TNPSC Current Affairs – English & Tamil – June 3, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(3rd June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 3, 2021


POLITY


  1. Union Cabinet gives approval for signing and ratifying SCO agreement on mass media cooperation
  • The Union Cabinet accorded an ex post facto approval for signing and ratifying an agreement on cooperation in the field of mass media between all member states of the Shanghai Cooperation Organisation (SCO).
  • The agreement was signed in June 2019. The agreement aims to promote equal and mutually beneficial cooperation among associations in the field of mass media. It would provide an opportunity to the member states to share best practices and new innovations in the field of mass media.

Shanghai Cooperation Organisation (SCO)

  • The Shanghai Cooperation Organisation (SCO) is a permanent intergovernmental international organisation. It was formed on 15 June 2001 in Shanghai. SCO comprises eight countries — India, Kazakhstan, China, the Kyrgyz Republic, Pakistan, Russia, Tajikistan, and Uzbekistan.
  • Originally, there were six countries while India and Pakistan were admitted to the group in 2017. SCO is the largest regional organisation in terms of geographical area.

 

  1. வெகுஜன ஊடக ஒத்துழைப்புக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ஒப்புதல் அளிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இடையேயான வெகுஜன ஊடகத் துறையில் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் ஒப்புதல் அளிப்பதற்கும் அமைச்சரவை நடைமுறைக்குப் பிந்தைய முன்னாள் ஒப்புதலை அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தம் ஜூன் 2019இல் கையெழுத்தானது. வெகுஜன ஊடகத் துறையில் சங்கங்களிடையே சமமான மற்றும் பரஸ்பர நன்மையளிக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உறுப்பு நாடுகளுக்கு வெகுஜன ஊடகத் துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் புத்தாக்கங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ.)

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ) நிரந்தர அரசுகளுக்கிடையிலான சர்வதேச அமைப்பாகும். இது ஷாங்காய் நகரில் 15 ஜூன் 2001 அன்று உருவாக்கப்பட்டது. இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ் குடியரசு, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளை எஸ்.சி.ஓ உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
  • முதலில், இந்த அமைப்பில் ஆறு நாடுகள் இருந்தன, இந்தியாவும் பாகிஸ்தானும் 2017இல் இக்குழுவில் அனுமதிக்கப்பட்டன. புவியியல் பரப்பு அடிப்படையில் மிகப்பெரிய பிராந்திய அமைப்பாக எஸ்.சி.ஓ உள்ளது.

SCIENCE AND TECHNOLOGY


  1. NASA announces DAVINCI+ and VERITAS missions to Venus
  • NASA announces DAVINCI+ (Deep Atmosphere Venus Investigation of Noble Gases, Chemistry, and Imaging) and VERITAS (Venus Emissivity, Radio Science, InSAR, Topography and Spectroscopy) missions to Venus.

DAVINCI+

  • DAVINCI+ will measure the composition of the dense and hot atmosphere of Venus and its evolution. DAVINCI+, consists of a fly-by spacecraft and an atmospheric descent probe. It is also expected to return the first high-resolution images of unique geological characteristics on Venus called “tesserae”.

VERITAS

  • VERITAS will map the Venus’ surface from orbit to help determine its geologic history.

Venus

  • Venus is the earth’s closest planet and the second planet from the Sun. Venus is similar to the Earth in structure but slightly smaller and much hotter. Its atmosphere is primarily of carbon dioxide, with clouds of sulfuric acid droplets. The temperature is hot enough to melt lead. The “air” on Venus is so dense and pressurised that it behaves more like a fluid than a gas near the surface.

 

  1. நாசா புதன் கிரகத்திற்கான டாவின்சி+ மற்றும் வெரிடாஸ் பயணங்களை அறிவித்துள்ளது
  • நாசா புதன் கிரகத்திற்கு டாவின்சி+ (டீப் அட்மோஸ்பியர் வீனஸ் இன்வெஸ்டிகேஷன் ஆஃப் நோபல் காஸஸ், கெமிஸ்டிரி மற்றும் இமேஜிங்) மற்றும் வெரிடாஸ் (வீனஸ் எமிஸிவிட்டி, ரேடியோ சயின்ஸ், இன்சார், டோபோகிராஃபி மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி) பயணங்களை அறிவித்துள்ளது.

