TNPSC Current Affairs – English & Tamil – June 2, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(2nd June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 2, 2021


SCIENCE AND TECHNOLOGY


  1. IIT Ropar develops ‘AmbiTag’ to record real-time ambient temperature
  • AmbiTag, a first-of-its-kind Internet of Things (IoT) device, is developed by the IIT Ropar Technology Innovation Hub – AWaDH and its startup ScratchNest. It records real-time ambient temperature during the transportation of perishable products, body organs, and blood, vaccines, etc.
  • AmbiTag is a USB-shaped device that continuously records the temperature of its immediate surroundings from -40 to 80 in any time zone for 90 days on a single charge. It is waterproof and generates an alert when the temperature goes beyond a pre-set limit.
  • The AmbiTag temperature data log advises the user whether the transported item is usable or the cold chain has been compromised during the transportation.

 

  1. ஐ.ஐ.டி ரோப்பர் நிகழ்நேர சுற்றுப்புற வெப்பநிலையை பதிவு செய்ய ‘ஆம்பிடாக்’ஐ உருவாக்கியுள்ளது
  • ஆம்பிடாக் (AmbiTag), என்னும் முதல் வகையான கருவி இணைய சாதனத்தை (Internet of Things-IoT) ஐஐடி ரோப்பர் தொழில்நுட்ப புத்தாக்க மையம் – AWaDH மற்றும் அதன் தொடக்க நிறுவனமான ஸ்கிராட்ச்நெஸ்ட் உருவாக்கியுள்ளன.  இது  அழுகும் பொருட்கள், உடல் உறுப்புகள் மற்றும் இரத்தம், தடுப்பூசிகள் போன்றவற்றின் போக்குவரத்தின் போது  நிகழ்நேர சுற்றுப்புற வெப்பநிலையைப் பதிவு செய்கிறது.
  • ஆம்பிடாக் ஒரு யுஎஸ்பி வடிவ சாதனம் ஆகும், இது ஒரே முறை சார்ஜ் செய்த பின்னர் அதன் உடனடி சுற்றுப்புறங்களின் வெப்பநிலையை -40 முதல் 80 வரை எந்த நேர மண்டலத்திலும் 90 நாட்களுக்கு பதிவு செய்கிறது. இது நீரால் பாதிப்படையாது மற்றும் வெப்பநிலை ஒரு முன்குறித்த வரம்புக்கு அப்பால் செல்லும் போது எச்சரிக்கும்.
  • ஆம்பிடாக் வெப்பநிலை தரவு பதிவு கொண்டுவரப்பட்ட பொருளை பயன்படுத்த முடியுமா அல்லது குளிர் சங்கிலி போக்குவரத்தின்போது சமரசம் செய்யப்பட்டதா என்பதை,\ பயனாளர்கள்களுக்கு அறிவுறுத்துகிறது.

  1. XraySetu, an AI-driven platform facilitates early COVID-19 interventions over Whatsapp
  • ARTPARK, Niramai and Indian Institute of Science, Bangalore have developed ‘XraySetu’, an AI-driven platform that facilitates early COVID-19 interventions over Whatsapp.
  • XraySetu is specifically designed to identify COVID-19 positive patients even from low-resolution Chest X-Ray images sent over Whatsapp for doctors who have access to X-ray machines. It is quick and easy to use and can facilitate COVID-19 detection in rural areas. Besides COVID-19, the platform can also detect 14 additional lung-related ailments, including tuberculosis and pneumonia, alongside others.
  • ARTPARK (AI & Robotics Technology Park) is a not-for-profit foundation established by the Indian Institute of Science (IISc), Bengaluru, with support from the Department of Science & Technology (DST), Government of India. ARTPARK was initiated under the National Mission on Interdisciplinary Cyber-Physical Systems (NM-ICPS), is further collaborating with infrastructure partners like C-DAC (for leveraging AI supercomputer ParamSiddi), Nvidia & AWS to scale this free service to all the doctors in rural India.
  • Niramai is a Bangalore-based HealthTech startup.

