TNPSC Current Affairs – English & Tamil – May 26, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(26th May, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 26, 2021


NATIONAL


  1. Mohali international hockey stadium renamed as Balbir Singh stadium
  • Mohali international hockey stadium is renamed as Balbir Singh stadium on his first year death anniversary (May 25). The stadium now will be known as Olympian Balbir Singh Senior International Hockey Stadium
  • Balbir Singh Senior’s holds the world record for most goals scored by an individual in the men’s hockey final of the Olympics. He had scored five goals in India’s 6-1 victory over the Netherlands in the gold medal match of the 1952 Helsinki Games.
  • He is the first sportsperson to receive the Padma Shri award.
  • Balbir Singh Senior’s autobiography: Golden Hat Trick

Balbir Singh Senior holds three Olympic gold medals:

  1. London (1948)
  2. Helsinki (1952) as Vice-Captain
  3. Melbourne (1956) as captain.

 

  1. மொஹாலி சர்வதேச ஹாக்கி மைதானம் பல்பீர் சிங் மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
  • மொஹாலி சர்வதேச ஹாக்கி மைதானம் அவரது முதல் ஆண்டு நினைவு தினத்தன்று (25 மே) பல்பீர் சிங் மைதானமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானம் இப்போது ஒலிம்பியன் பல்பீர் சிங் சீனியர் சர்வதேச ஹாக்கி மைதானம் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும்.
  • ஒலிம்பிக்கின் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த தனிநபர் என்னும் உலக சாதனையைப் பல்பீர் சிங் சீனியர் படைத்துள்ளார். 1952 ஹெல்சின்கி விளையாட்டுப் போட்டிகளில் நெதர்லாந்திற்கு எதிரான இந்தியாவின் 6-1 என்ற கோல் கணக்கில் அவர் ஐந்து கோல்களை அடித்திருந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் இவர் ஆவார்.
  • பல்பீர் சிங் சீனியரின் சுயசரிதை: கோல்டன் ஹாட் ட்ரிக்

பல்பீர் சிங் சீனியர் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்றிருக்கிறார்:

  1. லண்டன் (1948)
  2. ஹெல்சின்கி (1952) – துணை கேப்டனாக
  3. மெல்போர்ன் (1956) – கேப்டனாக.

  1. The Government of India is ready to implement hallmarking of gold from 1 June 2021
  • The Government of India is ready to implement hallmarking of gold from 1 June 2021.

Gold Hallmarking

  • Gold Hallmarking is a purity certification started in 2000. It was earlier voluntary. The Government of India had made hallmarking of gold jewellery and artefacts mandatory in 2019 and also gave more than one year time period for the jewellers to comply with the rules.
  • Hallmarked gold will be available only in three carats– 14 carat, 18 carat and 24 carat. The jewellers should register in Bureau of Indian Standards. This registration is mandatory for the sellers and not for consumers. However, the consumers who wanted to hallmark their gold can register under BIS.

 

  1. தங்கத்தில் ஹால்மார்க் முத்திரையை 1 ஜூன் 2021 முதல் செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது
  • தங்கத்தின் ஹால்மார்க் முத்திரையை 1 ஜூன் 2021 முதல் அமல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை

  • தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை என்பது 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தூய்மை சான்றிதழ் ஆகும். இந்த முத்திரை முன்பு தன்னார்வமாக உபயோகப்படுத்துவதாக இருந்தது. இந்திய அரசு 2019ஆம் ஆண்டில் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களில் ஹால்மார்க்கை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், இந்த விதிகளுக்கு இணங்க நகைக் கடைக்காரர்களுக்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான கால அவகாசத்தையும் வழங்கியது.
  • ஹால்மார்க் தங்கம் – 14 காரட், 18 காரட் மற்றும் 24 காரட் ஆகிய மூன்று தூய்மை நிலைகளில் மட்டுமே கிடைக்கும். நகைக் கடைக்காரர்கள் இந்திய தரநிர்ணயப் நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு விற்பனையாளர்களுக்கு கட்டாயமாகும், நுகர்வோருக்கு அல்ல. இருப்பினும், தங்கள் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை பெற விரும்பும் நுகர்வோர் பிஐஎஸ் கீழ் பதிவு செய்யலாம்.

  1. Department of atomic energy to build India’s first reactor on PPP model
  • The Department of Atomic Energy (DAE) announced that it will be constructing the country’s first research reactor on the public-private partnership (PPP) model,
  • The research reactor will be designed by Bhabha Atomic Research Centre (BARC).

