TNPSC Current Affairs – English & Tamil – August 21, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (August 21, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – August 21, 2021


IMPORTANT DAYS


1. International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism is observed on 21 August

  • Every year, United Nations observes 21 August as the International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism.
  • This is celebrated to remember and pay tribute to the victims who had lose their life or have suffered the trauma of terrorism.

 

1. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் 21 ஆகஸ்ட் அன்று அனுசரிக்கப்படுகிறது

  • ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபை 21 ஆகஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினமாக அனுசரிக்கிறது.
  • உயிர் இழந்த அல்லது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்த இது கொண்டாடப்படுகிறது.

2. World Senior Citizens’ Day is observed on 21 August

  • Every year, 21 August is observed as the World Senior Citizens’ Day to acknowledge the contribution of elders to society.
  • The day was proclaimed by the United Nations General Assembly on 14 December 1990.

 

2. உலக மூத்த குடிமக்கள் தினம் 21 ஆகஸ்ட் அன்று அனுசரிக்கப்படுகிறது

  • ஒவ்வொரு ஆண்டும், ‘21 ஆகஸ்ட்’, உலக மூத்த குடிமக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது சமுதாயத்தில் மூத்த குடிமக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
  • இந்த நாள், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 14 டிசம்பர் 1990 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது.

PERSON IN NEWS


3. Ondiveeran Memorial day observed on 20 August

  • ‘Ondiveeran’, who led one of the army units of Puli Thevar died on 21 August 1771.
  • Fighting by the side of Puli Thevar, he caused much damage to the British army.

 

3. ஒண்டிவீரன் நினைவு நாள் 20 ஆகஸ்ட் அன்று அனுசரிக்கப்படுகிறது

  • பூலித்தேவரின் படைப் பிரிவுகளில் ஒன்றனுக்குத் ஒண்டிவீரன் தலைமையேற்று இருந்தார். இவர் 20 ஆகஸ்ட் 1771 அன்று இறந்தார்.
  • பூலித்தேவரோடு இணந்து போரிட்ட அவர் ஆங்கிலேயப் படைகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினார்.

TAMIL NADU


4. Tamil Nadu leads in the implementation of Smart City Projects

  • Observer Research Foundation has published a study on the implementation of smart city projects.
  • Delhi is the number one city implementing smart city projects followed by Chennai.
  • Coimbatore is the best performer in implementing smart city projects next to Indore and Surat.

 

4. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை

  • அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பு ஸ்மார்ட் சிட்டி திட்ட செயல்பாடு பற்றிய ஆய்வை வெளியிட்டுள்ளது.
  • இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைச் செயல்படுத்தும் நகரங்களில் முதலிடத்தில் டெல்லியும் அடுத்து சென்னையும் உள்ளன.
  • இந்தூர், சூரத் நகரங்களுக்கு அடுத்ததாக, ‘கோவை’ ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்துவதில் சிறப்பாக உள்ளது.

NATIONAL


5. NTPC commissions largest Floating Solar PV Project in India

  • The National Thermal Power Corporation (NTPC) Limited, has commissioned the largest floating solar PV project with a capacity of 25MW on the reservoir of its Simhadri thermal station in Visakhapatnam, Andhra Pradesh.
  • This is the first solar project to be set up under Project Flexibility.

 

5. என்.டி.பி.சி (NTPC), இந்தியாவில் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி ஒளிமின்னழுத்தத் திட்டத்தை தொடங்குகிறது

  • தேசிய அனல்மின் கழகம் (NTPC), 25 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய மிதவை சூரிய சக்தி ஒளிமின்னழுத்தத் திட்டத்தை விசாகப்பட்டினம் ஆந்திர பிரதேசதத்தில் உள்ள அதன் சிம்ஹாத்ரி அனல்மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் உருவாக்கியுள்ளது.
  • நெகிழ்வுத்தன்மை திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள முதல் சூரியசக்தி திட்டமாகவும் இது அமைந்துள்ளது.

6. Delhi inaugurates India’s first smog tower

  • Delhi Chief Minister Arvind Kejriwal inaugurated India’s first smog tower at Baba Kharak Singh Marg, Connaught Place.
  • This smog tower helps to control air pollution at hotspots.

