TNPSC Current Affairs – English & Tamil – August 20, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (August 20, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – August 20, 2021


IMPORTANT DAYS


1. World Mosquito Day observed on 20 August

  • Every year, 20 August is observed as the World Mosquito Day to raise awareness about the illness and disease caused by mosquitoes.

 

History of the Day

  • It marks the day when Sir Ronald Ross discovered the link between female mosquitoes and malaria, which changed the course of medical history.
  • Theme for the year 2021 – ‘Reaching the zero-malaria target

 

1. உலக கொசு தினம் 20 ஆகஸ்ட் அன்று அனுசரிக்கப்படுகிற்து

  • கொசுக்களால் ஏற்படும் நோய் மற்றும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் 20 ஆகஸ்ட் உலக கொசு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

இந்நாள் பற்றிய வரலாறு

  • மருத்துவ வரலாற்றின் போக்கை மாற்றிய, பெண் கொசுக்கும் மலேரியாவிற்கும் இடையிலான தொடர்பை சர் ரொனால்ட் ரோஸ் கண்டுபிடித்த நாளை இது குறிக்கிறது.
  • 2021ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்பூஜ்ஜிய மலேரியா இலக்கை அடைதல்

PERSON IN NEWS


2. Dr Shankar Dayal Sharma’s Birth Anniversary celebrated on 19 August

  • Shankar Dayal Sharma born on 19 August 1918 was the ninth President of India, serving from 1992 to 1997.
  • He was the President of Indian National Congress from 1972–1974.

 

Honours

  • He was given ‘Living Legends of Law Award’ by the International Bar Association.
  • Shankar Dayal Sharma Gold Medal is awarded to graduating student adjudged to be best in terms of general proficiency.

 

2. டாக்டர் சங்கர் தயாள் சர்மா பிறந்த நாள் 19 ஆகஸ்ட் அன்று கொண்டாடப்படுகிறது

  • ஷங்கர் தயாள் சர்மா 19 ஆகஸ்ட் 1918இல் பிறந்தார். இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவரான இவர், 1992 முதல் 1997 வரை பணியாற்றினார்.
  • இவர் 1972-1974இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார்.

 

நன்மதிப்புகள்

  • சர்வதேச வழக்கறிஞர் சங்கத்தால் ‘லிவிங் லெஜண்ட்ஸ் ஆஃப் லா விருது’ (‘Living Legends of Law Award’) இவருக்கு வழங்கப்பட்டது.
  • டாக்டர். சங்கர் தயாள் சர்மா தங்கப் பதக்கம் பொது தேர்ச்சியின் அடிப்படையில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

3. Sadbhavna Divas celebrated on 20 August

  • ‘Sadbhavna Divas’ is celebrated every year on 20 August in remembrance of the birth anniversary of Rajiv Gandhi.
  • Rajiv Gandhi, born in 1944, was the Prime Minister from 1984-89.

 

3. சத்பாவ்ன திவாஸ் – 20 ஆகஸ்ட்

  • ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆகஸ்ட் அன்று சத்பவ்னா திவாஸ் கொண்டாடப்படுகிறது.
  • ராஜீவ் காந்தி 1944இல் பிறந்தார். 1984 முதல் 1989 வரை பிரதமராக பணியாற்றினார்.

NATIONAL


4. Defence Minister Rajnath Singh launches DISC 5.0

  • Defence Minister Rajnath Singh launched Defence India Startup Challenge (DISC) 5.0 under Innovations for Defence Excellence – Defence Innovation Organisation (iDEX-DIO).

Purpose: To achieve a self-reliant and foster innovation and technology development in the defence and aerospace sectors

 

4. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஸ்க் 5.0 (DISC) –ஐ தொடங்கி வைத்தார்

  • சீர்மிகு பாதுகாப்புத்துறையில் புத்தாக்கம், பாதுகாப்புத்துறை புத்தாக்க அமைப்பின் (iDEX-DIO) கீழ் இந்திய பாதுகாப்புத்துறைக்கான தொடக்க நிறுவனங்களின் சவால் போட்டி (DISC) 5.0- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். 

இதன் நோக்கம்: பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளில் ஒரு சுய சார்பு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வளர்ப்பது.


