TNPSC Current Affairs – English & Tamil – August 14, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (August 14, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – August 14, 2021


IMPORTANT DAY


1. Prime Minister Narendra Modi declares 14 August to be observed as Partition Horrors Remembrance Day every year

  • Prime Minister Narendra Modi declared that in memory of the struggles and sacrifices of our people,14 August will be observed as Partition Horrors Remembrance Day every year.
  • Declaration of such a day would remind the present and future generations, the pains and suffering faced by the people during the partition of India.

 

1. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 அன்று பிரிவினை அதிர்ச்சி நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்

  • நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் 14 ஆகஸ்ட் அன்று பிரிவினை அதிர்ச்சி நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
  • இத்தகைய நாளைப் பிரகடனம் செய்வது, பிரிவினையின் போது மக்கள் எதிர்கொண்ட வலியையும் துன்பத்தையும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் விதமாக அமையும்.

NATIONAL


2. Four more sites of India added to Ramsar list as wetlands of international importance

  • Four more wetlands from India gets recognition from the Ramsar Secretariat as Ramsar sites.
  • The sites that are added to Ramsar sites are Thol and Wadhwana from Gujarat and Sultanpur and Bhindawas from Haryana.
  • With this, the number of Ramsar sites in India increases to 46 and the surface area covered by these sites now is 1,083,322 hectares.

 

2. இந்தியாவின் மேலும் நான்கு இடங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

  • இந்தியாவில் இருந்து மேலும் நான்கு ஈரநிலங்கள் ராம்சார் செயலகத்திலிருந்து ராம்சார் இடங்களாக அங்கீகாரம் பெறுகின்றன.
  • ராம்சார் இடங்களாக புதிதாக குஜராத்தைச் சேர்ந்த தோல் மற்றும் வாத்வானா மற்றும் ஹரியானாவின் சுல்தான்பூர் மற்றும் பிந்தாவாஸ் சேர்க்கப்பட்டன .
  • இதன் மூலம், இந்தியாவில் ராம்சார் இடங்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிக்கிறது, மேலும் இந்த இடங்களின் மொத்த பரப்பளவு மேலும் இந்த இடங்களின் மொத்த பரப்பளவு இப்போது 1,083,322 ஹெக்டேர் ஆகும்.

3. Union Minister for Social Justice and Empowerment Dr. Virendra Kumar launches TAPAS

  • Union Minister for Social Justice and Empowerment Virendra Kumar launched an online portal called TAPAS (Training for Augmenting Productivity and Services).
  • TAPAS is the initiative of the National Institute of Social Defence (NISD), Ministry of Social Justice and Empowerment, to provide access to lectures by subject experts, study material and more without compromising on the quality of teaching.

 

3. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தபஸ் (TAPAS) ஆன்லைன் தளத்தை தொடங்கி வைத்தார்

  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தபஸ் (TAPAS) (உற்பத்தித்திறன் மற்றும் சேவைகளை அதிகரிப்பதற்கான பயிற்சி) என்ற ஆன்லைன் தளத்தைத் தொடங்கினார்.
  • தபஸ் (TAPAS) என்பது தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (NISD), சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். இது கற்பித்தல் தரத்தில் சமரசம் செய்யாமல் வல்லுநர்கள், ஆய்வுப் பொருட்கள் மற்றும் விரிவுரைகளை அணுகுவதற்கு வழிவகை செய்கிறது.

4. Employees of SAIL wins the highest number of Prime Minister’s Shram Awards

  • The employees of Steel Authority of India Limited (SAIL), under the Ministry of Steel, won the Prime Minister’s Shram Awards for the Performance Year 2018 for their exemplary workmanship, innovativeness and dedication to the duty.
  • Out of the total 69 awardees, 31 awardees are from SAIL.
  • This is the highest number of PM’s Shram awards won by the employees of any organisation during the year.

 

4. பிரதமரின் ஷ்ரம் விருதுகளை அதிக எண்ணிக்கையில் வென்ற SAIL ஊழியர்கள்

  • எஃகு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய எஃகு நிறுவனம் (SAIL) ஊழியர்கள், சிறந்த செயல்திறன், புதுமை மற்றும் கடமை அர்ப்பணிப்புக்காக 2018 செயல்திறன் ஆண்டிற்கான பிரதமரின் ஷ்ராம் விருதுகளை வென்றனர்.
  • விருது பெற்ற 69 பேரில் 31 பேர் இந்திய எஃகு நிறுவனம் (SAIL)ஐ சேர்ந்தவர்கள்.
  • இந்த ஆண்டு பிரதமரின் ஷ்ராம் விருதுகள் வென்ற எந்தவொரு நிறுவனத்தை காட்டிலும் இதுவே அதிகமாகும்.

5. Indore becomes India’s first ‘water plus’ city

  • Madhya Pradesh’s commercial capital Indore has been declared as India’s first ‘water plus’ city under the Swachh Survekshan 2021.
  • Indore has set an example for other cities by becoming the first ‘Water+’ certified city under the Swachh Survekshan 2021.

 

5. இந்தியாவின் முதல்வாட்டர் பிளஸ்‘ (‘water plus’) நகரமாக இந்தூர் மாறியது

  • மத்தியப் பிரதேசத்தின் வர்த்தகத் தலைநகரான இந்தூர், ஸ்வச் சர்வேக்ஷன் 2021இன் கீழ் இந்தியாவின் முதல் நீர் பிளஸ்‘ (‘water plus’) நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தூய்மை சர்வேக்ஷன் 2021இன் கீழ் முதல் நீர்+’ (‘Water+’) சான்றளிக்கப்பட்ட நகரமான இந்தூர், மற்ற நகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது.

