TNPSC Current Affairs – English & Tamil – August 17, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (August 17, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – August 17, 2021


IMPORTANT DAYS


1. Atal Bihari Vajpayee Memorial Day observed on 16 August

  • Vice President Venkaiah Naidu and Prime Minister Narendra Modi paid tributes to former Prime Minister Atal Bihari Vajpayee on his Memorial Day.
  • Vajpayee was the first prime minister from a non-congress party who ruled for 5 years, passed away on16 August 2018 at the age of 93.
  • In 2015, he was awarded the country’s highest honour, the ‘Bharat Ratna’. His birthday, 25 December, is celebrated as ‘Good Governance Day’.

 

1. அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம் 16 ஆகஸ்ட் அன்று அனுசரிக்கப்படுகிறது

  • முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினா்.
  • காங்கிரஸ் கட்சியைச் சாராமல் 5 ஆண்டுகள் பிரதமராக இருந்த முதல் தலைவா் என்ற பெருமைக்குரிய வாஜ்பாய், கடந்த 16 ஆகஸ்ட் 2018இல் தனது 93ஆவது வயதில் காலமானாா்.
  • 2015ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் மிக உயரிய கௌரவமான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது பிறந்த தினமான 25 டிசம்பா்சிறந்த நிா்வாக தினமாக கொண்டாடப்படுகிறது.

TAMIL NADU


2. Davidar appointed as advisor to the Tamil Nadu e-Governance agency

  • Retired IAS officer W. C Davidar is appointed as the advisor to the Tamil Nadu e-Governance agency functioning under the Information Technology Department of the Government of Tamil Nadu.
  • Tamil Nadu e-Governance agency undertakes the task of expanding, integrating and improving the utilisation of services provided by the Government through the utilisation of the network of Government service centers.

 

2. தமிழக மின் ஆளுமை முகமை ஆலோசகராக டேவிதார் நியமனம்

  • தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி. டேவிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • அரசு சேவை மையங்களின் வலையமைப்பை பயன்படுத்துவதன் மூலம் அரசு வழங்கும் சேவைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல், ஒருங்கிணைத்தல், மேம்படுத்துதல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்கிறது.

3. Thoothukudi Port sets new record in coal handling

  • Thoothukudi V. O. Chidambaran Port has set a new record by handling 55,785 tonnes of coal in 24 hours.
  • The previous record was 55,363 tonnes of coal handled in 24 hours at the same depot.

 

3. நிலக்கரி கையாளுவதில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

  • தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் 24 மணி நேரத்தில் 55,785 டன் நிலக்கரியைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
  • இதே சரக்குத் தளத்தில் 24 மணி நேரத்தில் 55,363 டன் நிலக்கரி கையாளப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது.

4. Railway Ticket Examiner wins bronze in National Weightlifting Championship

  • National Weightlifting Championships are held annually on behalf of the Weightlifting Federation of India. Ajith (22), a Tamil Nadu player working as an employee in the Chennai Railway Division, participated in the senior weightlifting division.
  • He won a bronze medal in the 73 kg weight category.

 

4. தேசிய பளுதூக்கும் போட்டியில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் வெண்கலம் வென்று சாதனை

  • இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு சார்பில் தேசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் சென்னை ரயில்வே கோட்டத்தில் ஊழியராக பணியாற்றும் தமிழக வீரர் என். அஜித் (22), சீனியர் பளுதூக்கும் பிரிவில் கலந்துகொண்டார்.
  • 73 கிலோ எடை பிரிவில் அவர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

5. IOC’s ‘Parivarthan’ initiative to provide sports training to prisoners

  • Indian Oil Corporation has launched the ‘Parivarthan’ initiative in selected prisons across the country.
  • The initiative was launched by Indian Oil Corporation President Kant Madhav Vaidya via video conference at Puzhal Central Jail, Chennai.
  • The ‘Parivarthan’ initiative will improve the health and self-confidence of prisoners who receive sports training.

