TNPSC Current Affairs – English & Tamil – June 24, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(24th June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 24, 2021


POLITY


  1. President Ram Nath Kovind appoints Abdul Rahim Musaliar Badharudeen as an Additional Judge of the Kerala High Court
  • President Ram Nath Kovind appointed Abdul Rahim Musaliar Badharudeen as an Additional Judge of the Kerala High Court for a period of two years.
  • Article 224 of the Constitution of India deals with the appointment of Additional and Acting Judges of the High Court by the President.
  1. கேரள உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக அப்துல் ரஹீம் முசாலியர் பதருதீனை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்தார்
  • அப்துல் ரஹீம் முசாலியர் பதருதீனை கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இரண்டு ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 224வது விதி, உயர் நீதிமன்றத்தின் கூடுதல் மற்றும் பதில் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிப்பதைக் குறித்து கூறுகிறது.

NATIONAL


  1. Ramgarh Vishdhari Sanctuary of Rajasthan becomes the 52nd Tiger Reserve of India
  • Ramgarh Vishdhari Sanctuary of Rajasthan became the 52nd Tiger Reserve of India and the 4th of Tiger Reserve of Rajasthan after Ranthambore, Sariska, and Mukundra tiger reserves.
  • The NTCA (National Tiger Conservation Authority) has given the approval to Ramgarh Vishdhari Sanctuary of Rajasthan for the Tiger Reserve. This sanctuary will extend support to the increasing number of tigers in Ranthambore.

NTCA (National Tiger Conservation Authority)

  • The NTCA is a statutory body under the Union Ministry of Environment, Forests and Climate Change constituted under the Wildlife (Protection) Act, 1972.
  • The objectives of NTCA are:
  1. Providing statutory authority to Project Tiger
  2. Fostering accountability of Center-State in management of Tiger Reserves by providing a basis for the MoU with states within our federal structure
  3. Providing for oversight by the Parliament
  4. Addressing livelihood interests of local people in areas surrounding the Tiger Reserves

 

Project Tiger

  • ‘Project Tiger’ is a Centrally Sponsored Scheme launched in 1973 that provides the required support for the conservation of the tiger in India. The project prevents the endangered tigers from getting extinct.

  1. ராஜஸ்தானின் ராம்கர் விஷ்தாரி சரணாலயம் இந்தியாவின் 52வது புலிகள் காப்பகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
  • ராஜஸ்தானின் ராம்கர் விஷ்தாரி சரணாலயம் இந்தியாவின் 52வது புலிகள் காப்பகமாகவும், ரந்தம்போர், சரிஸ்கா மற்றும் முகுந்திரா புலிகள் காப்பகங்களுக்குப் பிறகு ராஜஸ்தானின் 4வது புலிகள் காப்பகமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • என்.டி.சி. (தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்) ராஜஸ்தானின் ராம்கர் விஷ்தாரி சரணாலயத்திற்கு புலிகள் காப்பகத்திற்கான ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சரணாலயம் ரந்தம்போரில் அதிகரித்து வரும் புலிகளுக்கு ஆதரவு அளிக்கும்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்

  • என்.டி.சி.ஏ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972இன் படி அமைக்கப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
  • என்.டி.சி..வின் நோக்கங்கள்:
  1. புலி திட்டத்திற்கு சட்டரீதியான அதிகாரம் வழங்குதல்
  2. நமது கூட்டாட்சி கட்டமைப்பிற்குள் உள்ள மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒரு அடிப்படையை வழங்குவதன் மூலம், புலிகள் காப்பகங்களை நிர்வகிப்பதில் மத்திய-மாநில அரசின் பொறுப்புணர்வை ஊக்குவித்தல்
  3. பாராளுமன்றத்தின் மேற்பார்வைக்கு வழங்குதல்
  4. புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூர் மக்களின் வாழ்வாதார நலன்களை நிவர்த்தி செய்தல்.

புலி திட்டம்

  • புலி திட்டம் என்பது 1973இல் நாட்டில் புலியைப் பாதுகாப்பதற்கு தேவையான ஆதரவை வழங்கும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இந்த திட்டம் அழிந்து வரும் புலிகள் அழிந்து விடாமல் தடுக்கிறது.

  1. Karnam Malleswari was appointed as the Vice-Chancellor of the first Sports University of the Delhi Government
  • Karnam Malleswari was appointed as the Vice-Chancellor of the first Sports University established by the Delhi Government.
  • She is the first and the only Indian woman weightlifter to have won an Olympic medal for India.
  • She was conferred with the Arjuna Award, the Padma Shri Award and the Rajiv Gandhi Khel Ratna Award.

 

  1. டெல்லி அரசின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்ணம் மல்லேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்
  • டெல்லி அரசால் நிறுவப்பட்டுள்ள முதல் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்ணம் மல்லேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அவர் இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் மற்றும் ஒரே இந்திய பெண் பளுதூக்கும் வீராங்கனை ஆவார்.
  • அவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

  1. President Ram Nath Kovind is set to visit his village by special train
  • President Ram Nath Kovind is set to visit his village, Paraunkh in Uttar Pradesh, by a special train from the Safdarjung railway station, Delhi.
  • It is after a gap of 15 years that an incumbent Indian President is making a train journey. In 2006, P. J. Abdul Kalam boarded a special train from Delhi to Dehradun.

 

  1. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு ரயில் மூலம் சொந்த கிராமத்திற்கு வருகை தருகிறார்
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது சொந்த கிராமமான உத்தரப் பிரதேசத்தின் பாரவுங்க்கு தில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் செல்ல உள்ளார்.
  • 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போதைய இந்திய ஜனாதிபதி தான் ரயில் பயணத்தை மேற்கொள்கிறார். 2006ஆம் ஆண்டு, . பி. ஜே. அப்துல் கலாம் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு சிறப்பு ரயிலில் சென்றார்.

