TNPSC Current Affairs – English & Tamil – March 31, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(31st March, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 31, 2021


National News


1. Prahlad Singh Patel and Shivraj Singh Chouhan inaugurated the ‘Maharaja Chhatrasal Convention Centre’ at Khajuraho

  • Prahlad Singh Patel, Minister of State for Tourism and Culture (Independent Charge), and Shivraj Singh Chouhan, Chief Minister of Madhya Pradesh inaugurated the Maharaja Chhatrasal Convention Centre at Khajuraho, Madhya Pradesh.
  • The Chatrapal convention center has been developed under the Swadesh Darshan Scheme of the Union Ministry of Tourism and will help in establishing Khajuraho (UNESCO World Heritage site) as an iconic destination.

 

1. பிரகலாத சிங் படேல் மற்றும் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் கஜுராஹோவில் உள்ள ‘மகாராஜா சத்ரசால் மாநாட்டு மையத்தைத்’ திறந்து வைத்தனர்.

  • சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) பிரகலாத சிங் படேல், மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்ஆகியோர் மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் மகாராஜா சத்ரசால் மாநாட்டு மையத்தை தொடங்கி வைத்தனர்.
  • மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சுதேச தரிசனத் திட்டத்தின் கீழ் சத்ரபால் மாநாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது கஜுராஹோவை (யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தளம்) தனித்துவமான இடமாக மாற்றுவதற்கு உதவும்.

2. Exercise ‘Vajra Prahar’ was conducted in Himachal Pradesh

  • The 11th edition of Indo-US joint special forces exercise Vajra Prahar 2021 was conducted at Special Forces training school located at Bakloh, Himachal Pradesh.

 

2. இமாச்சல பிரதேசத்தில் ‘வஜ்ர பிரஹார்’ பயிற்சி நடைபெற்றது

  • இந்திய-அமெரிக்க கூட்டு சிறப்பு படைபயிற்சியான வஜ்ரா பிரஹார் 2021இன் 11வது பதிப்பு இமாச்சலப் பிரதேச மாநிலம் பக்லோவில் அமைந்துள்ள சிறப்புப் படைபயிற்சி பள்ளியில் நடத்தப்பட்டது.  

3. CBIC extended penalty waiver on dynamic QR Code implementation till 30 June 2021

  • The Central Board of Indirect Taxes and Customs (CBIC) had extended a waiver of penalty on non-implementation of dynamic quick response code which is mandatory for companies over Rs 500 crore turnovers till 30 June 2021.
  • QR code for B2C transactions is meant to encourage digital payments by the buyers but can potentially be used to check tax leakages as well. It would have an impact on all consumer-facing businesses including retail, restaurants, hotels, and so on.

 

3. மாறும் QR குறியீடு அமலாக்கம் மீதான அபராதத் தள்ளுபடியை சி.பி.ஐ.சி. (CBIC) 30 ஜூன் 2021 வரை நீட்டித்தது

  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC), ஆண்டுவருமானம் ரூ.500 கோடியைவிட அதிகமாக உள்ள நிறுவனங்களுக்கு கட்டாயமான விரைவான பதில் குறியீட்டை (dynamic quick response code) அமல்படுத்தாததற்காக அபராதத் தள்ளுபடியை 30 ஜூன் 2021 வரை நீட்டித்துள்ளது.
  • B2C பரிவர்த்தனைகளுக்கான QR குறியீடு, மின்னணு செலுத்துதல்களை ஊக்குவிக்கிறது, வரி கசிவுகளை சரிபார்க்க பயன்படுகிறது. இது நுகர்வோரை-எதிர்கொள்ளும் அனைத்து சில்லறை வணிகம், உணவகங்கள்,  தங்கும் விடுதிகள் மற்றும் பல வணிகங்களை மீது தாக்கத்தை ஏற்படுத்தும். 

4. Union Education Minister inaugurated a Center for Happiness in Indian Institute of Management of Jammu

  • Union Education Minister Ramesh Pokhriyal virtually inaugurated “Anandam: The Center for Happiness” at the Indian Institute of Management (IIM), Jammu.
  • The centre will help people overcome mental stress and help spread positivity and it will encourage and propagate holistic development for all the stakeholders at IIM Jammu.

