TNPSC Current Affairs – English & Tamil – May 21, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(21st  May, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 21, 2021


NATIONAL


  1. Narendra Singh Tomar launches National Mobile Monitoring Software App
  • Rural Development Minister Narendra Singh Tomar launched National Mobile Monitoring Software (NMMS) App and Area officer monitoring App.

NMMS App

  • The NMMS App permits taking real time attendance of workers at Mahatma Gandhi NREGA worksites along with geotagged photograph, which will increase citizen oversight of the programme besides potentially enabling processing payments faster.

Area Officer Monitoring App

  • Area Officer Monitoring App facilitates the officers to record their findings online along with time-stamped and go-coordinate tagged photographs for all the schemes of the Department of Rural Development.

 

  1. தேசிய நடமாடும் கண்காணிப்பு மென்பொருள் பயன்பாட்டை நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்
  • மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேசிய நடமாடும் கண்காணிப்பு மென்பொருள் (NMMS) செயலி மற்றும் பகுதி அதிகாரி கண்காணிப்பு செயலியை அறிமுகப்படுத்தினார்.

NMMS செயலி

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணித்தளங்களில் உள்ள தொழிலாளர்களின் உண்மையான நேர வருகையை, புவியியல் குறியிடப்பட்ட புகைப்படத்துடன் NMMS செயலி அனுமதிக்கிறது, இது இத்திட்டத்தில் குடிமக்களின் மேற்பார்வையை அதிகரிக்கும், மேலும் பணம் செலுத்துவதை விரைவாக செயல்படுத்தவும் உதவும்.

பகுதி அலுவலர் கண்காணிப்பு செயலி

  • ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து திட்டங்களுக்கும் நேர முத்திரையிடப்பட்ட மற்றும் ஒருங்கிணைப்பு குறியிடப்பட்ட புகைப்படத்துடன் கண்டுபிடிப்புகளை பகுதி அலுவலர் ஆன்லைனில் பதிவு செய்ய பகுதி அதிகாரி கண்காணிப்பு செயலி உதவுகிறது.

  1. Centre launches NIDHI4COVID2.0 to fund startups offering indigenous solutions to combat the Pandemic
  • Centre launches 0 to fund startups offering indigenous solutions to combat the Pandemic.
  • 0 will fund eligible startups and companies registered in India offering promising solutions that addresses or mitigates various challenges being faced due to COVID-19.
  1. தொற்றுநோயை எதிர்த்துப் போராட உள்நாட்டு தீர்வுகளை வழங்கும் தொடக்கங்களுக்கு நிதியளிக்க மத்திய அரசு நிதி4கோவிட்2.0 ஐத் தொடங்குகிறது
  • தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உள்நாட்டு தீர்வுகளை வழங்கும் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்க மத்திய அரசு நிதி4கோவிட்2.0 (0)ஐத் தொடங்குகிறது.
  • நிதி4கோவிட்2.0 இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த தொடக்க நிறுவனங்களுக்கும் கோவிட்-19 காரணமாக எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் அல்லது குறைக்கும் வேறு எந்த தீர்வுகளிலும் நம்பிக்கைக்குரிய தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் நிதியளிக்கும்.

  1. Union Agriculture Minister Narendra Singh Tomar launches the project of honey testing laboratory at IARI, Pusa, New Delhi
  • Narendra Singh Tomar launched the project of setting up of a honey testing laboratory at the Indian Agricultural Research Institute (IARI), Pusa, New Delhi on World Bee Day (20 May).
  • 300 crores have been approved for the overall promotion of National Beekeeping & Honey Mission (NBHM), development of scientific beekeeping and achieving the target of sweet revolution.

 

  1. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புது தில்லி, புசாவில் உள்ள ஐ.ஏ.ஆர்.ஐ.யில் தேன் பரிசோதனை ஆய்வக திட்டத்தை தொடங்கி வைத்தார்
  • நரேந்திர சிங் தோமர், உலக தேனீ தினத்தன்று (20 மே) புது தில்லியில் உள்ள பூசாவில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில்(IARI) தேன் பரிசோதனை ஆய்வகத்தை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கினார்.
  • தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம் (NBHM) மூலம் அறிவியல் பூர்வ தேனீ வளர்ப்பு மற்றும் இனிப்புப் புரட்சியின் இலக்கை அடைவதற்கு ரூ.300 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  1. Mucormycosis declared as an epidemic
  • Centre directed states to declare Mucormycosis as an epidemic.
  • This makes the disease, a notifiable disease under the Epidemic Diseases Act, 1897. Thus, it is mandatory for government and private hospitals to report all suspected and confirmed cases.
  • Tamil Nadu, Odisha, Gujarat, Bihar, Telangana, Rajasthan, and Chandigarh so have declared the disease an epidemic.

