TNPSC Current Affairs – English & Tamil – February 2, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – February 2, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(2nd February 2020) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – February 2, 2021
- Fiscal deficit
- Fiscal deficit for the Finance year 22 stands at 6.8% of GDP.
- The government aims to bring it back to 4.5% by Finance year 26.
- Our original Fiscal deficit target for Finance year 21 was 3.5%.
- But our Fiscal deficit shot up for 9.5% of GDP in FY 21 due to Covid.
- நிதிப் பற்றாக்குறை
- 22ஆம் நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6.8% ஆக உள்ளது.
- 26ஆம் நிதியாண்டுக்குள் நிதிப்பற்றாக்குறையை 4.5% ஆக குறைப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 21ஆம் நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.5% ஆகும்.
- ஆனால், நிதிப் பற்றாக்குறை, 21-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5% ஆக உயர்ந்துள்ளது.
- MFDIS (Modernisation Fund for Defence and Internal Security)
- 15th Finance Commission recommended a non-lapsable fund, MFDIS for defence.
- It aims to bridge the gap between projected budgetary requirement and allocation.
- This doesn’t include the unutilised amount from the normal budgetary allocations to the Defence and Home Ministry for capital expenditure.
- The size of MFDIS for 2021 -2026 is Rs. 2,38,354 crore and the maximum recommended amount is Rs. 51,000 per year.
- MFDIS (பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கான நவீனமயமாக்கல் நிதி)
- 15வது நிதிக்குழு, பாதுகாப்புக்கான ஒரு வரையறையற்ற நிதியாக MFDISஐ பரிந்துரைத்துள்ளது.
- இது திட்டமிடப்பட்ட வரவு செலவுத் தேவைகளுக்கும் ஒதுக்கீடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதில், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு, மூலதன செலவினங்களுக்கான சாதாரண வரவு-செலவு திட்ட ஒதுக்கீட்டில் இருந்து பயன்படுத்தப்படாத தொகை சேர்க்கப்படவில்லை.
- 2021-2026 ஆம் ஆண்டிற்கான MFDIS. ரூ.2,38,354 கோடி மற்றும் வருடத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச தொகை ரூ.51,000.
- Modernisation of Fishing harbours
- Finance Minister in her budget speech mentioned that the following 5 harbours to be modernised.
- Kochi – Kerala
- Chennai – Tamil Nadu
- Visakapatnam – Andhra Pradesh
- Paradip – Odisha
- Petuaghat – West Bengal
- They will be developed as hubs of economic activity.
- Inland fishing harbours and fish landing centres will also be modernised.
- மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்குதல்
- நிதி அமைச்சர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் பின்வரும் 5 துறைமுகங்கள் நவீனமாக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
- கொச்சின் – கேரளா
- சென்னை – தமிழ்நாடு
- விசாகப்பட்டினம் – ஆந்திர பிரதேசம்
- பாராதீப் – ஒடிசா
- பெதுவாகாட் – மேற்கு வங்காளம்
- பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக அவை விரிவக்கம் செய்யப்படும்.
- உள்நாட்டு மீன்பிடி துறைமுகங்களும், மீன் இறங்கு நிலையங்களும் நவீனப்படுத்தப்படும்.
- Multipurpose Seaweed Park
- Seaweed sector with potential will be developed.
- Multipurpose seaweed Park is proposed to be established at Tamil Nadu.
Seaweed
- Seaweed is a type of marine algae.
- They are a food source for ocean life.
- Seaweed grows along rocky shorelines around the world, but it’s most commonly eaten in Asian countries such as Japan, China, Kore, etc.,
- It is also used in animal feed and agriculture.
- பல்நோக்கு கடற்பாசி பூங்கா
- தொழில் வளமிக்க கடற்பாசி துறை அபிவிருத்தி செய்யப்படும்.
- தமிழகத்தில் பல்நோக்கு கடற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடற்பாசி
- கடற்பாசி என்பது கடலில் காணப்படும் ஒரு பாசி வகை ஆகும்.
