TNPSC Current Affairs – English & Tamil – June 27 & 28, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(27 & 28 th June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 27 & 28, 2021


  1. Maharashtra exports Dragon fruit or Kamalam to Dubai
  • ‘Dragon Fruit’, also known as Kamalam, has been exported to Dubai. The fruit is referred to as ‘Kamalam’ since the fruit has spikes and petals resembling lotus.
  • It is grown in countries such as Malaysia, Thailand, the Philippines, the USA and Vietnam. The fruit contains fiber, vitamins, minerals and antioxidants.
  • There are three main varieties of dragon fruit: Those with
  1. White flesh with pink skin
  2. Red flesh with pink skin
  3. White flesh with yellow skin
  • APEDA (Agricultural and Processed Food Products Export Development Authority) facilitated the export along with the Maharashtra government.

APEDA

  • Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) was established by the Government of India under the Agricultural and Processed Food Products Export Development Authority Act, 1985. It works under the Union Ministry of Commerce and Industries. It promotes the export of agricultural and processed food products from India. APEDA replaced the Processed Food Export Promotion Council (PFEPC).

 

  1. மகாராஷ்டிரா துபாய்க்கு டிராகன் அல்லது கமலம் பழங்களை ஏற்றுமதி செய்தது
  • டிராகன்பழம் அல்லது கமலம் பழம் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இப்பழத்தில் தாமரைப்பூவை ஒத்த முட்களும் இதழ்களும் உள்ளதால் இது கமலம் எனறு அழைக்கப்படுகிறது.
  • இந்தபழம் மலேசியாதாய்லாந்துபிலிப்பைன்ஸ்அமெரிக்கா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் விளைவிக்கப்படுகிறது.
  • டிராகன் பழத்தில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவை:
  1. இளஞ்சிவப்பு தோல், வெள்ளை சதை உடையவை
  2. இளஞ்சிவப்பு தோல், சிவப்பு சதை உடையவை
  3. மஞ்சள் தோல், வெள்ளை சதை உடையவை
  • APEDA (வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்) மகாராஷ்டிர அரசுடன் சேர்ந்து இந்த ஏற்றுமதிக்கு உதவியது.

 

APEDA

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் சட்டம், 1985இன் கீழ் மத்திய அரசால் நிறுவப்பட்டது. இது மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இவ்வமைப்பு இந்தியாவில் இருந்து விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலுக்கு (PFEPC) பதிலாக APEDA கொண்டுவரப்பட்டது.

 

  1. INS Tabar participates in joint exercises with friendly navies in Africa and Europe
  • Indian Naval Ship Tabar was deployed in joint exercises with friendly navies and will visit several ports in Africa and Europe till the end of September 2021 to enhance military cooperation with friendly nations.
  • INS Tabar is a Talwar-class stealth Frigate built for the Indian Navy in
  1. ஐஎன்எஸ் தபார் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளின் கடற்படைகளோடு கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுகிறது
  • நட்புநாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தபார்ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்வேறு துறைமுகங்களுக்கு செப்டம்பர் 2021 இறுதி வரை பயணம் மேற்கொள்ளும்.
  • ஐஎன்எஸ் தபார் என்பது ரஷ்யாவில் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்ட தல்வார் வகுப்பு மறைவு போர்க்கப்பல் ஆகும்.

 

  1. Union Minister Thawaarchand Gehlot launches the website for Nasha Mukt Bharat Abhiyaan on the International Day Against Drug Abuse and Illicit Trafficking
  • Union Minister for Social Justice and Empowerment Thawaarchand Gehlot launched the website for Nasha Mukt Bharat Abhiyaan on the International Day Against Drug Abuse and Illicit Trafficking (26 June).
  • The ‘Nasha Mukt Bharat Abhiyaan’ or a ‘Drugs-Free India Campaign’was started on 15 August 2020.

