TNPSC Current Affairs – English & Tamil – May 28, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – May 28, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(28th May, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 28, 2021
TAMIL NADU
- Tamil Nadu’s fiscal deficit for FY21 was Rs. 92,305 crore against Rs. 1.04 lakh crore pegged in the interim budget
- Tamil Nadu’s fiscal deficit for the FY21 was Rs. 92,305 crores against Rs. 1.04 lakh crores pegged in the interim budget.
2020-21 | 2019-20 | Change in % | |
State’s own tax revenue | 1,01,140.09 | 1,01,211.94 | -0.07 |
Total revenue receipts | 1,69,012.27 | 1,73,898.03 | -2.80 |
Total receipts | 1,74,255.66 | 1,79,282.03 | -2.80 |
Revenue expenditure | 2,30,332.73 | 2,03,236.86 | 13.3 |
Total expenditure | 2,66,560.73 | 2,32,320.64 | 14.7 |
Revenue deficit (Total revenue receipts -revenue expenditure) | -61,320.46 | -29,338.83 | |
Fiscal deficit (Total receipts – Total expenditure) | -92,305.07 | -53,038.61 |
Comptroller and Auditor General of India
- Comptroller and Auditor General (CAG) of India is appointed by the President of India. Article 148 of the Indian Constitution deals with the CAG.
- He audits the accounts related to expenditure from Consolidated Fund of India (CFI), Consolidated Fund of States (CFS) and Union territories with legislative assembly. Article 151 states that CAG presents the audit report related to the state to the Governor, who in turn present them in the state legislative assembly.
- இடைக்கால பட்ஜெட்டின் ₹1.04 லட்சம் கோடிக்கு எதிராக 2021ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை ₹92,305 கோடியாக இருந்தது
- 2021ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை ₹92,305 கோடியாகும்.
2020-21 | 2019-20 | %இல் மாற்றம் | |
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் | 1,01,140.09 | 1,01,211.94 | -0.07 |
மொத்த வருவாய் வரவுகள் | 1,69,012.27 | 1,73,898.03 | -2.80 |
மொத்த வரவுகள் | 1,74,255.66 | 1,79,282.03 | -2.80 |
வருவாய் செலவினம் | 2,30,332.73 | 2,03,236.86 | 13.3 |
மொத்த செலவினம் | 2,66,560.73 | 2,32,320.64 | 14.7 |
வருவாய் பற்றாக்குறை (மொத்த வருவாய் வரவுகள் -வருவாய் செலவினம்) | -61,320.46 | -29,338.83 | |
நிதிப் பற்றாக்குறை (மொத்த வரவுகள் – மொத்தச் செலவு) | -92,305.07 | -53,038.61 |
இந்திய தலைமை தணிக்கையாளர்
- இந்திய தலைமை தணிக்கையாளர் (CAG) இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் 148வது விதி CAGயைப் பற்றியது.
- இந்திய ஒருங்கிணைந்த நிதியம் (CFI) , மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதியம் மற்றும் சட்டமன்றத்துடன் உள்ள யூனியன் பிரதேசங்களின் செலவினங்கள் தொடர்பான கணக்குகளை அவர் தணிக்கை செய்வார். மாநில அரசு தொடர்பான தணிக்கை அறிக்கையை மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கும் ஆளுநரிடம் CAG தாக்கல் செய்ய வேண்டும் என்று விதி 151 கூறுகிறது.
NATIONAL
- Union Finance Minister Nirmala Sitharaman chairs 43rd GST Council meeting
- Finance Minister Nirmala Sitharaman chaired the 43rd GST Council meeting through video conferencing.
GST Council
- GST Council is a constitutional body setup under Article 279A of the Indian Constitution.
- The Council recommends the Union and State Government on issues related to Goods and Services Tax.
- The GST Council is chaired by the Union Finance Minister.
- The members are the Union State Minister of Revenue or Finance and Ministers in charge of Finance or Taxation of all the States.
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
- 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார்.
ஜிஎஸ்டி கவுன்சில்
- ஜிஎஸ்டி கவுன்சில் என்பது இந்திய அரசியலமைப்பின் 279ஏ விதியின் கீழ் நிறுவப்பட்ட அமைப்பு ஆகும்.
- இது சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான பிரச்சினைகளில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு பரிந்துரைக்கிறது.
- ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் இயங்கும்.
- மத்திய வருவாய் அல்லது நிதி அமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்களின் நிதி அல்லது வரிவிதிப்புக்கு பொறுப்பான அமைச்சர்கள் உறுப்பினர்கள் ஆவர்.