 

4. ஜம்முவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மத்திய கல்வி அமைச்சர் மகிழ்ச்சிக்கான மையத்தை திறந்து வைத்தார்

  • ஜம்முவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM) மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் “ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்” என்ற மையத்தை தொடங்கி வைத்தார்.
  • இந்த மையம் மக்கள் மன அழுத்தத்தை சமாளிக்கவும், நேர்மறையான எண்ணங்கள் பரவவும், மற்றும் IIM ஜம்முவில் அனைத்து பங்குதாரர்களுக்கும்  முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் பிரச்சாரம் செய்யும்.

International News


5. New Zealand became the second country after India to legalise paid leave for miscarriages

  • New Zealand’s Parliament has passed legislation giving mothers and their partners the right to paid leave following a miscarriage or stillbirth, becoming only the second country in the world.
  • Employees will get three days to leave when a pregnancy ends with a stillbirth. India is the only other country in the world with similar legislation that provides leave for miscarriage and stillbirth.

 

5. இந்தியாவிற்கு பிறகு நியூசிலாந்து கருச்சிதைவுகளுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்த இரண்டாவது நாடானது

  • நியூஸிலாந்தின் நாடாளுமன்றம், தாய்மார்கள் மற்றும் அவர்களது துணைகளுக்கு கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறப்பதைத் தொடர்ந்து விடுமுறை அளிக்கும் உரிமையை வழங்கும் சட்டத்தை இயற்றி, இச்சட்டத்தை இயற்றிய உலகின் இரண்டாவது நாடானது.
  • குழந்தை இறந்து பிறக்கும்போது ஊழியர்கள் மூன்று நாட்கள் விடுப்பு பெறுவார்கள். உலகிலேயே இதேபோன்ற சட்டம்  கொண்ட ஒரே மற்றொரு நாடு இந்தியா மட்டுமே. 

6. World Bank revised India’s GDP growth forecast from 5.4% to 10.1% for the financial year 2021-22

  • The World Bank had recently increased its projections for India’s economic growth by 7 percentage points to 10.1 per cent for Financial Year 2021-22, citing a strong rebound in private consumption and investment growth.

 

6. 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 5.4% லிருந்து 10.1% என உலக வங்கி திருத்தியமைத்துள்ளது.

  • தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டு வளர்ச்சியில் வலுவான மீட்சி காரணமாக 2021-22-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்புகளை உலக வங்கி  7 சதவீதத்திலிருந்து 10.1  சதவீதமாக சமீபத்தில் உயர்த்தியுள்ளது.

7. UNESCAP projected India’s GDP growth at 7% in FY22

  • The United Nations Economic and Social Commission for Asia and the Pacific (UNESCAP) expected the Indian economy to grow 7% in FY22 despite the roll-out of the Covid-19 vaccine and against a contraction of 7% in the preceding year.
  • The United Nations Economic and Social Commission for Asia and the Pacific (UNESCAP) is one of the five regional commissions under the jurisdiction of the United Nations Economic and Social Council.

 

7. நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7%ஆக இருக்கும் என UNESCAP கணித்துள்ளது

  • ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP), கோவிட்-19 தடுப்பூசியை கொண்டு வந்தபோதிலும் முந்தைய ஆண்டில் இருந்த 7% தோய்விற்கு எதிராக, இந்திய பொருளாதாரம் 22ஆம் நிதியாண்டில் 7% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறது,
  • ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையின்அதிகார வரம்பின் கீழ் உள்ள ஐந்து பிராந்திய ஆணைக்குழுக்களுள் ஒன்றாகும்.

Science and Technology


8. Women-led startup Astrome developed low-cost internet services called “Giga Mesh”

  • Astrome, a women-led startup, has developed an innovative wireless product that gives fiber-like bandwidth at a fraction of fiber cost to help telecom operators deliver reliable, low-cost Internet services to suburban and rural areas.
  • The wireless product ‘Giga Mesh’ could enable telecom operators to deploy quality, high-speed rural telecom infrastructure at five times lower cost.
  • The deep tech startup incubated at the Indian Institute of Science (IISc), Bangalore, and supported by the DST-ABI Woman Startup Program of the Department of Science and Technology (DST).