 

 

  1. போதை மருந்தில்லா பாரதம் திட்டத்தின் இணையதளத்தை மத்திய அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் தொடங்கி வைத்தார்
  • சர்வதேசபோதைப்பொருள் பாதிப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை (26 ஜூன்) முன்னிட்டு போதை மருந்தில்லா பாரதம் திட்டத்தின் இணையதளத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலோட் தொடங்கி வைத்தார்.
  • நஷா முக்த் பாரத் அபியான்அல்லதுபோதை மருந்தில்லா பாரதம்‘, 15 ஆகஸ்ட் 2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
  1. Scientists develop nanogenerators that can harvest electricity from vibrations
  • Scientists have developed a simple, cost-effective, bio-compatible, transparent triboelectric nanogenerators (TENG) that can generate electricity from vibrations all around for use in optoelectronics, self-powered devices and other biomedical applications.

 

  1. அதிர்வுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய நானோ மின்னியற்றிகள் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்
  • எளிதான, குறைந்தசெலவில், உயிரி-இணக்கமுடைய, ஒளி ஊடுருவும் டிரைபோ நானோ மின்னியற்றியை (TENG) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். ஒளி மின்னணுவியல், சுயமாக இயங்கும் உபகரணங்கள் மற்றும் இதர உயிரி மருத்துவ செயல்முறைகளில் பயன்படுத்தும் வகையில் சுற்றியுள்ள      அதிர்வுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த நேனோ மின்னியற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.

 

  1. Sajan Prakash becomes the first Indian swimmer to qualify for the Tokyo Olympics 2020
  • Sajan Prakash has become the first Indian swimmer to qualify for the Tokyo Olympics 2020.
  • The Tokyo Olympics 2020 was planned to be held last year but it was postponed due to the COVID-19 pandemic. It will begin on 23 July 2021.

 

  1. சஜன் பிரகாஷ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020க்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரரானார்
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020க்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரர் என்ற பெருமையை சஜன் பிரகாஷ் பெற்றுள்ளார்.
  • டோக்கியோ ஒலிம்பிக் 2020 கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. 23 ஜூலை 2021 அன்று ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும்.

 

  1. Javelin thrower Neeraj Chopra wins bronze medal at Kuortane Games in Finland
  • Indian Javelin thrower Neeraj Chopra won the bronze medal at the Kuortane Games in Finland. Johannes Vetter of Germany and Keshorn Walcott of Trinidad and Tobago won gold and silver

 

  1. பின்லாந்தில் நடந்த கூர்த்டேன் விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்
  • பின்லாந்தில் நடைபெற்ற கூர்த்டேன் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெண்கலப் பதக்கம் வென்றார். ஜெர்மனியின் ஜோகன்னஸ் வெட்டர் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கெஷார்ன் வால்காட் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

 

  1. Chief Minister of Tamil Nadu announces Rs. 3 crore prize money for gold medal winners from Tamil Nadu in the Tokyo Olympics 2020
  • Chief Minister of Tamil Nadu announced a prize money of 3 crores for gold medal winners from Tamil Nadu in the Tokyo Olympics 2020. He also announced that silver medalists from the state would be given Rs. 2 crores and bronze medalists would be given Rs. 1 crore.
  • Olympic participants from Tamil Nadu:

Yachting:

  • Netra Kumanan
  • C. Ganapathy
  • Varun Thakkar

Table tennis

  • Sathyan
  • Sarath Kamal

Fencing

  • Bavani Devi

Paralympics

  • Mariappan

 

  1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020இல் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020இல் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு மூன்று கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். வெள்ளி பதக்கம் வெல்பவருக்கு இரண்டு கோடி ரூபாய் மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டு ஒலிம்பிக் பங்கேற்பாளர்கள்:

படகுப்பந்தயம் (Yachting):

  • நேத்ரா குமணன்
  • கே. சி. கணபதி
  • வருண் தக்கர்

மேசைப்பந்தாட்டம் (Table tennis):

  • ஜி. சத்யன்
  • சரத் கமல்

வாள்வீச்சு (Fencing)

