TNPSC Current Affairs – English & Tamil – May 29, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(29th May, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 29, 2021


 TAMIL NADU


  1. Fibre and protein rich ‘village rice’ from Tamil Nadu exported to Ghana & Yemen
  • Fibre and protein rich ‘village rice’ from Tamil Nadu exported to Ghana & Yemen. ‘Village rice’ is sourced directly from farmers of Thanjavur, which is known as rice bowl of Tamil Nadu. It is enriched with protein, fibre, and a variety of minerals.
  • Non-basmati rice exports witnessed an impressive growth of 146 per cent during 2020-21.

 

  1. நார்சத்து மற்றும் புரதச்சத்து மிக்க ‘கிராம அரிசி’ தமிழ்நாட்டிலிருந்து கானா மற்றும் ஏமனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
  • தமிழ்நாட்டிலிருந்து நார் மற்றும் புரதச்சத்துமிக்க ‘கிராம அரிசி’ கானா மற்றும் ஏமனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ‘கிராம அரிசி’ தமிழ்நாட்டின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறப்படுகிறது. இது புரதம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு கனிமங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது.
  • 2020-21ஆம் ஆண்டில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 146 சதவீத வளர்ச்சியைக் கண்டது.

NATIONAL


  1. Union Ministry of Education launched YUVA- Prime Minister’s Scheme For Mentoring Young Authors
  • Union Ministry of Education launched YUVA (Young, Upcoming and Versatile Authors) Scheme. It is an Author Mentorship programme to train young and budding authors below 30 years. The launch of YUVA is in tune with Prime Minister Narendra Modi’s vision to encourage young writers to write about India’s freedom struggle.
  • YUVA is a part of India@75 Project.

 

  1. இளம் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் யுவா – பிரதமரின் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியது
  • மத்திய கல்வி அமைச்சகம், யுவா (YUVA) (இளம், வளரும் மற்றும் பல்துறை ஆசிரியர்கள்) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது 30 வயதிற்குட்பட்ட இளம் மற்றும் வளர்ந்து வரும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் ஒரு ஆசிரியர் வழிகாட்டி திட்டமாகும். இளம் எழுத்தாளர்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் பற்றி எழுத ஊக்குவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் யுவா (இளம், வரவிருக்கும் மற்றும் பல்துறை ஆசிரியர்கள்) தொடங்கப்பட்டது
  • இந்தியா@75 திட்டத்தின் ஒரு பகுதியாக யுவா உள்ளது.

  1. ‘PM-CARES for Children’ scheme launched to support and empower Covid affected children
  • Children who lost their parents due to Covid will be assisted through PM-CARES for Children.
  • Children who lost their parents due to Covid will get a monthly stipend once they turn 18 and a fund of Rs 10 lakhs when they turn 23 from PM CARES.
  • Free education to be ensured for children who lost their parents to Covid.
  • The children will be assisted to get an education loan for higher education and PM CARES will pay interest on the loan.
  • The children will get free health insurance of Rs. 5 lakh under Ayushma Bharat till 18 years and the premium will be paid by PM CARES.

 

  1. கோவிட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு மற்றும் அதிகாரமளித்தலுக்காக ‘குழந்தைகளுக்கான PM-CARES‘ திட்டம் தொடங்கப்பட்டது
  • கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ ‘குழந்தைகளுக்கான PM-CARES‘ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதை கடந்தவுடன் மாதாந்திர உதவித் தொகையும், PM-CARESஇல் இருந்து 23 வயதை எட்டும்போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும்.
  • கோவிட்டால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி உறுதி செய்யப்படும்.
  • குழந்தைகள் உயர் கல்விக்கான கல்வி கடன் பெற உதவிசெய்து அதன் வட்டியை PM-CARES செலுத்தும்.
  • குழந்தைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 18 ஆண்டுகள் வரை ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு பெறுவார்கள் மற்றும் அதன் பிரீமியம் PM-CARES மூலம் செலுத்தப்படும்.

SCIENCE AND TECHNOLOGY


  1. IIT Hyderabad develops Oral solution for ‘black fungus’ for technology transfer
  • IIT Hyderabad develops an Oral solution for ‘black fungus’ for technology transfer.
  • This is a first-ever attempt to fabricate nanofibrous oral tablets of Amphotericin B for the potential cure of Leishmaniasis or Kala Azar.

 

  1. தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான ‘கருப்பு பூஞ்சை’க்கான வாய்வழி தீர்வை ஹைதராபாத் ஐஐடி உருவாக்குகிறது
  • ஐஐடி ஹைதராபாத் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான ‘கருப்பு பூஞ்சை’க்கான வாய்வழி தீர்வை உருவாக்குகிறது.
  • லீஷ்மேனியாசிஸ் அல்லது காலா அசாரை குணப்படுத்துவதற்கான ஆம்போடெரிசின் பி இன் நனோஃபைபர்ஸ் வாய்வழி மாத்திரைகளை உருவாகுவதற்கான முதல் முயற்சி இதுவாகும்.

  1. Karnataka launches India’s first ‘Precision Health Platform’ in Bangalore
  • ‘Precision Health Platform’, India’s first city-wide environmental surveillance platform for COVID-19, was launched in Bangalore.
  • The platform was launched in collaboration with the State Government of Karnataka in partnership with the United States Agency for International Development (USAID) and Skoll Foundation-supported COVIDactionCollab (CAC).
  • The platform tracks COVID through waste-water surveillance.

