TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 2, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 2, 2018
வியட்நாமில் ‘காவ் வாங்க் கோல்டன்‘ பிரிட்ஜ் திறக்கப்பட்டது:
- வியட்நாமின் துராங் சன் மலைப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் 100 ஆண்டுகளை கடந்திருந்தாலும் தற்போது இந்த பாலம் பலரது கவனத்தை பெற முக்கிய காரணம் இருக்கிறது.
- இந்த பாலத்தை தாங்கி பிடிப்பது போல, பெரிய இரண்டு கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த பாலம் கடவுளின் கைகள் கொண்ட பாலம் என்று அழைக்கப்படுகிறது.
- டிஏ லேண்ட்ஸ்கேப் நிறுவனத்தை சேர்ந்த வு வியட் ஆன் இதை வடிவமைத்து இருக்கிறார்.150 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் 1919-ல் கட்டப்பட்டது. பிரெஞ்ச் காலணி ஆதிக்கத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும் இது.
தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் காலமானார்:
- தமிழகத்தின் முன்னாள் கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியுமான பீஷ்ம நாராயண் சிங் (வயது 85) காலமானார்.
- தமிழக கவர்னராக இருக்கும் போது தமிழ்நாட்டில் நிலவி வந்த பதற்றமான அரசியல் சூழ்நிலை காரணமாக, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார்.
- பீஷ்ம நாராயணன் சிங் மறைவிற்கு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அட்லாண்டா ஓபன் டென்னிஸ், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ‘சாம்பியன்’:
- அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சக நாட்டு வீரர் ரையான் ஹாரிசனை சந்தித்தார்.
- 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜான் இஸ்னர் 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரையான் ஹாரிசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 33 வயதான ஜான் இஸ்னர் 5-வது முறையாக அட்லாண்டா ஓபன் பட்டத்தை வென்றார்.
- இதற்கு முன்பு 2013, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் இந்த பட்டத்தை வென்று இருந்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் தொடங்குகிறது:
- ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18–ந் தேதி தொடங்குகிறது.ஊசி மூலம் ஊக்க மருந்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை யாரும் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்துவதை தடுக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
நீர்வழங்கல் திட்டங்களுக்காக ரூ.7,952 கோடி மஹாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது:
- தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ், 10,583 கிராமப்புறங்களில் 6,624 நீர் திட்டங்களை நிறைவு செய்வதற்காக 7,952 கோடி ரூபாய் திட்டத்தை மகாராஷ்டிரா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
- கொங்கன், நாசிக், ஔரங்காபாத், அமராவதி, நாக்பூர் மற்றும் புனே பிரிவுகளில் பணிககளை முடிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்
நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திட இந்தியா மற்றும் ஜேர்மனி கையெழுத்திட்டுள்ளது:
- நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தியா மற்றும் ஜேர்மனி நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- Indo-German Bilateral Development Cooperation ஒத்துழைப்பின் கீழ் இந்த உடன்படிக்கை நிதி அமைச்சக கூட்டு செயலாளர் சமீர் குமார் கரே மற்றும் இந்தியாவின் ஜேர்மன் தூதர் மார்ட்டின் நேய் ஆகியோருக்கு இடையில் புது டெல்லியில் இடையில் கையெழுத்தானது.
கேள்விகள்
Q.1) ‘காவ் வாங்க் கோல்டன்‘ பிரிட்ஜ் எந்த நாட்டில் திறக்கப்பட்டது?
a) வியட்நாம்
b) நேபால்
c) ஸ்ரீ லங்கா
d) பாகிஸ்தான்
e) மாலடிவ்ஸ்
a) மத்திய பிரதேசம்
b) ஹரியானா
c) கேரளா
d) தமிழ்நாடு
e) ஆந்திரா
a) அமெரிக்கா
b) அர்ஜென்டினா
c) அங்கோலா
d) அர்மானிய
e) ஆஸ்திரேலியா
a) ஆந்திரா
b) மத்திய பிரதேசம்
c) ஹரியானா
d) கேரளா
e) மகாராஷ்டிரா
a) அர்மானிய
b) ஆஸ்திரேலியா
c) இந்தியா
d) அர்ஜென்டினா
e) அமெரிக்கா
Other Important Links
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2018
2 comments
I want English
@Sandhiya
Race admin – we are uploading current affairs in english too in our bankersdaily website.Kindly refer it