TNPSC Current Affairs – English & Tamil – April 21, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(21st April, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 21, 2021


1. Civil Services day being celebrated on 21 April

  • Every year, 21 April is observed by all the Civil Services to re-dedicate and re-commit themselves to the cause of the people.
  • The Government of India chose 21 April as the National Civil Service Day as on this day, the country’s first home minister, Sardar Vallabhbhai Patel, addressed the newly appointed Administrative Services Officers in 1947.

 

1. குடிமைப் பணிகள் தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் 21 ஏப்ரல் அனைத்து குடிமை பணி சேவையாளர்களும் மக்களின் நலனுக்காக தங்களை அர்ப்பணிக்கவும் ஈடுபடவும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய அரசாங்கம் 21 ஏப்ரல் குடிமைப் பணிகள் தினமாக தேர்வு செய்தது ஏனெனில், இந்த நாளில் நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் 1947 இல் புதிதாக நியமிக்கப்பட்ட குடிமைப் பணிகள் அதிகாரிகளிடையே உரையாற்றினார்.

2. Centre extends insurance scheme for health workers

  • Central government has extended the insurance scheme under the Pradhan Mantri Garib Kalyan Package for health workers for a period of one year.
  • Health and Family Welfare Minister Dr. Harshvardhan said that Pradhan Mantri Garib Kalyan Package had provided a safety net to the dependents of corona warriors who lost their lives during the Covid-19 pandemic.

 

2. சுகாதார ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்துகிறது

  • சுகாதார ஊழியர்களுக்கான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பின் கீழ் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு ஒரு வருட காலத்திற்கு நீட்டித்துள்ளது. 
  • கோவிட் -19 நோய்ப்பரவலின் போது கொரோனாவினால் உயிர் இழந்தவர்களை சார்ந்தவர்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பு பாதுகாப்பு வலையை வழங்கியுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

3. Cabinet approved an MoU between India and Bangladesh

  • The Union Cabinet has given its approval to the Memorandum of Understanding (MoU) between the Director-General of Trade Remedies, India, and the Bangladesh Trade and
  • The primary objective of the MOU is to promote cooperation between the two countries in the area of Trade Remedies, covering the broad activities related to the exchange of information, undertaking capacity building activities and activities in accordance with various provisions of the World Trade Organization.

 

3. இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்ததிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது

  • இந்திய குடியரசின் வர்த்தக தீர்வுகள் தலைமை இயக்குநர் மற்றும் பங்களாதேஷ் வர்த்தக மற்றும் கட்டண ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • உலக வர்த்தக அமைப்பின் பல்வேறு விதிகளுக்கு இணங்க தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான பரந்த நடவடிக்கைகளை உள்ளடக்கிய வர்த்தக தீர்வுகள் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கமாகும்.

4. Indian Air force (IAF) officer to represent India for Paralympics Qualifiers

  • Wing Commander Shantanu, a serving officer of the Indian Air Force, has been selected to represent India at the World Rowing Asia/ Oceania Continental Olympic and Paralympic Qualification Regatta which is going to be held in May 2021 at Tokyo, Japan.
  • He picked up the sport in April 2019 and was selected by The Rowing Federation of India for the October 2019 Asian Rowing Training Camp and Championship which was held in South Korea.

 

4. பாரா ஒலிம்பிக்ஸ் தகுதிப் போட்டிகளுக்காக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய விமானப் படை (ஐ.ஏ.எஃப்) அதிகாரி

  • ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 மே மாதம் நடைபெறவிருக்கும் உலக ரோயிங் ஆசியா / ஓசியானியா கான்டினென்டல் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் தகுதி ரெகாட்டாவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த இந்திய விமானப்படையின் அதிகாரியான விங் கமாண்டர் சாந்தனு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அவர் ஏப்ரல் 2019 இல் இவ்விளையாட்டைத் தேர்ந்தெடுத்தார் மற்றும் தென் கொரியாவில் அக்டோபர் 2019 இல் நடைபெற்ற ஆசிய ரோயிங் பயிற்சி முகாம் மற்றும் சாம்பியன்ஷிப்பிற்காக இந்திய ரோயிங் கூட்டமைப்பு இவரை தேர்வு செய்தது. 

5. Satellite-based real-time monitoring of Himalayan glacial catchments

  • Satellite-based real-time monitoring of Himalayan glacial catchments would improve understanding of flood risk in the region and help inform an early flood warning system that could help curb disaster and save human lives, says a recent study.
  • This study was carried out by Dr. Tanuj Shukla and Prof. Indra Sekhar Sen, Associate Professor from Indian Institute of Technology, Kanpur, with support from the Department of Science and Technology, Government of India, has been published in the international journal ‘Science’.

 

5. இமாலய பனிக்கட்டி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான நிகழ்நேர கண்காணிப்பு

  • இமயமலை பனிப்பாறை நீர்ப்பிடிப்புகளை செயற்கைக்கோள் அடிப்படையிலான நிகழ்நேர கண்காணிப்பு இப்பகுதியில் வெள்ள அபாயத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதோடு, பேரழிவைத் தடுக்கவும் மனித உயிர்களைக் காப்பாற்றவும் உதவும் ஆரம்பகால வெள்ள எச்சரிக்கை முறையைத் தெரிவிக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
  • இந்த ஆய்வை டாக்டர் தனுஜ் சுக்லா மற்றும் இந்திய தொழில்நுட்பம் கழகம், கான்பூரை இணைப் பேராசிரியர் இந்திரா சேகர் சென் ஆகியோர் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் சர்வதேச இதழான ‘Science’ இல் வெளியிட்டுள்ளனர்.