INTERNATIONAL


  1. BRICS nations agree on innovation co-operation
  • BRICS nations have unanimously agreed on an innovation co-operation at the 11thBRICS S&T Steering Committee Meeting. The proposal put forward by India would be considered at the BRICS Science, Technology and Innovation Entrepreneurship (STIEP) Working Group for elaborating the action plan.
  • The Steering Committee Meeting was hosted by the Department of Science and Technology (DST), Government of India. India currently holds the BRICS presidency.

 

  1. புதுமையான கண்டுபிடிப்பு ஒத்துழைப்புக்கு பிரிக்ஸ் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன
  • 11வது பிரிக்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டு குழு கூட்டத்தில் புதுமையான கண்டுபிடிப்பு ஒத்துழைப்புக்கு பிரிக்ஸ் நாடுகள் ஒருமனதாக சம்மதம் தெரிவித்தன. இந்தியா முன்வைத்துள்ள இந்தத் திட்ட முன்மொழிவு, பிரிக்ஸ் அறிவியல்தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முனைவு பணிக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விரிவான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படும்.
  • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா தற்பொழுது பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு தலைமையை வகிக்கிறது.

  1. Tax Inspectors Without Borders (TIWB) programme launched in Bhutan in partnership with India
  • Tax Inspectors Without Borders (TIWB), a joint initiative of the United Nations Development Programme (UNDP) and the Organisation for Economic Cooperation and Development (OECD) was launched in Bhutan. India was chosen as the partner and has provided the tax expert for this programme.

 

  1. எல்லைகளில்லா வரி ஆய்வளர்கள் திட்டம் பூட்டானில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது
  • ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் கூட்டு நடவடிக்கையான எல்லைகளில்லா வரி ஆய்வளர்கள் திட்டம் பூட்டானில் தொடங்கப்பட்டது. பங்குதாரராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த திட்டத்திற்கான வரி நிபுணரை வழங்கியுள்ளது.

SPORTS


  1. New Zealand wins its 1st-ever World Test Cricket Championship title
  • New Zealand beat India by eight wickets to win the first-ever World Test Cricket Championship title.
  • Indian Spinner Ashwin took his 71st wicket and has surpassed Pat Cummins’ record in the World Test Championship 2021.

 

  1. நியூசிலாந்து தனது முதல் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது
  • நியூசிலாந்து இந்தியாவை எட்டு விக்கெட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து தனது முதல் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
  • இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 71வது விக்கெட்டை எடுத்து பாட் கம்மின்ஸின் சாதனையை முறியடித்தார்.

  1. India launches its Official olympic theme song ahead of the Tokyo Olympic Games 2020
  • India’s official Olympic theme song was launched in a event ahead of the Tokyo Olympic Games 2020. Playback singer Mohit Chauhan has composed and sung the song titled ‘Lakshya Tera Samne Hai’. The event was organised by the Indian Olympic Association (IOA).

 

  1. டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா தனது அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் கருப்பொருள் பாடலை (தீம் சாங்) அறிமுகப்படுத்தியுள்ளது
  • டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளுக்கு முன்னதாக இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் கருப்பொருள் பாடல் (தீம் சாங்) ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னணி பாடகர் மோஹித் சவுகான்லக்ஷ்யா தேரா சம்னே ஹை என்ற பாடலை இயற்றி பாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) ஏற்பாடு செய்திருந்தது.

  1. Laurel Hubbard becomes the first transgender women (man changed into woman) to qualify for Tokyo Olympics
  • New Zealand weightlifter Laurel Hubbard has become the first openly transgender athlete to qualify for the Tokyo Olympics. She will compete in the women’s 87-kilogram class event.
  • The International Olympic Committee’s guidelines on transgender athletes allowed transgender athletes who have made the transition from male to female, to compete, if certain conditions are fulfilled.

 

  1. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் திருநங்கை வீராங்கனையானார் (ஆணிலிருந்து பெண்ணானார்) லாரல் ஹப்பார்ட்
  • டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் வெளிப்படையான திருநங்கை தடகள வீராங்கனை என்ற பெருமையை நியூசிலாந்து பளுதூக்கும் திருநங்கை வீராங்கனை லாரல் ஹப்பார்ட் பெற்றுள்ளார். அவர் பெண்கள் 87 கிலோ பிரிவில் போட்டியிடுவார்.
  • திருநங்கை விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வழிகாட்டுதல்கள், ஆணிலிருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் தகுதிபெற்றால் போட்டியிட அனுமதிக்கிறது.

  1. Ravindra Jadeja was ranked as the top all-rounder in the latest ICC Test rankings
  • Ravindra Jadeja replaced Holder as the top all-rounder in the latest ICC Test rankings.
  • Pat Cummins of Australia has topped in the ICC Test Bowlers’ rankings. India’s Ashwin was in the second spot and Tim Southee of New Zealand was in the third spot in the recently released rankings.
  • Steve Smith of Australia was the top batsman followed by Kane Williamson of New Zealand and Marnus Labuschagne of Australia in the ICC Test Batsmen

 

 

  1. சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்
  • சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஹோல்டரின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார்.
  • ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் அஸ்வின் இரண்டாவது இடத்திலும் மற்றும் நியூசிலாந்தின் டிம் சவுத்தி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
  • ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஸ்சாக்னே ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 24, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
24th June, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021