Mucormycosis

  • Mucormycosis is also known as Black Fungus that affects the people who are suffering from diabetes. The main symptom is redness around the eyes. Amphotericin-B to provides relief to patients suffering from Mucormycosis.

 

  1. முகோர்மைகோசிஸ் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது
  • முகோர்மைகோசிஸை ஒரு பெருந்தொற்றாக அறிவிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
  • இது பெருந்தொற்றுநோய் சட்டம், 1897இன் கீழ் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து நோயாளிகளையும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • தமிழ்நாடு, ஒடிசா, குஜராத், பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களும் இதுவரை இந்த நோயை பெருந்தொற்றாக அறிவித்தன.

முகோர்மைக்கோசிஸ்

  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை முகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய அறிகுறி கண்களைச் சுற்றி சிவப்பாதல் ஆகும். முகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அம்போடெரிசின்-பி நிவாரணம் வழங்குகிறது.

  1. Union Government launches First of its Kind Six- Month CBID Program On Rehabilitation Of Divyangjan
  • Union Minister of Social Justice & Empowerment Thaawarchand Gehlot virtually launched a 6- month Community-Based Inclusive Development (CBID) Program on rehabilitation of Divyangjan.
  • The Central Government has enacted the Rights of Persons with Disabilities (RPwD) Act, 2016, which envisions a society inclusive of persons with disabilities.
  • The program aims to create a pool of grass-root rehabilitation workers at community level who can work alongside ASHA and Anganwadi workers to handle cross disability issues and facilitate inclusion of persons with disabilities in the society. These workers will be called ‘Divyang Mitra’e., friends of persons with disabilities.

 

  1. மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு குறித்த முதல் ஆறு மாத சி.பி.ஐ.டி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மாற்றுத்திறனாளிகள் (திவ்யங்ஜானின்) மறுவாழ்வு குறித்த 6 மாத சமூக அடிப்படையிலான உள்ளடங்கிய வளர்ச்சி (சி.பி.ஐ.டி) திட்டத்தைத் தொடங்கினார்.
  • மாற்றுத் திறனாளிகள் உள்ளடங்கிய சமூகத்தைக் உருவாக்க மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது.
  • சமூக அளவில் அடிமட்ட மறுவாழ்வுப் பணியாளர்களின் தொகுப்பை உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்கள் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் பிரச்சினைகளைக் கையாளவும், மாற்றுத்திறனாளிகளை சமூகத்தில் சேர்க்கவும் உதவமுடியும். இந்த தொழிலாளர்கள் ‘திவ்யங் மித்ரா’ அதாவது மாற்றுத் திறனாளிகளின் நண்பர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

SCIENCE AND TECHNOLOGY


  1. DRDO develops antibody detection-based kit ‘DIPCOVAN’
  • DRDO has developed an antibody detection-based kit ‘DIPCOVAN‘, (the DIPAS-VDx COVID-19 IgG Antibody Microwell ELISA) for sero-surveillance. The kit will be very useful for understanding COVID‐19 epidemiology and assessing an individual’s previous SARS‐CoV‐2 exposure.
  • The kit has been developed in association with Vanguard Diagnostics Private Limited, New Delhi. The company will commercially launch the product during the first week of next month. It requires just 75 minutes to conduct the test without any cross-reactivity with other diseases.

 

  1. டி.ஆர்.டி.ஓ எதிர்பொருள் கண்டறிதல் அடிப்படையிலான ‘டிப்கோவன்’ கருவிப்பெட்டியை உருவாக்குகியுள்ளது
  • டி.ஆர்.டி.ஓ., ‘டிப்கோவன்கருவிப்பெட்டியை (டிபாஸ்-விடிஎக்ஸ் கோவிட்-19 ஐஜிஜி ஆன்டிபாடி மைக்ரோவெல் எலிசா) என்ற எதிர்பொருள் கண்டறிதல் அடிப்படையிலான செரோ கண்காணிப்புக்காக உருவாக்கியுள்ளது. கோவிட்‐19 தொற்றுநோயியல் புரிந்து கொள்வதற்கும், தனிநபரின் முந்தைய சார்ஸ்‐கோவிட்‐2 வெளிப்பாட்டை மதிப்பிடுவதற்கும் இந்த கருவிப்பெட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • புது தில்லியில் உள்ள வான்கார்ட் டயக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்த கருவிப்பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வணிகரீதியாக தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும். மற்ற நோய்களுடன் குறுக்கு எதிர்வினை இல்லாமல் சோதனையை நடத்த 75 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

ART AND CULTURE


  1. Union Culture Minister Prahlad Singh Patel announces UNESCO World Heritage Site tentative list
  • Union Culture Minister Prahlad Singh Patel announced UNESCO World Heritage Site tentative list.
  • Six heritage sites of India are included in the tentative list, including the Kancheepuram temples of Tamil Nadu. They are:
  1. Maharashtra Military Architecture
  2. Hire Benkal Megalithic site
  3. Temples of Kancheepuram, Tamil Nadu
  4. Ganga Ghats of Varanasi
  5. Satpura Tiger Reserve, Madhya Pradesh
  6. Bhedaghat Lametaghat of Narmada valley

