TNPSC Current Affairs – English & Tamil – March 2, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(2nd March, 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.



Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 2, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. The Opportunity Index 2021
  • According to the ‘The Opportunity Index 2021’ report by LinkedIn,  85%, or four in five working women in India, believe they have missed out on a raise, promotion, or work offer because of their gender.
  • The survey highlighting the difference in perception of available opportunities in the market for men and women was conducted in January.
  • While 37% of India’s working women said they get fewer opportunities than men, only 25% of men agree with this. This disparity in perception is also seen in conversations about equal pay, as more women (37%) say they get less pay than men, while only 21% of men agree with this statement.
  • The report also said that 66% of the people in India feel that gender equality has improved compared to their parent’s age.
  • Global Gender Gap Index 2020: In the Global Gender Gap Index 2020, the number of countries increased to 153 in which India’s ranking was 112. India’s score has moved from 0.665 in 2018 to 0.668 in 2020.
  • In Indian constitution, Articles such as Article 14, Article 15 (3), Article 39A, and Article 42 make special provisions for rights of women to ensure gender equality and many initiatives and schemes are taken by Government of India to ensure that women gain equal rights, opportunities and access to resources
  1. வேலைவாய்ப்புக் குறியீடு 2021
  • லிங்க்ட்இனின் ‘தி ஆப்பர்சுனிட்டி இன்டெக்ஸ் 2021’ அறிக்கையின்படி, இந்தியாவில் பணிபுரியும் ஐந்து பெண்களில் நான்கு பேர் அல்லது 85% பெண்கள், தங்கள் பாலினம் காரணமாக சம்பள உயர்வு, பதவி உயர்வு அல்லது வேலை வாய்ப்பை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளைப் புரிந்துகொள்வதில் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டும் இந்த ஆய்வு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.
  • இந்தியாவின் வேலை செய்யும் பெண்களில் 37% ஆண்களை விட குறைவான வாய்ப்புகள் கிடைப்பதாகக் கூறினாலும், 25% ஆண்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்கிறார்கள். சமமான ஊதியம் பற்றிய உரையாடல்களிலும் இந்த ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது, ஏனெனில் அதிகமான பெண்கள் (37%) ஆண்களை விட குறைந்த ஊதியம் பெறுவதாகக் கூறுகிறார்கள், அதே நேரத்தில் 21% ஆண்கள் மட்டுமே இந்த அறிக்கையுடன் உடன்படுகிறார்கள்.
  • இந்தியாவில் 66% மக்கள் தங்கள் பெற்றோரின் வயதை ஒப்பிடும்போது பாலின சமத்துவம் மேம்பட்டுள்ளதாக உணர்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2020: உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2020-ல், 153 நாடுகளில் இந்தியாவின் தரவரிசை 112 ஆக இருந்தது. இந்தியாவின் மதிப்பெண்665(2018)லிருந்து 2020-ல் 0.668 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்திய அரசியலமைப்பில், பிரிவு 14, பிரிவு 15 (3), பிரிவு 39 ஏ, மற்றும் பிரிவு 42 போன்றவை பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த பெண்களின் உரிமைகளுக்காக சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. மேலும் பெண்கள் சம உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக பல முயற்சிகள் மற்றும் திட்டங்கள் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

  1. Russia launched its space satellite Arktika-M
  • Russia launched the first in a new series of weather satellites to aid forecasting over its high-latitude regions. The Arktika-M No.1 satellite, lifted off from the Baikonur Cosmodrome on 28 February, bound for an elliptical Molniya orbit.
  • The Arktika-Mfocuses on meteorology, with its satellites carrying multi-spectral imaging payloads to help gather data for forecasting.
  • The satellite will also be able to retransmit distress signals from ships, aircraft or people in remote areas as part of the international Cospas-Sarsat satellite-based search and rescue programme.
  • International Cospas-Sarsat Programme is a treaty-based, nonprofit, intergovernmental, humanitarian cooperative of 45 nations and agencies, which is dedicated to detecting and locating radio beacons activated by persons, aircraft or vessels in distress, and forwarding this alert information to authorities that can take action for rescue.
  1. ரஷ்யா ஆர்க்டிகா-M என்ற விண்வெளி செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது.
  • ரஷ்யா அதன் உயர் அட்சரேகை பிராந்தியங்களில் தரவுகளைக் கணிக்க ஒரு புதிய தொடர் வானிலை செயற்கைக்கோள்களில் முதல் செயற்கோளை விண்ணில் செலுத்தியது.
  • ஆர்க்டிகா-எம் எண்.1 செயற்கைக்கோள், பைகோனூர் காஸ்மோட்ரோமிலிருந்து பிப்ரவரி 28 அன்று, நீள்வட்ட மோல்னியா சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.
  • ஆர்க்டிகா-எம் வானிலையியல் மீது கவனம் செலுத்துகிறது, அதன் செயற்கைக்கோள்கள் மல்டி ஸ்பெக்டரல் இமேஜிங் பேலோடுகளைக் கொண்டு, வானியல் கணிப்பு தரவுகளை சேகரிக்க உதவுகின்றன.
  • சர்வதேச கோஸ்பேஸ்- சர்சாட்(Cospas-Sarsat) திட்டத்தின் செயற்கைக்கோள் சார்ந்த தேடல் மற்றும் மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த செயற்கைக்கோள் கப்பல்கள், விமானம் அல்லது தொலைதூர பகுதிகளில் வழிதவறிய மக்களிடமிருந்து சமிக்ஞைகளை கண்டுக்கொள்ள முடியும்.

