TNPSC Current Affairs – English & Tamil – March 3, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(3rd March, 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.



Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 2, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. Galaxy Frog selected as a flagship species in Mathikettan Shola National Park

  • Galaxy Frog (Melanobatrachus indicus), an amphibian species endemic to the eastern part of the Western Ghats, has been selected as a flagship species in Mathikettan Shola National Park in Idukki, Kerala.
  • The Galaxy Frog is listed as one of the most important 13 amphibian species.
  • It is in the evolutionarily distinct and globally endangered (EDGE) list under the IUCN.
  1. கேலக்ஸி தவளை – மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் முக்கிய இனங்கள்

  • மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியில் காணப்படும் ஒருநிலநீர் வாழ் உயிரின வகையான கேலக்ஸி தவளை (Melanobatrachus indicus), கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவில் முக்கிய இனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • உலகின் மிக முக்கியமான 13 நீர்ம உயிரினங்களில் ஒன்றாக இந்த கேலக்ஸி தவளை உள்ளது.
  • இது ஐ.யூ.சி.என் (IUCN)-ன், பரிணாம ரீதியாக வேறுபட்ட மற்றும் உலகளவில் ஆபத்தான (எட்ஜ்) பட்டியலில் உள்ளது

  1. Blockchain payments between satellites

  • JPMorgan Chase & Co has successfully tested blockchain payments between satellites orbiting the earth using Danish space firm GomSpace’s satellites.
  • It is the world’s first bank-led tokenised value transfer in space, showing that digital devices could use the blockchain technology behind virtual currencies for transactions.
  • Blockchain, which first emerged as the software underpinning cryptocurrencies, is a shared digital ledger of transactions. This technology was used by Satoshi Nakamoto to create Bitcoin.
  1. செயற்கைக்கோள்களுக்கு இடையில் பிளாக்செயின் மூலம் மெய்நிகர் நாணயங்கள் பரிமாற்றம்

  • டேனிஷ் விண்வெளி நிறுவனமான கோம்ஸ்பேஸின் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களுக்கு இடையில் பிளாக்செயின் பயன்படுத்தி மெய்நிகர் நாணய பரிமாற்றத்தை ஜேபி மோர்கன் சேஸ் அண்ட் கோ வெற்றிகரமாக சோதித்துள்ளது.
  • இது வங்கி-தலைமையில் விண்வெளியில் நடத்தப்பட்ட உலகின் முதல் டோக்கன் பரிமாற்றமாகும். மேலும் டிஜிட்டல் சாதனங்கள், மெய்நிகர் நாணயங்களின் பரிவர்த்தனைகளுக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்பதையும் இது காட்டுகிறது.
  • கிரிப்டோகரன்ஸிகளின் மென்பொருளாக முதலில் தோன்றிய பிளாக்செயின், பரிவர்த்தனைகளை பகிரும் இனைய பெயரேடு ஆகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சடோஷி நகமோட்டோ-வால் பிட்காயின் உருவாக்கப்பட்டது.

  1. Maju Varghese appointed as the Deputy Assistant to the US President and Director of WHMO

  • Maju Varghese, an Indian-American, has been appointed as the Deputy Assistant to the US President Joe Biden and director of the White House Military Office (WHMO).
  • He previously served as the Chief Operating Officer of the Biden campaign during the 2020 Presidential election and later as the executive director of the inaugural committee.
  1. அமெரிக்க அதிபரின் துணை உதவியாளர் மற்றும் WHMOஇன் இயக்குநராக மஜு வர்கீஸ் நியமிக்கப்பட்டார்

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை இராணுவ அலுவலகத்தின் இயக்குநராகவும் இந்திய-அமெரிக்கரான மஜு வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னதாக, 2020 அதிபர் தேர்தலின் போது பைடன் பிரச்சாரத்தின் தலைமை இயக்க அதிகாரியாகவும், பின்னர் தொடக்கக் குழுவின் நிர்வாக இயக்குநராகவும் இவர் பணியாற்றினார்.

