TNPSC Current Affairs – English & Tamil – June 10, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(10th June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 10, 2021


TAMILNADU


  1. Tamil Nadu Police launches ‘Operation Wind’ against illicit liquor sale
  • During the lockdown and following the closure of liquor outlets, illicit liquor was sold across Tamil Nadu. The Prohibition and Enforcement Wing (PEW) of Tamil Nadu Police launched ‘Operation Wind’ against illicit liquor

 

  1. கள்ளச் சாராய விற்பனைக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறைஆபரேஷன் விண்ட் தொடங்கியுள்ளது
  • முழு அடைப்பின் போது, மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையின் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு (PEW) சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக ஆபரேஷன் விண்ட்‘ (Operation Wind)ஐத் தொடங்கியது.

  1. Kallar elephant corridor becomes the first corridor area to be declared private forest under Tamil Nadu Preservation of Private Forests Act, 1949
  • Kallar elephant corridor becomes the first corridor area to be declared private forest under Tamil Nadu Preservation of Private Forests Act, 1949. The Coimbatore District Collector S. Nagarajan has declared 79 hectares of private land in the Kallar elephant corridor area as private forest.
  • With the declaration of the land as private forest, there will be regulations on the sale of these properties and permission has to be obtained for change in land use.

Kallar elephant corridor

  • The Jaccanaire-Hulikal Durgam corridor, popularly known as the Kallar corridor, is situated at the Nilgiri foothills near Mettupalayam.

 

  1. கல்லாறு யானை வழித்தடம் தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம், 1949இன் கீழ் தனியார் வனமாக அறிவிக்கப்பட்ட முதல் வழித்தடப் பகுதியாகிறது
  • தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம், 1949இன் கீழ் தனியார் வனமாக அறிவிக்கப்பட்ட முதல் வழித்தடப் பகுதியானது கல்லாறு யானை வழித்தடம். கல்லாறு யானை வழித்தடப் பகுதியில் 79 ஹெக்டேர் தனியார் நிலத்தை தனியார் காடாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் அறிவித்துள்ளார்.
  • தனியார் காடுகளாக அறிவிக்கப்பட்டதால், இந்த சொத்துக்களை விற்பது குறித்து விதிமுறைகள் இருக்கும் மற்றும் நிலப் பயன்பாட்டில் மாற்றம் செய்ய அனுமதி பெற வேண்டும்.

கல்லாறு யானை வழித்தடம்

  • கல்லாறு வழித்தடம் என்று பிரபலமாக அறியப்படும் ஜக்கனயர்ஹூலிகல் துர்கம் வழித்தடம், மேட்டுப்பாளையம் அருகே நீலகிரி அடிவாரத்தில் அமைந்துள்ளது.

SCIENCE AND TECHNOLOGY


  1. Hybrid Multiply Face Masks had been developed which can be an alternative to N95 Masks
  • Parisodhana Technologies Pvt. Ltd., supported partly by BIRAC and IKP Knowledge Park, under the Fast-Track COVID-19 fund, developed hybrid multiply face masks, SHG-95.
  • N95 face masks have been considered more effective in reducing the transmission of the COVID-19 virus, but its usage proved to be uncomfortable for many and are mostly unwashable.
  • SHG-95 face masks provide high particulate (>90%) and bacterial filtration efficiency (>99%), high breathability and are prepared from purely hand weaved cotton contact materials. It consists of a special filtration layer.

 

  1. கலப்பின மல்டிபிளை முககவசங்கள் N 95 முககவசங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளன
  • பரிசோதனா டெக்னாலஜிஸ் என்னும் தனியார் நிறுவனம் BIRAC மற்றும் .கே.பி நாலெட்ஜால் ஆதரிக்கப்பட்டு, ஃபாஸ்ட்-டிராக் கோவிட்-19 நிதியின் கீழ் கலப்பின மல்டிபிளை முககவசமான SHG-95ஐ உருவக்கியுள்ளது.
  • கோவிட்-19 வைரஸ் பரவுவதைக் குறைப்பதில் N95 முககவசங்கள் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்பட்டுள்ளன, ஆனால் அதன் பயன்பாடு பலருக்கு சங்கடமாகவும் மற்றும் துவைக்க முடியாததாக இருந்தது.
  • SHG-95 முககவசங்கள் அதிக உயர் நுண்துகள் வடிகட்டுதல் திறன் (>90%) மற்றும் பாக்டீரியா வடிகட்டுதல் திறன் (>99%), காற்றோட்டம் கொண்டது மற்றும் முற்றிலும் கை நெசவு பருத்தி தொடர்பு பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது ஒரு சிறப்பு வடிகட்டும் அடுக்கும் கொண்டுள்ளது.