  1. Amynthas alexandri, an exotic earthworm, has been collected and reported for the first time from Karnataka.
  • Amynthas alexandri of the Megascolecidae family, an exotic and highly invasive earthworm, has been collected and reported for the first time from Karnataka. Its original home is believed to be Southeast Asia.
  • According to a study published in the January, issue of the Canadian journal ‘Megadrilogica’, an international scientific journal devoted to publishing earthworm studies from across the world, the same earthworm was recorded in 15 States/Union Territories in In
  • This type of specimen observed for the first time in India by Beddard in 1901 had its origin in Kolkata and their distribution in Asia earlier was in China, Myanmar, Pakistan, Thailand, Europe and England.
  1. அமிந்தாஸ் அலெக்ஸாண்ட்ரி எனப்படும் ஒரு வகை மண்புழு கர்நாடக மாநிலத்தில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • மெகாஸ்கோலெசிடே குடும்பத்தைச் சேர்ந்த அமிந்தாஸ் அலெக்ஸாண்ட்ரி, மிகவும் வேகமாக ஆக்கிரமிக்கக்கூடிய மண்புழு கர்நாடகாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இது தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்ததாக அறியப்படுகிறது.
  • உலகெங்கிலும் இருந்து மண்புழு ஆய்வுகளை வெளியிடும் கனடாவின் சர்வதேச அறிவியல் இதழான ‘மெகாட்ரிலோகிகா’, ஜனவரி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இதே மண்புழு இந்தியாவில் 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • 1901ஆம் ஆண்டில் பெடார்ட் என்பவரால் இந்தியாவில் கொல்கத்தாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, மேலும் ஆசியாவைப் பொறுத்தவரை சீனா, மியான்மர், பாகிஸ்தான், தாய்லாந்து, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

  1. Centre for Science and Environment – State of Environment Report 2021
  • According to the 2021 State of India’s Environment report, India is likely to see a pandemic generation with 375 million children under 14 years.
  • They could suffer from long-lasting impacts ranging from being underweight, stunting and increased child mortality to losses in education and work productivity.
  • The report by the Centre for Science and Environment (CSE) says that the COVID pandemic also has its hidden victims over 500 million children forced out of school globally and India accounts for more than half of them.
  • About 115 million additional people might get pushed into extreme poverty by the pandemic, and most of them live in South Asia.

SDG:

  • India ranked in the 117th place among 192 nations in terms of sustainable development, which is behind all South Asian nations except Pakistan.
  • Best Performing States(India): Kerala, Himachal Pradesh, Andhra Pradesh, Tamil Nadu and Telangana.
  • Worst Performing States(India): Bihar, Jharkhand, Arunachal Pradesh, Meghalaya and Uttar Pradesh
  1. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் – சுற்றுச்சூழல் அறிக்கை 2021
  • 2021 இந்தியாவின் சுற்றுச்சூழல் அறிக்கையின்படி, கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் இந்தியாவின் 14 வயதிற்குட்பட்ட 375 மில்லியன் குழந்தைகள் நோய்வாய்ப்பட உள்ளதாக கணித்துள்ளனர்.
  • குழந்தைகளின் எடை குறைவாக இருப்பது, குன்றுவது மற்றும் அதிகரித்த குழந்தை இறப்பு முதல் கல்வி மற்றும் வேலை உற்பத்தித்திறன் இழப்புக்கள் ஆகிய தாக்கங்களால் பாதிக்கப்படலாம்.
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (சி.எஸ்.) அறிக்கை, கோவிட் தொற்றுநோயால் உலகளவில் 500 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் உள்ளனர்.
  • சுமார் 115 மில்லியன் கூடுதல் மக்கள் தொற்றுநோயால் தீவிர வறுமையில் தள்ளப்படலாம், அவர்களில் பெரும்பாலோர் தெற்காசியாவில் வாழ்கின்றனர்.
  • மகாராஷ்டிராவில் உள்ள தாராபூர் மிகவும் மாசுபட்ட மண்டலமாக உருவெடுத்துள்ளது.

