TNPSC Current Affairs – English & Tamil – June 30, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(30th June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 30, 2021


TAMIL NADU


  1. Sylendra Babu is appointed as the new DGP of Tamil Nadu
  • Sylendra Babu is appointed as the new Head Director General of Police (DGP) of Law and Order in Tamil Nadu. He is a 1987-batch IPS, he will replace K. Tripathy.
  • He was born in Kuzhithurai village in Kanniyakumari district and started as an assistant superintendent of police in Gobichettipalayam in 1989.

Awards:

  • President’s Police Medal for Meritorious Service in 2005
  • President’s Police Medal for distinguished service in 2013
  • Chief Minister’s Medal for excellence in public service in 2019

Books:

  • You too can become an I.P.S officer
  • A guide to Health and Happiness
  • Udalinai Urithi Sei
  • Unakul oru Thalaivan

 

  1. தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்
  • சைலேந்திர பாபு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு புதிய காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) நியமிக்கப்பட்டுள்ளார். 1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஜே.கே.திரிபாதிக்கு பதில் நியமிக்கப்படுகிறார்.
  • கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை கிராமத்தைச் சேர்ந்த இவர் 1989ஆம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் காவல் உதவி கண்காணிப்பாளராகத் தனது சேவையைத் தொடங்கினார்.

விருதுகள்:

  • சிறப்பான சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் 2005
  • புகழ்பெற்ற சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் – 2013
  • அரச சேவையில் சிறந்து விளங்குவோருக்கான முதலமைச்சர் பதக்கம் – 2019

புத்தகங்கள்:

  • நீங்களும் ஐபிஎஸ் அதிகாரியாகலாம்
  • ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான வழிகாட்டி
  • உடலினை உறுதி செய்
  • உனக்குள் ஒரு தலைவன்

  1. Peter Alphonse is appointed as the chairperson of the Tamil Nadu Minorities Commission
  • Peter Alphonse has been appointed as the chairperson of the Tamil Nadu Minorities Commission. He has served as a member of the Tamil Nadu Legislative Assembly and a Member of Rajya Sabha.

Tamil Nadu Minorities Commission

  • The Tamil Nadu State Minorities Commission was constituted in 1989 to protect the interests of religious and linguistic minorities and to protect their rights.
  • The Commission was given statutory status in 2010. The Commission is working on the educational, social and economic development of minorities in Tamil Nadu.

 

  1. பீட்டா் அல்போன்ஸ் தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்
  • பீட்டா் அல்போன்ஸ் தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவர் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையம்

  • மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்திடவும், அவா்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கடந்த 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் அமைக்கப்பட்டது.
  • இந்த ஆணையத்துக்கு 2010ஆம் ஆண்டில் சட்டப்பூா்வ அதிகாரம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பணிகளை இந்த ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

NATIONAL


  1. India presents ‘Of Men and Moments’ book of Jayakanthan to SCO
  • Indian Ambassador to China Vikram Misri presented ten translated books of modern Indian literature to Shangai Cooperation Organisation Secretary General Vladimir Norov at the SCO secretariat in Beijing.
  • The books were translated into Russian and Chinese, which are the official languages of the SCO by the Sahitya Akademi.

The translated books are:

  1. Of Men and Moments (Tamil) by Jayakanthan
  2. Arogyaniketan (Bengali) written by Tarashankar Bandyopadyay
  3. Ordained by Fate (Urdu) by Rajender Singh Bedi
  4. Illu (Telugu) by Rachakonda Vishwanatha Sastry
  5. The Last Exit (Hindi) by Nirmal Varma
  6. Longing for Sunshine (Assamese) by Sayed Abdul Malik
  7. Mystery of the Missing Cap and other short stories (Odia) by Manoj Das
  8. The Last Flicker (Punjabi) by Gurdial Singh
  9. Parva: A Tale of War, Peace, Love, Death, God and Man (Kannada) by S L Bhyrappa
  10. The Promised Hand (Gujrati) by Jhaverchand Meghnani

Shangai Cooperation Organisation (SCO)

  • The SCO is an eight-member economic and security group consisting of China, Russia, Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Uzbekistan, India and Pakistan.