 

  1. செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் தளமான எக்ஸ்ரேசேது, வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தலையீடுகளை எளிதாக்குகிறது
  • ஆர்ட்பார்க், நிரமாய்  மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவை ‘எக்ஸ்ரேசேது’ என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் தளத்தை  உருவாக்கியுள்ளன. இது வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தலையீடுகளை எளிதாக்குகிறது.
  • எக்ஸ்ரேசேது, குறிப்பாக எக்ஸ்-ரே இயந்திரங்களை அணுகும் வசதி கொண்ட மருத்துவர்களுக்கு வாட்ஸ்அப் இல் அனுப்பப்படும், குறைந்த தெளிவுத்திறன் கொண்ட மார்பு எக்ஸ்-ரே படங்களிலிருந்து கூட கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விரைவாகவும் எளிதாகவும் பயன்படுத்தக்கூடியது மற்றும் கிராமப்புறங்களில் கோவிட்-19ஐ கண்டறிவதற்கு வசதியாக  இருக்கும். கோவிட்-19 தவிர, காசநோய் மற்றும் நிமோனியா உட்பட 14 கூடுதல் நுரையீரல் தொடர்பான நோய்களையும் இந்த தளம் மூலம் கண்டறிய முடியும்.
  • ஆர்ட்பார்க் (ARTPARK (AI & Robotics Technology Park) என்பது இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தால் (IISc) நிறுவப்பட்ட  இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும்.  ஆர்ட்பார்க், பல்துறை சைபர்-பிசிகல் சிஸ்டம்ஸ்  (NM-ICPS) மீதான தேசிய இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்டது, மேலும் C-DAC (செயற்கை நுண்ணறிவு சூப்பர் கம்ப்யூட்டர் பரம்சித்தி), நிவிடியா & ஏடபிள்யூஎஸ் போன்ற உள்கட்டமைப்பு பங்காளர்களுடன் இணைந்து கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த இலவச சேவையை கொடுக்கவிருக்கிறது.
  • நிரமாய் பெங்களூரைச் சேர்ந்த உடல்நல தொழில்நுட்ப தொடக்க நிறுவனமாகும்.

NATIONAL


  1. RDSO becomes the first institution to be declared SDO under “One Nation One Standard” mission on BIS
  • RDSO (Research Design & Standards Organisation) of the Indian Railways has become the first institution to be declared SDO (Standard Development Organisation) under “One Nation One Standard” mission on BIS (Bureau of Indian Standards). Research Designs & Standards Organization (RDSO), Lucknow is the sole R&D Wing of Ministry of Railways.
  • It helps in the adaptation of world-class standards in the given sector. The recognition is valid for 3 years and will require renewal.

One Nation One Standard Mission

  • The ‘One Nation One Standard’ Mission was introduced in 2019. It aims to ensure quality products in the country by converging multiple standards with the BIS.

BIS SDO Recognition Scheme

  • The scheme is launched by BIS to recognise SDO.

Bureau of Indian Standards (BIS)

  • BIS is the only recognised national body for standardisation in India. BIS was established under the Bureau of Indian standards (BIS) Act, 2016. It works under the Union Ministry of Consumer Affairs, Food & Public Distribution.
  • BIS Act, 2016 enables the Central Government to appoint any authority/agency, in addition to the BIS, to verify the conformity of products and services with the established standard and issue certificate of conformity.

 

  1. ஆர்.டி.எஸ்.ஓ, இந்திய தரநிர்ணய பணியகத்தின் “ஒரே நாடு ஒரு தரநிலை” இயக்கத்தின் கீழ் தர மேம்பாட்டு அமைப்பாக அறிவிக்கப்பட்ட முதல் நிறுவனமானது
  • இந்திய ரயில்வேயின் ஆர்.டி.எஸ்.ஓ (ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு) பிஐஎஸ் (இந்திய தரநிர்ணய பணியகம்) மீதான “ஒரே நாடு ஒரே தரநிலை” இயக்கத்தின் கீழ் எஸ்.டி.ஓ(தர மேம்பாட்டு அமைப்பு)வாக அறிவிக்கப்பட்ட முதல் நிறுவனமாக மாறியுள்ளது. லக்னோவின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஓ)   ரயில்வே அமைச்சகத்தின் ஒரே  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவாகும்.
  • இது கொடுக்கப்பட்ட துறையில் உலகத்தரம் வாய்ந்த தரங்களை தகவமைவு செய்ய உதவுகிறது. இந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் அதன் பின்னர் புதுப்பித்தல் தேவைப்படும்.