டாவின்சி+

  • டாவின்சி+ புதன் கிரகத்தின் அடர்த்தியான மற்றும் சூடான வளிமண்டலத்தின் அமைப்பு மற்றும் அதன் பரிணாமத்தை அளவிடும். டாவின்சி+ என்பது ஒரு ஃப்ளை-பை விண்கலம் மற்றும் வளிமண்டல இறங்கு ஆய்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது “டெஸ்ஸேரே” என்று அழைக்கப்படும் புதன் கிரகத்தின் தனித்துவமான புவியியல் பண்புகளின் முதல் உயர் தெளிவுத்திறன் படங்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெரிடாஸ்

  • வெரிடாஸ் புதன் கிரகத்தின் மேற்பரப்பை சுற்றுப்பாதையில் இருந்து வரைபடமாக்கி அதன் புவியியல் வரலாற்றை தீர்மானிக்க உதவும்.

புதன் கிரகம்

  • புதன் கிரகம் என்பது பூமியின் மிக நெருக்கமான கிரகம் மற்றும் சூரியனிலிருந்து இரண்டாவது கிரகம் ஆகும். புதன் கிரகம் கட்டமைப்பில்   பூமியைப்  போன்றது,  ஆனால் சற்று சிறியது மற்றும் மிகவும் சூடானது. அதன் வளிமண்டலம்  முதன்மையாக கார்பன் டை ஆக்சைடு, கந்தக அமில நீர்த்துளி மேகங்களைக் கொண்டது. இதன் வெப்பநிலை ஈயத்தை உருக்கும் அளவுக்கு சூடாக உள்ளது.  புதன் கிரகத்தின் “காற்று” மிகவும் அடர்த்தி மற்றும் அழுத்தம் கொண்டது, அது மேற்பரப்பிற்கு அருகில் ஒரு வாயுவைப் போல் அல்லாமல் ஒரு திரவம் போல் நடந்துகொள்கிறது.

 China reports the world’s first case of a human infected with H10N3 avian influenza

  • China has reported the world’s first case of a human infected with H10N3 avian influenza virus. The risk of the virus spreading on a large scale is very low.

Avian influenza

  • Avian influenza is a highly contagious disease caused by the Influenza virus and affects mainly the poultry birds. It is also known as bird flu. Influenza virus is of three types – Influenza A, B, and C.
  • Influenza A is zoonotic and of serious concern, while B and C affect humans and are mild.

Flu epidemic

  • The last human epidemic of bird flu in China occurred in 2016 with the H7N9
  • Last year an outbreak of H5N8 and H5N6 bird flu virus was reported in China.
  1. சீனாவில் ஒருவர் H10N3 பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது
  • சீனாவில் ஒருவர் H10N3 பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட உலகின் முதன் மனிதன் இவரே. பெரிய அளவில் இந்த வைரஸ் பரவும் ஆபத்து மிகவும் குறைவாகும்.

பறவைக் காய்ச்சல்

  • பறவைக் காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்சா வைரஸால் பரவும் தொற்று நோயாகும். இது முக்கியமாக உணவுப் பறவைகளை பாதிக்கிறது. இது பறவைக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இன்ஃப்ளூயன்சா வைரஸ் மூன்று வகைப்படும் –  இன்ஃப்ளூயன்சா  ஏ, பி மற்றும் சி.
  • இன்ஃப்ளூயன்சா ஏ என்பது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் மற்றும் தீவிர கவலைக்குரியது. அதே நேரத்தில் பி மற்றும் சி மனிதர்களை லேசாக பாதிக்கிறது.

ஃப்ளூ தொற்று

  • சீனாவில் பறவைக் காய்ச்சலின் கடைசி மனித தொற்றுநோய் H7N9 வைரஸால் 2016இல் ஏற்பட்டது.
  • கடந்த ஆண்டு சீனாவில் H5N8 மற்றும் H5N6 பறவை காய்ச்சல் வைரஸ் பரவியதாக அறிவிக்கப்பட்டது.