6. World Creativity and Innovation Day celebrated on April 21

  • World Creativity and Innovation Day is celebrated on April 21 to raise awareness around the importance of creativity and innovation in problem-solving with respect to advancing the United Nations sustainable development goals, also known as the “global goals”.
  • The first World Creativity and Innovation Day was celebrated on 21 April 2018.

 

6. உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு நாள்

  • உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம் ஏப்ரல் 21 அன்று கொண்டாடப்படுகிறது, இது “உலகளாவிய இலக்குகள்” என்றும் அழைக்கப்படும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னெடுப்பது தொடர்பாக சிக்கல் தீர்ப்பதிலும் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • முதல் உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு நாள் 21 ஏப்ரல் 2018 அன்று கொண்டாடப்பட்டது.

7. Maharashtra’s Priyanka Mohite becomes the first Indian woman to climb Mt Annapurna

  • Priyanka Mohide, a 28-year-old woman from Maharashtra, has climbed the Annapurna Peak, the world’s 10th highest peak. She was the first Indian woman to perform this feat.
  • Annapurna is a peak located in Nepal in the Himalayas. It has an elevation of 8,091 meters. 
  • Priyanka has climbed the world’s highest peak Everest (8,849 meters) in 2013, Lotus peak (8,516 meters) in 2018, Makkalu Peak (8,485 meters), and Kilimanjaro peak (5,895 meters) in 2016.
  • Priyanka has won the Maharashtra Government’s ‘Shiva Chhatrapati ‘Award for adventure sports in 2017-2018.’

 

7. மகாராஷ்டிராவின் பிரியங்கா மோஹிட் மவுண்ட் அன்னபூர்ணாவை சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்

  • உலகின் 10-ஆவது உயரமான மலைச் சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 28 வயது பெண் பிரியங்கா மோஹிதே. இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியப் பெண் அவர்.
  • அன்னபூர்ணா சிகரம் இமய மலைத் தொடரில் நேபாளத்தில் அமைந்துள்ளது. இது 8,091 மீட்டர் உயரம் கொண்டது.
  • கடந்த 2013-இல் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் (8,849 மீட்டர்), 2018-இல் லோடஸ் சிகரம் (8,516 மீட்டர்), 2016-இல் மக்காலு சிகரம் (8,485 மீட்டர்), கிளிமஞ்சாரோ சிகரம் (5,895 மீட்டர்) ஆகியவற்றில் பிரியங்கா ஏறியுள்ளார்.
  • கடந்த 2017-2018இல் சாகச விளையாட்டுகளுக்காக மகாராஷ்டிர அரசின் “சிவ சத்ரபதி’ விருது பெற்றுள்ளார் பிரியங்கா.

8. Excavation work begins at Gangaikonda Cholapuram

  • Preliminary excavations are underway at Maligaimet, Gangaikonda Cholapuram, Ariyalur district.
  • Excavations are currently in full swing to find historical treasures such as the palace where King Rajendra Chola lived, copper plates, and used objects.

 

8. கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

  • அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
  • மாமன்னன் ராஜேந்திர சோழன் வாழ்ந்த அரண்மனை, செப்பேடுகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள் போன்ற வரலாற்று பொக்கிஷங்களைக் கண்டறியும் வகையில் அகழாய்வுப் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.

9. 254th Jayanti Festival of Thiyagaraja Swamy at Thiruvaiyar

  • The 254th Jayanti festival of Thiyagaraja Swamy (one of the trinity of the Carnatic music) was held at the tomb of Thiruvaiyaru Thiyagaraja Swamy.

 

9. 254-வது திருவையாற்றில் தியாகராஜர் ஜெயந்தி விழா

  • கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமியின் 254-வது ஜெயந்தி விழா, திருவையாறு தியாகராஜ சுவாமியின் கல்லறையில் நடைபெற்றது.

10. India ranks 142 in World Press Freedom Index 2021: Norway tops

  • India has been placed at 142nd position among 180 countries in the World Press Freedom Index 2021 published by the international journalism not-for-profit body, Reporters Without Borders (RSF).
  • Norway has retained its top spot for the fifth year, followed by Finland and Denmark. Eritrea is at the bottom of the index at the 180th position. Other countries at the bottom are China (177), North Korea (179), and Turkmenistan (178).

 

10. உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டெண் 2021-ல் இந்தியா 142 வது இடத்தில் உள்ளது: நார்வே முதலிடம்

  • உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டெண் 2021-ல் 180 நாடுகளில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது.
  • நார்வே ஐந்தாவது ஆண்டாக தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து பின்லாந்து மற்றும் டென்மார்க். எரித்திரியா 180 வது இடத்தில் குறியீட்டின் கீழே உள்ளது. சீனா (177), வட கொரியா (179), மற்றும் துர்க்மேனிஸ்தான் (178) ஆகியவை கீழே உள்ள மற்ற நாடுகள் ஆகும்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 21, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
21st April, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – April 2021