TNPSC Current Affairs – English & Tamil – July 4 & 5th, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(4 & 5th July, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 4 & 5th, 2021


TAMIL NADU


1. Karnataka builds a dam across the Markandeya river

  • Karnataka has built a dam across the Markandeya river. This dam will affect irrigation in 870 hectares of land in the Krishnagiri district of Tamil Nadu.
  • Markandeya River originates in Karnataka and flows into the Pennaiyar river in Tamil Nadu.

 

1. மார்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டியுள்ளது

  • கர்நாடகா, மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை ஒன்றை கட்டியுள்ளது. இது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 870 ஹெக்டேர் நிலங்களின் பாசனத்தை பாதிக்கும்.
  • மார்கண்டேய ஆறு கர்நாடகாவில் தோன்றி தமிழ்நாட்டின் பெண்ணையாற்றில் கலக்கிறது.

NATIONAL


2. KVIC launches Project BOLD to boost tribals’ income and bamboo-based economy in Rajasthan

  • The Project BOLD (Bamboo Oasis on Lands in Drought) is the first of its kind exercise in India which was launched in the Nichla Mandwa tribal village in Udaipur, Rajasthan.
  • This project has been initiated by the Khadi and Village Industries Commission (KVIC) to reduce desertification and to provide livelihood and multi-disciplinary rural industry support.
  • The Project BOLD seeks to create bamboo-based green patches in arid and semi-arid land zones.
  • Bamboos grow very fast and could be harvested in 3 years. Bamboos are also known for conserving water and reducing evaporation.

 

2. கே.வி..சி பழங்குடியினரின் வருமானம் மற்றும் மூங்கில் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தியது

  • ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பழங்குடியினர் கிராமமான நிக்லா மன்ட்வாவில் தொடங்கப்பட்ட முதல் பயிற்சியான வறட்சியில் உள்ள நிலங்களில் மூங்கில் சோலை (Project BOLD) என்ற திட்டம் இவ்வகையில் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் திட்டமாகும்.
  • இந்த திட்டம் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தால் (கே.வி..சி) பாலைவனமாதலைக் குறைக்கவும், வாழ்வாதாரம் மற்றும் பல்துறை கிராமப்புற தொழில் ஆதரவு வழங்கவும் தொடங்கப்பட்டுள்ளது.
  • போல்ட் (Project BOLD) திட்டம் வறட்சியான மற்றும் அரை வறட்சியான நில மண்டலங்களில் மூங்கில் அடிப்படையிலான பச்சை திட்டுகளை உருவாக்க முயற்சிக்கிறது.
  • மூங்கில்கள் மிக வேகமாக வளர்கின்றன. சுமார் மூன்று ஆண்டுகளில், அவற்றை அறுவடை செய்யலாம். மூங்கில்கள் நீரைப் பாதுகாப்பதற்கும், ஆவியாவதைக் குறைப்பதற்கும் உதவுகின்றன.

3. Union Education Minister Ramesh Pokhriyal Nishank launches NIPUN Bharat virtually

  • Union Education Minister Ramesh Pokhriyal Nishank virtually launched the National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy NIPUN Bharat.
  • NIPUN Bharat aims to create an enabling environment to ensure universal foundational literacy and numeracy. This is to ensure that every child achieves the desired learning competencies in reading, writing and numeracy by the end of Grade 3, by 2026-2027.

 

3. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மெய்நிகராக நிபுன் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்தார்

  • மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மெய்நிகராக புரிந்து வாசிப்பது மற்றும் எண் தேர்ச்சிக்கான தேசிய முன்முயற்சியான நிபுன் பாரத்தைத் (NIPUN Bharat) தொடங்கினார்.
  • நிபுன் பாரத் அனைவருக்கும் அடித்தள எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உறுதி செய்ய ஒரு சாத்தியமான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2026-27ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒவ்வொரு குழந்தையும் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்ணறிவு கற்றல் திறன்களை 3ஆம் வகுப்பிற்குள் கற்பதை உறுதி செய்கிறது.

