TNPSC Current Affairs – English & Tamil – June 22, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(22nd June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 20 & 21, 2021


TAMIL NADU


  1. Tamil Nadu Government is to present a separate Budget for agriculture
  • Governor Banwarilal Purohit said in the 16th Legislative Assembly meeting, that the Tamil Nadu Government would introduce a separate annual Budget for Agriculture with the objective of increasing agricultural productivity and protecting farmer’s welfare.
  1. தமிழ்நாடு அரசு, வேளாண்மைக்காக தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது
  • வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், தமிழ்நாடு அரசு விவசாயத்திற்காக தனியாக வருடாந்திர பட்ஜெட்டை அறிமுகப்படுத்தும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 16வது சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறினார்.

SCIENCE AND TECHNOLOGY


  1. World’s first-ever genetically modified rubber planted in Assam
  • The world’s first genetically modified (GM) rubber plant is planted in a Rubber Board research farm in
  • The plant was developed at the Rubber Research Institute of India, Kerala (RRII). The genetically modified rubber has additional copies of the gene MnSOD, or manganese-containing superoxide dismutase. It can withstand severe cold conditions during winter.
  1. உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட ரப்பர் அசாமில் நடப்பட்டுள்ளது
  • உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட (GM) ரப்பர் குவஹாத்தியில் உள்ள ரப்பர் போர்டு ஆராய்ச்சி பண்ணையில் நடப்பட்டது.
  • இந்த தாவரம் கேரளாவிலுள்ள இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் (RRII) உருவாக்கப்பட்டது. மரபணு மாற்றப்பட்ட ரப்பர் மரபணு MnSOD அல்லது மாங்கனீசு கொண்ட சூப்பர்ஆக்சைடு டிஸ்முடேஸ் ஆகியவற்றின் கூடுதல் நகல்களைக் கொண்டுள்ளது. இது குளிர்காலத்தில் கடுமையான குளிரைத் தாங்கும்.

NATIONAL


  1. Prime Minister launches M-Yoga App on 7th International Day of Yoga
  • Prime Minister Narendra Modi launched the ‘WHO M-Yoga’ App while addressing on the 7th International Day of Yoga.Government of India in collaboration with WHO has developed M-Yoga Mobile App. M-Yoga app will provide many videos of Yoga training and practice based on common Yoga protocol in many languages.
  • The m-Yoga project focused on four areas:
  1. Common Yoga Protocol for General Wellness
  2. Yoga for mental health and resilience
  3. Yoga for Adolescents
  4. Yoga for pre-Diabetics

 

  1. 7வது சர்வதேச யோகா தினத்தில் எம்யோகா செயலியை பிரதமர் அறிமுகப்படுத்தி வைத்தார்
  • 7வது சர்வதேச யோகா தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடிஉலக சுகாதார நிறுவனத்தின் எம்யோகா செயலியை அறிமுகப்படுத்தினார். உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு எம்-யோகா மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது. எம்-யோகா பயன்பாடு பல மொழிகளில் பொதுவான யோகா நெறிமுறை அடிப்படையில் யோகா பயிற்சி மற்றும் பயிற்சியின் பல வீடியோக்களை வழங்கும்.
  • எம்யோகா திட்டம் நான்கு பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது:
  1. பொது ஆரோக்கியத்திற்கான பொதுவான யோகா நெறிமுறை
  2. மன ஆரோக்கியம் மற்றும் தாங்குதன்மை யோகா
  3. இளம் பருவத்தினருக்கான யோகா
  4. முன்-நீரிழிவு யோகா

  1. Andhra Pradesh Governor releases Special Postal Cover brought out by India Post on International Yoga Day
  • Andhra Pradesh Governor Biswa Bhusan Harichandan has released a Special Postal Cover brought out by India Post on the International Yoga Day at a programme held in Raj Bhavan.
  1. சர்வதேச யோகா தினத்தன்று இந்தியா போஸ்ட் வெளியிட்ட சிறப்பு அஞ்சல் அட்டையை ஆந்திர ஆளுநர் வெளியிட்டார்
  • ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன், சர்வதேச யோகா தினத்தன்று இந்தியா போஸ்ட் வெளியிட்ட சிறப்பு அஞ்சல் அட்டையை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

REPORTS AND INDICES


  1. The World Investment Report 2021
  • India had received 64 billion dollars in Foreign Direct Investment in 2020. India is the fifth largest recipient of inflows in the world, according to “The World Investment Report 2021”.
  • In India, Foreign Direct Investment increased 27 percent, to 64 billion dollars in 2020, from 51 billion dollars in 2019, which was pushed up by acquisitions in the information and communication technology industry.
  • Global Foreign Direct Investment flows have been severely hit by the pandemic and they plunged 35 percent in 2020, to 1 trillion dollars from 1.5 trillion dollars the previous year.