 

  1. ஜெயகாந்தனின்சிலநேரங்களில் சில மனிதா்கள்புத்தகத்தை எஸ்.சி..வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது
  • சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி மொழிபெயர்க்கப்பட்ட பத்து நவீன இந்திய இலக்கிய புத்தகங்களை பெய்ஜிங்கில் உள்ள எஸ்.சி.ஓ தலைமைச் செயலகத்தில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் ஜெனரல் விளாடிமிர் நோரோவுக்கு வழங்கினார்.
  • இந்த புத்தகங்கள் எஸ்.சி.ஓ.வின் அதிகாரப்பூர்வ மொழிகளான ரஷ்ய மற்றும் சீன மொழிகளில் சாகித்ய அகாடமியால் மொழிபெயர்க்கப்பட்டன.

மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள்:

  1. ஜெயகாந்தனின் ‘சிலநேரங்களில் சில மனிதா்கள்’ (தமிழ்)
  2. தாராசங்கா் பந்தோபாத்யாயயின் ஆரோக்ய நிகேதன் (வங்க மொழி)
  3. ராஜேந்திர சிங் பேடியின் ‘ஏக் சதா் மைலி ஸி’ (உருது)
  4. ரச்சகொண்டா விஸ்வநாத சாஸ்திரியின் ‘இல்லு’ (தெலுங்கு)
  5. நிா்மல் வா்மாவின் ‘கவ்வே ஔா் காலா பானி’ (ஹிந்தி)
  6. சையத் அப்துல் மாலிக்கின் ‘சூா்ய முகீா் ஸ்வப்னா’ (அஸ்ஸாமி)
  7. மனோஜ் தாஸ் எழுதி ஒடியா சிறுகதைகள்(பஞ்சாபி)
  8. குா்தயாள் சிங்கின் ‘மரீ த தீவா’ (பஞ்சாபி)
  9. எஸ்.எல்.பைரப்பா எழுதிய ‘பா்வ’ (கன்னடம்)
  10. ஜாவோ்சந்த் மேக்னானி எழுதிய ‘வேவிஷால்’(குஜராத்தி)

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ):

  • எஸ்சிஓ அமைப்பு சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகளாகக் கொண்ட பொருளாதார மற்றும் பாதுகாப்புக் குழுவாகும்.

  1. President Ram Nath Kovind lays the virtual foundation stone for Babasaheb Dr Bhimrao Ambedkar Memorial Cultural Centre at Lucknow
  • President Ram Nath Kovind lays the virtual foundation stone for Babasaheb Dr Bhimrao Ambedkar Memorial Cultural Centre at Lucknow.
  • On 29 June 1928, Ambedkar launched his first newspaper titled ‘Samta’. The same day was selected for laying the foundation stone to mark the journey for equality of Ambedkar.

 

  1. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மெய்நிகராக பாபாசாகேப் டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் நினைவு கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லை லக்னோவில் நிறுவியுள்ளார்
  • லக்னோவில் பாபாசாகேப் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் நினைவு கலாச்சார மையத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மெய்நிகராக அடிக்கல் நாட்டினார்.
  • அம்பேத்கர் 29 ஜூன் 1928 அன்று சம்தாஎன்ற தலைப்பில் தனது முதல் செய்தித்தாளைத் தொடங்கினார்.   அம்பேத்கரின் சமத்துவத்திற்கான பயணத்தைக் குறிக்கும் வகையில் அடிக்கல் நாட்டுவதற்காக அதே நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

INTERNATIONAL


  1. China becomes malaria-free after 70 years
  • China becomes malaria-free after 70 years. World Health Organization recognises countries that have achieved at least three consecutive years of zero indigenous cases as malaria-free.
  • China became the 40th country certified malaria-free by the WHO.
  • El Salvador (2021), Algeria and Argentina (2019), and Paraguay and Uzbekistan (2018) were recognised as malaria-free recently.
  • China is the fourth country Western Pacific region to be awarded a malaria-free certification after Australia (1981), Singapore (1982) and Brunei (1987).
  • WHO releases World Malaria Report.

Malaria

  • Malaria is caused by the Plasmodium parasite and female Anopheles mosquitoes act as a vector.
  • 5-year National Strategic Plan for Malaria Elimination was started in 2017 that focused on Malaria elimination by 2022.
  • MERA-India (Malaria Elimination Research Alliance-India) was launched by Indian Council of Medical Research (ICMR), which is a conglomeration of partners working on the control of malaria.