6. Four Indian airports are on the Skytrax list for ‘2021’

  • Four Indian airports Delhi, Hyderabad, Mumbai and Bengaluru found a place in the world’s 100 best airports by UK-based airline and airport review consultancy Skytrax.
  • The top five in Skytrax’s World’s Top 100 Airports 2021 list are — Doha Hamad, Tokyo Haneda, Singapore Changi, Seoul Incheon and Tokyo Narita.

 

6. நான்கு இந்திய விமான நிலையங்கள் 2021க்கான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) பட்டியலில் உள்ளன

  • டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு இந்திய விமான நிலையங்கள் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய மறு ஆய்வு ஆலோசனை ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) மூலம் உலகின் 100 சிறந்த விமான நிலையங்களில் இடம் பெற்றுள்ளன.
  • ஸ்கைட்ராக்ஸின் உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் 2021 பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளவை – தோஹா ஹமாத், டோக்கியோ ஹனீடா, சிங்கப்பூர் சாங்கி, சியோல் இன்சியான் மற்றும் டோக்கியோ நரிட்டா.

7. IDFC FIRST bank brings ‘Honour FIRST’ banking solutions for Navy veterans and serving personnel

  • The Indian Navy has signed a Memorandum of Understanding (MoU) with the Infrastructure Development Finance Company (IDFC) FIRST Bank to initiate ‘Honour FIRST’, a premium banking solution for serving personnel and veterans of the Indian Navy.
  • It is designed especially for Armed Forces and its veterans, the Honour FIRST Defence Account is supported by a dedicated team of defence veterans.

 

7. ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி கடற்படை வீரர்கள் மற்றும் பணியாற்றும் பணியாளர்களுக்குஹானர் ஃபர்ஸ்ட்வங்கி தீர்வுகளை கொண்டு வருகிறது

  • இந்திய கடற்படையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் வீரர்களுக்கான பிரீமியம் வங்கித் தீர்வான ஹானர் ஃபர்ஸ்ட்’ (‘Honour FIRST’) தொடங்க ஐ.டி.ஃப்.சி ஃபிர்ஸ்ட் வங்கியுடன் இந்திய கடற்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இது, குறிப்பாக ஆயுதப்படைகள் மற்றும் அதன் வீரர்களின் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது, ஹானர் ஃபர்ஸ்ட்(‘Honour FIRST’) கண்க்கை பாதுகாப்பு வீரர்கள் ஒரு பிரத்யேக குழு ஆதரிக்கிறது.

DAY IN HISTORY


8. Pakistan’s Independence Day celebrated on 14 August

  • The Indian Independence Act of 1947 gave birth to two nations, India and Pakistan.
  • Every year 14 August is observed as Pakistan’s Independence Day, as it commemorates the day when Pakistan achieved independence following the end of British rule in 1947. Pakistan is celebrating its 75th Independence Day.

 

8. பாகிஸ்தானின் சுதந்திர தினம் 14 ஆகஸ்ட் அன்று கொண்டாடப்படுகிறது

  • 1947ஆம் ஆண்டு இந்திய சுதந்திரச் சட்டம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளைப் உருவாக்கியது.
  • 1947ல் பிரிட்டிஷ் ஆட்சி முடிந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் 14 ஆகஸ்ட் பாகிஸ்தானின் சுதந்திர தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • பாகிஸ்தான் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

9. 14 August – Day of the Establishment of Bombay High Court

  • The high court of Bombay was established on 14 August 1862.
  • It is the high court for the states of Maharastra and Goa and the Union Territories of Dadra and Nagar Haveli, Daman and Diu.
  • Sir Mathew Richard Sausse was the first Chief Justice of Bombay High court.
  • The Present Chief Justice of the Court is Hon’ble Justice Dipankar Datta.

 

9. ஆகஸ்ட் 14 – பம்பாய் உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது

  • பம்பாய் உயர் நீதிமன்றம் 14 ஆகஸ்ட் 1862 அன்று நிறுவப்பட்டது.
  • இது மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவிற்கான உயர் நீதிமன்றமாகும்.
  • சர் மேத்யூ ரிச்சர்ட் சாஸ்ஸே, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தார்.
  • நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி மாண்புமிகு நீதிபதி தீபங்கர் தத்தா ஆவார்.

KNOW AN INSTITUTION


10. International Monetary Fund (IMF)

  • The International Monetary Fund (IMF) is an organisation of 190 countries, working to foster global monetary cooperation, secure financial stability, facilitate international trade, promote high employment and sustainable economic growth, and reduce poverty around the world.
  • Its headquarters is located in Washington, U.S.
  • It is formed on 27 December 1945.

 

10. சர்வதேச நாணய நிதியம் (IMF)

  • சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பது 190 நாடுகளின் அமைப்பாகும். இது உலகளாவிய நாணய ஒத்துழைப்பை வளர்க்கவும், நிதியை பாதுகாக்கவும், சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கவும், உயர் வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உலகெங்கிலும் வறுமையைக் குறைக்கவும் செயல்படுகிறது.
  • இதன் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ளது.
  • இது 27 டிசம்பர் 1945 அன்று உருவாக்கப்பட்டது.