 

6. இந்தியாவின் முதல் புகைமூட்ட கோபுரத்தை தில்லி திறந்து வைத்தது

  • கன்னாட் பிளேஸில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் இந்தியாவின் முதல் புகைமூட்ட கோபுரத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.
  • இந்த புகைமூட்ட கோபுரம், ஹாட்ஸ்பாட்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

7. 1st Covid vaccine Zycov-D for children above 12 approved in India

  • The Drug Controller General has granted emergency approval to the Zycov­D,a COVID­-19 vaccine developed by the Zydus Cadilla group.
  • It is the first vaccine in Indiathat can be administered to adults as well as those children who are 12 and above
  • ZyCoV-D is the world’s first plasmid DNA vaccine against coronavirus.

 

7. 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான முதல் கோவிட் தடுப்பூசி சைகோவ்டியினை இந்தியா ஒப்புதல் செய்த்து

  • சைடஸ் கேடில்லா குழுவால் உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியான சைகோவ்டி (Zycov-­D) க்கு மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அவசர கால ஒப்புதலை வழங்கியுள்ளார்.
  • இது பெரியவர்களுக்கும் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தக்கூடிய முதல் தடுப்பூசியாகும்.
  • சைகோவ்-டி (Zycov-­D) என்பது கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் பிளாஸ்மிட் டி.என். (DNA) தடுப்பூசி ஆகும்.

8. India achieves record in the export of agricultural, processed food products

  • India is the 9th largest exporter of agricultural and processed food products in the World Trade Organization.
  • In the first quarter of the financial year 2021-22, India saw a 44.3 per cent growth in the export of agricultural and processed food items.

 

8. வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை

  • உலக வா்த்தக நிறுவனத்தின் பட்டியலில் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதியில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.
  • 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில், இந்தியா3 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

AWARDS AND RECOGNITIONS


9. Samantha and Suriya bag top honours at Indian Film Festival of Melbourne 2021

The winners of the Indian Film Festival of Melbourne (IFFM) 2021 were announced

  • Best Performer Female (Feature) – Vidya Balan for the movie ‘Sherni’
  • Best Performance Male (Feature) – Suriya for the movie ‘Soorarai Pottru’
  • Best Film – Soorarai Pottru
  • Best Performance Female (Series) – Samantha for the series ‘The Family Man 2’
  • Best Performer Male (Series) – Manoj Bajpayee for the series ‘The Family Man 2’
  • Equality in Cinema (Feature) – Suraj Venjaramoodu and Nimisha Sajayan for ‘The Great Indian Kitchen’
  • Disruptor Award – Filmmaker Sanal Kumar Sasidharan

 

9. மெல்போர்ன் 2021இல் இந்திய திரைப்பட விழாவில் சமந்தா மற்றும் சூரியா சிறந்த விருதுகளை பெற்றனர்

மெல்போர்ன் (IFFM) 2021 இந்திய திரைப்பட விழாவில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்

  • சிறந்த நடிகைக்கான விருது (திரைப்படம்) – வித்யா பாலன், ‘ஷெர்னிக்’ திரைப்படத்திற்காக
  • சிறந்த நடிகருக்கான விருது (திரைப்படம்) – சூர்யா ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக
  • சிறந்த படம் – சூரரைப் போற்று
  • சிறந்த நடிகைக்கான விருது (தொடர்) – சமந்தா, ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடருக்காக
  • சிறந்த நடிகருக்கான விருது (தொடர்) – மனோஜ் பாஜ்பாய் ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடருக்காக
  • சினிமாவில் சமத்துவத்திற்கான விருது – சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’க்காக
  • டிஸ்ரப்டர் (Disruptor) விருது – சனல் குமார் சசிதரன், திரைப்பட தயாரிப்பாளர்

KNOW AN INSTITUTION


10. World Trade Organization

  • The World Trade Organization is an intergovernmental organisation that regulates and facilitates international trade between nations.
  • Its headquarters is located in Geneva, Switzerland.
  • It was formed on 1 January 1995.
  • Its current director-general is Ngozi Okonjo Iweala.

 

10. உலக வணிக அமைப்பு

  • உலக வணிக அமைப்பு என்பது நாடுகளுக்கிடையேயான சர்வதேச வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் வசதிகளை வழங்கும் அரசுகளுக்கு இடையேயான அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.
  • இது 1 ஜனவரி 1995இல் உருவாக்கப்பட்டது.
  • இதன் தற்போதைய தலைமை இயக்குனர் என்கோஜி ஒகோஞ்சோ இவெல (Ngozi Okonjo Iweala) ஆவார்.