TNPSC Current Affairs – English & Tamil – July 2, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(2nd July, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 2, 2021


ECOLOGY AND ENVIRONMENT


  1. A new species of land snail is recorded in the Western Ghats of Maharashtra (Sahyadri)
  • Perrottetia rajeshgopali, a new carnivorous species of land snail was recorded from the Western Ghats of Maharashtra. This “snail of Sahyadri” is recorded for the first time in India.
  • It is named after one of the top tiger conservationists of India, Rajesh Gopal. He is the Secretary-General of the Global Tiger Forum.
  1. மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலையில் (சயாத்திரி) ஒரு புதிய வகை நில நத்தை பதிவு செய்யப்பட்டுள்ளது
  • மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களிலிருந்து பெர்ரோட்டியா ராஜேஷ்கோபாலி (Perrottetia rajeshgopali) என்ற புதிய மாமிச உண்ணியான நில நத்தை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சயாத்திரியின் நத்தை  இந்தியாவில் முதல் முறையாக பதிவு   செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் தலைசிறந்த புலி பாதுகாவலர்களில் ஒருவரான ராஜேஷ் கோபாலின் பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது. அவர் உலக புலி மன்றத்தின் பொதுச் செயலாளர் ஆவார்.

ECONOMY


  1. India records a Current Account Surplus of 0.9% of GDP in FY21
  • India recorded a Current Account Surplus of 0.9% of GDP in FY21, according to the latest data released by the Reserve Bank of India (RBI).
  • Surplus implies that exports from India were more than the imports into India.
  • Current Account = Trade gap + Net current transfers + Net income abroad
  • Trade gap = Exports – Imports
  1. இந்தியா 2021ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9% நடப்புக் கணக்கு உபரியை பதிவு செய்துள்ளது
  • இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2021ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்9% நடப்புக் கணக்கு உபரியை இந்தியா பதிவு செய்தது.
  • உபரி என்பது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவது இந்தியாவின் இறக்குமதியை விட அதிகமாக இருந்தது என்பதைக் குறிக்கிறது.
    • நடப்புக் கணக்கு = வர்த்தக இடைவெளி + நிகர நடப்பு இடமாற்றங்கள் + வெளிநாட்டு நிகர வருமானம்
    • வர்த்தக இடைவெளி = ஏற்றுமதிஇறக்குமதிகள்

NATIONAL


  1. Nashik’s Community Radio Station ‘Radio Vishwas’ bags National Community Radio Awards
  • Nashik’s Community Radio Station ‘Radio Vishwas’ that helped students without smartphones to pursue their studies, bagged the National Community Radio Awards instituted by the Union Ministry of Information and Broadcasting.
  • Radio Vishwas won the first prize in the “Sustainability Model Awards” category and the second prize in the “Thematic Awards” category for its radio program ‘Education for All’in the times of COVID-19.
  • Shikshan Sarvansathi (Education for All) programme of Radio Vishwas started in June 2020 to bridge the education gap by providing free education for students from 3rd to 10th grade during the pandemic.
  1. நாசிக்கின் சமூக வானொலி நிலையமானரேடியோ விஸ்வாஸ்தேசிய சமூக வானொலி விருதைப் பெற்றுள்ளது
  • ஸ்மார்ட் ஃபோன் இல்லாத மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர உதவிய நாசிக்கின் சமூக வானொலி நிலையமானரேடியோ விஸ்வாஸ்’, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சமூக வானொலி விருதைப் பெற்றது.
  • ரேடியோ விஸ்வாஸ் நிலைத்தன்மை மாதிரி விருதுகள் பிரிவில் முதல் பரிசையும், கோவிட்-19 காலத்தில், ரேடியோ நிகழ்ச்சியான அனைவருக்கும் கல்வி என்ற வானொலி நிகழ்ச்சிக்காக கருப்பொருள் விருதுகள் பிரிவில் இரண்டாம் பரிசையும் வென்றது.
  • ஜூன் 2020இல் தொடங்கிய சிக்ஷான்ன் சர்வன்சதி (அனைவருக்கும் கல்வி) நிகழ்ச்சி பெருந்தொற்றின் போது 3 முதல்  10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதன் மூலம் கல்வி இடைவெளியை குறைக்க உதவியது.