 

  1. இந்திய அணுசக்திதுறை இந்தியாவின் முதல் அணு உலையை பொது-தனியார் கூட்டாண்மையில்(PPP) உருவாக்க முடிவு செய்துள்ளது
  • இந்திய அணுசக்தித் துறை (DAE) பொது-தனியார் கூட்டாண்மையில் நாட்டின் முதல் ஆராய்ச்சி உலையை (PPP) கட்டப்போவதாக அறிவித்தது.
  • இந்த ஆராய்ச்சி உலையை பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) வடிவமைக்கும்.

  1. India to launch mobile tech platform ‘UNITE AWARE’ for UN peacekeepers
  • India, in partnership with the UN Department of Peacekeeping Operations and the Department of Operational Support, has been working towards developing a mobile tech platform, ‘UNITE AWARE’.
  • It helps to increase situational awareness and provides terrain-related information to peacekeepers, Blue Helmets in the line of duty.
  • India is one of the largest troops contributing countries to UN peacekeeping missions and has contributed more than 250,000 troops in 49 missions over the years.
  1. ஐ.நா. அமைதிகாக்கும் படையினருக்கு மொபைல் தொழில்நுட்ப தளமான ‘யுனைட் அவேர்’ (UNITE AWARE) இந்தியா அறிமுகப்படுத்துகிறது
  • ஐ.நா. அமைதிகாக்கும் செயல்பாடுகள் துறை மற்றும் செயல்பாட்டு ஆதரவுத் துறையுடன் இணைந்து இந்தியா, ‘யுனைட் அவேர்’ (UNITE AWARE) என்ற மொபைல் தொழில்நுட்ப தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • இது சூழ்நிலை விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கடமையில் இருக்கும் ப்ளூ ஹெல்மெட்டுகள் என அழைக்கப்படும் அமைதிகாக்கும் படையினருக்கு நிலப்பரப்பு தொடர்பான தகவல்களை வழங்குகிறது.
  • ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்கு படைகள் பங்களிப்பு செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், மேலும் பல ஆண்டுகளாக 49 பணிகளில் 250,000க்கும் மேற்பட்ட படைகளை பங்களித்துள்ளது.

SCIENCE AND TECHNOLOGY


  1. The two celestial events, the Total lunar eclipse and Supermoon coincides on May 26
  • The two celestial events, total lunar eclipse and supermoon coincided on May 26.

Lunar eclipse

  • Lunar eclipse happens on the full moon night when the Sun, Moon and Earth comes in the same line with earth between the Sun and the Moon.
  • Total lunar eclipse happens when the moon is in the umbra position (so that the shadow of earth is casted totally on the moon and it is completely invisible from earth).
  • Partial lunar eclipse happens when the moon is in the penumbra position so that the shadow of earth is partial casted on the earth and it is partially invisible from earth.

Super moon

  • Super moon appears on a full moon or a new moon day when the distance between the Sun and the Earth is at the least. Therefore, the moon appears to be bigger. So, Supermoon is not possible on every eclipse. Super moon if appears in red colour due to rayleigh’s scattering, it is known as Super blood moon.

Micro Moon:

  • Micro moon is the position when the earth is at the farthest distance from the Sun during the lunar eclipse. Therefore, the moon appears to be smaller.

Wolf Moon:

  • The first full moon of the year (January) is known as the wolf moon.

Blue Moon:

  • If two full moons come in the same calendar month (rare event), then the second full moon is known as the Blue moon.

Black moon:

  • If two new moons come in the same calendar month, then the second new moon is known as the Black moon.

 

  1. முழு சந்திர கிரகணம் மற்றும் சூப்பர்மூன் ஆகிய இரண்டு விண்ணுலக நிகழ்வுகள் 26 மே அன்று ஒன்றாக நிகழ்கின்றன
  • இரண்டு விண்ணுலக நிகழ்வுகள், முழு சந்திர கிரகணம் மற்றும் சூப்பர்மூன் 26 மே அன்று ஒன்றாக நிகழ்ந்தன.

சந்திர கிரகணம்

  • சந்திர கிரகணம், பௌர்ணமி இரவில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி, ஒரே வரிசையில் வரும்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது நிகழ்கிறது.
  • முழு சந்திர கிரகணம் சந்திரன் அம்ப்ரா நிலையில் இருக்கும்போது நிகழ்கிறது, இதனால் பூமியின் நிழல் மொத்தமாக சந்திரனின் மேல் படுகிறது, அதனால் பூமியில் இருந்து சந்திரன் முற்றிலும் கண்ணுக்கு தெரியாது.
  • பகுதி சந்திர கிரகணம், சந்திரன் பெனம்ப்ரா நிலையில் இருக்கும்போது நிகழ்கிறது, இதனால் பூமியின் நிழலின் பகுதி மட்டுமே சந்திரன் மேல் படுகிறது, அதனால் பூமியில் இருந்து சந்திரன் பகுதியளவு கண்ணுக்கு தெரியாது.

