TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 20, 2018

ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 20, 2018

  • இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்து வரும். ஆசிய விளையாட்டுப்போட்டியில், மல்யுத்தப் பிரிவில் இந்தியவீரர் பஜ்ரங் பூனியாவை எதிர்த்து களமிறங்கினார் உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவ்.
  • இதில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவை 13-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றார் பூனியா.

ஆசிய போட்டியில் ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 20, 2018

  • ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951–ம் ஆண்டு டெல்லியில் முதல்முறையாக நடத்தப்பட்டது.
  • 18–வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் கடந்த 18 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் செப்டம்பர் 2–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தோனேஷியா ஆசிய விளையாட்டை நடத்துவது இது 2–வது முறையாகும்.
  • இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் டிராப் பிரிவில், இந்தியா சார்பில் பங்கேற்ற லக்‌ஷய் வெள்ளிப்பதக்கம் தட்டிச்சென்றார். ஆசிய போட்டிகளில் இந்தியா தற்போது வரை, ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.

நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை சோதனை வெற்றி:

  • நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன்மூலம் இத்திறன் படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
  • 10 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை, 750 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியாக தாக்கும் திறன் படைத்தது.
  • பொக்ரான் ராணுவ தளத்தில் பீரங்கி வாகன எதிர்ப்பு ஏவுகணையான ‘ஹெலினா’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இவ்விரு சோதனைகளும் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் தீபக் குமார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 20, 2018

  • ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.
  • இதில் இந்திய வீரர்கள் மானவ்ஜித் சிங், ஷ்ரேயாசி சிங், ரவிக்குமார், தீபக் குமார், அபுர்வி சந்தேலா, இளவேனில் வளரிவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • இதில் தீபக் குமார் மட்டும் 247.7 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இஸ்ரேலிய பத்திரிகையாளர் மற்றும் அமைதி செயல்வீரர் உரி அவனேரி காலமானார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 20, 2018

  • இஸ்ரேலிய பத்திரிகையாளர் மற்றும் சமாதான செயற்பாட்டாளர் மற்றும் பாலஸ்தீனிய அரசுக்கு வெளிப்படையாக வாதிட்ட முதல் நபர் உரி அவனேரி தனது 94 வயதில் காலமானார்.

மிட்செல் ஜான்சன் ஓய்வு பெறுகிறார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 20, 2018

  • மிட்செல் ஜான்சன் கிரிக்கெட்டின் எல்லா படிவங்களிடமிருந்தும் ஓய்வு பெறுகிறார்.
  • அவர் சர்வதேச விளையாட்டு இருந்து விலகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறைவாகிறது.

 

TNPSC GROUP II – INTERVIEW POSTS NOTIFICATION Released

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 13, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018