  1. Udyog Manthan

  • A series of sector-specific webinars for promoting quality and productivity in the Indian Industry, organized by the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), under the Ministry of Commerce and Industry, was concluded on 2 March 2021.
  • A marathon of webinars named Udyog Manthan that covers 46 sectors focussing on quality and productivity in all major sectors of manufacturing and services was started on 4 January 2021.
  • 46 sessions on various manufacturing and service sectors, covering almost 70% of GDP, have been conducted during the last eight weeks.
  1. உத்யோக் மந்தன்

  • இந்திய தொழிற்துறையில் தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக,வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுக்கான துறையால் (DPIIT) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு துறை சார்ந்த இணைய கருத்தரங்கத் தொடர் 2 மார்ச் 2021 அன்று முடிவு பெற்றது.
  • உற்பத்தி மற்றும் சேவையின் அனைத்து முக்கிய துறைகளிலும் தரம் மற்றும் உற்பத்தித் திறனை மையப்படுத்தி 46 பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு இணைய கருத்தரங்க மராத்தான், 4 ஜனவரி 2021 அன்று தொடங்கப்பட்டது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 70% உள்ளடக்கிய பல்வேறு உற்பத்தி மற்றும் சேவைதுறைகளின் 46 அமர்வுகள் கடந்த எட்டு வாரங்களில் நடத்தப்பட்டன.

  1. Merchant Digitization Summit 2021

  • The Government of India, Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI), and UN-based BTCA hosted the Merchant Digitization Summit 2021: Towards AatmaNirbhar (Self Reliance) Bharat with a special focus on Himalayan Regions, North East Regions and Aspirational Districts of India.
  • Empowering women merchants who play critical roles in their communities is one of the priorities to help achieve the mission of Digital India.
  1. வணிக டிஜிட்டல்மயமாக்கல் உச்சி மாநாடு 2021

  • இந்திய அரசு, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) மற்றும் ஐ.நாவை தளமாகக் கொண்ட பி.டி.சி.ஏ ஆகியவை இணைந்து ‘வணிக டிஜிட்டல் உச்சி மாநாடு 2021: ஆத்மநிர்பார் (சுய சார்பு) பாரத்தை நோக்கி இமயமலைப் பகுதிகள், வடகிழக்கு பிராந்தியங்கள் மற்றும் இந்தியாவின் ஆர்வமிக்க மாவட்டங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும்’ மாநாட்டை நடத்தியது.
  • தங்கள் சமூகங்களில் முக்கிய பங்காற்றும் பெண் வணிகர்களை மேம்படுத்துவது டிஜிட்டல் இந்தியாவின் நோக்கத்தை அடைய உதவும் முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

  1. Nag River Pollution Abatement Project

  • The Nag River Pollution Abatement Project was approved at the cost of Rs. 2,117.54 crores.
  • It will reduce the pollution level in terms of untreated sewage, flowing solid waste and other impurities flowing into the Nag river and its tributaries.
  • The river, which flows through Nagpur city, thus giving its name to the city, is now a highly polluted water channel of sewage and industrial waste.
  • The project, approved under the National River Conservation Plan, will be implemented by the National River Conservation Directorate, NRCD.
  1. நாக் நதி மாசு குறைப்பு திட்டம்

  • நாக் நதி மாசு குறைப்பு திட்டத்திற்கு ரூ. 2,117.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இது நாக் நதி மற்றும் அதன் துணை நதிகளில் பாயும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், பாயும் திடக்கழிவுகள் மற்றும் பிற அசுத்தங்கள் ஆகியவற்றைக் அடிப்படையாகக் கொண்டு மாசு அளவைக் குறைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
  • நாக்பூர் நகரத்தின் ஊடாக பாய்வதால், இப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த நதி, தற்போது கழிவுநீர் மற்றும் தொழில்துறை கழிவுகளால் மிகவும் மாசுபட்டு காணப்படுகிறது.
  • தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்த திட்டம், தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகத்தால் செயல்படுத்தப்படும்.

  1. Under PRASHAD Scheme, Development of Maa Bamleshwari Devi Temple, Chhattisgarh was approved

  • Union Minister of State (IC) for Tourism & Culture Prahlad Singh Patel virtually laid the foundation stone for the project “Development of Maa Bamleshwari Devi Temple, Dongargarh, Chhattisgarh,” approved under the PRASHAD scheme of the Union Ministry of Tourism.
  • The ‘National Mission on Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive’ (PRASHAD) is a Central Sector Scheme fully financed by the Government of India.
  • It was launched by the Union Ministry of Tourism in the year 2014-15 with the objective of integrated development of identified pilgrimage and heritage destinations.
  • 13 projects have been successfully completed under the PRASHAD scheme so far.
  1. பிரசாத் திட்டத்தின் கீழ், மா பம்லேஸ்வரி தேவி கோயில், சத்தீஸ்கர் மேம்படுத்துதல் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

