப்பு வீரர்கள் இறந்த பின்னர், சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் நிறுவப்பட்டது.
  • சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் (IFFD) ஆண்டுதோறும் மே 4 அன்று மக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தீயணைப்பு வீரர்களின் பணியை கௌரவிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • சிவப்பு மற்றும் நீல ரிப்பன் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தின் மிக முக்கியமான சின்னங்களில் ஒன்றாகும்.

7. Coal Miners Day – 4 May

  • Coal Miners Day is observed annually on 4 May to recognise the hard work of coal miners and to respect their achievements.
  • The importance of coal miners increased with the industrial revolution. Coal is a natural resource that accelerates both economic and social development.
  • In India, coal mining began in 1774 when John Summer and Suetonius Grant Heatley of the East India Company started commercial exploration at Raniganj Coalfield along the western bank of the Damodar River. The demand for coal has increased since the introduction of steam engines by railways in 1853.

 

7. நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தினம் – 4 மே

  • நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பதற்கும் அவர்களின் சாதனைகளை மதிப்பதற்கும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தினம் ஆண்டுதோறும் மே 4 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • தொழிற்புரட்சியால் நிலக்கரிசுரங்கத் தொழிலாளர்களின் முக்கியத்துவம் அதிகரித்தது. நிலக்கரி என்பது பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு இயற்கை வளமாகும்.
  • இந்தியாவில், 1774ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் ஜான் சம்மர் மற்றும் சூடோனியஸ் கிராண்ட் ஹீட்லி ஆகியோர் தாமோதர் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள ராணிகஞ்ச் நிலக்கரிபடுகையில் வணிக ஆய்வுசெய்யத் தொடங்கியபோது நிலக்கரி சுரங்கம் தோண்டுதல் தொடங்கியது. 1853ஆம் ஆண்டு இரயில்வே நீராவி என்ஜின்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நிலக்கரியின் தேவை அதிகரித்துள்ளது.

8. World Asthma Day – 4 May

  • World Asthma Day is observed annually on the first Tuesday of May This year the day falls on 4 May.
  • It is an annual event organised by the Global Initiative for Asthma (GINA). It aims to raise awareness of Asthma worldwide. The first World Asthma Day was celebrated in 1998, with the first World Asthma Meeting held in Barcelona, Spain.
  • The theme of World Asthma Day 2021: “Uncovering Asthma Misconceptions”

Asthma:

  • Asthma is a chronic respiratory disease that causes difficulty in breathing. It cannot be cured, but can be controlled by treatment.

 

8. சர்வதேச ஆஸ்துமா தினம் – 4 மே

  • சர்வதேச ஆஸ்துமா தினம் ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்நாள் 4 மே அன்று வருகிறது.
  • இது குளோபல் இனிஷியேடிவ் ஃபார் ஆஸ்துமா (GINA) ஏற்பாடு செய்த வருடாந்திர நிகழ்வாகும். இது உலகெங்கிலும் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் சர்வதேச ஆஸ்துமா தினம் 1998இல் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற முதல் உலக ஆஸ்துமா கூட்டத்துடன் கொண்டாடப்பட்டது.
  • உலக ஆஸ்துமா தினம் 2021இன் கருப்பொருள்: ஆஸ்துமா பற்றிய தவறான கருத்துகளை வெளிக்கொணர்தல்

ஆஸ்துமா:

  • ஆஸ்துமா சுவாசித்தலில் சிரமத்தை ஏற்படுத்தும் நெடிய சுவாச நோயாகும், அதை குணப்படுத்த முடியாது, சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடியும்.

SPORTS


9. Mark Selby becomes the World Champion for the fourth time in Snooker

  • Mark Selby became the World Snooker Champion for the fourth time. Mark Selby won the Championship by defeating Shaun Murphy.
  • Mark Selby ranks second in the world rankings for snooker, while Judd Trump holds the first spot.

The World Snooker Championship

  • The World Snooker Championship is the most prestigious professional snooker tournament. It was first held in 1927. It is one of the three tournaments that make up snooker’s Triple Crown Series.

 

9. மேடைக்கோற்பந்தாட்டத்தில் (ஸ்னூக்கர்) நான்காவது முறையாக மார்க் செல்பி உலக சாம்பியன் ஆனார்

  • மார்க் செல்பி நான்காவது முறையாக உலக ஸ்னூக்கர் சாம்பியன் ஆனார். ஷான் மர்பியை தோற்கடித்து மார்க் செல்பி இந்த பட்டத்தை வென்றார்.
  • ஸ்னூக்கர் உலக தரவரிசையில் மார்க் செல்பி இரண்டாவது இடத்திலும், ஜட் டிரம்ப் முதல் இடத்திலும் உள்ளனர்.

உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்

  • உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் மிகவும் மதிப்புமிக்க தொழில்முறை ஸ்னூக்கர் போட்டியாகும். இது முதன்முதலில் 1927இல் நடைபெற்றது. இது ஸ்னூக்கரின் டிரிபிள் கிரவுன் தொடரின் மூன்று போட்டிகளில் ஒன்றாகும்.

10. New Zealand replaces England as the top ranked ODI team in ICC rankings

  • In ICC rankings, New Zealand have replaced the current World champions England as the 1 One-day International team.
  • England continues to be in top position in the T-20 International.

 

10. ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஒருநாள் அணியாக இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது நியூசிலாந்து

  • ஐசிசி தரவரிசையில், நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி, நம்பர் 1 ஒரு நாள் சர்வதேச அணியாக நியூசிலாந்து மாறியுள்ளது.
  • சர்வதேச டி-20 போட்டியில் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

11. BCCI suspends IPL 2021 as some of the players including coach tested positive for Corona

  • BCCI suspended IPL 2021 as some of the players including coach within the Bio-bubble were tested positive for Corona.

Bio-bubble

  • A bio-bubble is a safe environment that is isolated from the outside world to minimise the risk of COVID-19 infection. It allows only the authorised sports persons, staff and match officials to enter the protected area after testing negative for COVID-19.

 

11. பயிற்சியாளர் உள்ளிட்ட சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பிசிசிஐ ஐபிஎல் 2021 இடைநீக்கம் செய்தது

  • பயோ பபுளுல்லுள் இருந்த பயிற்சியாளர் உள்ளிட்ட சில வீரர்கள் கொரோனாவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பிசிசிஐ ஐபிஎல் 2021 இடைநீக்கம் செய்தது.

பயோ பபுள் (உயிர் குமிழி)

  • பயோ பபுள் என்பது கோவிட்-19 தொற்று அபாயத்தைக் குறைக்க வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பாதுகாப்பான சூழல் ஆகும். கோவிட்-19-க்கு சோதனை செய்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய இது அனுமதிக்கிறது.

12. Thisara Perera announces retirement from International Cricket

  • Former Sri Lankan all-rounder Thisara Perera announced his retirement from International Cricket. He played 166 ODI and 84 T20. He scored 2338 runs and took 175 wickets in ODI. In the T20 innings, he scored 1204 runs and took 51 wickets.

 

12. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திசாரா பெரேரா அறிவித்தார்

  • இலங்கை அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 166 ஒருநாள் மற்றும் 84 டி20இல் விளையாடினார். அவர் ஒருநாள் போட்டியில் 2338 ரன்கள் எடுத்து, 175 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 இன்னிங்ஸில் 1204 ரன்கள் எடுத்து, 51 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 4, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
4th May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021