 

5. சிறைக் கைதிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்க ஐஓசி நிறுவனத்தின்பரிவர்த்தன்முன்முயற்சி

  • இந்தியன் ஆயில் நிறுவனம் நாடெங்கிலும் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைச்சாலைகளில் ‘பரிவர்த்தன் என்கிற முன்முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த முன்முயற்சியை சென்னை, புழல் மத்திய சிறையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் காந்த் மாதவ் வைத்யா காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
  • பரிவர்த்தன் முன் முயற்சியின் மூலம் விளையாட்டுப் பயிற்சி பெறும் சிறைவாசிகளின் உடல் நலமும் தன்னம்பிக்கையும் மேம்படும்.

NATIONAL


6. Union Agriculture Minister inaugurated the world’s second-largest refurbished gene bank

  • Union Minister for Agriculture and Farmers Welfare, Shri Narendra Singh Tomar inaugurated the world’s second-largest refurbished state-of-the-art National Gene Bank at the National Bureau of Plant Genetic Resources (NBPGR), Pusa, New Delhi.
  • The National Gene Bank was established in the year 1996 to preserve the seeds of Plant Genetic Resources (PGR) for future generations, it can preserve about one million germplasm in the form of seeds.

 

6. உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட மரபணு வங்கியை மத்திய வேளாண் அமைச்சர் திறந்து வைத்தார்

  • புதுடெல்லியின் பூசாவில் உள்ள தேசிய தாவர மரபணு வள பணியகத்தில் (NBPGR) உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட அதிநவீன தேசிய மரபணு வங்கியை மத்திய வேளாண் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
  • 1996ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய மரபணு வங்கி, எதிர்கால சந்ததியினருக்கு தாவர மரபணு வளங்களின் விதைகளைப் பாதுகாக்க நிறுவப்பட்டது, இது விதைவடிவில் சுமார் ஒரு மில்லியன் ஜெர்ம்பிளாசத்தைப் பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

7. Kerala launches India’s first Drone Forensic Lab

  • The Kerala Police launched the country’s ‘first-of-its-kind’ Drone Forensic Lab and Research Centre to boost surveillance of terrorist activities and anti-India elements.
  • This lab-cum-research centre will look into both utility and threat aspects of a drone. It’s a public-private partnership initiative.

 

7. இந்தியாவின் முதல் ட்ரோன் தடயவியல் ஆய்வகத்தை கேரளா அறிமுகப்படுத்தியுள்ளது

  • பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் கண்காணிப்பை அதிகரிக்க கேரள காவல்துறை நாட்டின் முதல் ட்ரோன் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது.
  • இந்த ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையம் ஒரு ட்ரோனின் பயன்பாடு மற்றும் அச்சுறுத்தல் அம்சங்கள் இரண்டையும் ஆராயும். இது ஒரு பொது-தனியார் கூட்டு முயற்சி ஆகும்.

8. ‘Operation Blue Freedom’: An expedition by ‘Divyangjans’ to the world’s highest battlefield

  • The Union Minister for Justice and Empowerment Dr. Virendra Kumar started the pioneering expedition ‘Operation Blue Freedom’ at Dr. Ambedkar International Centre, New Delhi.
  • Under this initiative, selected people with disabilities from across the nation will undertake an expedition to Kumar Post (Siachen Glacier) to create a new world record to scale the world’s highest battlefield.
  • Ambedkar International Centre is a premier autonomous research body, which is working towards providing policy feed to empower marginalised communities and to bring in Socio-Economic transformation in the society.

 

8. ‘ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்‘ (‘Operation Blue Freedom’): உலகின் மிக உயர்ந்த போர்க்களத்திற்கு மாற்றுத் திறனாளிகள் மேற்கொண்ட பயணம்

  • ‘ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்’ என்ற முன்னோடிப் பயணத்தைத் புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் மத்தியசமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கிவைத்தார்.
  • இந்த முயற்சியின் கீழ், நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தை அளவிட ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்த குமார் போஸ்ட் (சியாச்சின் பனிப்பாறைக்கு) பயணத்தை மேற்கொள்வார்கள்.
  • டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் ஒரு முதன்மையான தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பாகும். இது விளிம்புநிலையில் உள்ள சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் சமூகத்தில் சமூக-பொருளாதார மாற்றத்தை கொண்டு வரவும் செயல்பட்டு வருகிறது.