ஒரே நாடு ஒரே தரநிலை இயக்கம்

  • ‘ஒரே நாடு ஒரு தரநிலை’ இயக்கம் 2019இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பி.ஐ.எஸ் உடன் பல தரங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் நாட்டில் தரமான தயாரிப்புகளை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பி.ஐ.எஸ். எஸ்.டி.ஓ அங்கீகாரத் திட்டம்(BIS SDO Recognition Scheme)

  • தர மேம்பாட்டு அமைப்பை(எஸ்.டி.ஓ) அங்கீகரிக்க இந்திய தரநிர்ணய பணியகம் (பி.ஐ.எஸ்.) இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்திய தரநிர்ணய பணியகம் (பிஐஎஸ்)

  • இந்தியாவில் தரப்படுத்தலுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட தேசிய அமைப்பு பிஐஎஸ் மட்டுமே. இந்திய தரநிர்ணய(பிஐஎஸ்) சட்டம், 2016இன் கீழ் பிஐஎஸ் நிறுவப்பட்டது. இது மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • பி.ஐ.எஸ் சட்டம், 2016, மத்திய அரசு, பி.ஐ.எஸ் உடன் கூடுதலாக, நிறுவப்பட்ட தரநிலையுடன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் இணக்கத்தை சரிபார்க்கவும், இணக்கச் சான்றிதழை வழங்கவும் எந்த அதிகாரியையும்/நிறுவனத்தையும் நியமிக்க உதவுகிறது.

  1. NCPCR devises online portal ‘Bal Swaraj’ for children affected by Covid-19
  • ‘Bal Swaraj’ portal was developed by the National Commission for Protection of Child Rights (NCPCR). The portal has been created with the purpose of tracking and monitoring children who need care and protection in real-time digitally.
  • The portal will also be used to track children who have lost both their parents during COVID-19. The “COVID-Care” link on the portal has been provided for the concerned officer or department to upload the data of such children.
  • According to section 2(14) of the Juvenile Justice Act, 2015, “The children who have lost family support or are without any ostensible means of subsistence are children in need of care and protection”.

 

  1. கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குபால் ஸ்வராஜ்என்ற இணைய வளைத்தளத்தை என்சிபிசிஆர் வகுத்துள்ளது
  • பால் ஸ்வராஜ்வளைத்தளம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் (என்சிபிசிஆர்) உருவாக்கப்பட்டது. நிகழ்நேரத்தில், டிஜிட்டல் முறையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கண்காணிக்கும் நோக்கத்துடன் இந்த வளைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கோவிட்-19ஆல் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளைக் கண்காணிக்கவும் இந்த வளைத்தளம் பயன்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது துறை அத்தகைய குழந்தைகளின் தரவுகளை பதிவேற்றுவதற்கு வளைத்தளத்தில் “கோவிட்-கேர்” இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறார் நீதிச் சட்டம், 2015 பிரிவு 2(14)இன் படி, “குடும்ப ஆதரவை இழந்த அல்லது எந்தவொரு வெளிப்படையான பிழைப்பு வழியும் இல்லாத குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள்” ஆவர்.