- இவை கடல்வாழ் உயிரினங்களுக்கான உணவு ஆதாரமாக உள்ளன.
- கடல் மீன் உலகம் முழுவதும் பாறைக் கரையோரங்களில் வளர்கிறது, ஆனால் இது பொதுவாக ஜப்பான், சீனா, கொரியா போன்ற ஆசிய நாடுகளில் உண்ணப்படுகிறது.
- கால்நடைத் தீவனத்திலும், வேளாண்மையிலும் இது பயன்படுகிறது.
- Swatch Bharat 2.0 (Urban)
- It deals with the management of sludge, waste water and construction and demolition of waste in cities.
- Ministry of Housing and Urban Affairs implements this scheme.
- This will be implemented for 5 years.
- Swatch Bharat mission was started on October 2, 2014.
- தூய்மை இந்தியா 2.0 (நகர்ப்புறம்)
- இது நகரங்களில் கழிவுநீர் மேலாண்மை, கழிவு நீர் மற்றும் மற்றும் கழிவுகளை அகற்றும் கட்டுமானம் ஆகியவற்றை மேலாண்மை செய்வதற்கான திட்டமாகும்.
- வீட்டுவசதி மற்றும் நகர அலுவல்கள் அமைச்சகம் இந்த திட்டத்தை அமல்படுத்துகின்றது.
- இது 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
- அக்டோபர் 2, 2014 அன்று தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.
- Jal Jeevan Mission Urban
- It is now aimed at the 4,378 urban local bodies.
- It includes 2.86 crore household tap connections and liquid waste management in 500 AMRUT
- Ministry of Jal Shakthi implements this scheme.
- ஜல் ஜீவன் மிஷன் நகர்ப்புறம்
- இது தற்போது 4,378 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது.
- இதில் 2.86 கோடி வீட்டுக்குழாய் இணைப்புகள் மற்றும் 500 AMRUT நகரங்களில் திரவ கழிவு மேலாண்மை ஆகியவை அடங்கும்.
- ஜல் சக்தி அமைச்சகம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
- Alagiriswamy
- Former Advocate General Alagiriswamy passed away.
- He belongs to Srivilliputhur.
- He served as Advocate General of Tamil Nadu from 1989-1991.
- அழகிரிசாமி
- முன்னாள் மாநில தலைமை வழக்கறிக்கறிஞர் அழகிரிசாமி காலமானார்.
- இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர்.
- 1989-1991 வரை தமிழக தலைமை வழக்கறிக்கறிஞராக பணியாற்றினார்.
- Tirukkural in Arabic
- A Tirukkural Arabic audio CD was released by CM and was received by Prince of Arcot, Nawab Mohammad Abdul Ali.
- This event was organised by the Tamil language development and Tamil culture department.
- University of Madras has done the translation.
- அரபு மொழியில் திருக்குறள்
- முதல்வர் வெளியிட்ட திருக்குறள் ஒலித்தட்டை ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி பெற்றுக்கொண்டார்.
- இந்த நிகழ்ச்சியை தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை ஏற்பாடு செய்திருந்தது.
- சென்னைப் பல்கலைக்கழகம் இந்த மொழிபெயர்ப்பபை செய்துள்ளது.
- Single Security Market Code
- The provisions of the following acts are to be consolidated into a single code.
- SEBI Act, 1992
- Depositories Act, 1996
- Securities Contracts (Regulation) Act, 1956
- Government Securities Act, 2007
ஒற்றை பாதுகாப்பு சந்தை குறியீடு
- பின்வரும் சட்டங்களின் விதிகள் ஒரே குறியீடுகளாக ஒருங்கிணைக்கப்பட இருக்கிறது.
- SEBI சட்டம், 1992
- வைப்பீட்டுச் சட்டம், 1996
- பிணையங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1956
- அரசாங்கப் பத்திரங்கள் சட்டம், 2007
Tax holiday for startups
- Tax holiday for start ups has been extended till March 2022.
- Those startups must be recognised and certified by DPIIT (Department of Promotion of Industry and Internal Trade).
- Tax holiday is a temporary reduction or elimination of a tax.