சூப்பர் மூன்

  • சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் குறைந்தபட்சம் இருக்கும் பௌர்ணமி அல்லது அமாவாசை நாளில் சூப்பர் மூன் தோன்றுகிறது. இதனால் சந்திரன் மிகப்பெரியதாக தோன்றும். எனவே, ஒவ்வொரு கிரகணத்திலும் சூப்பர்மூன் தோன்றுவது சாத்தியமில்லை. ரேலீயின் சிதறல் காரணமாக சூப்பர் மூன் சிவப்பு நிறத்தில் தோன்றினால், அது சூப்பர் இரத்த நிலவு என்று அழைக்கப்படுகிறது.

மைக்ரோ மூன்:

  • சந்திர கிரகணத்தின்போது சூரியனிலிருந்து வெகு தொலைவில் பூமி இருக்கும் போது, அது மைக்ரோ மூன் எனப்படும். இதனால் சந்திரன் மிகச்சிறியதாக தோன்றும்.

ஓநாய் நிலவு:

  • ஆண்டின் முதல் பௌர்ணமி (ஜனவரி) ஓநாய் நிலவு என்று அழைக்கப்படுகிறது.

நீல நிலவு:

  • ஒரே காலண்டர் மாதத்தில் (அரிதான நிகழ்வு) இரண்டு முழு நிலவுகள் வந்தால், இரண்டாவது முழு நிலவு நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு நிலவு:

  • ஒரே காலண்டர் மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்தால், இரண்டாவது அமாவாசை கருப்பு நிலவு என்று அழைக்கப்படுகிறது.

  1. RDIF and Panacea Biotec announce the launch of production of Sputnik V in India
  • The Russian Direct Investment Fund, RDIF and Indian Biotechnology company Panacea Biotec have announced the launch of production of the Russian COVID vaccine Sputnik V in India. This move will boost the production of vaccines and help in facilitating the supply of Sputnik-V by 100 million doses of Sputnik V per year.
  • Sputnik V has been granted the emergency use authorisation by the Drugs Controller General of India.

 

  1. இந்தியாவில் ஸ்புட்னிக் V உற்பத்தி தொடங்க இருப்பதாக ஆர்டிஐஎஃப் மற்றும் பனாகியா பயோடெக் அறிவிப்பு
  • ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம், ஆர்டிஐஎஃப் மற்றும் இந்திய பயோடெக்னாலஜி நிறுவனமான பனாகியா பயோடெக் ஆகியவை ரஷ்ய கோவிட் தடுப்பூசி ஸ்புட்னிக் Vஇன் உற்பத்தியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த நடவடிக்கை தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் ஸ்புட்னிக்-V விநியோகத்தை ஆண்டுக்கு 100 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் V வழங்க உதவும்.
  • ஸ்புட்னிக் V க்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

AWARDS AND RECOGNITIONS


  1. Dr. D. Nageshwar Reddy becomes first Indian to win Rudolf Schindler Award
  • AIG Hospitals Chairman Dr Nageshwar Reddy became the first Indian to receive Rudolf Schindler Award.

Rudolf Schindler Award

  • Rudolf Schindler Award is named after Dr Schindler, who is considered the father of gastroscopy. This is the highest honour from the American Society of Gastrointestinal Endoscopy.

 

  1. ருடால்ப் ஷிண்ட்லர் விருதை வென்ற முதல் இந்தியரானார் டாக்டர் டி.நாகேஷ்வர் ரெட்டி
  • ஏஐஜி மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி ருடால்ஃப் ஷிண்ட்லர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் ஆனார்.

ருடால்ஃப் ஷிண்ட்லர் விருது

  • ருடால்ஃப் ஷிண்ட்லர் விருது இரைப்பையியலின் தந்தையாகக் கருதப்படும் டாக்டர் ஷிண்ட்லரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் காஸ்ட்ரோயின்டெஸ்டினல் எண்டோஸ்கோபியின் மிக உயர்ந்த கௌரவம் ஆகும்.

APPOINTMENTS


  1. Subodh Kumar Jaiswal takes charge as the Director of CBI
  • Subodh Kumar Jaiswal took charge as the Director of the Central Bureau of Investigation (CBI).
  • He has been appointed as Director for a period of two years. He is a 1985 batch IPS officer of the Maharashtra cadre. He worked as director-general of the Central Industrial Security Force (CISF).