4. Pushkar Singh Dhami was sworn in as the 11th Chief Minister of Uttarakhand

  • Pushkar Singh Dhami was sworn in as the 11th Chief Minister of Uttarakhand.
  • Uttarakhand Governor Baby Rani Maurya administered the oath to PS Dhami in a ceremony held in Rajbhawan in Dehradun.
  • Pushkar Singh Dhami is the youngest Chief Minister of Uttarakhand.

 

4. உத்தரகண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்

  • உத்தரகண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்.
  • டேராடூனில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா PS தாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • புஷ்கர் சிங் தாமி உத்தரகண்ட் மாநிலத்தின் இளைய முதல்வர் ஆவார்.

5. Prime Minister Narendra Modi is set to address the CoWIN Global Conclave

  • Indian Prime Minister Narendra Modi will address the CoWIN Global Conclave.
  • The conclave aims to share India’s experience with regards to universal COVID-19 vaccination through the Co-WIN platform.
  • COVID-19 vaccine registration portal, CoWIN has become very popular and foreign countries are showing interest in this vaccine registration technology.

 

5. கோவின் குளோபல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்

  • கோவின் (CoWIN) குளோபல் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.
  • அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான இந்தியாவின் அனுபவத்தை கோ-வின் தளத்தின் மூலம் பகிர்ந்து கொள்வதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கோவிட்-19 தடுப்பூசி பதிவு வலைத்தளம், கோவின் (CoWIN) மிகவும் பிரபலமாகி விட்டது மற்றும் வெளிநாடுகள் இந்த தடுப்பூசி பதிவு தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டுகின்றன.

INTERNATIONAL


6. Chinese astronauts perform their first spacewalk

  • Chinese astronauts performed their first spacewalk outside the Tiangong station.
  • Tiangong is a Chinese Space Station built completely by China.
  • Three astronauts were sent in China’s longest crewed mission for 3 months. The Chinese astronauts Liu Boming and Tang Hongbo performed the walk.

 

6. சீன விண்வெளி வீரர்கள் தங்கள் முதல் விண்வெளி நடையை நிகழ்த்தியுள்ளனர்

  • சீன விண்வெளி வீரர்கள் தியாங்காங் நிலையத்திற்கு வெளியே தங்கள் முதல் விண்வெளி நடையை நிகழ்த்தினர்.
  • தியான்காங் என்பது முற்றிலும் சீனாவால் கட்டப்பட்ட சீன விண்வெளி நிலையம் ஆகும்.
  • சீனாவின் மிக நீண்ட குழுபணியில் மூன்று விண்வெளி வீரர்கள் 3 மாதங்களுக்கு விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். சீன விண்வெளி வீரர்களான லியு போமிங் மற்றும் டாங் ஹாங்போ இந்நடைப்பயணம் மேற்கொண்டனர்.

SPORTS


7. Mithali Raj becomes the leading run-scorer across all formats in Women’s International Cricket

  • India captain Mithali Raj became the leading run-scorer across all formats in Women’s International Cricket. She crossed 10,200 runs and overtook former England skipper Charlotte Edwards.

 

7. மித்தாலி ராஜ் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டிகளிலும் அதிக ரன் எடுத்த வீராங்கனையாகியுள்ளார்

  • இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் அதிக ரன் எடுத்த வீராங்கனையானார். அவர் 10,200 ரன்களைக் கடந்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் சார்லோட் எட்வர்டின் சாதனையை முறியடித்தார்.

DAY IN HISTORY


8. Swami Vivekananda’s Death Anniversary – 4 July

  • Swami Vivekananda was born Narendranath Dutta in Kolkata on 12 January 1863. His guru was Ramakrishna Paramhamsa.
  • He was famous for his speech at the World’s Parliament of Religions held in Chicago in 1893. He died on 4 July 1902 at Belur Math in West Bengal.

 

8. சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள் – 4 ஜூலை

  • சுவாமி விவேகானந்தர், 12 ஜனவரி 1863 அன்று கொல்கத்தாவில் நரேந்திரநாத் தத்தாவாக பிறந்தார். அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார்.
  • 1893இல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்காக அவர் பிரபலமானவர். அவர் 4 ஜூலை 1902 அன்று மேற்கு வங்கத்தில் உள்ள பேலூர் மடத்தில் இறந்தார்.