  1. Covishield gets nod from nine European countries for travel
  • European Union (EU) begins ‘Green Pass’ for those with authorised jabs to travel among 27 nations.
  • Covishield gets a nod from nine European countries for travel. The list of the EU Member States that have recognised Covishield as a valid vaccine includes Austria, Germany, Slovenia, Greece, Iceland, Ireland and Spain.
  • Estonia has confirmed that it will recognise all the vaccines authorised by the Government of India for the travel of Indians to Estonia.
  1. கோவிஷீல்ட் ஒன்பது ஐரோப்பிய நாடுகளிடல் பயணத்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளது
  • ஐரோப்பிய ஒன்றியம் 27 நாடுகளிடையே பயணம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கிரீன் பாஸ் திட்டத்தை தொடங்கியது.
  • கோவிஷீல்ட் ஒன்பது ஐரோப்பிய நாடுகளில் இருந்து பயணத்திற்காக ஒப்புதல் பெற்றது. கோவிஷீல்டை செல்லுபடியாகும் தடுப்பூசியாக அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகியவை அடங்கும்.
  • எஸ்டோனியாவிற்கு இந்தியர்கள் பயணம் செய்ய இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் அங்கீகரிப்போம் என்று எஸ்டோனியா உறுதிப்படுத்தியுள்ளது.

  1. Government of India announces retail and wholesale trades as MSME
  • Union Minister of Micro, Small and Medium Enterprises (MSME) and Road Transport and Highways Nitin Gadkari announced retail and wholesale trades as MSME.
  • Earlier, retail and wholesale trade were left out of the ambit of MSME. They will also now get the benefit of priority sector lending under the Reseve Bank of India (RBI) guidelines and to register on the Udyam registration portal.

 

  1. மத்திய அரசு, சில்லறை மற்றும் மொத்த விற்பனை வர்த்தகங்களை எம்.எஸ்.எம்..யாக அறிவித்தது.
  • மத்திய சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி சில்லறை மற்றும் மொத்த விற்பனை வர்த்தகங்களை எம்.எஸ்.எம்..யாக அறிவித்தார்.
  • சில்லறை மற்றும் மொத்த வர்த்தகம் முன்னதாக எம்.எஸ்.எம்.இ. வரம்பில் இல்லை. அவை இப்போது ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின் கீழ் முன்னுரிமைத் துறை கடன்களைப் பெறுவார்கள் மற்றும் உத்யம் பதிவு வலைதளத்தில் பதிவு செய்யலாம்.

  1. Union Agriculture Minister Narendra Singh Tomar inaugurates the National Horticulture Board Centre at Gwalior
  • Union Agriculture Minister Narendra Singh Tomar inaugurated the National Horticulture Board (NHB) Centre at Gwalior, Madhya Pradesh.
  • The National Horticulture Board was established in 1984 under the Societies Registration Act, 1860.
  • The NHB is mandated for the integrated development of hi-tech commercial horticulture and post-harvest management and cold chain infrastructure in India.

 

  1. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேசிய தோட்டக்கலை வாரிய மையத்தை குவாலியரில் தொடங்கி வைத்தார்
  • மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தேசிய தோட்டக்கலை வாரிய மையத்தை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  தொடங்கி வைத்தார்.
  • சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860இன் கீழ் தேசிய தோட்டக்கலை வாரியம் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இந்தியாவில் உயர் தொழில்நுட்ப வணிக தோட்டக்கலை  மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் குளிர்சங்கிலி உள்கட்டமைப்பை ஒருங்கிணைக்க தேசிய தோட்டக்கலை வாரியம் நிறுவப்பட்டுள்ளது.