REPORTS AND INDICES


  1. NITI Aayog releases the SDG India Index 2020-21
  • The Sustainable Development Goals (SDGs) India Index 2020-21 is developed by NITI Aayog in collaboration with the United Nations in India. It evaluates the progress of States and Union Territories on social, economic and environmental
  • It tracks the progress of all States and Union Territories on 115 indicators, incorporate 16 out of 17 SDGs, with a qualitative assessment on Goal 17, and cover 70 SDG targets.

SDG India Index 2020-21 rankings:

  • Kerala retains top rank with a score of 75.
  • Himachal Pradesh and Tamil Nadu took the second spot with a score of 74.
  • Bihar, Jharkhand, and Assam were the worst performing States.

SDG India Index

  • The index was first launched in December 2018. It has become the primary tool for monitoring progress on the SDGs in the country and has simultaneously fostered competition among the states and union territories by ranking them on the global goals.

 

  1. நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி இலக்குகள் இந்தியா குறியீட்டெண் 2020-21ஐ வெளியிட்டது
  • நிலையான வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) இந்தியா குறியீடு 2020-21, நிதி ஆயோக் மற்றும் இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து உருவாக்கப்பட்டது.
  • இது சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் குறிகாட்டிகளில் மீது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுகிறது.
  • இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை 115 குறிகாட்டிகளில் கண்காணிக்கிறது, 17 எஸ்டிஜிகளில் 16ஐ உள்ளடக்கியது, இலக்கு 17 மீதான தர மதிப்பீடு மற்றும் 70 எஸ்டிஜி இலக்குகளை உள்ளடக்கியது.

எஸ்டிஜி இந்தியா குறியீடு 2020-21 தரவரிசை:

  • கேரளா 75 மதிப்பெண்களுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு 74 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தன.
  • பீகார், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் ஆகியவை மிக மோசமான செயல்திறன் கொண்ட மாநிலங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

எஸ்டிஜி இந்தியா குறியீடு

  • இந்த குறியீடு முதலில் டிசம்பர் 2018இல் தொடங்கப்பட்டது. இது நாட்டின் எஸ்.டி.ஜி.க்கள் மீதான முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான முதன்மை கருவியாக மாறியுள்ளது, மேலும் உலகளாவிய இலக்குகளில் அவற்றை தரவரிசைப்படுத்துவதன் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடையே போட்டியை வளர்த்துள்ளது.

AWARDS AND RECOGNITIONS


  1. French novelist David Diop wins the prestigious International Booker Prize
  • French novelist David Diop wins the prestigious International Booker Prize for books translated into English with his World War I-set novel, ‘At Night All Blood is Black’.
  • He became the first French winner of the prize. The book’s translator Anna Moschovakis won half the 50,000 euro prize, which recognises the major role of translators.

The International Booker Prize

  • The International Booker Prize was formerly known as the Man Booker International Prize. It has been awarded since 2005. It is a sister prize to the Booker Prize, awarded to a novel written in English.

 

  1. பிரெஞ்சு நாவலாசிரியர் டேவிட் டியோப் மதிப்புமிக்க சர்வதேச புக்கர் பரிசை வென்றார்
  • பிரெஞ்சு நாவலாசிரியர் டேவிட் டியோப் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தனது முதல் உலகப் போர்-தொகுப்பு நாவலான ‘அட் நைட் ஆல் பிளட் இஸ் பிளாக்’ புத்தகத்திற்காக மதிப்புமிக்க சர்வதேச புக்கர் பரிசை வென்றார்.
  • அவர் இப்பரிசை வென்ற முதல் பிரெஞ்சு வெற்றியாளர் ஆவார். இப்புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் அன்னா மோஸ்கோவாகிஸ் 50,000 யூரோ பரிசில் பாதியை வென்றார், இது மொழிபெயர்ப்பாளர்களின் முக்கிய பங்கை அங்கீகரிக்கிறது.

சர்வதேச புக்கர் பரிசு

  • சர்வதேச புக்கர் பரிசு முன்பு மேன் புக்கர் சர்வதேச பரிசு என்று அழைக்கப்பட்டது. இது  2005 முதல் வழங்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நாவலுக்கு வழங்கப்படும் புக்கர் பரிசுக்கு துணை பரிசு ஆகும்.