NATIONAL


  1. Cabinet approves Minimum Support Price (MSP) for Kharif Crops for 2021–22
  • The Cabinet Committee on Economic Affairs, chaired by Prime Minister Narendra Modi, has approved the increase in the Minimum Support Prices (MSP) for all mandated Kharif crops (14 Kharif crops) for 2021-22. This is to ensure remunerative prices to the growers for their produce.
  • The Union Government announced an increase of MSP at a level of atleast 1.5 times in the budget 2018-19 of the All-India weighted average Cost of Production (CoP). The highest absolute increase in MSP over the previous year has been recommended for sesamum (Rs. 452 per quintal) followed by tur and urad (Rs. 300 per quintal each).

Minimum Support Prices (MSP)

  • The Commission for Agricultural Costs and Prices(CACP) recommends MSP for 23 crops, including sugarcane. Union Ministry of Agriculture and Farmers Welfare announces the
  • The CACP projects three kinds of production costs for every crop.
  • They are:
  1. A2 cost = All paid-out costs directly incurred by the farmer in cash and kind for seeds, fertilisers, labour, etc.,
  2. A2 + FL cost = A2 + Value of unpaid family labour
  3. C2 cost = A2 + FL + Rentals and interest forgone on owned land and fixed capital assets

 

  1. 202122ஆம் ஆண்டுக்கான காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • 2021–22ஆம் ஆண்டிற்கான அனைத்து பட்டியலிடப்பட்ட காரிஃப் பயிர்களுக்கும் (14 காரிஃப் பயிர்கள்) குறைந்தபட்ச ஆதரவு விலைகளை (MSP) உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும்.
  • 201819 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட சராசரி உற்பத்திச் செலவினத்தில் (CoP) குறைந்தபட்சம்5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டை விட குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிகபட்ச அதிகரிப்பு சாமைக்கும் (குவிண்டாலுக்கு ரூ. 452)  அதைத் தொடர்ந்து துவரம் பருப்பு மற்றும் உளுந்து (தலா குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 300) ஆகியவற்றிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)

  • கரும்பு உள்ளிட்ட 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேளாண் செலவுகள் மற்றும் விலை ஆணையம் (CACP) பரிந்துரைக்கிறது.  மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்  குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கிறது.
  • ஒவ்வொரு பயிருக்கும் மூன்று வகையான உற்பத்திச் செலவை CACP முன்வைக்கிறது.
  • அவை:
  1. A2 செலவு = விதைகள், உரங்கள், உழைப்பு, முதலியவற்றிற்காக விவசாயி நேரடியாகச் செலவு செய்த அனைத்து செலவுகளும், ரொக்கமாகவும், பொருளாகவும்
  2. A2 + FL செலவு = A2 + ஊதியமற்ற குடும்ப உழைப்பின் மதிப்பு
  3. C2 செலவு = A2 + FL + சொந்தமான நிலம் மற்றும் நிலையான மூலதன சொத்துக்கள் மீதான வாடகை மற்றும் விட்டுப்போன வட்டி ஆகியவை

  1. The first solar eclipse of the year will be visible across the northern hemisphere
  • The solar eclipse is an astronomical phenomenon that occurs when the Moon is in between the Sun and the Earth. It casts a shadow on the Earth, fully or partially blocking the Sun’s light in some areas.
  • This year solar eclipse will be an annular solar eclipse. An annular solar eclipse means that the Moon is far away from Earth, so it appears smaller in size than the Sun in the sky. In India, it will be visible only to people in Ladakh and Arunachal Pradesh.
  • Since the Sun is partially blocked by Moon, it will appear as a bright disk bordering a dark disk. This is also known as the “ring of fire”.

 

  1. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வடகோளகத்தில் தெரியும்
  • சூரிய கிரகணம் , சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும்போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும்.  இதனால் பூமியில் மீது நிழல் விழுந்து, சில பகுதிகளில் சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கிறது.
  • இந்த ஆண்டு சூரிய கிரகணம் வளைய சூரிய கிரகணமாக இருக்கும். வளைய சூரிய கிரகணத்தின் போது என்பது சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, எனவே அது வானத்தில் சூரியனை விட அளவில் சிறியதாகத் தோன்றுகிறது. இந்தியாவில், இது லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே தெரியும்.
  • சூரியன் சந்திரனால் ஓரளவு தடுக்கப்பட்டதால், அது ஒரு இருண்ட வட்டை ஒட்டிய பிரகாசமான வட்டாக தோன்றும். இது நெருப்பு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது.