 

8. பெண்கள் தலைமையிலான தொடக்க நிறுவனமான அஸ்ட்ரோம், “கிகா மெஷ்” என்று அழைக்கப்படும் குறைந்த கட்டண இணைய சேவைகளை உருவாக்கியது

  • பெண்கள் தலைமையிலான தொடக்க நிறுவனமான அஸ்ட்ரோம், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் புறநகர்  மற்றும்  கிராமப்புற பகுதிகளில் ஃபைபர் செலவில் நம்பகமான, குறைந்த செலவு இணைய சேவைகளை வழங்க உதவும் ஒரு ஃபைபர் போன்ற அலைவரிசையை வழங்கும் ஒரு புதுமையான கம்பியில்லா தயாரிப்பை உருவாக்கியுள்ளது.
  • கம்பியில்லா தயாரிப்பான ‘ஜிகா மெஷ்’ மூலம் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை ஐந்து மடங்கு குறைந்த செலவில் தரமான, அதிவேக கிராமப்புற தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை செயல்படுத்த செய்யும்.
  • இந்த ஆழமான தொழில்நுட்ப தொடக்க நிறுவனம் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), மற்றும் DST-ABI அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் (DST) பெண்கள் தொடக்க திட்டத்தின் ஆதரவோடு தொடங்கப்பட்டது.

Reports and Indices


9. India ranked 140 among 156 countries in the WEF Global Gender Gap index

  • India (62.5 percent) has slipped 28 places to rank 140th among 156 countries in the World Economic Forum’s Global Gender Gap Report 2021, becoming the third-worst performer in South Asia.
  • Most of the India’s neighbors, Bangladesh (65), Nepal (106), Pakistan (153), Afghanistan (156), Bhutan (130), and Sri Lanka (116) performed better than India except Afghanistan and Pakistan.
  • For the 12th time, Iceland is the most gender-equal country in the world. The top 10 most gender-equal countries include Finland, Norway, New Zealand, Rwanda, Sweden, Ireland, and Switzerland.

 

9. WEF உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் 156 நாடுகளில் இந்தியா 140 வது இடத்தில் உள்ளது

  • உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2021இல் 156 நாடுகளில் இந்தியா (62.5 சதவீதம்) 28 இடங்கள் குறைந்து  140வது இடத்தில் உள்ளது .
  • பங்களாதேஷ்(65), நேபாளம்(106),  பாகிஸ்தான்(153), ஆப்கானிஸ்தான்(156),     பூட்டான்(130)  மற்றும்  இலங்கை(116). இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஆப்கானிஸ்தான் தவிர மற்ற நாடுகள் நல்ல நிலையில் உள்ளன.
  • 12வது முறையாக ஐஸ்லாந்து உலகின் மிகவும் பாலின-சமத்துவ நாடாகியுள்ளது. முதல் 10 மிகவும் பாலின-சமத்துவ நாடுகளில்  பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, ருவாண்டா, ஸ்வீடன், அயர்லாந்து,  மற்றும்  சுவிட்சர்லாந்து ஆகியவை அடங்கும்.

Important Days


10. International Transgender Day of Visibility – 31 March

  • International Transgender Day of Visibility (TDOV) is an annual event occurring on 31 March dedicated to celebrating transgender people and raising awareness of discrimination faced by transgender people worldwide, as well as a celebration of their contributions to society.
  • The day was founded by US-based transgender activist Rachel Crandall of Michigan in 2009.

 

11. சர்வதேச திருநங்கைகளின் பார்வை நாள்– 31 மார்ச்

  • சர்வதேச திருநங்கைகளின் பார்வை நாள் (TDOV) என்பது திருநங்கைகளை கொண்டாடும் வகையில் மார்ச் 31 அன்று நடைபெறும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இது திருநங்கைகளை கொண்டாடுவதற்கும், உலகெங்கிலும் உள்ள திருநங்கைகளுக்கு ஏற்படும் பாகுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சமூகத்தில் அவர்களின் பங்களிப்புகளை கொண்டாடுவதற்கும் உருவாக்கப்பட்ட நிகழ்வாகும்.
  • இந்த நாள் 2009ஆம் ஆண்டில் மிச்சிகனின் அமெரிக்காவைச் சேர்ந்த திருநங்கை ஆர்வலர் ரேச்சல் கிராண்டால் உருவாக்கப்பட்டது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 31, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
31st March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021