எஸ்.டி.ஜி(SDG):

  • நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் 192 நாடுகளில் இந்தியா 117 வது இடத்தில் உள்ளது, இது பாகிஸ்தான் தவிர அனைத்து தெற்காசிய நாடுகளுக்கும் பின்தங்கிய இடமாகும்.
  • சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் (இந்தியா): கேரளா, இமாச்சலப் பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா.
  • மோசமான செயல்திறன் கொண்ட மாநிலங்கள் (இந்தியா): பீகார், ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேசம், மேகாலயா மற்றும் உத்தரப்பிரதேசம்.

  1. Chattisgarh – 13 transgenders recruited as police constables
  • After the Chhattisgarh Constable Recruitment examination results for 2019-20 came out, the Chhattisgarh police recruited 13 transgender people as constables in four districts of the state for the first time.
  • The Transgender Persons Protection of Rights Bill was passed in April 2016 and the Indian Supreme Court recognised transgender as the third gender, five years after the electoral commission added the category to ballot forms.
  • Apart from this, only Tamil Nadu and Rajasthan states have transgender police personnel appointed in Police Department in India.
  1. சத்தீஸ்கர் – 13 திருநங்கைகள் போலீஸ் கான்ஸ்டபிள்களாக நியமிக்கப்பட்டனர்
  • சத்தீஸ்கர் காவல்துறை, 13 திருநங்கைகளை மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் கான்ஸ்டபிள்களாக முதன்முறையாக நியமித்துள்ளது.
  • திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா ஏப்ரல், 2016 இல் நிறைவேற்றப்பட்டது மேலும் இந்திய உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது.
  • இது தவிர, தமிழகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டுமே இந்திய காவல் துறையில் திருநங்கைகள் பணிபுரிகின்றனர்.

  1. Rajya Sabha and Lok Sabha Television merges into Sansad TV
  • The two TV channels Rajya sabha and Lok sabha Television, which broadcast the proceedings of the upper and lower Houses of Parliament respectively have been formally merged into a single entity called ‘Sansad Television’.
  • The decision was jointly taken by Rajya Sabha Chairman M Venkaiah Naidu and Lok Sabha Speaker Om Birla.
  • Ravi Capoor, retired IAS officer of the 1986 batch, has been appointed as the Sansad TV Chief Executive Officer and he will be responsible for working out the final details of the merger.
  1. மாநிலங்களவை மற்றும் மக்களவை தொலைக்காட்சி சன்சாத் தொலைக்காட்சியாக இணைகிறது.
  • நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவைகளின் நடவடிக்கைகளை முறையே ஒளிபரப்பி வந்த மாநிலங்களவை மற்றும் மக்களவை தொலைக்காட்சி ஆகிய இரண்டும் முறையே ‘சன்சாத் தொலைக்காட்சி’ என்ற ஒற்றை நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது.
  • மாநிலங்களவைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் ஒருமனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
  • 1986ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி கபூர், சன்சாத் தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  1. Global Bio India: Atma Nirbhar Bharat Conclave
  • On March 2021, Dr Harsh Vardhan, Union Minister of Science and Technology, Earth Sciences and Health and Family Welfare, inaugurated the largest biotechnology conglomerate, Global Bio-India 2021.
  • The three-day event will see different sessions touching down upon different aspects of biotechnology.
  • The first session of the Global Bio-India addressed how India’s campaign of ‘Make in India’ has translated into “Atmanirbhar Bharat Abhiyaan” to provide resilience and self-sufficiency” to the country.
  • Atmanirbhar Bharat, known as ‘self-reliant India’ or ‘self-sufficient India’, is a term used by the Prime Minister of India, Narendra Modi in relation to economic development in the country, which was first mentioned during the announcement of India’s COVID–19 pandemic related economic package.
  1. குளோபல் பயோ-இந்தியா: ஆத்ம நிர்பார் பாரத் கான்க்ளேவ்
  • மார்ச் 2021 அன்று,மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப, புவி அறிவியல் மற்றும் சுகாதாரம் & குடும்ப நல அமைச்சர், டாக்டர் ஹர்ஷ் வர்தன், மிகப்பெரிய உயிரி தொழில்நுட்ப நிறுவனமான குளோபல் பயோ-இந்தியா 2021-ஐ த் தொடங்கி வைத்தார்.
  • மூன்று நாள் நிகழ்வில் உயிரி தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றிய பல்வேறு கலந்துரையாடல்கள் நிகழ உள்ளன.
  • ‘மேக் இன் இந்தியா’ என்ற இந்தியாவின் பிரச்சாரம் நாட்டிற்கு தன்னிறைவு அளிக்கும் வகையில் ” ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” என்ற தலைப்பில் உலக உயிரி-இந்தியா வின் முதல் அமர்வில் உரையாற்றப்பட்டது.
  • ஆத்ம நிர்பார் பாரத் “சுயசார்புடைய இந்தியா” அல்லது “தன்னிறைவு பெற்ற இந்தியா” என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் COVID-19 தொற்று தொடர்பான பொருளாதார அறிவிப்பின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.

