TNPSC Current Affairs – English & Tamil – August 19, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (August 19, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – August 19, 2021


IMPORTANT DAYS


1. World Photography Day – 19 August

  • Every year 19 August is observed as World Photography Day, which aims to inspire photographers across the planet to share a single photo with a simple purpose to share their world with the world.
  • The first official World Photography Day was observed on 19 August 2010.

 

1. உலக புகைப்பட தினம் – 19 ஆகஸ்ட்

  • ஒவ்வொரு ஆண்டும் 19 ஆகஸ்ட் உலக புகைப்பட தினமாக அனுசரிக்கப்படுகிறது, இது உலகெங்கிலும் உள்ள புகைப்படக்காரர்களை உலகத்துடன் தங்கள் உலகத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு எளிய நோக்கத்துடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
  • முதல் அதிகாரப்பூர்வ உலக புகைப்பட தினம் 19 ஆகஸ்ட் 2010 அன்று அனுசரிக்கப்பட்டது.

2. World Humanitarian Day – 19 August

  • 19 August is observed as World Humanitarian Day every year in honour of people to remember those who lost their lives working for humanitarian causes.
  • The theme for 2021 World Humanitarian Day is ‘#TheHumanRace: a global challenge for climate action in solidarity with people who need it the most’.

 

2. உலக மனிதாபிமான தினம் – 19 ஆகஸ்ட்

  • 19 ஆகஸ்ட் மனிதாபிமான காரணங்களுக்காக உழைத்து உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக மனிதாபிமான தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 உலக மனிதாபிமான தினத்தின் கருப்பொருள் # மனிதஇனம் : காலநிலை நடவடிக்கைக்கு மிகவும் தேவைப்படும் மக்களுடன் ஒற்றுமையுடன் ஒரு உலகளாவிய சவால்.

TAMIL NADU


3. National Teacher Award for two teachers from Tamil Nadu

  • The Union Ministry of Education released a list of teachers selected for the National Best Teacher Award. Two teachers, Asha Devi and Lalita from Tamil Nadu, have been selected for this award.
  • Teachers’ Day is celebrated on 5 September in honor of Sarvapalli Radhakrishnan, who rose from teacher to the President of India.
  • On this day, the National Best Teacher’s Award is given to the best teachers in India.

 

3. தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

  • மத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆஷா தேவி மற்றும் லலிதா ஆகிய 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • இந்நாளில், நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

NATIONAL


4. Vietnam Consulate was inaugrated for the first time in India

  • For the first time in India, the Vietnam Consulate was opened in Bengaluru.
  • S. Srinivas Murthy was appointed as the Deputy Ambassador of the Vietnam Consulate in bengaluru.
  • The Consulate has been opened to promote investments between Vietnam and India.

 

4. இந்தியாவில் முதல்முறையாக வியட்நாம் துணைத் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது

  • இந்தியாவில் முதல்முறையாக வியட்நாம் துணைத் தூதரகம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.
  • பெங்களூரில் திறக்கப்பட்டுள்ள வியட்நாம் துணைத் தூதரகத்தின் கௌரவ துணைத் தூதராக என். எஸ். சீனிவாஸ் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வியட்நாம் மற்றும் இந்தியாவுக்கு இடையே முதலீடுகளை மேம்படுத்துவதற்காகவே இந்த துணைத் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.

5. KVIC launches Project BOLD to protect land degradation and support local economy

  • Khadi and Village Industries Commission (KVIC) launched the first-ever initiative to develop green cover over barren lands of Leh-Ladakh by planting bamboo saplings.
  • Bamboo saplings have been planted under Project BOLD (Bamboo Oasis on Lands in Drought) of KVIC for preventing desertification, protecting land and environment and ensuring food security.

 

5. நிலச் சீரழிவை பாதுகாக்கவும் உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரிக்கவும் போல்ட் (BOLD) திட்டததை கே.வி..சி (KVIC) அறிமுகப்படுத்தியுள்ளது

  • லே-லடாக் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களில் மூங்கில் மரக்கன்றுகளை நட்டு பசுமைப் போர்வையை உருவாக்கும் முதல் முயற்சியை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) தொடங்கியது.
  • பாலைவனமாவதைத் தடுக்கவும், நிலம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் கே.வி.ஐ.சி.யின் (KVIC) திட்டமான போல்ட் (BOLD) (வறட்சியில் உள்ள நிலங்களில் மூங்கில் சோலை) கீழ் மூங்கில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

 AWARDS AND RECOGNITIONS


6. Mohammad Azam recieves the National Youth Award 2021

  • Mohammad Azam from the Karimnagar district in Telangana was awarded the National Youth Award 2021.
  • It was awarded by the Union Youth Affairs and Sports Minister Anurag Singh Thakur in Delhi for possessing exemplary leadership qualities.