  • பவானி தேவி

பாராலிம்பிக்

  • மாரியப்பன்

 

  1. Micro, Small, and Medium-sized Enterprises (MSME) Day – 27 June
  • 27 June has been observed as Micro, Small, and Medium-sized Enterprises (MSME) Day to recognise the importance of these enterprises and to raise public awareness of their contribution to sustainable development and the global economy.
  • The United Nations General Assembly designated 27 June as Micro, Small, and Medium-sized Enterprises Day in 2017.
  • 2021 Theme: “MSME 2021: Key to an inclusive and sustainable recovery”

 

ENTERPRISE INVESTMENT (Rs.) TURNOVER (Rs.)
Micro Less than 1 crore Less than 5 crores
Small Less than 10 crores Up to 50 crores
Medium Less than 20 crores Up to 100 crores

 

 

  1. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம் (MSME) 27 ஜூன்
  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, நிலையான வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு அவற்றின் பங்களிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 27 ஜூன் மாதம் அன்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 27 ஜூனை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினமாக 2017இல் அறிவித்தது.
  • 2021 கருப்பொருள்: எம்.எஸ்.எம். 2021: ஒரு உள்ளடக்கிய மற்றும் நிலையான மீட்சியின் திறவுகோல் (MSME 2021: Key to an inclusive and sustainable recovery)

 

நிறுவனம் முதலீடு (ரூ.) விற்றுமுதல் (ரூ.)
குறு நிறுவனம் 1 கோடிக்கும் குறைவு 5 கோடிக்கும் குறைவு
சிறு நிறுவனம் 10 கோடிக்கும் குறைவு 50 கோடி வரை
நடுத்தர நிறுவனம் 20 கோடிக்கும் குறைவு 100 கோடி வரை

 

  1. India successfully test-fires Agni Prime missile
  • India successfully test-fired Agni Prime missile from a mobile launcher off the Abdul Kalam Island in Odisha.
  • Agni Prime is a new generation nuclear-capable surface-to-surface ballistic missile. It has a range of 1000 to 2000 km and it was developed by DRDO.
  • It is an advanced variant in the Agni series of missiles.

 

  1. அக்னி பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது
  • ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் உள்ள மொபைல் லாஞ்சரில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.
  • அக்னி பிரைம் என்பது ஒரு புதிய தலைமுறை அணுசக்தி திறன் கொண்ட தரையிலிருந்து தரைக்கு பாயும் ஏவுகணை ஆகும். இது 1000 முதல் 2000 கி.மீ. தூரம் வரை பாயும். இது டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்டது.
  • இது அக்னி ஏவுகணை தொடரில் ஒரு மேம்பட்ட மாறுபாடு ஆகும்.

 

  1. 10. Birth centenary of V. Narasimha Rao – 28 June 2021
  • V. Narasimha Rao (Pamulaparthi Venkata Narasimha) was born on 28 June 1921.
  • He was an Indian lawyer and politician who served as the 9th Prime Minister of India from 1991 to 1996. He was the first Prime Minister from South India. He succeeded Rajiv Gandhi.
  • The 100th birth anniversary of P. V. Narasimha Rao was celebrated on 28 June

 

  1. 10. பி. வி. நரசிம்ம ராவ் நூற்றாண்டு பிறந்தநாள் விழா – 28 ஜூன் 2021
  • பி. வி. நரசிம்ம ராவ் (பமுலாபார்த்தி வெங்கட நரசிம்மா) 28 ஜூன் 1921 அன்று பிறந்தார்.
  • அவர் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் 9வது பிரதமராக பணியாற்றிய ஒரு இந்திய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் தென்னிந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமராவார். ராஜீவ் காந்திக்குப் பிறகு அவர் பதவிக்கு வந்தார்.
  • பி. வி. நரசிம்ம ராவின் 100வது பிறந்த நாள் விழா 28 ஜூன் 2021 அன்று கொண்டாடப்படுகிறது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 27 & 28, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
27 & 28 th June, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021