- NEERI Nagpur develops an innovative patient-friendly Saline Gargle RT-PCR Testing Method
- NEERI Nagpur develops an innovative patient-friendly Saline Gargle RT-PCR Testing Method to detect COVID-19.
- Scientists of the National Environmental Engineering Research Institute (NEERI), Nagpur under the Council of Scientific and Industrial Research (CSIR) have developed a ‘Saline Gargle RT-PCR Method’ for testing COVID-19 samples. The result will be available in 3 hours.
- நீரி (NEERI) நாக்பூர் ஒரு புதுமையான நோயாளிக்கு ஏற்ற உப்பு தண்ணீர் கொப்பளிக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை முறையை உருவாக்கியுள்ளது
- கோவிட்-19ஐ கண்டறிய, நோயாளிக்கு ஏற்ற ஒரு புதுமையான சலைன் கார்கல் (உப்பு தண்ணீர் கொப்பளிக்கும்) ஆர்டி-பிசிஆர் சோதனை முறையை நீரி (NEERI) நாக்பூர் உருவாக்குகிறது.
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் நாக்புரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கோவிட்-19 மாதிரிகளை பரிசோதிக்க ‘சலைன் கார்கல் ஆர்டி-பிசிஆர் முறையை’ உருவாக்கியுள்ளனர். இதன் சோதனை முடிவு 3 மணி நேரத்தில் கிடைக்கும்.
- Centre to provide monetary assistance to students through DBT under Mid-Day Meal Scheme
- The Central Government has decided to provide monetary assistance to students through Direct Benefit Transfer under the Mid-Day Meal Scheme. This scheme will be available for children studying in Class I to VIII in the Government and Government aided schools across the country to safeguard the nutritional levels of children and protecting their immunity during the COVID-19 pandemic.
- Centre provided monetary assistance to Rs. 11.80 crore to students as a special welfare measure. The assistance will be provided to eligible children in addition to the distribution of free food grains under the Pradhan Mantri Garib Kalyan Anna Yojana.
- மத்திய அரசு மதிய உணவுதிட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நேரடி பணபரிவர்த்தனை மூலம் பண உதவி வழங்க உள்ளது
- மத்திய அரசு, மதிய உணவுத் திட்டத்தின் கீழ் நேரடிப்பண பரிமாற்றம் மூலம் மாணவர்களுக்கு பண உதவி வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை பாதுகாக்கவும், கோவிட்-19 தொற்றுநோயின் போது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கவும் தொடங்கப்பட்டது.
- சிறப்பு நல நடவடிக்கையாக மாணவர்களுக்கு மத்திய அரசு ரூ.11.80 கோடி நிதி உதவி வழங்குகிறது. பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை பெற தகுதியுள்ள குழந்தைகளுக்கு கூடுதலாக இந்த உதவி வழங்கப்படும்.
- INDIAai celebrates its first anniversary
- INDIAai (The National AI Portal of India) is a joint venture by the Ministry of Electronics and Information Technology (MeitY), National E-Governance Division (NEGD), and Nasscom.
- It is a central knowledge hub on artificial intelligence and allied fields for entrepreneurs, students, academics, and professionals. It was set up to prepare the nation for an AI future.
- INDIAai முதல் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது
- INDIAai (இந்திய தேசிய செயற்கை நுண்ணறிவு வளைத்தளம்) என்பது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), தேசிய மின் ஆளுமை பிரிவு (NEGD) மற்றும் நாஸ்காம் (Nasscom) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
- இது தொழில் முனைவோர், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஒரு மைய அறிவு மையமாக உள்ளது. இது செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்திற்காக தேசத்தை தயார் செய்வதற்காக அமைக்கப்பட்டது.
AWARDS AND RECOGNITIONS
- Amartya Sen to be honoured with Spain’s Princess of Asturias Award 2021
- Nobel Laurate Amartya Sen is to be honoured with Spain’s Princess of Asturias Award 2021 for his efforts to promote ‘justice, freedom and democracy’ in the social science category.
- Spain’s Princess of Asturias Award is handed out annually by the Asturias Princess Foundation, which is named after Spanish Crown Princess Leonor.
Awards received by Amrtya Sen:
- The Nobel Memorial Prize in Economic Sciences in 1998.
- Bharat Ratna in 1999.
- Order of Aztec Eagle in 2012.
- Peace Prize for the German Book Trade in 2020.
- ஸ்பெயினின் ஆஸ்டூரியாஸ் இளவரசி விருது 2021க்கு அமர்த்தியா சென்னுக்கு வழங்கப்படவுள்ளது
- நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுக்கு சமூக அறிவியல் பிரிவில் “நீதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை” ஊக்குவிப்பதற்கான அவரது முயற்சிகளுக்காக, ஸ்பெயினின் ‘ஆஸ்டூரியாஸ் இளவரசி விருது 2021’ வழங்கப்பட உள்ளது.