- Tax abatement, tax subsidy or tax reduction are examples for tax holiday.
- Governments usually provide tax holidays as incentives for business investment.
One person Companies (OPC)
- OPCs are allowed to grow without restrictions on paid-up capital and turnover.
- They will also be allowed to change the ‘type’ of the company at any time.
- தொடக்க நிறுவனங்களுக்கான வரி விடுமுறை
- தொடக்க நிறுவனங்களுக்கான வரி விடுமுறை மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அந்த தொடக்க நிறுவனங்கள் DPIIT (தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை) மூலம் சான்றிதழ் பெற்று அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- வரி விடுமுறை என்பது ஒரு தற்காலிக வரி குறைப்பு அல்லது வரி நீக்கமாகும்.
- வரி விதிவிலக்கு, வரி மானியம் அல்லது வரி குறைப்பு ஆகியவை வரி விடுமுறைக்கான உதாரணங்கள்.
- அரசாங்கங்கள் வழக்கமாக வணிக முதலீட்டிற்கான ஊக்கங்களாக வரி விடுமுறைகளை வழங்குகின்றன.
ஒரு நபர் நிறுவனங்கள் (OPC)
- OPCகள் மூலதனம் மற்றும் விளைமுதல் மீது கட்டுப்பாடுகள் இல்லாமல் வளர அனுமதிக்கப்படுகின்றன.
- அவர்கள் நிறுவனத்தின் ‘வகையை’ எந்த நேரத்திலும் மாற்றவும் அனுமதிக்கப்படுவார்கள்.
- Digital Budget
- Union Finance Minister Nirmala Sitharaman presented a non-paper digital budget for the first time in the history of independent India.
- The Third Budget of the Union Government, which was sworn in by the BJP for the second consecutive term, was presented by The Finance Minister Nirmala Sitharaman in the Lok Sabha on February 1.
- Minister Nirmala Sitharaman read the budget speech through the tablet.
- டிஜிட்டல் நிதிநிலை அறிக்கை
- சுதந்திர இந்தியாவின் ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக காகிதப் பயன்பாடு அல்லாத டிஜிட்டல் வடிவிலான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
- பாஜக தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற மத்திய அரசின் மூன்றாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்தார்.
- சிறிய அளவிலான தொடுதிரையுடன் கூடிய கணினியின் (டேப்) வாயிலாக பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார்.
- Thiruvalluvar Thirunal – Chithirai Tamil New Year Awards
Thiruvalluvar Award for 2021 | Former Minister Dr. Vaigai Selvan |
Thanthai Periyar Award for 2020 | A. Tamilmagan Hussein |
Annal Ambedkar Award | Varagur A. Arunachalam |
Perarignar Anna Award | Kadambur M.R. Janardhanan his son Kudiyarasu Janardhanan |
Perunthalaivar Kamaraj Award | Dr. S.Devarajah |
Mahakavi Bharathiyar Award | Poet Poovai Senguttuvan |
Pavendar Bharathidasan Award | Poet Arivumathi alias Mathiazhagan |
Tamil Thendral Thiru.V.Ka Award | V.N.Samy |
Muthamizh Kavalar K.A.P. Viswanathan Award | Dr. V. Sethuramalingam |
- Chief Minister Edappadi Palaniswami presented a cheque of Rs 1 lakh each to the awardees.
- திருவள்ளுவர் திருநாள் – சித்திரைத் தமிழ் புத்தாண்டு விருதுகள்
2021-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது | முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் |
2020-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது | அ.தமிழ்மகன் உசேன் |
அண்ணல் அம்பேத்கர் விருது | வரகூர் அ.அருணாசலம் |
பேரறிஞர் அண்ணா விருது | கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன் அவரது மகன் குடியரசு ஜனார்த்தனன் |
பெருந்தலைவர் காமராஜர் விருது | முனைவர் ச.தேவராஜா |
மகாகவி பாரதியார் விருது | கவிஞர் பூவை செங்குட்டுவன் |
பாவேந்தர் பாரதிதாசன் விருது | கவிஞர் அறிவுமதி என்ற மதியழகன் |
தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது | வி.என்.சாமி |
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் விருது | முனைவர் வீ.சேதுராமலிங்கம் |
- இவ்விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
- VGP World Tamil Association
- World Tamil Association has been selected as nominee for VGP 2020 Tamil Thai Award.