INTERNATIONAL


  1. Operation Sagar Araksha 2 successfull after 12 days
  • MV X-Press Pearl, a cargo vessel carrying a consignment of chemicals and raw materials for cosmetics from Hazira in Gujarat to Colombo Port caught fire 9.5 nautical miles from the Colombo coast.
  • India dispatched ICG Vaibhav, ICG Dornier and Tug Water Lily and India’s specialised pollution response vessel Samudra Prahari to help the Sri Lankan Navy extinguish the fire under Operation Sagar Araksha 2.
  • The operation was successful and finally, the marine salvors embarked the vessel for assessment. 
  1. 12 நாட்களுக்குப் பிறகு ஆபரேஷன் சாகர் ஆரக்ஷா 2 வெற்றிகரமாக நிறைவு
  • குஜராத்தின் ஹஜிராவில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு அழகு சாதனப் பொருட்களுக்கான இரசாயனங்கள் மற்றும் மூலப்பொருட்களை ஏற்றிச் சென்ற எம்.வி.எக்ஸ்-பிரஸ் பேர்ல்(MV X-Press Pearl) என்ற சரக்குக் கப்பல் கொழும்பு கடற்கரையில் இருந்து5 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்தது.
  • ஆபரேஷன் சாகர் ஆரக்ஷா 2 நடவடிக்கையின் கீழ் இலங்கை கடற்படைக்கு தீயை அணைக்க உதவுவதற்காக ஐசிஜி வைபவ், ஐசிஜி டோர்னியர் மற்றும் தக் வாட்டர் லில்லி  மற்றும் இந்தியாவின் சிறப்பு மாசு கப்பல் சமுத்திர பிரஹாரி ஆகியவற்றை இந்தியா அனுப்பியது.
  • இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது, இறுதியாக கடல் மீட்பு பணியாளர்கள் மதிப்பீட்டிற்காக கப்பலில் இறங்கினர்.

  1. Colombo Port City Economic Commission Bill gives complete control of the Hambantota port to China
  • The Sri Lankan government has passed the Colombo Port City Economic Commission Bill that gives complete control of the Hambantota port to China. In 2017, Sri Lanka had given the Hambantota port to China on a 99-year lease.
  • This move is of strategic importance to India since it places Chinese troops so close to India. Recently, Sri Lanka revoked the 2019 agreement with India and Japan to develop the strategic East Container Terminal (ECT) at the Colombo Port.

Hambantota port

  • Hambantota port is a deep-water port located at the southern tip of Sri Lanka. It is located 250 km from South of Colombo. It forms a part of the BRI (Belt and Road Initiative) of China.

 

  1. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணை சட்டம் ஹம்பன்டோட்டா துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டை சீனாவிற்கு வழங்குகிறது
  • ஹம்பன்டோட்டா துறைமுகத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் அதிகாரத்தை சீனாவிற்கு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணை சட்டம் மூலம் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டில், ஹம்பன்டோட்டா துறைமுகத்தை இலங்கை 99 வருட குத்தகைக்கு துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியது.
  • இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது சீனப் படைகளை இந்தியாவுக்கு மிக நெருக்கமாக வைக்கிறது. அண்மையில், கொழும்பு துறைமுகத்தில் மூலோபாய கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியா மற்றும் ஜப்பானுடனான 2019ஆம் ஆண்டு உடன்படிக்கையை இலங்கை இரத்து செய்தது.

ஹம்பன்டோட்டா துறைமுகம்

  • ஹம்பன்டோட்டா துறைமுகம் இலங்கையின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஆழமான நீர் துறைமுகமாகும். இது  கொழும்பிலிருந்து தெற்கில் 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது சீனாவின் பிஆர்ஐ  (பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி)இன் ஒரு பகுதியாகும்.

  1. WHO approves the Sinovac-CoronaVac vaccine for emergency use
  • The World Health Organization (WHO) approved China’s Sinovac-CoronaVac vaccine for COVID-19 emergency use. It is the second Chinese vaccine to receive the WHO’s approval. Sinopharm is the first Chinese vaccine to be approved by the WHO.

Sinovac-CoronaVac vaccine

  • Sinovac-CoronaVac is a Chinese two-dose COVID-19 vaccine.

 

  1. அவசர கால பயன்பாட்டிற்கான சினோவாக்கொரோனாவாக் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது
  • கோவிட்-19இன் அவசர கால பயன்பாட்டிற்கான சீனாவின் சினோவாக்கொரோனாவாக் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற இரண்டாவது சீன தடுப்பூசி இதுவாகும். உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சீன தடுப்பூசி சினோபார்ம் ஆகும்.