 

  1. இந்தியாவின் முதல் ‘துல்லிய சுகாதார மேடையை’ பெங்களூரில் அறிமுகப்படுத்தியது கர்நாடகா
  • கோவிட்-19க்கான இந்தியாவின் முதல் முழு நகர சுற்றுச்சூழல் கண்காணிப்பு தளமான ‘துல்லிய சுகாதார தளம்’ பெங்களூரில் தொடங்கப்பட்டது.
  • இந்த மேடை, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (USAID) மற்றும் ஸ்கோல் அறக்கட்டளை ஆதரவு பெற்ற கோவிடாக்ஷன்கோலப் (CAC) ஆகியவற்றுடன் இணைந்து கர்நாடக மாநில  அரசின்  ஒத்துழைப்புடன்  தொடங்கப்பட்டது.
  • இந்த தளம் கழிவு நீர் கண்காணிப்பு மூலம் கோவிட்டை கண்காணிக்கிறது.

APPOINTMENTS


  1. CRPF DG Kuldiep Singh gets additional charge of NIA
  • Director General of Central Reserve Police Force, CRPF Kuldiep Singh has been given additional charge of Director General of National Investigation Agency (NIA).
  • Kuldiep Singh will hold the additional post after the superannuation of Y C Modi.

 

  1. சிஆர்பிஎஃப் டிஜி குல்திப் சிங்கிற்கு என்ஐஏ கூடுதல் பொறுப்பு
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குநர் சி.ஆர்.பி.எஃப் குல்திப் சிங்கிற்கு தேசிய புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநர் கூடுதல்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • Y C மோடியின் ஓய்வுக்குப் பிறகு குல்திப் சிங் கூடுதல் பதவியை வகிப்பார்.

 AWARDS AND RECOGNITIONS


  1. Three Indian peacekeepers honoured posthumously with Dag Hammarskjold Medal
  • Three Indian peacekeepers honoured posthumously with Dag Hammarskjold Medal, a prestigious UN medal for their life sacrifice in the line of duty.
  • They are:
  1. Corporal Yuvraj Singh – United Nations Mission in South Sudan (UNMISS)
  2. Ivan Michael Picardo – United Nations Mission in South Sudan (UNMISS)
  3. Mulchand Yadav – United Nations Assistance Mission in Iraq (UNMISS)

 

  1. மூன்று இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு மரணத்திற்குப் பிறகு டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் வழங்கப்பட்டது
  • மூன்று இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு மரணத்திற்குப் பிறகு கடமையின்போது உயிர்தியாகம் செய்ததற்கான ஐ.நா.வின் மதிப்புமிக்க பதக்கமான டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • அவர்கள்:
  1. கார்ப்ரல் யுவராஜ் சிங் – தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் இயக்கம் (UNMISS)
  2. இவான் மைக்கேல் பிகார்டோ – தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் இயக்கம் (UNMISS)
  3. முல்சந்த் யாதவ் – ஈராக்கில் ஐக்கிய நாடுகள் உதவிக் குழு (UNMISS)

SPORTS


  1. IPL’s remaining matches to be held in UAE in September-October this year
  • IPL’s remaining matches to be held in UAE in September-October this year.
  • The Board of Control for Cricket in India (BCCI) announced the completion of the remaining matches of the Indian Premier League 2021 season in the United Arab Emirates (U.A.E) considering the monsoon season in India in the months of September-October this year.

 

  1. ஐ.பி.எல்.லின் மீதமுள்ள போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும்
  • ஐ.பி.எல்.லின் மீதமுள்ள போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்.
  • இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இந்தியன் பிரீமியர் லீக் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை நிறைவு செய்வதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்தது.

IMPORTANT DAYS


  1. International Day of UN Peacekeepers – 29 May
  • International Day of UN Peacekeepers is observed on 29 May every year. The first UN peacekeeping mission was set up to monitor a ceasefire between Israel and its Arab neighbours in 1948.
  • The International Day of UN Peacekeepers observed to pay tribute to those soldiers who laid down their lives to protect others.
  • 2021 theme: “The road to a lasting peace: Leveraging the power of youth for peace and security”

 

  1. சர்வதேச ஐ.நா அமைதிகாப்பாளர்கள் தினம் – 29 மே
  • சர்வதேச ஐ.நா அமைதிகாப்பாளர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் 29 மே அன்று அனுசரிக்கப்படுகிறது. 1948இல் இஸ்ரேலுக்கும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை கண்காணிக்க முதல் ஐ.நா அமைதிகாக்கும் பணி அமைக்கப்பட்டது.
  • ஐ.நா. அமைதிகாப்பாளர்கள் சர்வதேச தினம், மற்றவர்களைப் பாதுகாக்க உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனுசரிக்கப்பட்டது.
  • 2021 கருப்பொருள்: “ஒரு நீடித்த அமைதிக்கான பாதை: அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக இளைஞர்களின் சக்தியை ஊக்குவித்தல்”

  1. World Digestive Health Day – 29 May
  • World Digestive Health Day (WDHD) is observed on 29 May every year. The day was initiated by the World Gastroenterology Organisation (WGO).
  • The day aims to raise awareness regarding the treatment, prevention, prevalence and diagnosis of digestive health disease.
  • 2021 Theme: “Obesity: An Ongoing Pandemic”
  1. உலக செரிமான சுகாதார தினம் – 29 மே
  • உலக செரிமான சுகாதார தினம் (WDHD) ஒவ்வொரு ஆண்டும் 29 மே அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலக இரைப்பை குடலியல் அமைப்பால் (WGO) தொடங்கப்பட்டது.
  • செரிமான சுகாதார நோயின் சிகிச்சை, தடுப்பு, பரவல் மற்றும் கண்டறிதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2021 கருப்பொருள்: “உடல் பருமன்: ஒரு தொடர்ச்சியான தொற்றுநோய்”.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 29, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
29 th May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021