 

6. முகமது அசாம் தேசிய இளைஞர் விருது பெற்றார்

  • தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அசாமுக்கு தேசிய இளைஞர் விருது 2021 வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் டெல்லியில் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருந்ததற்காக இவ்விருதை வழங்கினார்.

SPORTS


7. India won 6 medals at World Junior Wrestling Championship 2021

  • India won one silver and five bronze medals in the men’s event at the World Junior Wrestling Championships 2021 in Russia.
  • Indian player Ravinder won the silver medal in the final round of the men’s 61kg category.

Bronze medalists:

  • Yash
  • Prithvi Babasaheb Patil
  • Anirudh
  • Gourav Balyan
  • Deepak

 

7. உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிஸ் 2021ல் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்

  • ரஷியாவில் நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் 2021ல் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்றுள்ளது.
  • ஆடவருக்கான 61 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவீந்தர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

வெண்கல பதக்கம் வென்றவர்கள்:

  • யாஷ்
  • பிருத்வி பாபாசாஹேப் பாட்டீல்
  • அனிருத்
  • கெளரவ் பல்யான்
  • தீபக்

8. India’s mixed relay team won the bronze medal at World Athletics U-20 Championships 2021

  • The Indian mixed relay team won the bronze medal in the 4×400 m relay at the World Athletics U-20 Championships 2021 in Kenya.
  • This is India’s 5th medal in the history of this tournament.

 

8. உலக தடகள யு-20 சாம்பியன்ஷிப்ஸ் 2021ல் இந்திய கலப்பு ரிலே அணி வெண்கலம் வென்றுள்ளது

  • கென்யாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-20) உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4*400 மீட்டர் கலப்பு ரிலேவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
  • இந்தப் போட்டியின் வரலாற்றில் இந்தியா வென்ற 5ஆவது பதக்கம் இதுவாகும்.

9. Olympic Silver medallist Saikhom Mirabai Chanu becomes brand ambassador for Amway’s Nutrilite range

  • Amway India appointed 2020 Tokyo Olympic Silver medallist Saikhom Mirabai Chanu as the brand ambassador for its Nutrilite range of products.
  • She will spearhead the company’s campaigns focused on its foundation range, such as Nutrilite Daily, Omega and All Plant Protein, amongst others, across platforms.

 

9. ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் வென்ற சாய்கோம் மிராபாய் சானு ஆம்வேயின் நியூட்ரிலைட் தயாரிப்புகளின் தூதராகிறார்

  • ஆம்வே, இந்தியா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சாய்கோம் மிராபாய் சானுவை அதன் நியூட்ரிலைட் தயாரிப்புகளின் தொழிற்சின்னத்தின் தூதராக நியமித்துள்ளது.
  • நியூட்ரிலைட் டெய்லி, ஒமேகா மற்றும் ஆல் பிளாண்ட் புரதம் போன்ற அதன் அடித்தள வரம்பில் கவனம் செலுத்தும் நிறுவனத்தின் பிரச்சாரங்களை சானு தலைமை தாங்குவார்.

KNOW AN INSTITUTION


10. Food and Agriculture Organisation (FAO)

  • Food and Agriculture Organisation (FAO) is a specialised agencyof the United Nations that leads international efforts to defeat hunger and improve nutrition and food security.
  • It was founded in October 1945.
  • It is headquartered in Rome, Italy.
  • Its Director-General is Qu Dongyu.

 

10. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)

  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) என்பது ஐ.நா.வின் ஒரு சிறப்பு முகமையாகும், இது பசியைத் ஒழிக்கவும், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்தவும் சர்வதேச முயற்சிகளை முன்னெடுக்கிறது.
  • இது அக்டோபர் 1945இல் நிறுவப்பட்டது.
  • இத்தாலியின் ரோம் நகரில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.
  • அதன் தலைமை-இயக்குநர் கு டோங்யூ.