சினோவாக்கொரோனாவாக் தடுப்பூசி

  • சினோவாக்-கொரோனாவாக் தடுப்பூசி சீனாவால் உருவாக்கப்பட்ட இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசி ஆகும்.

  1. WHO classifies COVID-19 variants first discovered in India as ‘Kappa’ and ‘Delta’
  • The World Health Organisation (WHO) named the 1.617.1 and B.1.617.2 variants of the COVID-19 as ‘Kappa’ and ‘Delta’ respectively, using Greek alphabets.
  • The B.1.617 variant was first detected in India and was divided into three lineages. Among them, only 1.617.2 (Delta) is a “variant of concern”.

 

  1. இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 தீ நுண்மிகளைகப்பாமற்றும்டெல்டாஎன்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது
  • உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19இன் பி.1.617.1 மற்றும் பி.1.617.2 தீநுண்மி வகைகளை முறையே கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி கப்பாமற்றும்டெல்டாஎன்று பெயரிட்டுள்ளது.
  • பி.1.617 தீநுண்மி இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு மூன்று பரம்பரைகளாக பிரிக்கப்பட்டது. அவற்றில், பி.1.617.2 (டெல்டா) மட்டுமேகவலையின் மாறுபாடாகவகைப்படுத்தப்பட்டுள்ளது.

APPOINTMENTS


  1. Lieutinant General Ajai Singh takes over as the 16th Commander-in-Chief of Andaman and Nicobar Command
  • Lieutinant General Ajai Singh assumed charge as the 16thCommander-in-Chief of the Andaman and Nicobar Command (CINCAN). The Andaman and Nicobar Command (ANC) at Port Blair is the only tri-service theatre command of the Armed Forces of India.
  • He was involved in Operation VIJAY (Kargil) and MEGHDOOT (Siachen Glacier). He was an active part of flood relief efforts in Uttarakhand in 2013, Uttar Pradesh and Bihar in 2017 and Kerala in 2018 as well as the of Government’s Covid relief efforts.

 

  1. அந்தமான் நிக்கோபார் கமாண்டின் 16வது தலைமைத் தளபதியாக லியூடினன்ட் ஜெனரல் அஜய் சிங் பொறுப்பேற்றார்
  • அந்தமான் நிக்கோபார் கட்டளை மையம் (CINCAN) 16வது தலைமைத் தளபதியாக லியூடினன்ட் ஜெனரல் அஜய் சிங் பொறுப்பேற்றார்.  போர்ட் பிளேரில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளை மையம் (ANC) மட்டுமே இந்திய ஆயுதப் படைகளின் ஒரே முத்தரப்பு திரையரங்கு கட்டளையாகும்.
  • அவர் ஆபரேஷன் விஜய் (கார்கில்) மற்றும் மேக்தூத் (சியாச்சின் பனியாறு) ஆகியவற்றில் ஈடுபட்டார். 2013ஆம் ஆண்டில் உத்தரகாண்ட், 2017ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மற்றும் 2018ஆம் ஆண்டில் கேரளா மற்றும் அரசின் கோவிட் நிவாரண முயற்சிகளில் அவர் ஈடுபட்டார்.

IMPORTANT DAYS


  1. Telangana Statehood Day – 2 June
  • The northwestern part of Andhra Pradesh was separated, and Telangana was created as the 29th state of India, with Hyderabad as its capital on 2 June 2014.
  • The Andhra Pradesh Reorganisation Act, 2014 bifurcated Andhra Pradesh into two separate states – Andhra Pradesh and Telangana.
  • Note: Creation of new state does not require Constitutional Amendment.

 

  1. தெலுங்கானா மாநில தினம் – 2 ஜூன்
  • ஆந்திரப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதி பிரிக்கப்பட்டு, ஹைதராபாத்தை தலைநகராக கொண்டு தெலுங்கானா இந்தியாவின் 29வது மாநிலமாக 2 ஜூன் 2014 அன்று உருவாக்கப்பட்டது.
  • ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 ஆந்திரப் பிரதேசத்தை ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு தனி மாநிலங்களாகப் பிரித்தது.
  • குறிப்பு: புதிய அரசை உருவாக்குவதற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 2, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
2 nd  May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021