5. Solar Electric Vehicle (EV) Charging Station set up at Karnal

  • Union Heavy Industries Minister Mahendra Nath Pandey inaugurated an electric vehicle (EV) charging station in Karnal, Haryana.
  • With this, the Delhi-Chandigarh Highway has become the first e-vehicle friendly highway in the country.
  • The solar-based electric vehicle chargers (SEVs) are set up by Bharat Heavy Electricals Limited (BHEL).

 

5. கர்னாலில் சூரிய சக்தி மின்சார வாகன (EV) மின்னேற்றி நிலையம் தொடங்கப்பட்டது

  • ஹரியானா மாநிலம் கர்னாலில் மின்சார வாகன (EV) மின்னேற்றி நிலையத்தை மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தொடங்கி வைத்தார்.
  • இதன் மூலம், டெல்லிசண்டிகர் நெடுஞ்சாலை நாட்டின் முதல் மின்சார வாகனத்திற்கு சாதகமான நெடுஞ்சாலையாக மாறியுள்ளது.
  • சூரிய சக்தி அடிப்படையிலான மின்சார வாகன மின்னேற்றிகள் (SEVs) பாரத் மிகு மின் நிறுவனம் (BHEL) மூலம் அமைக்கப்பட்டுள்ளன.

6. DRDO develops Advanced Chaff Technology for Indian Air Force

  • Defence Research and Development Organisation (DRDO) has developed an Advanced Chaff Technology.

It was developed to safeguard fighter aircraft of the Indian Air Force (IAF) against hostile radar threats.

 

6. இந்திய விமானப் படைக்கான மேம்படுத்தப்பட்ட சாஃப் தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி. (DRDO) உருவாக்கியுள்ளது

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒரு மேம்பட்ட சாஃப் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

உருவாக்கப்பட்டதன் நோக்கம்: இது இந்திய விமானப்படையின் (IAF) போர் விமானங்களை விரோதமான ரேடார் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.


7. Odisha becomes the first state in the country to announce smart health cards

  • Odisha government has announced the Smart Health Cards scheme under Biju Swasthya Kalyan Yojana (BSKY).
  • Odisha is the first state in the country to provide such smart health cards.

 

7. ஸ்மார்ட் சுகாதார அட்டையை அறிவித்த நாட்டின் முதல் மாநிலமாக ஒடிசா மாறியது

  • ஒடிசா அரசு பிஜு ஸ்வஸ்த்யா கல்யாண் யோஜனா (BSKY) திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சுகாதார அட்டை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இதுபோன்ற ஸ்மார்ட் சுகாதார அட்டையை வழங்கும் நாட்டின் முதல் மாநிலம் ஒடிசா ஆகும்.

APPOINTMENTS


8. Apurva Chandra appointed as the secretary of Information and Broadcasting ministry

  • Apurva Chandra, a 1988-batch IAS officer of Maharashtra cadre, has been appointed the secretary of Information and Broadcasting ministry.
  • Before this he was serving as Special Director General Defence Acquisition in the Ministry of Defence.

 

8. தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளராக அபூர்வா சந்திரா நியமிக்கப்பட்டார்

  • மகாராஷ்டிரா கேடரின் 1988 தொகுதி ஐஏஎஸ் அதிகாரியான அபூர்வா சந்திரா, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கு முன் அவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் பாதுகாப்பு கையகப்படுத்தல் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக பணியாற்றினார்.

SPORTS


9. Bipasha won a Silver medal in Junior wrestling

  • Indian player Bipasha won a silver medal in the 76 kg event of the World Junior Wrestling Championship in Russia.

 

9. ஜூனியா் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பிபாஷா வெள்ளி வென்றார்

  • ரஷியாவில் நடைபெற்ற உலக ஜூனியா் மல்யுத்த சாம்பியன்ஷிப் 76 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பிபாஷா வெள்ளி பதக்கம் வென்றாா்.

KNOW AN INSTITUTION


10. Defence Research and Development Organisation (DRDO)

  • The Defence Research and Development Organisation (DRDO) is under the Department of Defence Research and Development in the Ministry of Defence of the Government of India and is charged with the military’s research and development.
  • It is headquartered in Delhi.
  • It was formed in 1958.

 

10. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ளது.
  • இது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
  • இது 1958இல் உருவாக்கப்பட்டது.