  • சுற்றுலா அமைச்சகத்தின் பிரஷாத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட “மா பம்லேஸ்வரி தேவி கோயில் மேம்படுத்துதல், டோங்கர்கர், சத்தீஸ்கர்” திட்டத்திற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
  • தேசிய திட்டமான ‘யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீக, பாரம்பரிய மேம்பாட்டு இயக்கம்’ (பிரசாத்) என்பது இந்திய அரசு முழுமையாக நிதியளிக்கும் மத்திய அரசின் திட்டமாகும்.
  • அடையாளம் காணப்பட்ட யாத்திரை மற்றும் பாரம்பரிய இடங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இது 2014-15ஆம் ஆண்டில் சுற்றுலா அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
  • பிரஷாத் திட்டத்தின் கீழ் இதுவரை 13 திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

  1. TRIFED in collaboration with the Union Ministry of Culture and LBSNAA to organise a 2 day “GI Mahotsav”

  • Tribal Cooperative Marketing Development Federation Ltd (TRIFED), Union Ministry of Tribal Affairs is organising “GI Mahotsav” in collaboration with Lal Bahadur Shastri National Academy of Administration (LBSNAA), Mussoorie and Union Ministry of Culture on 4 & 5 March 2021.
  • The event will be a platform where the Officer Trainees can get to interact with authorized producers and artisans and help in developing a production, branding, packaging and marketing plan for the different regions.
  • More than 40 authorized sellers of identified GI products and tribal artisans will be participating and exhibiting their goods at this event which is being held on the premises of LBSNAA.
  1. ட்ரைஃபெட், கலாச்சார அமைச்சகம் மற்றும் லபாஸ்னா(LSBNAA) உடன் இணைந்து 2 நாள் ஜி.ஐ. மஹோத்ஸவத்தை வழங்குகிறது.

  • பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட் (TRIFED), பழங்குடியினர் அமைச்சகம், லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி (எல்.பி.எஸ்.என்.ஏ), கலாச்சார அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து 4 மற்றும் 5 மார்ச், 2021 தேதிகளில் புவிசார் குறியீடு மஹோத்ஸவத்தை ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த நிகழ்வு அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களுடன், பல்வேறு பிராந்தியங்களுக்கான உற்பத்தி, பிராண்டிங், பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்தல் திட்டத்தை பயிற்சி பெறும் அதிகாரிகள் உருவாக்குவதற்கு ஒரு தளமாக அமைய உள்ளது.
  • லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் 40-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களின் புவிசார் குறியீடு தயாரிப்புகள் மற்றும் பழங்குடி கைவினைஞர்கள் பங்கேற்று தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.

  1. Excercise Desert FLAG VI

  • The Indian Air Force is set to participate for the first time in Exercise Desert Flag-VI along with the air forces of the United States of America, United Arab Emirates, France, Saudi Arabia, South Korea and Bahrain.
  • Ex Desert Flag is an annual multi-national large force employment warfare exercise hosted by the United Arab Emirates Air Force.
  • The exercise is scheduled from 3 – 27 March 2021 at the Al-Dhafra airbase, UAE.
  1. எக்ஸ் டெசர்ட் ஃப்ளாக் VI

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஃப்ரான்ஸ், சவுதி அரேபியா, தென் கொரியா மற்றும் பஹ்ரான் ஆகிய நாடுகளின் விமானப்படைகளுடன் இந்திய விமானப்படை முதல் முறையாக எக்ஸ் டெசர்ட் ஃப்ளாக் VI விமான பயிற்சியில் பங்கேற்க உள்ளது.
  • எக்ஸ் டெசர்ட் ஃப்ளாக் என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை வழங்கும் பல தேசிய விமானப்படைகளின் வருடாந்திர போர் பயிற்சி ஆகும்.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அல்-தஃப்ரா விமான தளத்தில் 3 – 27 மார்ச் 2021 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

  1. Mary Kom chosen as the Chairperson of AIBA’s Champions and Veterans Committee

  • Six-time world champion MC Mary Kom was chosen as the Chairperson of the International Boxing Association’s (AIBA) Champions and Veterans Committee.
  • AIBA, originally the Association Internationale de Boxe Amateur, is a sports organization that sanctions amateur (Olympic-style) boxing matches and awards world and subordinate championships.
  1. மேரி கோம், AIBAஇன் சாம்பியன்ஸ் மற்றும் வீரர்கள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • ஆறு முறை உலக சாம்பியனான எம் சி மேரி கோம், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (ஏஐபிஏ) சாம்பியன்கள் மற்றும் வீரர்கள் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • AIBA என்பது அமெச்சூர் (ஒலிம்பிக் பாணி) குத்துச்சண்டை போட்டிகள் மற்றும் விருதுகள் உலக மற்றும் துணை சாம்பியன்ஷிப்பை நடத்தும் ஒரு விளையாட்டு அமைப்பு ஆகும்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 3, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
3rd March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021