 

  1. உலக முதலீட்டு அறிக்கை 2021
  • 2020ஆம் ஆண்டில் இந்தியா 64 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றது. உலக முதலீட்டு அறிக்கை 2021இன்படி, உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெறும் ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது.
  • இந்தியாவில், வெளிநாட்டு நேரடி முதலீடு 2019இல் 51 பில்லியன் டாலர்களில் இருந்து, 2020இல் 64 பில்லியன் டாலர்களாக 27 சதவீதம் அதிகரித்தது, இது தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் கையகப்படுத்தல்களால் அதிகரித்தது.
  • உலகளாவிய வெளிநாட்டு நேரடி முதலீடுகள் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன மற்றும் அவை 2020இல் 35 சதவிகிதம் சரிந்தன, இது முந்தைய ஆண்டு 5 டிரில்லியன் டாலர்களில் இருந்து 1 டிரில்லியன் டாலராக சரிந்தது.

SPORTS


  1. Tajinderpal Singh Toor qualifies for Tokyo Games in shot-put
  • India’s Tajinderpal Singh Toor, the reigning Asian Games champion in men’s shot-put, has qualified for the Tokyo Games with an Asian record throw of 21.49 metres in the Indian Grand Prix IV in Patiala.
  1. தஜிந்தர்பால் சிங் டோர் குண்டெறிதலில் டோக்கியோ விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்
  • நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியன், இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டோர், ஆண்கள் குண்டெறிதலில் பாட்டியாலாவில் நடந்த இந்திய கிராண்ட் பிரிக்ஸ் 4இல் 49 மீட்டர் ஆசிய சாதனையுடன் டோக்கியோ விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

  1. Tejaswini won the National girls’ under-14 online rapid chess
  • Tejaswini of Tamil Nadu won the National girls’ under-14 online rapid chess. She defeated Riddhi Patel.
  • Aahana Pachchigar and S. Harshavardhini placed in second spot and Mrittika Mallick won the third place.
  1. தேஜாஸ்வினி தேசிய 14 வயதிற்குட்பட்ட பெண்கள் ஆன்லைன் விரைவு சதுரங்க போட்டியில் வென்றார்
  • தேசிய 14 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆன்லைன் விரைவு சதுரங்க போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேஜஸ்வினி வெற்றி பெற்றார். அவர் ரிதி படேலைப் தோற்கடித்தார்.
  • ஆஹானா பச்சிகர் மற்றும் எம்.எஸ். ஹர்ஷவர்தினி ஆகியோர் இரண்டாவது இடத்திலும், மிருத்திகா மல்லிக் மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றனர்.

IMPORTANT DAYS


  1. World Rainforest Day – 22 June
  • World Rainforest Day is observed every year on 22 June. It was launched in 2017 by Rainforest Partnership. The day is observed to celebrate the existence of rainforests and create awareness regarding its conservation.
  • Theme 2021: ‘Protected Together. Now. Forever’

9. உலக மழைக்காடுகள் தினம் – 22 ஜூன்

  • உலக மழைக்காடுகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் 22 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது. இது மழைக்காடு கூட்டாண்மையால் 2017இல் தொடங்கப்பட்டது. மழைக்காடுகள் இருப்பதைக் கொண்டாடவும், அதன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • கருப்பொருள் 2021: ஒன்றாக பாதுகாக்கப்பட்டது. இன்றும். என்றென்றும் (Protected Together. Now. Forever)

DAY IN HISTORY


  1. The Chaperkar brothers shot British Officer Rand on 22 June 1897
  • The Chaperkar brothersDamodar and Balkrishna, shot British Officer Rand, who was the Plaque Commissioner of Poona. They were the followers of Tilak.
  1. சாப்பர்கர் சகோதரர்கள் பிரிட்டிஷ் அதிகாரி ராண்ட்டை 22 ஜூன் 1897 அன்று சுட்டுக் கொன்றனர்
  • சாப்பர்கர் சகோதரர்கள்தாமோதர் மற்றும் பால்கிருஷ்ணா, பிரிட்டிஷ் அதிகாரி ராண்ட்டை சுட்டுக் கொன்றனர். அவர் பூனாவின் பிளேக் ஆணையராக இருந்தார். அவர்கள் திலகரின் சீடர்கள் ஆவர்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 22, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
22nd June, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021