 

  1. சீனா 70 ஆண்டுகளுக்குப் பிறகு மலேரியா இல்லா நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • சீனா 70 ஆண்டுகளுக்குப் பிறகு மலேரியா இல்லா நாடாக அறிவிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பு குறைந்தது மூன்று தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு பூஜ்ஜிய மலேரிய நோயாளிகளை அடைந்த நாடுகளை மலேரியா இல்லா நாடுகளாக அங்கீகரிக்கிறது.
  • உலக சுகாதார அமைப்பால் மலேரியா இல்லாத 40வது நாடாக சீனா அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எல் சால்வடார் (2021), அல்ஜீரியா மற்றும் அர்ஜென்டினா (2019), மற்றும் பராகுவே மற்றும் உஸ்பெகிஸ்தான் (2018) சமீபத்தில் மலேரியா இல்லா நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டன.
  • மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா (1981), சிங்கப்பூர் (1982) மற்றும் புருனே (1987) ஆகிய நாடுகளுக்கு பிறகு மலேரியா இல்லாத நாடாக சான்றிதழ் வழங்கப்பட்ட நான்காவது நாடு சீனா ஆகும்.
  • உலக மலேரியா அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிடுகிறது.

மலேரியா

  • மலேரியா பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது, இதில் பெண் அனோபில்ஸ் கொசுக்கள் நோய்கடத்தியாக செயல்படுகிறது.
  • 5 ஆண்டு கால மலேரியாவை ஒழிப்பதற்கான தேசிய மூலோபாயத் திட்டம் 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, இது 2022ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேராஇந்தியா (MERA- மலேரியா ஒழிப்பு ஆராய்ச்சி கூட்டணி-இந்தியா) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மூலம் தொடங்கப்பட்டது, இது மலேரியாவை கட்டுப்படுத்த வேலை செய்யும் பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பு ஆகும்.

SPORTS


  1. Discus thrower Seema Punia Antil qualifies for Tokyo Games 2020
  • Seema Punia qualified for Tokyo Games 2020. She broke the two-decade-old record with 63.72 m throw at the 60th National Inter-State Athletics Championships at the Netaji Subhas National Institute of Sports.
  • She has won a bronze medal in Asian Games 2018.

 

  1. வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020க்கு தகுதி பெற்றுள்ளார்
  • சீமா புனியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020 க்கு தகுதி பெற்றார். நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 60வது மாநிலங்களுக்கிடையேயான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில்72 மீ. தூரத்திற்கு வட்டு எறிந்து முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளார்.
  • இவர் 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

  1. Srihari Natraj qualifies for Tokyo Olympics 2020
  • Srihari Natraj became the second swimmer to qualify for the Tokyo Olympics 2020. This is the first time two Indian swimmers will take part in Olympic Games after a direct qualification.
  • Sajan Prakash was the first swimmer to qualify for Tokyo Games 2020.

 

  1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020க்கு ஸ்ரீஹரி நடராஜ் தகுதி பெற்றுள்ளார்
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020க்கு தகுதி பெற்ற இரண்டாவது நீச்சல் வீரர் என்ற பெருமையை ஸ்ரீஹரி நடராஜ் பெற்றார். இரண்டு இந்திய நீச்சல் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாக தகுதி பெற்று பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
  • டோக்கியோ விளையாட்டு போட்டி 2020க்கு தகுதி பெற்ற முதல் நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் ஆவார்.

  1. Aditi Ashok becomes the first female Indian golfer to qualify for Tokyo Olympics 2020
  • The 23 year old Aditi Ashok became the first female Indian golfer to qualify for Tokyo Olympics 2020. She ranked 45th in the list announced by the International Golf Federation.
  1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020க்கு தகுதி பெற்ற முதல் பெண் இந்திய கோல்ப் வீரர் ஆனார் அதிதி அசோக்
  • 23 வயதான அதிதி அசோக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020க்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் கோல்ஃப் வீரர் ஆனார். சர்வதேச கோல்ஃப் கூட்டமைப்பு தரவரிசையில் அவர் 45வது இடத்தைப் பிடித்துள்ளார்.

  1. Indian Gymnast Pranati Nayak qualifies for Tokyo Olympics 2020
  • Indian Gymnast Pranati Nayak qualifies for Tokyo Olympics 2020. She was an Asian Championships bronze medallist.
  • Sri Lanka’s Elpitiya Badalge, Dona Milka Gehani and Pranati were given continental reservation for Tokyo Olympics 2020.

