TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018

சுகாதார ஒத்துழைப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018

  • சுகாதாரா ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும்.
  • ஆய்வு மற்றும் வளர்ச்சி, மருந்து செயல்பாட்டினை ஊக்குவிக்கும் உட்பொருட்கள். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ உபகரணங்கள்.

  • மனித வள மேம்பாடு

  • சுகாதார சேவைகள் மற்றும்

  • இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும்படி மற்ற துறைகளில் ஒத்துழைப்பு


வர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் கொரியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018

  • வர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் கொரியா இடையே சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செயல்பாட்டிற்குப் பிந்தைய ஒப்புதல் அளித்துள்ளது.
  • இறக்குமதிமிகு குவிப்பு தவிர்ப்பு மானியம் மற்றும் எதிர் ஈடுசெய்தல் மற்றும் நலம்காப்பு நடவடிக்கைகள் போன்ற இருதரப்பின் வரத்தக உறவினை மேம்படுத்த தேவையான வரத்தக தீர்வுகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.

இந்தியாகனடா நாடுகளில் உள்ள பட்டய கணக்காயர் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018

  • இந்தியாகனடா நாடுகளில் உள்ள பட்டய கணக்காயர் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்தியாவில் உள்ள இந்திய பட்டய கணக்காயர் நிறுவனம் மற்றும் கனடாவில் உள்ள பட்டய தொழில் கணக்காயர் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்துக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் குறிப்பிட்ட பிரிவில் இரு நிறுவனங்களின் பரஸ்பரம் உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடியும்.
  • பட்டய கணக்காயர் துறையின் விளக்கம், கற்றல், தொழில் திறன் மதிப்பீடு மற்றும் துவக்க நிலை பட்டய கணக்காயரின் திறமை ஆகிய பிரிவுகளிலும் ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

உலக உயிரி எரிபொருள் தினம்: 10 ஆகஸ்ட்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018

  • உலக உயிரி எரிபொருள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று வழக்கமான புதைபடிவ எரிபொருளுக்கு ஒரு மாற்றாக அல்லாத படிம எரிபொருட்களின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • இந்த நிகழ்வில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, National Policy on Biofuels 2018”,எனும் ஒரு கையேட்டை வெளியிட்டார்.

2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீராஜ் சோப்ரா இந்தியாவின் கொடியை ஏந்துகிறார் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018

  • 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பில் கொடியை தாங்குகிறார் இந்திய வீரர் நீராஜ் சோப்ரா.
  • 20 வயதான இவர் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

லக்னோவில் இன்று ‘ஒரு மாவட்டம் ஓர் உற்பத்தி’ குடியரசுத் தலைவர் தொடங்குகிறார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018

  • இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் செல்கிறார். அங்கு லக்னோவில் நடைபெறும் ‘ஒரு மாவட்டம் ஓர் உற்பத்தி’ (‘One District One Product’ Summit) என்ற தலைப்பிலான உச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
  • இதன் சிறப்பு கவனம் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ஆகும். ஒரு மாவட்டத் தயாரிப்புதிட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மாநில அரசு அமைத்துள்ளது.

கேள்விகள்

Q.1) சுகாதாரா ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் _______ நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

a) பிரேசில்

b) பிரான்ஸ்

c) கனடா

d) கொரியா

e) இந்தோனேசியா

Click Here to View Answer
e) இந்தோனேசியா

Q.2) கொரியா எந்த நாட்டுடன் இணைந்து வர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

a) இந்தோனேசியா

b) பிரேசில்

c) இந்தியா

d) கனடா

e) கொரியா

Click Here to View Answer
c) இந்தியா

Q.3) உலக உயிரி எரிபொருள் தினம் (World Biofuel Day) என்று காணப்படுகிறது ?

a) ஆகஸ்ட் 5

b) ஆகஸ்ட் 4

c) ஆகஸ்ட் 8

d) ஆகஸ்ட் 1

e) ஆகஸ்ட் 10

Click Here to View Answer
e) ஆகஸ்ட் 10

Q.4) National Policy on Biofuels 2018” எனும் ஒரு கையேட்டை உலக உயிரி எரிபொருள் தினதன்று வெளியிட்டவர் யார்?

a) பிரதமர் நரேந்திர மோடி

b) சுஷ்மா ஸ்வராஜ்

c) திரு. ராம் நாத் கோவிந்த்

d) ராஜ்நாத் சிங்

e) பியூஷ் கோயல்

Click Here to View Answer
a) பிரதமர் நரேந்திர மோடி

Q.5) 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் கொடியை ஏந்துபவர் யார்?

a) சானியா நேவால்

b) பி.வி சிந்து

c) நீரஜ் சோப்ரா

d) அபினவ் பின்றா

e) எதுவும் இல்லை

Click Here to View Answer
c) ராஜ் சோப்ரா

Q.6) ‘ஒரு மாவட்டம் ஓர் உற்பத்தி’ (‘One District One Product’ Summit) என்ற தலைப்பிலான உச்சி மாநாட்டை இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் எங்கு தொடங்கி வைக்கிறார்?

a) அகர்தலா

b) லக்னோ

c) ஜெய்ப்பூர்

d) ராஞ்சி

e) பெங்களூரு

Click Here to View Answer
b) லக்னோ

Other Important Links

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 9, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 6, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 4, 2018