  1. Paul and Mike, an Indian brand becomes the first Indian company to win silver at International Chocolate awards 2020-21
  • Paul and Mike, an artisanal Kerala-based ‘bean to bar’ chocolate maker, has become the first Indian company to win a silver in the International Chocolate Awards 2020-21. It got the award for its ‘64 Percent Dark Sichuan Pepper and Orange Peel Vegan Chocolate’.
  • Vikas Temani is the founder and business head of Paul and Mike, artisanal chocolates from Kerala.

 

  1. பால் மற்றும் மைக் என்னும் இந்திய நிறுவனம் சர்வதேச சாக்லேட் விருது 2020-21ல் வெள்ளி வென்ற முதல் இந்திய நிறுவனமாகிறது
  • 2020-21ஆம் ஆண்டு சர்வதேச சாக்லேட் விருதுகளில் வெள்ளி வென்ற முதல் இந்திய நிறுவனமாகியது கேரளாவைச் சேர்ந்த ‘பீன் டு பார்’ சாக்லேட் தயாரிப்பாளரான பால் மற்றும் மைக் நிறுவனம். இது அதன் ’64 சதவீதம் டார்க் சிச்சுவான் பெப்பர் மற்றும் ஆரஞ்சு பீல் வீகன் சாக்லேட்டிற்காக இவ்விருதைப் பெற்றது.
  • விகாஸ் தேமானி கேரளாவைச் சேர்ந்த கைவினைஞர் சாக்லேட்களான பால் மற்றும் மைக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வணிகத் தலைவர் ஆவார்.

INTERNATIONAL


  1. El Salvador becomes the first country in the world to adopt bitcoin as legal tender
  • El Salvador becomes the first country in the world to adopt bitcoin as legal tender. President Nayib Bukele proposed the move as it will bring financial inclusion and boost trade and tourism in the country.

Bitcoin:

  • Bitcoin is a type of cryptocurrency. It is a virtual currency that is decentralised and protected by cryptographic encryption It uses Blockchain technology.

 

  1. எல் சால்வடார் பிட் காயினை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாகிறது
  • எல் சால்வடார் பிட் காயினை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த உலகின் முதல் நாடானது. இது நிதி உள்ளடக்கத்தை கொண்டு வரும் மற்றும் நாட்டில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கும் என ஜனாதிபதி நயீப் புகேல் இந்த நடவடிக்கையை முன்மொழிந்தார்.

பிட் காயின்:

  • பிட் காயின் குறியீட்டு நாணயத்தின் (cryptocurrency) ஒரு வகை ஆகும். இது ஒரு மெய்நிகர் நாணயமாகும் (virtual currency), இது குறியாக்க தொழில்நுட்பங்களால் பரவலாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

MILITARY EXERCISES


  1. 31st edition Indo-Thai CORPAT starts at the Andaman Sea
  • 31st edition of India-Thailand Coordinated Patrol (Indo-Thai CORPAT) between the Indian Navy and the Royal Thai Navy started in the Andaman Sea.
  • INS Saryu of the Indian Navy and HTMS Krabi of Thailand along with Dornier Maritime Patrol Aircraft from both navies, are participating in the CORPAT.

CORPAT

  • CORPAT is a bi-annual naval exercise of the Indo-Thailand navy conducted since 2005. It aims at keeping the Indian Ocean safe and secure for international trade.

Other Exercises:

  • Maitree is a bilateral annual military exercise carried out by the Indo-Thailand army since 2006.
  • SITMEX is a trilateral maritime exercise conducted by Singapore, India and Thailand navies.

 

  1. இந்தியாதாய்லாந்து கூட்டு ரோந்தின் (CORPAT) 31வது பதிப்பு அந்தமான் கடலில் தொடங்குகிறது
  • இந்திய கடற்படைக்கும் ராயல் தாய்லாந்து கடற்படைக்கும் இடையிலான 31வது இந்தியாதாய்லாந்து கூட்டு ரோந்து பயிற்சி (இந்தோதாய் கார்ப்பட்) அந்தமான் கடலில் தொடங்கியது.
  • இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சர்யு மற்றும் தாய்லாந்தின் எச்.டி.எம்.எஸ் கிரபி மற்றும் இரு கடற்படைகளிலிருந்தும் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானங்களுடன் கார்ப்பட்டில் பங்கேற்கின்றன.