9. Former Indian Prime Minister Gulzari Lal Nanda’s Birth Anniversary – 4 July

  • Gulzari Lal Nanda was the former Prime Minister of India. He was born on 4 July 1898. He became the Prime Minister following the deaths of Jawaharlal Nehru in 1964 and Lal Bahadur Shastri in 1966.

 

9. முன்னாள் பிரதமர் குல்சாரி லால் நந்தாவின் பிறந்த நாள் – 4 ஜூலை

  • குல்சாரி லால் நந்தா இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஆவார். அவர் 4 ஜூலை 1898 அன்று பிறந்தார். 1964இல் ஜவஹர்லால் நேரு மற்றும் 1966இல் லால் பகதூர் சாஸ்திரி இறந்ததைத் தொடர்ந்து அவர் பிரதமரானார்.

10. Freedom fighter Alluri Seetarama Raju’s Birth Anniversary – 4 July

  • Alluri Seetarama Raju was born on 4 July 1897 in Andhra Pradesh. He led the Rampa rebellion in which he organised the tribal people of Vishakapatnam and East Godavari districts to fight against the British in 1922.
  • He was given the title ‘Manyam Veerudu’ known as ‘Hero of the Jungles’ by the people.

 

10. சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் பிறந்த நாள் – 4 ஜூலை

  • அல்லூரி சீதாராம ராஜு, 4 ஜூலை 1897 அன்று ஆந்திராவில் பிறந்தார். அவர் ராம்பா கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். அதில் அவர் 1922இல் பிரிட்டிஷாருக்கு எதிராக போராட விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள பழங்குடி மக்களை ஒருங்கிணைத்தார்.
  • ஹீரோ ஆஃப் தி ஜங்கிள்ஸ்எனப்படும் மான்யம் வீருடு என்ற பட்டத்தை அவருக்கு மக்கள் வழங்கினார்கள்.

11. Freedom fighter Pingali Venkaiah’s Death Anniversary – 4 July

  • Pingali Venkaiah was born in Andhra Pradesh. He is the designer of the Indian National Flag – Tricolour. He was also known as ‘Jhanda Venkaiah’.
  • Indian National Flag was officially adopted in 1931.

 

11. சுதந்திரப் போராட்ட வீரர் பிங்காலி வெங்கையாவின் நினைவு நாள் – 4 ஜூலை

  • பிங்காலி வெங்கையா ஆந்திராவில் பிறந்தார். அவர் இந்திய தேசியக் கொடிமூவர்ணக் கொடியை வடிவமைத்தவர் ஆவார். அவர் ஜந்தா வெங்கையா என்றும் அழைக்கப்பட்டார்.
  • இந்திய தேசியக் கொடி அதிகாரப்பூர்வமாக 1931இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

KNOW AN INSTITUTION


12. G7

  • G7 is an intergovernmental organisation of industrialised democracies that was formed in 1975. It includes the USA, Canada, France, Germany, Japan, Italy and the UK. The group meets annually to discuss the areas of common interest.
  • It became G8 after Russia joined the team in 1997. However, Russia was removed after it captured Crimea in 2014.
  • G7 is not based on a treaty and has no permanent secretariat. Its presidency rotates annually among the members.

 

12. G7

  • G7 என்பது 1975இல் உருவாக்கப்பட்ட தொழில்மயமாக்கப்பட்ட ஜனநாயகங்களின் அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பாகும். இதில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடங்கும். பொதுவான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க இக்குழு ஆண்டுதோறும் கூடுகிறது.
  • 1997இல் ரஷ்யா இவ்அணியில் சேர்ந்த பிறகு இது G8 ஆனது. இருப்பினும், 2014இல் கிரிமியாவைக் ரஷ்யா கைப்பற்றிய பின்னர், ரஷ்யா இவ்வமைப்பிலிருந்து அகற்றப்பட்டது.
  • ஜி7 ஒரு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை மற்றும் நிரந்தர அதற்கென தனி செயலகம் இல்லை. அதன் தலைமை பொறுப்பு ஆண்டுதோறும் உறுப்பினர்களிடையே சுழற்சி முறையில் மாறும்.