INTERNATIONAL


7th Indian Ocean Naval Symposium concludes in France

  • The 7th edition of the Indian Ocean Naval Symposium (IONS) was concluded in France. This event was hosted by the French Navy at La Reunion. France assumed the Chairmanship for a two years (2021–22).
  • The 1st edition of the Indian Ocean Naval Symposium (IONS) was hosted by

 

7வது இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு பிரான்சில் நிறைவு பெற்றது

  • இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் (IONS) 7வது பதிப்பு பிரான்சில் நிறைவடைந்தது. இந்த நிகழ்வை பிரெஞ்சு கடற்படை லா ரீயூனியனில் நடத்தியது. பிரான்ஸ் இரண்டு ஆண்டுகள் (2021-22) தலைவர் பதவியில் இருக்கும்.
  • இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் (IONS) முதல் பதிப்பை இந்தியா நடத்தியது.

IMPORTANT DAYS


  1. World UFO Day – 2 July
  • World UFO Day is observed on 2 July annually to spread awareness about Unidentified Flying Objects (UFO) and to acknowledge the existence of extra-terrestrial beings in the universe.
  • This day marks the supposed UFO crash incident in Roswell New Mexico in 1947.

 

  1. உலக யுஎஃப்ஒ தினம் – 2 ஜூலை
  • உலக யுஎஃப்ஒ தினம் ஆண்டுதோறும் 2 ஜூலை அன்று அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (யுஎஃப்ஒ) பற்றிய விழிப்புணர்வை பரப்பவும் மற்றும் பிரபஞ்சத்தில் மனிதர்கள் தவிர வேறு உயிரினங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளவும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் 1947இல் ரோஸ்வெல் நியூ மெக்ஸிகோவில் யுஎஃப்ஒ விபத்து சம்பவம் நடைபெற்றதைக் குறிக்கிறது.

  1. World Sports Journalists Day – 2 July
  • World Sports Journalists Day is observed on 2 July annually to celebrate the services of sports journalists for the promotion of sports.
  • This day marks the establishment of the International Sports Press Association (ISPA) on 2 July 1924.

 

  1. உலக விளையாட்டு பத்திரிகையாளர் தினம் – 2 ஜூலை
  • விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக விளையாட்டு பத்திரிகையாளர்களின் சேவையைக் கொண்டாடும் வகையில் உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் ஆண்டுதோறும் 2 ஜூலை அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் (ஐஎஸ்பிஏ) 2 ஜூலை 1924 அன்று நிறுவப்பட்டதை குறிக்கிறது.

DAY IN HISTORY


  1. Simla Agreement – 2 July 1972
  • The Simla Agreement was signed between the Indian Prime Minister Indira Gandhi and Pakistani President Zulfikar Ali Bhutto on 2 July 1972. It was signed after the Indo-Pakistan war of 1971.
  • It was a peace agreement and also promoted the friendly relationship between India and Pakistan.

 

  1. சிம்லா ஒப்பந்தம் – 2 ஜூலை 1972
  • இந்திய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தான் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோ ஆகியோருக்கிடையே சிம்லா ஒப்பந்தம் 2 ஜூலை 1972 அன்று கையெழுத்தானது. இது 1971ஆம் ஆண்டு இந்தியபாகிஸ்தான் போருக்குப் பிறகு கையெழுத்தானது.
  • இது ஒரு சமாதான உடன்படிக்கை மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நட்புறவை ஊக்குவிக்கும் ஒப்பந்தம் ஆகும்.

KNOW AN INSTITUTION


  1. Central Adoption Resource Authority (CARA):
  • Central Adoption Resource Authority (CARA) is a statutory body under the Union Ministry of Women and Child Development.
  • It functions as the nodal body for the adoption of Indian children and is mandated to monitor and regulate in-country and inter-country adoptions.
  • It is also mandated to frame regulations on adoption-related matters from time to time as per Section 68 of the Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015.

 

  1. மத்திய தத்தெடுப்பு ஆணையம் (CARA):
  • மத்திய தத்தெடுப்பு ஆணையம் (CARA) என்பது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இது இந்திய குழந்தைகளை தத்தெடுப்பதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக செயல்படுகிறது மற்றும் நாட்டிற்குள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான தத்தெடுப்புகளை கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது.
  • இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015இன் பிரிவு 68இன்படி தத்தெடுப்பு தொடர்பான விஷயங்களில் அவ்வப்போது விதிமுறைகளை வகுக்கவும் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.