கார்ப்பட் (CORPAT)

  • கார்ப்பட் என்பது 2005ஆம் ஆண்டு முதல் இந்தோ-தாய்லாந்து கடற்படைகளால் வருடத்தில் இரு முறை நடத்தப்படும் கடற்படை பயிற்சியாகும். இது இந்தியப் பெருங்கடலை சர்வதேச வர்த்தகத்திற்கு பாதுகாப்பானதாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மற்ற பயிற்சிகள்:

  • மைத்ரீ (Maitree) என்பது 2006இல் இருந்து இந்தோ-தாய்லாந்து இராணுவத்தால் நடத்தப்படும் இருதரப்பு வருடாந்திர இராணுவ பயிற்சியாகும்
  • சிட்மெக்ஸ் (SITMEX) என்பது சிங்கப்பூர், இந்தியா மற்றும் தாய்லாந்து கடற்படைகளால் நடத்தப்படும் முத்தரப்பு கடல்சார் பயிற்சியாகும்.

REPORTS AND INDICES


  1. IISc, Bengaluru tops in research in the QS World University Rankings–2022
  • Quacquarelli Symonds, global higher education analysts, released the 18th edition of the World’s International University rankings, “QS World University Rankings-2022”. IISc, Bengaluru ranked number one in the world ranking for research.
  • Three Indian Universities have achieved top-200 positions in the rankings. They are:
S. NO INSTITUTE RANK
1. IIT, Bombay 177
2. IIT, Delhi 185
3. IISc, Bengaluru 186
  1. QS உலக பல்கலைக்கழக தரவரிசை-2022இல் ..எஸ்.சி., பெங்களூரு ஆராய்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது
  • உலகளாவிய உயர் கல்வி பகுப்பாய்வாளர்களான குவாக்வெல்லி சைமண்ட்ஸ், உலகின் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைகளின் 18வது பதிப்பை வெளியிட்டனர், QS உலக பல்கலைக்கழக தரவரிசைகள்-2022″. ..எஸ்.சி. பெங்களூரு ஆராய்ச்சிக்கான உலக தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • மூன்று இந்திய பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசையில் முதல் 200 இடங்களிக்குள் இடம்பெற்றுள்ளன. அவை:
. எண் நிறுவனம் தரவரிசை
1. ஐ.ஐ.டி., பம்பாய் 177
2. ஐஐடி, தில்லி 185
3. ஐ.ஐ.எஸ்.சி., பெங்களூரு 186

 


DAY IN HISTORY


  1. First War of Indian Independence
  • 1857 Revolt is popularly known as the First war of Indian independence. 10 May 1857 marks the starting of the 1857 revolt. On 10 May 1857, the revolt began at Three sepoy regiments revolted, killed their officers, and released those who had been imprisoned. The next day (11 May 1857), they reached Delhi, murdered Europeans, and seized the city. The rebels proclaimed Bahadur Shah II as emperor.
  • However, the siege didn’t sustain too long and the British captured Delhi again on 20 September 1857.
  1. முதல் இந்திய சுதந்திரப்போர்
  • 1857 புரட்சி முதல் இந்திய சுதந்திரப்போர் என்று பிரபலமாக அறியப்படுகிறது. 10 மே 1857ஆம் நாள் 1857 கிளர்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 10 மே 1857 அன்று மீரட்டில் கிளர்ச்சி தொடங்கியது. மூன்று சிப்பாய்ப் படைப்பிரிவுகள் கிளர்ச்சி செய்து, தங்கள் அதிகாரிகளைக் கொன்று, சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவித்தன. அடுத்த நாள் (11 மே 1857) அவர்கள் டெல்லியை அடைந்து ஐரோப்பியர்களைக் கொலை செய்து அந்த நகரத்தைக் கைப்பற்றினர். அவர்கள் இரண்டாம் பகதூர் ஷாவை பேரரசராக அறிவித்தனர்.
  • எனினும், இந்த முற்றுகை நீண்ட காலம் நீடிக்கவில்லை மற்றும் பிரிட்டிஷார் 20 செப்டம்பர் 1857 அன்று மீண்டும் டெல்லியைக் கைப்பற்றினர்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 10, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
10th May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021