9. HCL Foundation launches ‘My e-Haat’ portal to empower artisans

  • HCL Foundation, the corporate social responsibility arm of HCL Technologies, launched an online portal, ‘My e-Haat’, to empower artisans and strengthen the value chain of the handicraft sector in the country.
  • ‘My e-Haat’ initiative will be a unique model where artisans will connect with the customer directly.

 

9. கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கானமை ஹாத்(‘My e-Haat’) தளத்தை எச்.சி.எல் (HCL) அறக்கட்டளை அறிமுகப்படுத்தியுள்ளது

  • எச்.சி.எல் (HCL) தொழில்நுட்ப பெருநிறுவனத்தின் சமூக பொறுப்புப் பிரிவான எச்.சி.எல் (HCL) அறக்கட்டளை, கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் நாட்டில் கைவினைத் துறையை வலுப்படுத்துவதற்கும் மை ஹாத்(‘My e-Haat’) என்ற ஆன்லைன் தளத்தை தொடங்கியது.
  • ‘மை இ-ஹாத்’ (‘My e-Haat’) முன்முயற்சி ஒரு தனித்துவமான மாதிரியாக இருக்கும். அங்கு கைவினைஞர்கள் வாடிக்கையாளருடன் நேரடியாக இணைவார்கள்.

SPORTS


10. Rogers Cup Tennis 2021 Champions – Medvedev and Camila

  • Daniel Medvedev of Russia became the champion in the Men’s singles category of the Rogers Cup Tennis 2021 Tournament.
  • In the women’s singles final, Italy’s Camila Jioji defeated Carolina Bliskova of the Czech Republic.

 

10. ரோஜா்ஸ் கோப்பை டென்னிஸ் 2021 – சாம்பியன்கள் மெத்வதேவ் மற்றும் கமிலா

  • ரோஜா்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் சாம்பியன் ஆனாா்.
  • மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் இத்தாலி வீராங்கனை கமிலா ஜியாா்ஜி, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி வாகை சூடினாா்.

DAY IN HISTORY


11. The day Pondicherry merged with India – 16 August

  • Pondicherry, which was under French rule, was officially annexed by India on 16 August 1962.
  • This day is celebrated annually on behalf of the Government of Pondicherry as ‘Legal Transfer Day’.

 

11. புதுவை இந்தியாவுடன் இணைக்கப்பட்ட நாள் – 16 ஆக்ஸ்ட்

  • பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, கடந்த 16 ஆகஸ்ட் 1962ஆம் ஆண்டு இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.
  • இந்ததினத்தை ‘சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

KNOW AN INSTITUTION


12. University Grants Commission(UGC)

  • The University Grants Commissionof India (UGC India) is a statutory body set up by the Department of Higher Education, Ministry of Education, Government of India in accordance with the UGC Act, 1956.
  • It provides recognition to universities in India, and disbursements of funds to such recognised universitiesand colleges.
  • Its headquarters is located in New Delhi.
  • UGC was inaugurated on 28 December 1953 by Maulana Abul Kalam Azad.

 

12. பல்கலைக்கழக மானியக் குழு (UGC)

  • இந்திய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி இந்தியா) 1956ஆம் ஆண்டு யுஜிசி சட்டத்தின்படி இந்திய அரசின், கல்வி அமைச்சின் உயர் கல்வித் துறையால் அமைக்கப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
  • இது இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்குகிறது, மேலும் அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு நிதி வழங்குகிறது.
  • இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
  • யுஜிசி 28 டிசம்பர் 1953யில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.