  1. India Toy Fair 2021
  • Prime Minister Narendra Modi inaugurated the India Toy Fair on 27 February The total number of registrations from KVS is approximately 3.5 lakh.
  • Three Kendriya Vidyalayas from across the nation have been selected to display their stalls in the India Toy Fair 2021. KV JNU from Delhi Region, KV No 1 AFS Gurugram, and KV IIT Kanpur are displaying their unique toys at this fair.
  • The India Toy Fair is being held from 27 February to 2 March
  1. இந்தியா பொம்மை கண்காட்சி 2021
  • 27 பிப்ரவரி 2021 அன்று இந்தியா பொம்மை கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேந்திரியா வித்யாலயாக்களில் இருந்து சுமார்5 லட்சம் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது.
  • இந்தியா பொம்மை கண்காட்சி 2021இல் நாடெங்கிலும் இருந்து மூன்று கேந்திரியா வித்யாலயாக்கள் தங்கள் அரங்கை காட்சிப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெல்லி பிராந்தியத்தைச் சேர்ந்த கே.வி. ஜே.என்.யூ, கே.வி எண் 1 ஏ.எஃப்.எஸ் குருகிராம் மற்றும் கே.வி. ஐ.ஐ.டி கான்பூர் ஆகியவை இந்த கண்காட்சியில் தங்களது தனித்துவமான பொம்மைகளை காட்சிப்படுத்துகின்றன.
  • இந்த கண்காட்சி 27 பிப்ரவரி முதல் 2 மார்ச் 2021 வரை நடைபெற்றது.

  1. Appointments – Chief of Integrated Defence Staff – Vice Admiral Atul Kumar Jain
  • On 2 March 2021, Vice Admiral Atul Kumar Jain has been appointed as Chief of Integrated Defence Staff to the Chairman Chiefs of Staff Committee.
  • Vice Admiral Jain got commissioned in July 1982 into the Indian Navy.
  • For his distinguished service, he was awarded Vishisht Seva Medal in 2009, Ati Vishisht Seva Medal in 2015 and Param Vishist Sewa Medal in 2020.
  1. நியமனங்கள் – ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் – வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயின்
  • 2 மார்ச் 2021 அன்று, வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வைஸ் அட்மிரல் ஜெயின் ஜூலை 1982யில் இந்திய கடற்படையில் பணியமர்த்தப்பட்டார்.
  • அவரது சிறப்பான சேவைக்காக, அவருக்கு 2009ல் விஷிஸ்த சேவா பதக்கமும், 2015ல் அதி விஷிஸ்த சேவா பதக்கமும், 2020இல் பரம் விஷிஸ்த சேவா பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

  1. Udaipur Science Centre inaugurated at Udaipur, Tripura
  • A science centre worth Rs 6 crore under the Scheme for Promotion of Culture of Science (SPOCS) was launched in Udaipur in Tripura.
  • It is the 22nd Science Centre developed by the National Council of Science Museums (NCSM) of the Culture under Scheme for Promotion of Culture of Science.
  • The Udaipur Science Centre, at Udaipur, Tripura was dedicated to the people by the Governor of Tripura, Shri Ramesh Bais on 28 February 2021.
  1. உதய்பூர் அறிவியல் மையம், திரிபுராவின் உதய்பூரில் திறக்கப்பட்டது
  • திரிபுராவில் உள்ள உதய்பூரில் அறிவியல் கலாச்சாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் (SPOCS) திட்டத்தின் கீழ் ரூ 6 கோடி மதிப்புள்ள அறிவியல் மையம் தொடங்கப்பட்டது.
  • இது அறிவியல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் கலாச்சார அமைச்சகத்தின் தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் (NCSM) உருவாக்கிய 22 வது அறிவியல் மையம் ஆகும்.
  • 28 பிப்ரவரி 2021 அன்று திரிபுராவின் உதய்பூரில் உள்ள உதய்பூர் அறிவியல் மையம் திரிபுராவின் ஆளுநர் ஸ்ரீ ரமேஷ் பைஸால் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 2, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
2nd March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021