- VGP World Tamil Association Founder – V.G. Santhosam
- Joint Secretary – VGP Rajadas
- வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்
- 2020- ஆம் ஆண்டுக்கான தமித்தாய் விருதுக்கு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
- வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் தலைவர் – வி.ஜி. சந்தோஷம்
- இணைச் செயலாளர் – வி.ஜி.பி. ராஜாதாஸ்
- Kapilar, Kambar, U.V. Swaminatha Awards
Kapilar Award | S.Ezhumalai |
U.V.Swaminathar Award | K.Rajanarayana’s grandson Deepan |
Kambar Award | Dr. H. V. Hande |
Sollin Selvan Award | Nagai Mukundan |
Umarupulavar Award | M. A. Syed Ahsan alias Paaridasan |
G. U. Pope Award | Dr. Ulrike Nicholas from Germany to his son Desikan |
Ilangovadigal Award | M. Vaidyalingan |
Amma Literary Award | Dr. T. Mahalakshmi |
Singaravelar Award | A. Alagesan |
Maraimalai Adigalar Award | T. Thayumanavan |
Iyothee Thasa Pandithar Award | Dr. K. P. Chellammal |
Arutperumjothi Vallalar Award | Dr. Uran Adigal |
Karaikal Ammaiyar Award | Dr. M. Gnanapoongodai |
Agaramuthali Thitta award
- K. Sivamani was awarded the Devaneya pavanar Award for the year 2020 by the Senthamizh Etymology Agaramuthali Thitta Iyakkam.
- கபிலர், கம்பர், உவே.சா விருதுகள்
கபிலர் விருது | செ.ஏழுமலை |
உவே.சா விருது | கி.ராஜநாராயணனுக்கு பேரன் தீபனிடமும் |
கம்பர் விருது | மருத்துவர் எச் வி ஹண்டே |
சொல்லின் செல்வன் விருது | நாகை முகுந்தன் |
உமறுப் புலவர் விருது | ம.அ. சையத் அசன் என்ற பாரிதாசன் |
ஜி.யு.போப் விருது | ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த முனைவர் உல்ரீகே நிகோலசுக்கு அவரது மகன் தேசிகனிடமும் |
இளங்கோவடிகள் விருது | மா.வைத்தியலிங்கன் |
அம்மா இலக்கிய விருது | முனைவர் தி. மகாலட்சுமி |
சிங்காரவேலர் விருது | ஆ.அழகேசன் |
மறைமலையடிகளார் விருது | தி. தாயுமானவன் |
அயோத்திதாசப் பண்டிதர் விருது | முனைவர் கோ.ப. செல்லம்மாள் |
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது | முனைவர் ஊரன் அடிகள் |
காரைக்கால் அம்மையார் விருது | முனைவர் மோ. ஞானப்பூங்கோதை |
அகரமுதலித் திட்ட விருதுகள்
- 2020 – ஆம் ஆண்டுக்கான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் விருதான தேவநேயப் பாவாணர் விருது முனைவர் கு.சிவமணிக்கு வழங்கப்பட்டது.
- Best Translator Award
Best Translator Awards for the year 2020 | Late S. Sesachalam with his son Gopinath
Dr. Rama. Gurunathan P. Gunasekar Dr. Padmavathi Vivekanandan S. Jyotirlatha Girija J. Ramki alias Ramakrishnan Swami V Murthanandar Meera Ravi Shankar Thilagavathi Krishna Prasad |
- சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதுகள்
2020 – ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் | மறைந்த சோ. சேசாச்சலத்துக்கு அவரது மகன் கோபிநாத்திடமும்
முனைவர் ராம. குருநாதன் ப. குணசேகர் முனைவர் பத்மாவதி விவேகானந்தன் சு. ஜோதிர்லதா கிரிஜா ஜெ. இராம்கி என்ற இராமகிருஷ்ணன் சுவாமி வி மூர்த்தானந்தர் மீரா ரவிசங்கர் திலகவதி கிருஷ்ண பிரசாத் |
- Finance Minister quoting Thirukkural
- Union Finance Minister Nirmala Sitharaman was speaking on the occasion of the Budget speech, citing the Kural continued this year.