Central Bureau of Investigation:

  • The CBI was set up in 1963 by a resolution of the Ministry of Home Affairs. It was later transferred to the Ministry of Personnel, Public Grievances and Pensions.
  • CBI was established by the Santhanam Committee CBI is not a statutory body, it derives its powers from the Delhi Special Police Establishment Act, 1946. The Director of CBI has been provided security of two-year tenure in office by the CVC (Central Vigilance Commission) Act, 2003. It is also the nodal police agency in India that coordinates investigation on behalf of Interpol Member countries.
  • The select committee of CBI consists of the Prime Minister as Chairperson, the Leader of Opposition in the Lok Sabha and the Chief Justice of India or Judge of the Supreme Court nominated by him. Later, the Delhi Special Police Establishment (Amendment) Act, 2014 made a change in the composition of the committee related to the appointment of the Director of CBI, which stated if the Leader of Opposition is absent, the leader of the largest party is included in the select committee.
  1. சி.பி.ஐ., இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பொறுப்பேற்கிறார்
  • சுபோத் குமார் ஜெய்ஸ்வால் மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநராக (சிபிஐ) பொறுப்பேற்றார்.
  • அவர் இரண்டு ஆண்டுகளுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மகாராஷ்டிரா பிரிவின் 1985 தொகுதி ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) தலைமை இயக்குநராக பணியாற்றினார்.

மத்திய புலனாய்வு அமைப்பு:

  • சி.பி.ஐ. 1963இல் உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் மூலம் அமைக்கப்பட்டது. பின்னர் இது பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.
  • சந்தானம் ஆணையத்தின் பரிந்துரையால் சி.பி.ஐ நிறுவப்பட்டது. சி.பி.ஐ ஒரு சட்டபூர்வமான அமைப்பு அல்ல, அது தனது அதிகாரங்களை தில்லி சிறப்பு போலீஸ் நிறுவன சட்டம், 1946இல் இருந்து பெறுகிறது.
  • சி.வி.சி (மத்திய கண்காணிப்பு ஆணையம்) சட்டம், 2003 மூலம் சி.பி.ஐ இயக்குநருக்கு இரண்டு ஆண்டு பதவிக்கால பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இன்டர்போல் (Interpol) உறுப்பு நாடுகளின் சார்பாக இந்தியாவில் விசாரணையை ஒருங்கிணைக்கும் போலீஸ் முகமையாகும்.
  • சி.பி.ஐ தேர்வுக் குழுவில் பிரதம மந்திரி தலைவராகவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆகியோர் உள்ளனர்.  பின்னர், தில்லி சிறப்பு போலீஸ் நிறுவன (திருத்தம்) சட்டம், 2014 சி.பி.ஐ இயக்குநரின் நியமனம் தொடர்பான குழுவின் அமைப்பில் ஒரு மாற்றத்தை செய்தது, அதில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லையென்றால், மிகப்பெரிய கட்சியின் தலைவர் தேர்வுக் குழுவில் சேர்க்கப்படுகிறார் என்று கூறியது.

IMPORTANT DAYS


  1. Buddha Purnima – May 26
  • Buddha Purnima or Vesak marks three important days in the life of Buddha.
  • They are:
  1. Buddha’s birth
  2. Nirvana (enlightenment)
  3. Mahaparinirvana (death)

Buddhism:

  • Buddhism was found by Siddhartha, known as Gauthama Buddha, in 6 BC. The Buddhist texts were compiled in Pali.

 

  1. பெளத்த பூர்ணிமா – மே 26
  • பெளத்த பூர்ணிமா அல்லது வெசாக் என்பது புத்தரின் வாழ்க்கையில் மூன்று முக்கிய நாட்களைக் குறிக்கிறது.
  • அவை:
  1. புத்தரின் பிறப்பு
  2. நிர்வாணாம் (ஞானம்)
  3. மகாபரிநிர்வாணாம் (மரணம்)

பெளத்த மதம்:

  • பெளத்த மதம் கி.மு 6இல் கௌதம புத்தர் என்று அழைக்கப்படும் சித்தார்த்தரால் தொடங்கப்பட்டது. பெளத்த நூல்கள் பாலி மொழியில் தொகுக்கப்பட்டன

DAY IN HISTORY


  1. Mirza Ghulam Ahmad’s death anniversary – 26 May
  • Mirza Ghulam Ahmad death anniversary is observed on 26 May every year.
  • Mirza Ghulam Ahmad was an Indian religious leader and the founder of Ahmadiyya/Quadiyani Movement. He died on 26 May 1908.
  • Ahmadiyya/Quadiyani Movement is a revivalistic movement of Islam.

 

  1. மிர்ஸா குலாம் அகமதுவின் நினைவு நாள் – 26 மே
  • மிர்சா குலாம் அகமதுவின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் 26 மே அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • மிர்ஸா குலாம் அகமது ஒரு இந்திய மதத் தலைவர் மற்றும் அஹமதியா/ குவாதியானி இயக்கத்தின் நிறுவனர் ஆவார். அவர் 26 மே 1908 அன்று இறந்தார்.
  • அஹ்மதியா/குவாதியானி இயக்கம் என்பது இஸ்லாமின் மறுமலர்ச்சி இயக்கம் ஆகும்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 26, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
26th May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021