 

  1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020க்கு இந்திய ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை பிரனதி நாயக் தகுதி பெற்றுள்ளார்
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020க்கு இந்திய ஜிம்னாஸ்ட் வீராங்கனை பிரனதி நாயக் தகுதி பெற்றுள்ளார். அவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இலங்கையின் எல்பிடியா பாதல்கே, டோனா மில்கா கெஹானி மற்றும் பிரனதிக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

 


IMPORTANT DAYS


  1. International Day of Asteroids – 30 June
  • International Day of Asteroids is observed on 30 June annually to raise public awareness about the asteroid impact hazard. This day marks the largest recorded asteroid impact on Earth that took place near the Tunguska River in Siberia on 30 June 1908.
  • The United Nations General Assembly adopted a resolution declaring 30 June as the International Asteroid Day In 2016.
  • Asteroids are small rocky bodies orbiting the Sun in the asteroid belt between the Mars and Jupiter. They could be the source of the formation of our Solar System.

 

  1. சர்வதேச விண்கற்கள் தினம் – 30 ஜூன்
  • விண்கற்கள் தாக்குதலின் ஆபத்து குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச விண்கற்கள் தினம் ஆண்டுதோறும் 30 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் 30 ஜூன் 1908 அன்று சைபீரியாவில் துங்குஸ்கா ஆற்றின் அருகே நடந்த பூமியில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய விண்கல் தாக்குதலைக் குறிக்கிறது.
  • 2016இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 30 ஜூனை சர்வதேச விண்கற்கள் தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • விண்கற்கள் என்பது செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கு இடையிலான விண்கற்கள் வாரில் சூரியனைச் சுற்றி வரும் சிறிய பாறைகள் ஆகும். அவை நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கத்திற்கு ஆதாரமாக இருந்திருக்கலாம்.

 


  1. International Day of Parliamentarism – 30 June
  • International Day of Parliamentarism is observed annually on 30 June to recognise the significance of parliamentary systems of government in shaping modern societies.
  • This day marks the day of the establishment of the Inter-Parliamentary Union, which is the global organisation of Parliaments in
  • This day was designated by United Nations General Assembly in 2018.

 

  1. சர்வதேச பாராளுமன்ற தினம்ஜூன் 30
  • நவீன சமூகங்களை வடிவமைப்பதில் பாராளுமன்ற அரசாங்க முறைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கு சர்வதேச பாராளுமன்ற தினம் ஆண்டுதோறும் 30 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 1889ஆம் ஆண்டு உலக பாராளுமன்றங்களின் அமைப்பான பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் உருவாக்கப்பட்ட நாளை இந்த நாள் குறிக்கிறது.
  • இந்த நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 2018இல் அறிவிக்கப்பட்டது.

DAY IN HISTORY


  1. Dadabhai Naoroji’s death anniversary – 30 June
  • Dadabhai Naoroji’s death anniversary is observed on 30 June 2021 marks his 104th Death Anniversary. He was born on 4 September 1825 in Bombay.
  • Dadabhai Naoroji is popularly known as the ‘Grand Old Man of India’. He became the first Indian to be appointed as a fulltime professor at Elphinstone College in Bombay. He was one of the founding members of the Indian National Congress. He wrote the book ‘Poverty and Un-British Rule’ in India.
  • He became the first Indian to be elected to the British Parliament. He was also the first Asian British MP. He died on 30 June 1917.

 

  1. தாதாபாய் நௌரோஜியின் நினைவு நாள் – 30 ஜூன்
  • தாதாபாய் நௌரோஜியின் நினைவு நாள் ஆண்டுதோறும் 30 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு அவரது 104வது நினைவு நாள் ஆகும். இவர் 4 செப்டம்பர் 1825 அன்று பம்பாயில் பிறந்தார்.
  • தாதாபாய் நௌரோஜிஇந்தியாவின் முதுபெரும் மனிதர்என்று பிரபலமாக அறியப்படுகிறார். பம்பாயில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில் முழு நேர பேராசிரியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவர் இந்திய தேசிய காங்கிரசின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். அவர் இந்தியாவில் வறுமை மற்றும் பிரிட்டிஷ் அல்லாத ஆட்சி‘ (‘Poverty and Un-British Rule’) என்ற புத்தகத்தை எழுதினார்.
  • பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவர் முதல் ஆசிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் 30 ஜூன் 1917 அன்று இறந்தார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 30, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
30th June, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021