A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom’s weal expends.
Meaning: He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.
- திருக்குறளை மேற்கோள் காட்டிய நிதி அமைச்சர்
- பட்ஜெட் தாக்களின் போது இந்த ஆண்டும் தொடர்ந்து திருக்குறளை மேற்கோள் காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
‘பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களை சேர்த்தாலும் காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவனே அரசன்’ என்பது பொருள்.
- Military rule in Myanmar
- Army captures power in Myanmar. The arrest of prominent political figures including state counselor Aung San Suu Kyi and President Win Myint has been declared a state of emergency for a year in the country.
- The Myanmar military has overthrown the regime, citing allegations of irregularities in last year’s general election.
- Aung San Suu Kyi was the 1991 Nobel Peace Prize winner.
- மியான்மரில் ராணுவ ஆட்சி
- மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அரசின் ஆலோசகர் ஆங் சான் சுகி, அதிபர் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாட்டில் ஓர் ஆண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, இந்த ஆட்சிக்கு கவிழ்ப்பை மியான்மர் ராணுவம் நடத்தியுள்ளது.
- ஆங் சான் சுகி 1991-ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.
- Income Tax Rates Unchanged
- The Government of India has not made any changes in the rates for income tax in the financial year 2021-2022.
- The Central government has announced that people over the age of 75 who earn only a living from pensions and interest earned on savings will be exempt from income tax filing.
- வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை
- 2021 – 2022 ஆம் நிதியாண்டில் வருமான வரிக்காக விகிதங்களில் மத்திய அரசு எந்த வித மாற்றமும் செய்யவில்லை.
- ஓய்வூதியம், சேமிப்பு மூலம் கிடைக்கும் வட்டி ஆகியவற்றை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வருமான வரித் தாக்கலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- Budget in Tamil Nadu
- 3,500 km length of National Highways will be constructed in Tamil Nadu.
- The works on the National Highways, including two routes Madurai-Kollam and Chittoor-Tachur, will be taken up at a cost of Rs.1.03 lakh crores.
- The Government of India have approved the proposal for the development of Chennai Fishing Harbour and the construction of a Marine Algae Production Park.
- Of the 7 new textile parks to be constructed in three years, two will be set up in Tamil Nadu. In particular, one should be constructed in the southern districts and another in Salem district.
- தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை
- தமிழகத்தில் 3,500 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- மதுரை – கொல்லம், சித்தூர் – தச்சூர் ஆகிய இரண்டு வழித்தடங்கள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- சென்னை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கும், கடல் பாசி உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான திட்டத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்படும் 7 புதிய ஜவுளிப் பூங்காக்களில் இரண்டு தமிழகத்தில் அமைக்க வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒன்றும் சேலம் மாவட்டத்தில் மற்றொன்றும் அமைக்க வேண்டும்.
- Tamil Nadu Legislative Assembly to meet on February 2
- The TamilNadu Legislative Assembly session is also scheduled on February 2 at Kalaivanar Auditorium. As it is the first meeting of the current year, Tamil Nadu Governor Banwarilal Purohit will address the meeting.
- Speaker Dhanapal will read the English speech of Governor in Tamil.
- தமிழகப் பேரவை பிப்ரவரி 2 கூடுகிறது
- தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் பிப்ரவரி 2 அன்று கூட உள்ளது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைக்கிறார்.
- ஆளுநர் ஆங்கிலத்தில் ஆற்றும் உரையைப் பேரவைத்தலைவர் தனபால் தமிழில் வாசிப்பார்.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – February 2, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
2nd February 2020 | Download Link |
Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – February 2021