TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


இந்திய ஆயுதப்படைகளின் தைரியம் வெளிப்படுத்தும் : பாராக்ரம் பர்வ்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26, 2018 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26, 2018

  • இந்திய ஆயுதப்படைகளின் தைரியம், வீரம், தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக, செப்டம்பர் 28-30 வரை பாராக்ரம் பர்வ் கொண்டாடப்பட உள்ளது.
  • தாக்குதல்களில் கவனம் செலுத்தும் ஆயுதப்படைகளின் வீரம்‘” என்ற கருப்பொருளின் கீழ் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது

4 வது இந்தியா சர்வதேச அறிவியல் விழா 2018:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26, 2018

  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களால் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் (IISF-2018) நான்காவது பதிப்பு அக்டோபர் 6 ம் தேதி லக்னோ, உத்திரபிரதேசத்தில் தொடங்கிவைக்கப்படவுள்ளது.
  • IISF 2018 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் சூடானிய மருத்துவர் டாக்டர் ஈவன் அட்டார் ஆதாஹா 2018: UNHCR Nansen Refugee Award

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26, 2018

  • ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR-United Nations High Commissioner for Refugees) வழங்கும் நான்சென் அகதிகள் விருது(Nansen Refugee Award)2018, தெற்கு சூடானை சேர்ந்த மருத்துவர் Dr.இவான் அடர் அதகா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜன்தன் தர்ஷக்என்ற செல்பேசி செயலியை நிதியமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26, 2018

  • அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவையின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையும், தேசிய தகவல் மையமும் இணைந்து “ஜன்தன் தர்ஷக்” எனும் செல்பேசி செயலியை உருவாக்கியுள்ளன.
  • பெயருக்கேற்றாற்போல், நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிதிச் சேவை மையம் எந்த இடத்தில் உள்ளது என்பதை சாமானிய மக்களும் தொடு புள்ளி மூலம் அறிந்துகொள்ள இந்த செல்பேசி செயலி செயல்படும்.
  • சுமார் 5 லட்சம் நிதி நிறுவன தொடுபுள்ளிகள் (வங்கி கிளைகள், .டி.எம்.-கள், அஞ்சலகங்கள்) இந்த செயலியின் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடனுக்கான ஒப்புதல்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26, 2018

  • சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடனுக்கான ஒப்புதல் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • அப்போது, சிறு தொழில் வளர்ச்சி வங்கி மற்றும் 5 பொதுத்துறை வங்கிகளை இணைத்து www.psbloansin59minutes.com என்ற இணைய தளத்தை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கி வைத்தார்.

ஈஷா அவுட்ரீச்க்கு மத்திய அரசின் விளையாட்டு மேம்பாடு விருது ஜனாதிபதியிடம் சத்குரு பெற்றார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26, 2018

  • மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் வழங்கும் உயரிய விருதான ‘ராஷ்ட்ரிய கேல்புரோத்சாஹன் புரஸ்கார்’ எனும் விளையாட்டு மேம்பாடு விருது ஈஷா அவுட்ரீச்க்கு வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்தது.
  • விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
  • இதில் விளையாட்டு மேம்பாடு என்ற பிரிவில் ஈஷா அவுட்ரீச்க்கு ராஷ்ட்ரிய கேல்புரோத்சாஹன் புரஸ்கார் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

டாக்டர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் ஏர் மாசு கட்டுப்பாட்டு கருவி ” WAYU ” துவங்கி வைத்தார்:

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ,புவி அறிவியல் & சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர், டாக்டர் ஹர்ஷ் வர்தன் காற்று மாசு கட்டுப்பாட்டு WAYU’(Wind Augmentation Purifying Unit) சாதனத்தை தில்லியில் திறந்துவைத்தார்.
  • இந்த சாதனமானது 500 சதுர மீட்டர் பரப்பளவில் காற்றை சுத்திகரிக்க முடியும். இதுபோன்ற சாதனங்கள் அக்டோபர் 15 ஆம் தேதி தில்லியில் நிறுவப்படும்.

 TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 26, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 25, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 25, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 22 , 2018