SCHEMES


  1. The Union Agriculture Minister launches Seed Minikit Programme to boost production of oilseeds and pulses
  • The Union Agriculture Minister Narendra Singh Tomar launches the Seed Minikit Programme to boost production of oilseeds and pulses. High-yielding varieties of seeds of oilseeds and pulses to were distributed to the farmers under the Seed Minikit Programme.
  • The mission aims at introducing new varieties in the field and also reduce the seed replacement rate.
  • The seed mini-kits under the program are being provided by the NAFED (National Agricultural Cooperative Marketing Federation of India), National Seeds Corporation (NSC), and Gujarat State Seeds Corporation and the wholly funded by the Union Government through the National Food Security Mission.

 

  1. எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க விதை மினிகிட் திட்டத்தை மத்திய வேளாண் அமைச்சர் தொடங்கி வைத்தார்
  • எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விதை மினிகிட் திட்டத்தை தொடங்கி வைத்தார். விதை மினிகிட் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் அதிக விளைச்சல் வகை விதைகள் வழங்கப்பட்டன.
  • இந்த இயக்கம் களத்தில் புதிய இரகங்களை அறிமுகப்படுத்துவதையும், விதை மாற்று விகிதத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் விதை மினி கருவிகள், தேசிய வேளாண் கூட்டமைப்பு (NAFED), தேசிய விதைகள் கழகம் (NSC) மற்றும் குஜராத் மாநில விதைகள் கழகம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

SPORTS


  1. Indian men’s hockey team maintains 4th position and women’s team 9th position in FIH world rankings

Men’s Hockey:

  • Indian men’s hockey team maintains 4th position in the latest International Hockey Federation (FIH) world rankings.

Top three countries:

  1. Belgium
  2. Australia
  3. The Netherlands

Women’s hockey:

  • Indian women’s hockey team is in the 9th position in the latest International Hockey Federation (FIH) world rankings.

Top three countries:

  1. The Netherlands
  2. Argentina
  3. Australia

International Hockey Federation

  • International Hockey Federation is the international governing body of field hockey and indoor field hockey.
  • Headquarters: Lausanne, Switzerland

 

  1. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் உலக தரவரிசையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4வது இடத்தையும், பெண்கள் அணி 9வது இடத்தையும் தக்க வைத்துக்கொண்டன

ஆண்கள் ஹாக்கி:

  • இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சமீபத்திய சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) உலக தரவரிசையில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் மூன்று நாடுகள்:

  1. பெல்ஜியம்
  2. ஆஸ்திரேலியா
  3. நெதர்லாந்து

பெண்கள் ஹாக்கி:

  • சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) உலக தரவரிசையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 9வது இடத்தில் உள்ளது.

முதல் மூன்று நாடுகள்:

  1. நெதர்லாந்து
  2. அர்ஜண்டினா
  3. ஆஸ்திரேலியா

சர்வதேச ஹாக்கி சம்மேளனம்

  • சர்வதேச ஹாக்கி சம்மேளனம் என்பது கள ஹாக்கி மற்றும் உட்புற கள ஹாக்கியின் சர்வதேச ஆளும் அமைப்பாகும்.
  • தலைமையகம்: லவுசான், சுவிட்சர்லாந்து

  1. Brazil to host Copa America for second consecutive time
  • Brazil will host Copa America for the second consecutive time after Colombia and Argentina were not allowed to host the tournament due to COVID-19.

Copa America

  • CONMEBOL Copa America is the Men’s football tournament contested among national teams from CONMEBOL. It was earlier known as the South American Football Championship. It is the oldest international football competition in the world.

 

  1. பிரேசில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோபா அமெரிக்காவை நடத்துகிறது
  • கோவிட்-19 காரணமாக கொலம்பியா மற்றும் அர்ஜெண்டினா போட்டியை நடத்த அனுமதிக்கப்படாததை அடுத்து பிரேசில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோபா அமெரிக்கா போட்டியை நடத்துகிறது.