 

  1. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தள தற்காலிக பட்டியலை மத்திய கலாச்சார அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிவித்தார்
  • யுனெஸ்கோ உலக பாரம்பரிய தள தற்காலிக பட்டியலை மத்திய கலாச்சார அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிவித்தார்.
  • தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் கோயில்கள் உட்பட இந்தியாவின் ஆறு பாரம்பரிய தளங்கள் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை:
  1. மகாராஷ்டிரா இராணுவ கட்டிடக்கலை
  2. ஹைர் பென்கல் பெருங்கற்கால இடம்
  3. காஞ்சிபுரம் கோயில்கள், தமிழ்நாடு
  4. வாரணாசியின் கங்கை மலைத்தொடர்கள்
  5. சத்புரா புலிகள் காப்பகம், மத்தியபிரதேசம்
  6. நர்மதா பள்ளத்தாக்கின் பெடகாட் லமேதகத்

IMPORTANT DAYS


  1. National Endangered Species Day – 21 May
  • National Endangered Species Day is celebrated on the third Friday of May every year. This year, the day falls on May 21.
  • The day is observed to raise awareness about the endangered species of flora and fauna.
  • IUCN declares a species as endangered species if it satisfies any one of the following criteria:
  1. Decrease in 50–70% of the flora/fauna population over 10 years.
  2. If a statistical prediction shows that the species will go extinct within the next 20 years.
  3. If the total geographic area where the species is concentrated is less than 5,000 sq. km (or local population area less than 500 sq. km).
  4. If the population size is less than 2,500 adults.
  5. If it is a restricted population of 250 adults.

 

  1. தேசிய அழிந்துவரும் உயிரினங்கள் தினம் – 21 மே
  • தேசிய அழிந்துவரும் உயிரினங்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்நாள் 21 மே அன்று வருகிறது.
  • அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுதுவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகின்றது.
  • ஐயுசிஎன் (IUCN) பின்வரும் அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றை திருப்திப்படுத்தினால் ஒரு இனத்தை அழிந்துவரும் இனமாக அறிவிக்கிறது:
  1. 10 ஆண்டுகளில் விலங்கு/தாவர மக்கள்தொகையில் 50-70% குறைவு.
  2. ஒரு புள்ளிவிவர கணிப்பு அடுத்த 20 ஆண்டுகளுக்குள் ஒரு இனம் அழிந்துவிடும் என்று காட்டினால்.
  3. அந்த இனங்கள் இருக்கும் மொத்த புவியியல் பகுதி 5,000 ச.கிமீ க்கும் குறைவாக இருந்தால் (அல்லது உள்ளூர் மக்கள் தொகை பகுதி 500 ச.கிமீ.க்கும் குறைவாக) இருந்தால்.
  4. விலங்கு/தாவர மக்கள் தொகை அளவு 2,500க்கும் குறைவான வயதுவந்தோர் இருந்தால்.
  5. அது 250 வயதுவந்தோர் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை என்றால்.

9. National Anti-terrorism Day – 21 May

  • National Anti-Terrorism Day is observed on May 21 every year.
  • The day aims to promote national peace and encourage unity among the people.
  • The day is observed to mark 21 May 1991, when the former Indian Prime Minister Rajiv Gandhi was assassinated.
  • This year (2021) commemorates Rajiv Gandhi’s 30th death anniversary of the assassination of Rajiv Gandhi.

 

  1. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் – 21 மே
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 21 மே தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • தேசிய அமைதியை மேம்படுத்துவதையும், மக்களிடையே ஒற்றுமையை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.
  • முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 21 மே 1991ஐக் குறிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • ராஜீவ் காந்தி படுகொலையின் 30வது நினைவு தினத்தை இந்த ஆண்டு (2021) நினைவுகூருகிறது.

  1. International Tea Day – 21 May
  • International Tea Day is observed annually on 21 May by the United Nations. The resolution was adopted on 21 December 2019 by United Nations Food and Agriculture Organization (UNFAO).
  • The International Tea Day aims to raise awareness of cultural and economic significance of tea around the world and to promote sustainable production and consumption of tea.

 

  1. சர்வதேச தேநீர் தினம் – 21 மே
  • சர்வதேச தேநீர் தினம் ஆண்டுதோறும் 21 மே அன்று ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் (UNFAO) 21 டிசம்பர் 2019 அன்று இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • சர்வதேச தேநீர் தினம் உலகெங்கிலும் தேநீரின் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அதன் நீடித்த நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 21, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
21st May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021