- ஸ்பெயினின் ஆஸ்டூரியாஸ் இளவரசி விருது ஆண்டுதோறும் ஆஸ்டூரியாஸ் இளவரசி அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது, இது ஸ்பானிஷ் பட்டத்து இளவரசி லியோனரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
அம்ர்த்யா சென் பெற்ற விருதுகள்:
- 1998ஆம் ஆண்டில் பொருளாதார அறிவியல் நோபல் நினைவுப் பரிசு.
- 1999இல் பாரத ரத்னா.
- 2012இல் அஸ்டெக் ஆஃப் ஈகிள் ஆர்டர்.
- 2020இல் ஜெர்மன் புத்தக வர்த்தகத்திற்கான அமைதிப் பரிசு.
IMPORTANT DAYS
- Amnesty International Day – 28 May
- Amnesty International Day is observed on 28 May every year. Amnesty International was founded in London in 1961, following the publication of the article “The Forgotten Prisoners”.
- Amnesty International is a non-governmental organisation focused on human rights.
Awards:
- The Nobel Peace Prize in 1977 for its campaign against torture
- The United Nations Prize in the Field of Human Rights in
- சர்வதேச ஆம்னெஸ்டி தினம் – 28 மே
- சர்வதேச ஆம்னெஸ்டி தினம் ஒவ்வொரு ஆண்டும் 28 மே அன்று அனுசரிக்கப்படுகிறது. “மறக்கப்பட்ட கைதிகள்” என்ற கட்டுரை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 1961இல் லண்டனில் சர்வதேச ஆம்னெஸ்டி சபை நிறுவப்பட்டது.
- சர்வதேச ஆம்னெஸ்டி சபை என்பது மனித உரிமைகள் மீது கவனம் செலுத்தும் ஒரு அரசு சாரா அமைப்பாகும்.
விருதுகள்:
- சித்திரவதைக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்காக 1977இல் அமைதிக்கான நோபல் பரிசு.
- 1978ஆம் ஆண்டில் மனித உரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகள் சபையின் பரிசு.
- Menstrual Hygiene Day – 28 May
- Menstrual Hygiene Dayis obsered on May 28 every year. It was initiated by the German-based NGO WASH United in 2014. May 28 is selected to mark the menstrual cycles average 28 days in length and women menstruate an average of five days each month, and May is the fifth month of the year. According to UN, Menstrual health is a human right.
- Theme of Menstrual Hygiene day 2021: “Action and Investment in Menstrual Hygiene and Health”
- மாதவிடாய் சுகாதார தினம் – 28 மே
- ஒவ்வொரு ஆண்டும் 28 மே அன்று மாதவிடாய் சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இது ஜெர்மன் அரசு சாரா வாஷ் யுனைடெட் அமைப்பு மூலம் 2014இல் தொடங்கப்பட்டது.
- மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்கள் மற்றும் பெண்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஐந்து நாட்கள் மாதவிடாய் வருவதைக் குறிக்க 28 மே தேர்ந்தெடுக்கப்படுகிறது, மற்றும் மே ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆகும். ஐ.நா.வின் கருத்துப்படி, மாதவிடாய் ஆரோக்கியம் என்பது ஒரு மனித உரிமையாகும்.
- 2021 கருப்பொருள்: “மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுகாதார நடவடிக்கை மற்றும் முதலீடு”
- International Women’s Health Day – 28 May
- In 1987, International Women’s Health Day or International Day of Action for Women’s Health came into existence and the government of South Africa officially recognised it during that time.
- The day is being observed by women and health groups across the world to spread awareness about their health and rights. The day aims to raise awareness on the issues related to women’s health and well-being.
- 2021 Theme: “2021 Call for Action”
- சர்வதேச மகளிர் சுகாதார தினம் – 28 மே
- 1987இல், சர்வதேச மகளிர் சுகாதார தினம் அல்லது பெண்கள் சுகாதார நடவடிக்கை சர்வதேச தினம் நடைமுறைக்கு வந்தது மற்றும் அந்த நேரத்தில் தென் ஆப்ரிக்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக இந்நாளை அங்கீகரித்தது.
- உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சுகாதார குழுக்களால் அவர்களின் உடல்நலம் மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் பெண்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2021 கருப்பொருள்: “2021 நடவடிக்கை அழைப்பு”
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 27, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
28 th May, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – May 2021