கோபா அமெரிக்கா

  • கான்மெபோல் (CONMEBOL) கோபா அமெரிக்கா என்பது கான்மெபோல் தேசிய அணிகளிடையே நடத்தப்படும் ஆண்கள் கால்பந்து போட்டியாகும். இது முன்னதாக தென் அமெரிக்க கால்பந்து சாம்பியன்ஷிப் என்று அழைக்கப்பட்டது. இது உலகின் பழமையான சர்வதேச கால்பந்து போட்டியாகும்.

IMPORTANT DAYS


  1. World Bicycle Day – 3 June
  • UN General Assembly declared 3 June as the World Bicycle Day. The day aims at promoting the use of bicycles for a cleaner environment and a healthy lifestyle. Bicycles are affordable, reliable, clean, and environmentally fit sustainable means of transport.
  1. உலக சைக்கிள் தினம் – 3 ஜூன்
  • ஐ.நா. பொதுச் சபை 3 ஜூனை உலக சைக்கிள் தினமாக அறிவித்தது. தூய்மையான சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. மிதிவண்டிகள் மலிவான, நம்பகமான, சுத்தமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான நிலையான போக்குவரத்து சாதனங்கள் ஆகும்.

DAY IN HISTORY


  1. M Karunanidhi Birthday – 3 June
  • M Karunanidhi was born on 3 June 1924 in the village of Thirukkuvalai in Nagapattinam
  • Muthuvel Karunanidhi was an Indian writer and politician who was the longest served Chief Minister of Tamil Nadu. He held the post for almost 18 years. Karunanidhi became the Chief Minister of Tamil Nadu in 1969 when Annadurai died.
  • He was popularly known as “Kalaignar” and “Muthamizh Arignar” for his contributions to Tamil literature. Before entering politics, he worked in the Tamil film industry as a screenwriter. Karunanidhi died on 7 August 2018.

 

  1. மு கருணாநிதி பிறந்தநாள் – 3 ஜூன்
  • மு. கருணாநிதி 3 ஜூன் 1924 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் பிறந்தார்.
  • முத்துவேல் கருணாநிதி ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் நீண்ட காலமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றினார். அவர் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இப்பதவி வகித்தார். 1969இல் அண்ணாதுரை இறந்தபோது கருணாநிதி தமிழக முதலமைச்சரானார்.
  • தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக “கலைஞர்” மற்றும் “முத்தமிழ் அறிஞர்” என்று பிரபலமாக அறியப்பட்டார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, தமிழ் திரையுலகில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றினார். கருணாநிதி 7 ஆகஸ்ட் 2018 அன்று இறந்தார்.

 Mountbatten plan – 3 June

  • Mountbatten plan was announced on 3 June 1947. It was also known as Dickie bird plan. Freedom with partition was already accepted even before Mountbatten’s arrival in India. Mountbatten plan mainly included the immediate transfer of power, which was suggested by P. Menon.

Highlights:

  • Two dominions and two constituent assemblies should be created.
  • Princely states must join either India or Pakistan.
  • Freedom would be granted on 15 August 1947.
  • A boundary commission will be appointed for the demarcation of boundary between India and Pakistan.

 

  1. மவுண்ட்பேட்டன் திட்டம் – 3 ஜூன்
  • மவுண்ட்பேட்டன் திட்டம் 3 ஜூன் 1947 அன்று அறிவிக்கப்பட்டது. இது டிக்கிபேர்ட் திட்டம் என்றும் அழைக்கப்பட்டது. மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே பிரிவினையுடன் கூடிய சுதந்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மவுண்ட்பேட்டன் திட்டத்தில் முக்கியமாக உடனடி அதிகார மாற்றம் நிறைவேற்றப்பட்டது, இது வி. பி. மேனனால் பரிந்துரைக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்:

  • இரண்டு ஆட்சியதிகங்களும் இரண்டு அரசியலமைப்பு சபைகளும் உருவாக்கப்படும்.
  • சுதேச மாநிலங்கள் இந்தியா அல்லது பாக்கிஸ்தானுடன் சேர வேண்டும்.
  • 15 ஆகஸ்ட் 1947 அன்று சுதந்திரம் வழங்கப்படும்.
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லை நிர்ணயம் செய்ய எல்லை ஆணையம் நியமிக்கப்படும்.

 Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 3, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
3rd  May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021